தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி சோசலிச சமத்துவக் கட்சி (UK) மற்றும் ஜேர்மன் PSGக்கான ஐரோப்பிய தேர்தல் முடிவுகள்By our
correspondent Use this version to print| Send feedback ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல்களில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) தேசிய அளவில் 9,852 வாக்குகளைப் பெற்றது. ஐக்கிய இராச்சியத்தில் வடமேற்குப் பிராந்தியத்தில் களத்தில் நின்ற சோசலிச சமத்துவக் கட்சி (UK) 5,067 வாக்குககளைப் பெற்றது. PSGக்கு சென்ற ஐரோப்பிய தேர்தலில் கிட்டியதை விட (2009 இல் 9,646 வாக்குகள்) சற்று அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி இந்த முறை தான் முதன்முறையாக ஒரு ஐரோப்பியத் தேர்தலில் பங்குபெற்றிருக்கிறது என்ற வகையில் இந்த முடிவு குறிப்பிடத்தகுந்ததாகும். 33.5 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பில் பங்குபெற்ற நிலையில் பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சி 0.3 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. நாடெங்கிலும் RMT போக்குவரத்து தொழிற்சங்கம், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டு, அந்த அமைப்புகளின் கணிசமான நிதி வளங்களுக்கும் அணுகல் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் வேண்டாம் (”No2EU") என்ற போலி-இடது கூட்டணியை விட வெறும் 345 வாக்குகள் மட்டுமே SEP குறைவாய் பெற்றது. லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் ஆகிய பிராந்தியத்தின் இரண்டு மிகப்பெரும் நகரங்களில், No2EU ஐ விடவும் SEP கணிசமான வாக்குகள் அதிகம் பெற்றிருந்தது. மான்செஸ்டரில் SEP பெற்ற 658 வாக்குகள் என்பது, No2EU க்கு கிட்டியதை விட ஏறக்குறைய இருமடங்காகும். நிதி வரம்புகளின் காரணத்தால் SEP, மத்திய மான்செஸ்டர், சால்போர்ட் மற்றும் எக்லெஸ், லிவர்பூல் வால்டன் மற்றும் செயிண்ட் ஹெலன்ஸ், மற்றும் விஸ்டன் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மட்டுமே அஞ்சல்வழியான பிரச்சார துண்டறிக்கைகளை விநியோகிக்க முடிந்தது. இந்த நான்கு பகுதிகளும் வடமேற்கு வாக்காளர்களில் 4.33 சதவீதத்தை மட்டுமே கொண்டவை. இப்பிராந்தியம் முழுவதிலும் SEPக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது. பதிவுசெய்த 5.26 மில்லியன் வாக்காளர்களுக்கும் அதனால் அஞ்சல் பிரச்சாரம் செய்ய முடிந்திருந்தால் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் மிகக் கணிசமான அளவு அதிகமாயிருந்திருக்கும். ஜேர்மனியில் PSG தனது வேலைத்திட்டத்தை மக்களறியச் செய்வதற்கு ஒரு பரந்த பிரச்சாரத்தை நடத்தியது. இது 35,000 தேர்தல் அறிக்கைகளை விநியோகம் செய்திருந்தது, 3,000 சுவரொட்டிகளுக்கு மேல் காட்சிப்படுத்தியிருந்தது அத்துடன் இருபதுக்கும் மேலான பிரச்சார ஊர்வலங்களையும் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது. பிரச்சாரத்தின் மையமாக பேர்லின் இருந்தது. கட்சியின் ஆன்லைன் பிரச்சாரமும் ஒருசேர நிகழ்ந்தது ஒரு குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாகும். PSG இன் பிரதான தேர்தல் காணொளி யூடியூபில் 17,000 முறை பார்க்கப்பட்டிருந்தது, மற்ற தேர்தல் காணொளிகள் பல்லாயிரம் முறை பார்க்கப்பட்டிருந்தன. |
|
|