தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா Stalinists suffer debacle in Indian elections இந்திய தேர்தல்களில் ஸ்ராலினிஸ்டுகள் படுதோல்வி அடைந்தனர்
By K. Ratnayake and Keith Jones Use this version to print| Send feedback இந்தியாவின் இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிறியதும், பழமையானதுமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சமீபத்திய இந்திய பொது தேர்தலில் ஒரு அவமானகரமான தோல்வியை அடைந்தன — அவர்களின் முன்னாள் பங்காளியான பெரு வணிக காங்கிரஸ் கட்சியும் அதே போன்ற ஒரு தோல்வியை அடைந்தது. ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி அது போட்டியிட்ட பாதிக்கும் அதிகமான இடங்களில் தோல்வியுற்றதோடு, தேசிய தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதன் வாக்குகளில் கூர்மையான வீழ்ச்சியைக் கண்டன. 2004இல் இடது முன்னணி 60 இடங்களுக்கும் மேல் கைப்பற்றியதோடு, 7.7 சதவீத வாக்கு விகிதத்தைப் பெற்றது, ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் அது வெறும் 12 இடங்களோடு, 4.5 சதவீத வாக்கு விகிதங்களைப் பெற்றுள்ளது. 1952இல் இருந்து ஒவ்வொரு இந்திய நாடாளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இப்போது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கீழ்சபையான இந்த மக்களவையில் ஒரேயொரு இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) 9 மக்களவை இடங்களை மட்டுமே பெற்றுள்ளது—இது ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளில் ஒன்றாக அதன் அந்தஸ்தைத் தக்க வைக்கவும் கூட போதுமானதல்ல. இடது முன்னணியின் எஞ்சியிருக்கும் ஒரு டஜன் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்டு பேர் கேரளாவிலிருந்து வருகின்றனர், இரண்டு பேர் ஒரு சிறிய பெரிதும் கிராமப்புற மாநிலமான திரிபுராவில் இருந்தும், இறுதியாக இரண்டு பேர் மேற்கு வங்காளத்திலிருந்தும் வருகின்றனர். இந்தியாவின் நான்காவது அதிக மக்கள்தொகை மிகுந்த மாநிலமான மேற்கு வங்காளம் 2011இல் முடிவுக்கு வரும் வரையில் தொடர்ந்து 34 ஆண்டுகளாக சிபிஎம்-தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்பட்டது. 2009 தேசிய தேர்தலில், மேற்கு வங்காளத்திலிருந்து CPMஇன் ஒன்பது மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், ஒட்டுமொத்தமாக இடது முன்னணி 15 உறுப்பினர்களை அங்கே வென்றிருந்தது. சிபிஎம் மற்றும் சிபிஐ இரண்டுமே 2009 உடன் ஒப்பிட்டாலே கூட அதன் வாக்குகளில் ஒரு செங்குத்தான வீழ்ச்சியைக் கண்டுள்ளன. 2009 தேர்தலில் 5.33 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்திருந்த சிபிஎம்-இன் வாக்குகள் 2014இல் 3.2 சதவீதமாக ஆனது, அதேவேளையில் சிபிஐ-இன் வாக்குகள் 1.43 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வலதுசாரி காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான பாரிய எதிர்ப்பால் ஊக்குவிக்கப்பட்டு இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அதிகாரத்தில் ஏற இருக்கின்ற நிலையில், தேர்தல்களில் அவர்களின் அதிர்ச்சியூட்டும் தோல்வியால் வெளிப்படையாக அதிர்ந்து போயுள்ள ஸ்ராலினிஸ்டுகள் இந்த வாரம் வரையில் அடுத்து கூறுவதற்கு ஒன்றும் இல்லாமல் நிற்கின்றனர். அவர்கள் கூறிய ஏதோ சில கருத்துக்களும் பிஜேபி அதிகாரத்திற்கு வர பாதை அமைத்துக் கொடுத்ததில் இருக்கும் அவர்களின் சொந்த அரசியல் பொறுப்பை மூடி மறைப்பதை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தது. CPI இன் உத்தியோகபூர்வ வலைத் தளம், கடைசியாக இந்தியாவின் ஒன்பது-கட்ட தேர்தல்களின் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முந்தைய நாளான மே 15இல் தான் கடைசியாக இடுகையிடப்பட்டு இருந்தது. சிபிஎம், அதன் பங்கிற்கு, கடந்த ஞாயிறன்று அதன் ஒரு பொலிட்பீரோ கூட்டத்திற்குப் பின்னர் ஒரு சுருக்கமான பத்திரிகை செய்தியை பிரசுரித்திருந்தது. "கட்சிக்கும் இடதிற்கும் மோசமான தேர்தல் முடிவுகளைக் கொண்டு வந்த பல்வேறு காரணிகளை ஆய்வு செய்தது உட்பட சிபிஎம் தலைமை "தேர்தல் மீதான ஒரு பூர்வாங்க ஆய்வை" மேற்கொண்டதாக அந்த செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது, ஆனால் அவர்கள் விவாதத்தின் சாரத்தைக் குறித்த ஒரு சிறிய துணுக்கைக் கூட அளிக்கவில்லை. சிபிஎம் பொது செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் சிபிஎம் ஆங்கில மொழி வாரயிதழான People’s Democracy இன்னும் சற்று அதிகமாய் வரவிருப்பதுபற்றி சிலவற்றை குறிப்பிடுகிறார்கள். விண்ணை முட்டும் உணவு விலைகள், பாரிய வேலையின்மை, பரவி வரும் வறுமை மற்றும் பரந்த ஊழல் ஆகியவற்றால் காங்கிரஸ் அரசாங்கம் மீதான பாரிய கோபத்திலிருந்து பிஜேபி ஆதாயமடைந்தது என்ற வெளிப்படையான புள்ளியை அவர்கள் குறிப்பிடுகின்றனர். “மக்களின் அதிருப்தி பிஜேபி-ஆல் வெற்றிகரமாக சுரண்டப்பட்டது,” என்று People’s Democracy குறிப்பிட்டது. காரத்தின் கருத்துப்படி, காங்கிரஸிற்கு எதிரான ஒரு பாரிய "எதிர்ப்பு வாக்குகளால்" பிஜேபி ஆதாயமடைந்தது. ஆனால் இது, இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய அரசாங்க கட்சியான காங்கிரஸ் மீதான மக்கள் கோபத்திற்கு ஸ்ராலினிஸ்டுகளால் ஏன் முறையிட முடியாமல் போனது? என்ற கேள்வியை மட்டுமே எழுப்புகிறது. இந்த தர்மசங்கடமான கேள்வியைத் தவிர்க்க, சிபிஎம் அனைத்து விதமான அற்பத்தனங்களையும், இரண்டாந்தர பிரச்சினைகளையும் மற்றும் தந்திரங்களை உபயோகிக்கிறது. பெருநிறுவன ஊடகங்கள் தீவிரமாக BJPஐ ஊக்குவித்ததாக People’s Democracy குறை கூறுகிறது. சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியால் பின்பற்றப்பட்ட "முதலீட்டாளர்-சார்பு" கொள்கைகள் மீதான மக்கள் கோபத்தைச் சுரண்டி 2011இல் மேற்கு வங்காளத்தில் அதிகாரத்திற்கு வர முடிந்திருந்த, வலதுசாரி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் வாக்குசாவடிகளைப் பரந்தளவில் கைப்பற்றுவதில் ஈடுபட்டதாக காரத் குற்றஞ்சாட்டுகிறார். காங்கிரஸ் "ஒரு பயனற்ற பிரச்சாரத்தை" நடத்தியதோடு, “அதன் சொந்த காரியாளர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களைப் பின்தொடரவும் கூட தவறியது" என்று People’s Democracy புலம்புகிறது. இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மிகச் சரியாக ஸ்ராலினிஸ்டுகளை ஒரு புரட்சிகர எதிர்ப்பாக அல்ல, ஒரு ஊழல் கட்சியாக, பெரு வணிக ஆதரவிலான அரசியல் ஸ்தாபகத்தின் கட்சியாக கண்டது. கடந்த கால் நூற்றாண்டில், சமூக செலவினங்களை வெட்டிய, உள்கட்டமைப்பைத் தனியார்மயமாக்கிய, பெரு வணிகங்களுக்கு பாரிய வரி மற்றும் நில விட்டுக்கொடுப்புகளை வழங்கிய, சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்த, மற்றும் அல்லது உழைக்கும் மக்களை தாக்கிய அரசாங்கங்களான—உலக முதலாளித்துவத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு உழைப்பு உற்பத்தி மையமாக மாற்றிய இந்திய முதலாளித்துவத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ள பல வலதுசாரி அரசாங்கங்களுக்கு அவர்கள் தொடர்ச்சியாக முட்டுக் கொடுத்துள்ளனர். மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதன் அரசாங்கங்களை ஸ்தாபித்திருந்த இடது முன்னணி அங்கேயும் கூட, அது எதை "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகள் என்று வெளிப்படையாக வரையறைப்படுத்தியதோ அதே கொள்கைகளைப் பின்பற்றியது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையில் வேலைநிறுத்தங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் பெரு வணிக திட்டங்களுக்கு நிலங்களை அபகரிக்கையில் எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பை ஒடுக்க பொலிஸ் மற்றும் அடியாட்களைக் கொண்டு வன்முறையைப் பயன்படுத்தியமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். அனைத்திற்கும் மேலாக, காங்கிரஸ் ஆட்சி செலுத்தும் ஹரியானாவில் உள்ள மாருதி சுஜூகி மற்றும் தமிழ்நாட்டில் ஹூண்டாய், பாக்ஸ்கான், மற்றும் BYD ஆகிய ஆலைகளில் எழுந்த போர்குணமிக்க வேலைநிறுத்தங்களைத் தனிமைப்படுத்தி, ஸ்ராலினிஸ்டுகள் அவர்களோடு இணைந்திருந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இடது முன்னணியைக் கொண்டு, பூகோளரீதியில் இணைக்கப்பட்டுள்ள இந்தியாவின் புதிய தொழில்துறைகளில் நிலவும் கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சவாலையும் ஒடுக்க, தொழிலாள வர்க்கத்தின் மீது மிஞ்சி இருந்த அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி உள்ளனர். ஏகாதிபத்திய மேலாதிக்க உலக முதலாளித்துவ பொருளாதாரத்தோடு முழுமையாக ஒருங்கிணைப்பதற்கு ஏற்றாற் போல், அரசு-தலைமையிலான பொருளாதார வளர்ச்சியைக் கைவிட்டு, 1991 மற்றும் 1996க்கு இடையே இந்திய முதலாளித்துவ கொள்கையில் ஒரு பிரதான மூலோபாய திருப்பத்தை நடத்திய நரசிம்ம ராவ்வின் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் ஆதரித்தார்கள். காங்கிரஸ் தலைமையிலான UPAக்கு முட்டு கொடுப்பதில் சிபிஎம் தலைமையிலான இடது முன்னணியின் பாத்திரம் இதையும் விட வெளிப்படையாக இருந்தது. 2004இல், இடது அதற்கு முந்தைய காலத்தை விட சிறந்த தேர்தல் வெற்றியை பெற்றது, ஸ்ராலினிஸ்டுகள் சரியான நேரத்தில் அவர்களின் விரிவடைந்திருந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை காங்கிரஸ் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சேவையில் ஈடுபடுத்தினார்கள். BJPக்கும் மற்றும் காங்கிரஸ் மேலாதிக்க UPAக்குள் காங்கிரஸிற்கும் எதிரானவையாக காட்டிக் கொண்ட பல சிறிய கட்சிகளை ஒன்று சேர்த்து கட்டி வைப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்கள், பின்னர் UPA இன் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை (Common Minimum Program – CMP) எழுதுவதில் பெரிதும் பின்புலத்தில் வேலை செய்தது. UPAஇன் முதல் பதவிக் காலத்திய வெளி வேடத்திற்குரிய வேலைத்திட்டமான CMP, ஸ்ராலினிஸ்டுகளின் ஆசிர்வாதத்தோடு, “மனிதத்தன்மையுடனான சீர்திருத்தத்தை" அது பின்தொடரும் என்ற பிற்போக்குத்தனமான பொய்யை ஊக்குவித்தது — அது இந்தியாவிற்குள் அன்னிய மூலதனத்தை இழுக்கும் முதலாளித்துவத்தின் உந்துதலோடு, இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் தேவைகளை இணங்குவிக்கிறது. ஸ்ராலினிஸ்டுகளுக்கு UPA அரசாங்கத்திற்குள் கேபினெட் இடங்களை அளித்து பெருமைப்படுத்த காங்கிரஸ் ஆர்வத்தோடு இருந்தது. ஆனால் சுதந்திரமான வேஷத்தைப் பேணி காப்பது தொழிலாள வர்க்கத்தைக் கட்டுக்குள் வைக்க உகந்ததாக இருக்குமென கணக்கிட்டு, சிபிஎம் அதை நிராகரித்தது. இருந்த போதினும், காங்கிரஸை அதிகாரத்தில் வைப்பதற்கு அதன் வாக்குறுதி அளித்திருந்ததோடு, UPAஇன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புறுதி ஏற்றிருந்ததால், அதன் தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சேட்டர்ஜியை மக்களவை அவைத்தலைவராக அமர்த்த சிபிஎம் உடன்பட்டது — பாரம்பரியமாக இந்த பதவி அரசாங்கத்தில் இருக்கும் ஒரு உறுப்பினருக்கு ஒதுக்கப்படுவதாகும். அதற்கடுத்த நான்கு ஆண்டுகளில், ஸ்ராலினிஸ்டுகள் காங்கிரஸின் மிக முக்கிய பங்காளியாக இருந்தனர்; ஏனென்றால் அவர்கள் தான் UPAஇல் பெரும் எண்ணிக்கையில் இருந்த மிகப் பெரிய நாடாளுமன்ற கட்சியாக இருந்தார்கள், ஆனால் மோசடிகள் மற்றும் காட்டிகொடுப்புகளுக்கு இடையிலும், இடதின் ஒரு கட்சியாக, தொழிலாளர் வர்க்கத்தின் மற்றும் நற்சான்றுகளின் அடித்தளத்தை அவர்கள் மட்டுமே கொண்டிருந்ததால், அவர்கள் மிக மிக முக்கியமானவர்களாக இருந்தார்கள். UPA அதற்கு முன்னர் பதவியில் இருந்த பிஜேபி-தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளில் இருந்து வெகு சிறிய வேறுபாடுகளோடு பெரு வணிகம் மற்றும் அமெரிக்க-ஆதரவிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வந்ததை ஸ்ராலினிஸ்டுகள் ஏற்று கொண்டதோடு, அரசாங்கத்திற்கு தொடர்ந்து முட்டு கொடுத்து வந்தனர். அது இந்து வகுப்புவாத BJPக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பதாகவும், "மக்கள்-சார்பு" கொள்கைகளை நடைமுறைப்படுத்த அதற்கு அழுத்த அளிக்க முடியுமென்றும் அவர்கள் வாதிட்டார்கள். 2008 வசந்தகாலத்தில் நடந்த CPMஇன் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாட்டில், அது குறைந்தபட்சம் அடுத்த 2009 தேர்தல் வரையிலாவது காங்கிரஸ் தலைமையிலான UPAஐ அதிகாரத்தில் நிலைக்க வைக்க அதன் விருப்பத்தை வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதன் பின்னர் விரைவிலேயே காங்கிரஸ் இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு, வாஷிங்டனுடன் ஒரு "பூகோள மூலோபாய கூட்டுறவை" ஏற்படுத்தியோடு, ஸ்ராலினிஸ்டுகளை நடைமுறையில் UPAஇல் இருந்து கழற்றிவிட்டது. ஸ்ராலினிஸ்டுகள் இந்த புள்ளியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது போன்ற ஒரு காட்சியை நடத்தினார்கள். ஆனால் இந்திய சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு உண்மையான ஏகாதிபத்திய-விரோத கொள்கைக்கும் அவர்களின் எதிர்ப்புக்கும் அங்கே எந்த சம்பந்தமும் இருக்கவில்லை. அதற்கு மாறாக அது இந்திய முதலாளித்துவத்தின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு மாற்று மூலோபாய நிலைப்புள்ளியிலிருந்து செய்யப்பட்டது—அது "பன்முக துருவமுனைப்பட்ட" உலக முதலாளித்துவ அமைப்புமுறையைப் பாதுகாப்பதை மற்றும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் உட்பட வல்லரசுகளுடன் உபாயங்கள் செய்வதை அடிப்படையாக கொண்டதாகும். இதே அடிப்படையில் முன்னதாக ஸ்ராலினிஸ்டுகள் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக 2001இல் அப்போதைய பிஜேபி-தலைமையிலான இந்திய அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்திருந்தனர். UPAஇல் இருந்து கழற்றிவிடப்பட்ட பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் முன்னதாக காங்கிரஸ், பிஜேபி அல்லது சில சந்தர்ப்பங்களில் இரண்டினோடும் சேர்ந்திருந்த பல்வேறு வலதுசாரி பிராந்திய மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகளை உள்ளடக்கிய "பிஜேபி-விரோத, காங்கிரஸ்-விரோத" வெளிவேடத்திலான மூன்றாம் அணி என்பதை ஊக்குவிக்க திரும்பினர். 2009 தேர்தல்களில், அவர்கள் இரண்டு முக்கிய இந்திய முதலாளித்துவ தேசிய கட்சிகளுக்கு ஒரு "மதசார்பற்ற,” “முற்போக்கான" மாற்றீடாக இத்தகைய பிற்போக்கான கட்சிகளைப் புகழ்ந்துரைத்து, தமிழ்நாட்டை மையமாக கொண்ட அஇஅதிமுக மற்றும் ஒடிசாவை மையமாக கொண்ட BJD போன்ற வலதுசாரி கட்சிகளோடு அணிதிரண்டனர். NDAஇல் இருந்து ஒரு கட்சி விலகுவதாக அறிவித்தால் போதும், ஸ்ராலினிஸ்டுகள் அதை "மதசார்பின்மையின்" பாதுகாவலனாக தம்பட்டம் அடித்தனர். இது பிஜேபி-தலைமையிலான NDAஇல் இரண்டாவது மிகப் பெரிய நீண்டகால கூட்டாளியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம், பின்னர் பிஜேபி உடனான அதன் 17 ஆண்டுகால கூட்டுறவை 2013இல் முடித்துக் கொள்வதாக அறிவித்த உடனேயே அதனுடன் கூட்டணி வைக்க அவர்கள் ஓடியதிலிருந்து எடுத்துக்காட்டப்பட்டது. காங்கிரஸ் மற்றும் பிஜேபி உடன் தேர்தலுக்குப் பிந்தைய எதிர்பார்த்திருந்த பேரங்களில் தங்களின் கரங்களைச் சுதந்திரமாக வைத்திருப்பதற்காக, எதிர்காலத்தில் வந்து இணைய வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட ஸ்ராலினிஸ்டுகளின் மூன்றாம் அணி கூட்டாளிகள் அனைவரும் 2014 தேர்தல் ஓட்டத்தில் ஸ்ராலினிஸ்டுகளை உதறி தள்ளிய பின்னரும் கூட, தேர்தலுக்குப் பின்னர் இடது ஆதரவிலான மூன்றாம் அணியில் அவர்கள் ஒரு இடத்தைப் பெறுவார்கள் என்று தொடர்ந்து ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்தி வந்தார்கள். ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தை நிராகரித்து, இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தி, ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் அவற்றின் வரலாறு முழுவதிலும் தொழிலாளர் வர்க்கத்தை இந்திய முதலாளித்துவத்திற்கு திட்டமிட்டு அடிபணிய செய்துள்ளனர். 1991க்கு முந்தைய காலக்கட்டத்தில் அவர்கள், சோசலிசம் இந்தியாவின் வரலாற்று நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று வலியுறுத்தி இதை நியாயப்படுத்தினார்கள்; நிலபிரபுத்துவ பிற்போக்குத்தனத்தை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் முதலாளித்துவத்தின் "முற்போக்கு" பிரிவுகளைத் தொழிலாளர்கள் ஆதரிக்க வேண்டுமென அவர்கள் வாதிட்டார்கள். 1917 ரஷ்ய புரட்சி மற்றும் தெற்காசியாவில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு மேலெழுச்சியை காங்கிரஸ் ஒடுக்கியமை மற்றும் ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் ஒரு இந்து இந்தியா என இந்திய துணை கண்டத்தை பிரிப்பதைக் கண்டும் காணாதது போல இருந்தமை உட்பட 20ஆம் நூற்றாண்டின் ஒட்டு வரலாறும் என்னவாக இருந்தாலும் அது, காலங்கடந்து அபிவிருத்தி அடைந்த முதலாளித்துவ நாடுகளின் சமகாலத்திய சகாப்தம் ஜனநாயக புரட்சியின் அடிப்படை பணிகளை முடிக்க இலாயகற்று இருப்பதை எடுத்துக்காட்டி உள்ளது. ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரம், தேசிய ஐக்கியம், நிலபிரபுத்துவம் மற்றும் ஜாதியவாதத்தை ஒழிப்பது போன்ற இந்த பணிகளை, தொழிலாளர் வர்க்கம் தலைமையிலான ஒரு சோசலிச புரட்சி மட்டுமே நிறைவேற்ற முடியும், அது மட்டுமே நிறைவேற்றும். உலகெங்கிலும் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுந்து நடத்திய தாக்குதலின் பாகமாக, 1970களின் தொடக்கத்தில் இந்தியாவில் வெடித்த முதிராத புரட்சிகர குணாம்சம் கொண்ட போராட்டங்களின் போது, ஸ்ராலினிஸ்டுகள் அவர்களை முதலாளித்துவத்தின் பின்னால் அடைத்து வைக்க முனைந்தார்கள். காங்கிரஸ் கட்சியுடனான ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குள் சிபிஐ நுழைந்ததோடு, இந்திரா காந்தியின் இரண்டு ஆண்டுகால நெருக்கடி நிலையை ஆதரித்தது, அதன் கீழ் அடிப்படை மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதோடு, பத்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்களும், இடதுசாரிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில், சிபிஎம் காங்கிரஸ்-விரோதமான முதலாளித்துவ ஜனதா கட்சியுடன் (BJPக்கு முன்னோடி அமைப்பான ஜன் சங் இந்த ஜனதா கட்சி உடன் ஒரு முக்கிய பங்காளியாக இருந்தது) தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டி போட்டது. கடந்த கால் நூற்றாண்டாக மற்றும் மிக நெருக்கமாக முதலாளித்துவத்துடன் இருந்து வந்துள்ள ஸ்ராலினிஸ்டுகள், நவ-தாராளவாத சீர்திருத்தங்கள் மற்றும் அமெரிக்க-ஆதரவிலான கொள்கைகளுக்குப் பகிரங்கமாக பொறுப்பேற்ற அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து, இன்னும் மேலதிகமாக வலதிற்கு நகர்ந்துள்ளனர். இவ்வாறு செய்ததன் மூலமாக அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்து மேலாதிக்க BJPஇன் அச்சுறுத்தலைத் தூண்டி உள்ளனர், அதேவேளையில் மதசார்பின்மையின் பாதுகாப்பு அரண்களாக இல்லை எனினும், அதன் பாதுகாப்பிற்காக என்ற பெயரில் காங்கிரஸையும், ஜாதிய-அடிப்படையிலான மற்றும் பிராந்திய வகுப்புவாத கட்சிகளைக் கூட்டாளிகளாக கொண்ட ஒரு அணியையும் புகழ்ந்துரைத்து வந்துள்ளனர். தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்துடன் கட்டி வைக்கும் இந்த கொள்கையின் இறுதி முடிவு என்னவென்றால், நவ-தாராளவாத மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் வேறுவிதத்தில் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தைப் பலப்படுத்துவதில் ஆளும் வர்க்கத்தின் கரங்களை சுதந்திரமாக வைத்திருக்க செய்வதாகும். காங்கிரஸ் மற்றும் அஇஅதிமுக போன்ற கட்சிகள் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிராக போராட கருவிகளாக இருக்க முடியுமென்ற வாதம் முற்றிலும் அபத்தமானதாகும். முதலாளித்துவ ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் இந்து வலதை ஏற்றுக் கொண்டுள்ளன அல்லது அதை கண்டுங்காணாதது போல இருந்துள்ளன, அத்தோடு அவை யாருக்காக பேசுகின்றனவோ முதலாளித்துவத்தின் அந்தந்த கன்னைகளின் நலன்களை முன்னெடுக்க மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தி வைக்க வகுப்புவாத மற்றும் ஜாதிய முறையீடுகளைப் பயன்படுத்துகின்றன. இன்னும் அதிகளவில் அடிப்படையாக, இதுவரையில் தொழிலாள வர்க்கம் அதன் நலன்களைப் பாதுகாக்க மற்றும் உழைப்பாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்த ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் இருந்து அது தடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சமூகரீதியில் கொள்ளி வைக்கும் முதலாளித்துவ பொருளாதார "சீர்திருத்தங்கள்" நெருக்கடியை, நிலைநோக்கு பிறழ்ச்சியை உருவாக்கி வருவதோடு, சமூக பிற்போக்குத்தனம் எதில் ஊறி போயுள்ளதோ அவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை இழக்கச் செய்கிறது. ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தனமான அரசியலின் ஒரு வரலாற்றுரீதியிலான இருப்புநிலை குறிப்பை எடுக்க இந்திய தொழிலாளர்கள் மற்றும் சோசலிச-சிந்தனை கொண்ட புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இது சரியான நேரமாகும். அவர்கள் ரஷ்ய புரட்சியின் சர்வதேச பாரம்பரியத்தின் விளைபொருட்கள் அல்ல, மாறாக அவர்கள் சோவியத் தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்து இறுதியாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியைக் கொண்டு வந்த ஸ்ராலின் தலைமையின் கீழ் இருந்த தனிச்சலுகை படைத்த அதிகாரத்துவத்தால் பேணி வளர்க்கப்பட்ட தேசியவாத-சந்தர்ப்பவாத சித்தாந்தங்களின் விளைபொருட்கள் ஆவார்கள். நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பிரிவாக இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பாரிய புதிய கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்திய தொழிலாளர்கள் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க எந்திரங்கள் உட்பட முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து தங்களைத் தாங்களே அறுத்துக் கொண்டு சோசலிசத்திற்கான போராட்டத்தில் தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் அவர்களைச் சுற்றி உள்ள உழைப்பாளர்களை அணி திரட்ட வேண்டும். பரந்த பெரும்பான்மையை வறுமைக்குள் தள்ளுவதன் மூலமாக மற்றும் கொடூர சுரண்டல் மூலமாக இந்திய முதலாளித்துவத்தை "அபிவிருத்தி" செய்வதற்கான முதலாளித்துவத்தின் உந்துதலுக்கு மற்றும் இந்த இரக்கமற்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, மோடியை அது அரவணைத்து கொண்டதில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, வகுப்புவாத பிற்போக்குத்தனம் மற்றும் சர்வாதிகார ஆட்சி முறைமைகளுக்கு அது திரும்புவதற்கு எதிராக இது மட்டுமே ஒரே ஆணித்தரமான பதிலாக உள்ளது. |
|
|