சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The new aristocracy in Britain

பிரிட்டனில் ஒரு புதிய பிரபுத்துவம்

Jordan Shilton
23 May 2014

Use this version to printSend feedback

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் சமூக நிலைமைகள் மீது வழங்கிய குறிப்புரைகளில் தோமஸ் பெயின் இவ்வாறு எழுதினார்: “செழுமை மற்றும் இரங்கத்தக்க நிலைமையின் முரண்பாடு தொடர்ந்து சந்தித்து கொள்கின்றன, அது உயிரிழந்த மற்றும் உயிருள்ள உடல்கள் ஒன்றோடொன்று பிணைந்துள்ளதைப் போல கண்களை உறுத்துகிறது,” என்றார்.

200க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு பின்னர், சமூக சமத்துவமின்மை குறித்த பெயினின் அந்த ஆழ்ந்த விமர்சனத்தை, இன்றைய பிரிட்டனுக்கு அதைவிட இன்னும் பலமாக பொருத்தி பார்க்கலாம். இதை கடந்த வாரயிறுதியில் வெளியான சண்டே டைம்ஸின் சமீபத்திய இவ்வாண்டின் பணக்காரர்கள் பட்டியல் நிரூபிக்கிறது.

பிரிட்டனின் 1,000 மிகப் பெரிய செல்வந்தர்கள் இப்போது மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான செல்வ வளத்தை, அல்லது 519 பில்லியன் பவுண்டை (877 பில்லியன் அமெரிக்க டாலரை) கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள். கடந்த தசாப்தத்தில், பில்லியனர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்து, உலக மக்கள்தொகையில் அதிக பில்லியனர்களைக் கொண்ட நாடாக இங்கிலாந்திற்கு நம்ப முடியாத சிறப்பிடம் கிடைத்தது. இங்கிலாந்தின் 500 மிகப் பெரிய பணக்காரர்களின் பரிசுத்தமான வட்டாரங்களை அணுக தேவையான செல்வ வளத்தின் அளவு, கடந்த தசாப்தத்தில் இரண்டு மடங்கை விட அதிகமாக உயர்ந்தது, அத்தோடு வெறும் ஒரே ஆண்டில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலே உள்ள 1 சதவீதத்தினர், அல்லது 600,000 நபர்கள் மக்கள்தொகையில் 55 சதவீத ஏழைகள் அல்லது 33 மில்லியன் ஏழைகளின் செல்வ வளத்தை விட அதிகமாக கொண்டிருக்கிறார்கள் என்பதை வெவ்வேறு தனித்தனியான புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தேசத்தின் 9.5 பவுண்டு ட்ரில்லியன் மதிப்பிலான சொத்து, ஓய்வூதியங்கள் மற்றும் நிதியியல் சொத்துக்களில், ஒரேயொரு சதவீதத்தினர் மலைப்பூட்டும் விதத்தில் 5.225 பவுண்டு ட்ரில்லியனைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்தில் வெறும் ஐந்து பணக்கார குடும்பங்கள் அடிமட்டத்திலிருக்கும் 20 சதவீதத்தினரை விட, அதாவது இப்போது வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வரும் 12.6 மில்லியன் மக்களை விட, செல்வசெழிப்போடு இருக்கின்றன.

சமூகத்தின் மேல்மட்டத்தில் நவீன-கால நிதியியல் பிரபுத்துவம் உருவாகி இருப்பது, நேரடியாக உழைக்கும் மக்களின் பெரும் பரந்த அடுக்குகளின் வறுமையோடு இணைந்துள்ளது. பிரிட்டனில் 1,000 பணக்காரர்களின் செல்வவளம் கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது. அதே காலக்கட்டத்தில், இதே அடுக்குகளுக்கு பல பில்லியன் பிணையெடுப்பு வழங்க அரசு நிதிகள் சூறையாடப்பட்டன, இந்த அடுக்குகள் சேர்த்த முறையற்ற இலாபங்கள், நிதியியல் ஊக வணிகம் மற்றும் முழுமையான குற்றத்தன்மை நடவடிக்கைகள் மூலம் சேர்க்கப்பட்டதாகும்.

தொழிலாள வர்க்கத்தை பொறுத்த வரையில், அதன் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் சார்ந்திருக்கும் சமூக சேவைகள் மீதான முன்னொருபோதும் இல்லாத தாக்குதல்களின் ஒரு சகாப்தத்தில், வங்கி பிணையெடுப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. பணக்காரர்கள் செல்வச்செழிப்பில் கொழித்து கொண்டிருக்கையில், உணவு கிடங்குகளின் பயன்பாடோ கேள்விபட்டிராத அளவுகளை எட்டி உள்ளது, ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளன மற்றும் பொதுச் சேவைகள் நீக்கப்பட்டுள்ளன அல்லது தனியார்மயப்படுத்தப்பட்டு உள்ளன.

இது ஒவ்வொரு நாட்டிலும் காணக்கூடியதாக, ஒரு சர்வதேச நிகழ்முறையின் பாகமாக உள்ளது. யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் அது வழங்க நிர்பந்திக்கப்பட்ட அனைத்து விட்டுகொடுப்புகளையும் மீண்டும் திரும்ப பெறுவதற்காக, 1930களின் பின்னால் நடத்திய ஆழமான தாக்குதலை மீண்டும் தொடங்க, இந்த 2008 நிதியியல் நெருக்கடி ஆளும் வர்க்கத்திற்கு ஒரு சமிக்ஞையாக இருந்தது. இதுபோன்ற கொள்கைகளின் விளைவுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு ஆஃக்ஸ்பாம் அறிக்கையால் சித்தரிக்கப்பட்டன. மிகப் பெரிய 85 பணக்காரர்கள் உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதியாக 3.5 பில்லியன் மிக வறிய ஏழை மக்களின் செல்வ வளத்தை விட அதிகமாக வைத்திருக்கிறார்கள்.

ஒரு தலைமுறைக்கு முன்னர் ஸ்தாபகத்தின் சில பிரிவுகள், சமூக சமத்துவமின்மையின் இத்தகைய திகைப்பூட்டும் அளவுகளைக் கண்டு வேண்டுமானால் வெட்கப்பட்டிருக்கலாம், ஆனால் ஞாயிறன்று வெளியான முக்கிய பத்திரிகைகளோ சமூகத்தின் மேல்மட்டத்தில் செல்வவளம் வெறுப்பூட்டும் அளவிற்கு குவிந்துள்ளதன் மீது சிறிதும் கூட விமர்சனத்தை வைக்காமல் பணக்காரர்களின் பட்டியல் மீதான செய்திகளை வழங்கி இருந்தன. அவை அந்த பணக்காரர்கள் பட்டியலைத் தயாரித்த பிலிப் பெரஸ்போர்ட் கூறிய, நிதியியல் செல்வந்த அடுக்குகளால் திரட்டப்பட்ட பல பில்லியன் பவுண்டு செல்வசெழிப்பு "நாட்டிற்குள் நிறைய வேலைகள் மற்றும் நிறைய செல்வ வளத்தைக் கொண்டு வருகின்றன" என்ற வாதங்களுக்கு ஒரேயொரு எதிர்ப்பு வார்த்தையைக் கூட எழுப்பவில்லை.

உண்மை என்னவெனில், பணக்காரர்கள் பட்டியலில் பெயரிடப்பட்ட பெரும் செல்வந்த அடுக்குகள், சமூகத்தின் அனைத்து செல்வ வளங்களையும் உறிஞ்சி எடுக்கும் ஒரு ஒட்டுண்ணித்தன ஜாதியைச் சேர்ந்தவையாகும். மேற்தட்டுகள் வைத்திருக்கும் கொழுத்த தொகைகள் உற்பத்தி பொருளாதாரத்தில் செய்யப்பட்ட முதலீட்டில் இருந்து அல்ல மாறாக நிதியியல் ஊக வணிகத்தின் மூலமாக திரட்டப்பட்டவை ஆகும். இலண்டன் துல்லியமாக உலகளாவிய பில்லியனர்களின் களமாக மாறி உள்ளது ஏனென்றால் அது நிதியியல் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் மற்றும் லைபர் கடன் விகிதத்தில் மோசடி செய்தமை உட்பட இந்நிலைமையை உருவாக்கிய ஊழல் நடைமுறைகளுக்கு ஒத்திருக்கிறது.

பொருளாதார மீட்சி மீதான எந்தவொரு பேச்சும் பிரத்யேகமாக செல்வந்தர்களுக்கே பொருந்துகிறது. பங்கு சந்தைகள் முன்பில்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன, சொத்து விலைகள் இலண்டனில் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளன, அதேவேளையில் பாரிய பெரும்பான்மையினரின் ஊதியங்கள் தொடர்ந்து மந்தமடைந்துள்ளன அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளன. நெருக்கடி ஒரு முடிவுக்கு வருவதைக் குறிப்பதாக பேசப்படும் பெருளாதார வளர்ச்சி புள்ளிவிபரங்கள் பெரிதும் நிதியியல் துறையிலிருந்து வருகின்றன, பிரிட்டனின் பொருளாதார வெளியீட்டில் அது 40 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.

சமூக சமுத்துவமின்மையின் முரண்பட்ட அளவுகளை அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் நிதியியல் செல்வந்த தட்டின் பிரதிநிதிகளுக்காக கொண்டு வரப்பட்டு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன, மேலும் சமூக சமத்துவமின்மை இயற்கை ஒழுங்கமைப்பின் விடயமாக இருப்பதாக கூறி பல ஆண்டுகளாக வலதுசாரி திட்டங்களைப் பின்பற்றி வந்துள்ளன. இந்த திட்டவடிவ முறைமையின்படி, பணக்காரர்கள் அவர்களின் திறமைகள் மற்றும் வெற்றிகளால் மேல்மட்டத்திற்கு உயர்ந்தார்களாம், சமூகத்தின் மீத பகுதி அதிலிருந்து "கசிந்து" உருவாகும் செல்வ வளத்திற்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்றாகிறது. 1980களில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தாட்சர் அவரது தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, இது உழைக்கும் மக்களுக்கு பேரழிவுகரமானதாக நிரூபித்துள்ளது.

பொதுச் சேவைகளை தனியார்மயமாக்குதலில் மற்றும் பரந்த பொருளாதாரத்திலிருந்து ஒரு பாரிய நிதியியல் துறையின் வளர்ச்சியை முன்பில்லாத அளவிற்கு பிரித்து வைப்பதை ஊக்குவிப்பதில், பழமைவாதிகள் எங்கே விட்டு சென்றார்களோ அங்கே இருந்து அதிகாரத்திற்கு வந்த தொழிற்கட்சி ஏற்றுக் கொண்டது. 2008இல் நிதியியல் நெருக்கடி வெடித்த போது, தொழிற்கட்சி தான் வங்கி பிணையெடுப்பை நடைமுறைப்படுத்தியது, அத்தோடு அது தான் கண்மூடித்தனமான சிக்கன திட்டத்தை அமுல்படுத்த தொடங்கியது. அதன் தொழிற்சங்க பங்காளிகள் உழைக்கும் மக்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்க்க ஒரேயொரு பிரதான வேலைநிறுத்தத்தைக் கூட ஒழுங்கமைத்திருக்கவில்லை.

இன்று பரந்த பெரும்பான்மையினரின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளைத் தக்க வைப்பது கூட நிதியியல் பிரபுத்துவத்தின் இருப்போடு பொருந்துவதாக இல்லை, அவர்களின் பாரிய செல்வசெழிப்பு சமூகத்திற்கு ஒன்றும் வழங்குவதற்கில்லை. அதாவது, தொடர்ந்து மோசமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் மூலக்காரணங்களுக்கு எதிராக நடத்தப்படும் ஒரு அரசியல் போராட்டம் இல்லாமல் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் ஒரேயொரு பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாது.

ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மற்றும் இலாபத்திற்காக அல்லாமல் தேவைக்கான திட்டமிட்ட உற்பத்தியின் ஒரு சோசலிச அமைப்புமுறையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, அதன் உச்சாணி கொம்பில் நிற்கும் மற்றும் அரசியல்-பொருளாதார வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் கட்டளையிட்டு வரும் ஒட்டுண்ணித்தன ஜாதியின் பிடியிலிருந்து சமூகம் காப்பாற்றப்பட வேண்டும்.

பிரிட்டனின் தொழிலாள வர்க்கத்தை ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவில் இருக்கும் அதன் சகோதர-சகோதரிகளோடு ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த இன்றியமையா கடமையைச் செய்து முடிக்க முடியும். இந்த காரியத்திற்காக தான் பிரிட்டனின் சோசலிச சமத்துவ கட்சியும், நமது சகோதரத்துவ கட்சியான ஜேர்மன் சோசலிச சமத்துவ கட்சியும் (Partei für Soziale Gleichheit) அர்பணித்துள்ளன, அவை ஐரோப்பிய தேர்தல்களுக்கான நமது பிரச்சாரத்திற்கு அத்தியாவசிய அடித்தளத்தை வழங்குகின்றன.