World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Tens of thousands protest closure of public television in Greece

கிரீஸில் பொதுத் தொலைக்காட்சி மூடலுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்ப்பார்ப்பட்டம் செய்தனர்

By Christoph Dreier 
14 June 2013

Back to screen version

கிரேக்க அரசாங்கத்தால் நடத்தப்படும் பொது ஒளிபரப்பு நிறுவனமான ERT யை மூடியதற்காக கிரீஸ் முழுவதும் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிலையத்தின் பிரதான கட்டிடத்தை ERT தொழிலாளர்கள் ஆக்கிரமித்திருக்கும் நிலையில், உலகெங்கிலுமுள்ள மக்கள் அவர்களுடைய ஆர்ப்பாட்ட நிலையங்களுக்கான சமிக்ஞையை வலைத் தளங்கள் மற்றும் ரேடியோ அல்லது செயற்கைக்கோள் வாயிலாக அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பழமைவாத பிரதம மந்திரியான ஆண்டொனிஸ் சமரஸ் (ND) செவ்வாய்கிழமையன்று, எந்தவித எச்சரிக்கையுமின்றி, 75 வருட பழமையான ERT  யை மூடுவதற்கும் உடனடியாக 2,700 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கும், உத்தரவிட்டுள்ளார். நள்ளிரவில் எடுக்கப்பட்ட இந்த திடீர் முடிவின் செயல்பாட்டினால், காவல்துறை ஆண்டனாக்களுக்கான (the antennas) மின்சாரத்தை துண்டித்ததுடன் மீதமுள்ள தொழிலாளர்களை அவர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறவில்லையென்றால் கைது செய்துவிடுவதாக அச்சுறுத்தவும் செய்தது.

அப்பொழுதிலிருந்து, ஏதென்ஸில் ஏஜியாவின் புறநகரிலுள்ள ERT நிலையத்தின் பிரதான கட்டிடத்தை தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். தங்களது ஒற்றுமையைக் காட்டுவதற்காக கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். வியாழன்று மதியம், அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது ஒளிபரப்பில் கை வைக்காதே...!” என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர், ”சமரஸை நீக்கு... ERT தொழிலாளர்களை அல்ல...!” என்பது போன்ற பதாகைகளையும் வைத்திருந்தனர்.

எதைப் பார்க்க வேண்டும் என்றோ அல்லது எதைப் பார்க்கக் கூடாது என்றோ சமரஸ் எங்களுக்கு சொல்ல முடியாது. இது இனி ERT அல்லது தொழிலாளர்கள் பற்றியது அல்ல, இது ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமை பற்றியதுஎன்று தாயுடன் வசித்து வருகிற, மாதம் 800 டாலர்கள் சம்பாதிக்கும் அலுவலக தொழிலாளியான Thanos Lykourias (30)  பிரிட்டிஷ் தினசரியான Guardian இடம் தெரிவித்தார்.

நான் இன்று இங்கு வந்திருக்கிறேன் இல்லையென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அரசாங்கம் எங்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்துவிடும்என்று ஜெர்மன் பொது தொலைக்காட்சி நிறுவனமான ARD- யிடம் வயதான எதிர்ப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாடெங்கிலும் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. Thessaloniki-யில் ERT3 கட்டிடத்தின் முன்பாக ஆயிரக்கணக்கானவர்கள் கூடினர், அதுவும் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் கப்பற் தொழிலாளர்கள் ஆகியோர் ERT தொழிலாளர்களுடன் ஒற்றுமையாக கூடினர். சில பள்ளிகள் மூடப்பட்டன, மருத்துவமனைகள் அவசரகால பணியாளர்களுடன் செயல்பட்டன. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தங்களது பணிகளை 2 மணிநேரத்திற்கு ஒத்தி வைத்தனர். ERT மறுபடியும் திறக்கப்படும்வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் திட்டத்தை பத்திரிகையாளர்கள் அறிவித்தனர்.

வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக ERT பணியாளர்கள் இன்னும் தங்களது NET தொலைக்காட்சி எதிர்ப்பு சமிக்ஞையை இணையம் மூலமாக ஒளிபரப்பி வருகின்றனர். வியாழனன்று, ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒளிபரப்புச் சங்கம் (EBU) Thessaloniki –யில் ஒரு ஸ்டூடியோவிலிருந்து சமிக்ஞையை எடுத்துக்கொண்டு, செயற்கைக்கோள் மூலமாக அதனை கீரீக்கில் இருக்கும் வீடுகளுக்கு ஒளிப்பரப்பியது.

கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் (KKE) ERT நிகழ்ச்சிகளை தாங்கி வரும் அலைகளை தங்களது கட்சியின் ஒளிபரப்பு சாதனம் மூலமாக ஒளிபரப்ப முன்வந்தது. 50 ஐரோப்பிய டிவி ஒளிபரப்பாளர்களிடமிருந்தும் ஆதரவு வந்தது, அதில் இந்த மூடலுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

டஜன்கணக்கான பிற வலைத் தளங்களும் இந்த நேரடி ஒளிபரப்பை செய்து வருகிறது. ERT-யின் ஆதரவாளர் ஒருவர், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக nerit.gr என்ற இணைய முகவரியில் பதிவும் செய்தார். குறைந்த தொழிலாளர்கள் மற்றும் குறைந்த ஊதியங்களுடன் - ERT தொழிலாளர்களை தோற்கடித்துவிட்டால், அரசாங்கம் அமைக்க நினைக்கும் புதிய பொது ஒளிபரப்பிற்கான உத்தேசிக்கப்பட்ட பெயர் NERIT ஆகும்.

கிரீஸுக்குள் தொழிலாள வர்க்கத்தின் எல்லா பிரிவினரையும் அழித்திருக்கிற, தீவிரமான சமூக வெட்டுக்கள் மீதான பரவலான சமூகக் கோபம் மற்றும் எதிர்ப்பினை ERT தொழிலாளர்களுக்கான பிரபல ஆதரவாளர்கள் வெளிப்படுத்துகின்றனர். நேற்று வெளியான சமீபத்திய தகவல், 2013 –ன் முதல் காலாண்டில் 27.4 சதவீதத்திற்கு புதிதாக வேலைவாய்ப்பின்மைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. கிரீக்கின் 6 வருட மந்த நிலையின் ஆரம்பத்திலிருந்து 8,50,000 வேலை வாய்ப்புகள் வெட்டப்பட்டுள்ளன, அதே காலகட்டத்தில் சராசரி வேலைவாய்ப்புகள் குறைவது 35 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகியுள்ளது.

இந்த உண்மையை சுட்டிக்காட்டியும், ERT தொழிலாளர்கள் சலுகையுள்ள அடுக்கினர் என்று வழிமொழிந்த சமரஸின் கருத்தை எதிர்த்தும் ERT தொழிலாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். ”வெளிப்படைத் தன்மையின்மை குறித்த அவரது இந்த குற்றச்சாட்டுகள், அவருடைய சுய ஒழுக்கம் சார்ந்ததா? அல்லது ஆதாரமற்றவையா?” ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டபொழுது, சமரஸால் பணியமர்த்தப்பட்ட ERT-யின் தலைமை ஆலோசனையாளர்களை பணியமர்த்தி தயாரிப்பிற்கான ஒப்பந்தத்தை தெரிந்த நபர்களுக்கு அதிகப்படியான விலையிலும் குறைந்த அளவே பார்வையாளர்களைக் கொண்ட தயாரிப்புகளுக்கு வழங்கியது. இதைத்தான் எப்பொழுதும் நாங்கள் எதிர்த்து வந்தோம், அதாவது எங்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காக மட்டும் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை மாறாக, ERT -யின் தரக்குறைவை கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும்

ERT க்கான ஆதரவு சிக்கன கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்துள்ள ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான தொழிலாளர்களது எதிப்புகளின் வெளிப்பாடாகும்.  கடந்த 5 மாதங்களில், மூன்று மிகப்பெரிய வேலை நிறுத்தங்களை அரசு தடுத்துள்ளது.

வியாழன்று, பணச் செலவைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல, ஆனால் வேறுசில கொள்கை ரீதியான காரணங்களுக்காகவும் தான் ERT  -ஐ மூடிவிட்டதாக சமரஸ் வெளிப்படையாக கூறினார். ”கிரீஸ் உண்மையில், உலகில் டைனோசர்கள் பிழைத்திருக்கும் தனித்துவம் கொண்ட, பழமையான கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட வேறெங்கும் இல்லாத ஜுராசிக் பார்க் போன்ற ஒரு நாடாக மாறிவிட்டதுஎன்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் ERT தொழிலாளர்களை சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல் ஒளிபரப்பையும் நிறுத்த முயற்சித்தது.

”ERTயின் சமிக்ஞைகளை கொண்டிருக்கும் எந்த ஒரு ஒளிபரப்பும் அங்கீகாரமற்றது என்றும் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்பட்டதுஎன்றும் நிதியமைச்சகம் மற்றய ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியது.

அரசாங்கம் அதன் கொடூரமான தாக்குதல்களில், சமூக வெட்டுக்கள் மற்றும் பிற ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு கட்டளையிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களை நம்பியிருக்கிறது, 3.3 பில்லியன் கடன் தொகையினை பெறுவது குறித்து விவாதிப்பதற்காக வியாழனன்று மாலை, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகளை சமரஸ் சந்தித்தார். மேலும், அந்த பணத்தை பெறுவதற்கு மேலும் 2 ஆயிரம் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதென சமரஸ் முடிவெடுத்தார்.

இந்த கூட்டணிக்குள்ளேயே, சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடது (DIMAR) ஆகிய இரண்டு இளம் கூட்டாளிகளால்- சமரஸும் அவரது பழமைவாத புதிய ஜனநாயக கட்சியும் (ND) விமர்சிக்கப்பட்டது. வியாழனன்று நடக்கும் கூட்டத்தில், கூட்டணி கட்சிகள் கூடி திங்கட்கிழமையன்று இது குறித்த தெளிவான ஒரு முடிவெடுக்கலாம் என்று முடிவெடுத்தன.

PASOK மற்றும் DIMAR ஆகிய இரண்டுமே, ERT தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை ஆதரிப்பதாகவும் சமரஸின் கொள்கைகளின் மீது குறைந்த அளவு எதிர்ப்புகள் இருப்பதையும் தெளிவுபடுத்தின. ”நாங்கள் ERT - ஐ தீவிரமாக மறுகட்டமைப்பு செய்வதை ஆதரிக்கிறோம். ஆனால், மூடிய திரைக்கு உள்ளே அல்லஎன்று முன்னாள் நிதி மந்திரியும் PASOK –ன் தலைவருமான  Evangelos Venizelos கூறினார்.

தீவிர இடது கூட்டணி (SYRIZA) மற்றும் அதன் தாக்குதல்களை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் வெடிப்புத்தன்மையுள்ள வளர்ச்சியைத் தடுக்க விரும்புகிறது. ”ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைவிரும்பும் SYRIZA தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு சென்றார். உண்மையில், சிக்கன நடவடிக்கை அரசாங்கத்தை பதவியிறக்கம் செய்ய கிடைத்த பல வாய்ப்புகளை அவரது கட்சி மறுத்து, காவல் துறையோடு நெருக்கமாக வேலைசெய்கிறது.