தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Rolls Royce sales reflect mounting global social inequality உலக சமுதாய சமத்துவமின்மை அதிகரித்து வருவதைப் பிராதிபலிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் விற்பனை.By
Dietmar Henning Use this version to print| Send feedback சிலநேரங்களில் சிறியதாக மற்றும் முக்கியத்துவமில்லாதது போல் தோன்றும் ஒரு தகவல் பிரதான அரசியல் மற்றும் சமூக அபிவிருத்திகளின் வருவதை உரைக்கும் முன்னோடியாக மாறிவிடுகிறது. இங்கிலாந்தின் கார் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸின் கடந்த வருட விற்பனை அறிக்கை இந்த வகையில் இருந்தது. தற்போது ஜேர்மன் கார் உற்பத்தியாளரான BMW வைச் சார்ந்த, பிரிட்டனின் மிகுந்த மதிப்புவாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் உற்பத்தி நிறுவனம், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக கார்களை கடந்த வருடம் விற்பனை செய்தது. எண்ணிக்கையில் 3, 630 கார்கள் மட்டுமே விற்றது என்றாலும், இந்த ஒவ்வொரு சொகுசு காரும் சராசரியாக 4,00,000 யூரோக்கள் (5,40,000 அமெரிக்க டாலர்கள்) மதிப்புடையதாகும். ரோல்ஸ் ராய்ஸின் முக்கிய போட்டியாளரும் Volkswagen நிறுவனத்தின் ஒரு பிரிவுமான Bentley யும் கடந்த வருடம் 10 ஆயிரம் கார்களைக் கடந்து 20 சதவீதமாக அதன் விற்பனையை அதிகரித்தது. ஆயினும் Bentley யின் விலை 1,70,000 டாலர்கள் “மட்டுமே”. 2008 இலிருந்து சர்வதேச நிதி உயரடுக்கு, தன்னை வளப்படுத்திக்கொள்வதற்காக பொருளாதார நெருக்கடியை இரக்கமின்றி சுரண்டிவரும் அதேவேளை, உலகெங்கிலுமுள்ள எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்களை மோசமான வறுமைக்குள் தள்ளிவருகிறது. மிகுந்த பணக்காரர்களின் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பதற்காக, நிதிச் சந்தைகளில் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலுத்திவரும் வேளையில், இந்த பணம் சமூகச் செலவுகளில் முன்னெப்போதுமில்லாத வெட்டுக்கள் மற்றும் வேலைகளை அழித்தல் ஆகிய வடிவத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து பிழிந்தெடுக்கப்பட்டு வருகிறது. இன்னொரு செய்தி அறிக்கையின்படி, பெரும் திரளான மக்கள் இனி சிறிய அல்லது மத்திய தர கார்களை வாங்க முடியாத இந்த நேரத்தில்தான் இந்த சொகுசு கார்களின் வரலாற்று விற்பனை குறித்த அறிவிப்பும் வெளியாகிறது. குறிப்பாக இது தெற்கு ஐரோப்பாவை பொறுத்த வரையில் உண்மை, அங்கு கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் ”முக்கூட்டு” (ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தி வருகிறது. நீண்ட காலமாக உலகின் பெரும் கார் சந்தைகளுள் ஒன்றாக ஐரோப்பா இருந்தது, ஆனால் இப்போது அதன் விற்பனை குறைந்திருக்கிறது, கடந்த வருடம் அதன் புதிய கார்களின் பதிவுகள் இருபதாண்டுகளில் மிகக்குறைந்த அளவிலேயே காணப்பட்டது. பல தொழிற்சாலைகளை மூடுதல் மற்றும் தொடர்ந்து வேலை செய்பவர்களின் கூலிகள் மற்றும் பணி நிலைமைகள் மீதான தாக்குதல் ஆகியவை மூலமாக நிறுவனங்கள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஜேர்மனியின் போஹுமில் Opel; பெல்ஜியத்தில் ஜென்க்கில் Ford; பாரிஸுக்கு வெளியில் ஒல்னேயில் Peugeot-Citroen ஆகியவற்றை மூடியதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். உலக கார் விற்பனையில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிறிய உயர்வுக்கு, அமெரிக்கா மற்றும் சீனாவின் சராசரிக்கும்-மேற்பட்ட வளர்ச்சி விகிதங்களே முக்கிய காரணம். இதிலிருந்து ஆதாயம் பெறுபவர்களென்றால் அது குறிப்பாக மேற்சொன்ன சொகுசு கார் உற்பத்தியாளர்களே, அதிலும் குறிப்பாக ஜேர்மன் உற்பத்தியாளரான Daimler, BMW மற்றும் Audi, ஏனென்றால் ஒட்டுமொத்த சந்தையை விட சந்தையின் இந்த பகுதி வேகமாக வளர்கிறது. கார் துறையின் இந்த வளர்ச்சி, 2008 இலிருந்து முன்னெப்போதுமிலிலாத வகையில் அதிகரித்திருக்கின்ற சமூக சமத்துவமின்மையின் அளவினைப் பிரதிபலிக்கிறது. 2009 மார்ச்சில் ஏற்பட்ட நிதி நெருக்கடி எனும் படுகுழியின் காரணமாக, அனைத்து பில்லியனர்களின் செல்வமும் 3.1 டிரில்லியன் டாலர்களிலிருந்து (2.26 டிரில்லியன் யூரோக்கள்) 6.5 டிரில்லியன் டாலர்களாக (4.75 டிரில்லியன் யூரோக்கள்) இரட்டிப்பாகியிருக்கிறது. 2009 ல் இருந்ததை விட 2013 ல், பில்லியனர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. சில 2,170 பேர், அமெரிக்கா மற்றும் சீனா தவிர மற்ற எல்லா உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒருங்கிணைந்த மதிப்பினை விஞ்சுகிற செல்வத்தின் அளவினை பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு Oxfam தொண்டு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. உலகில் இருக்கும் 85 பணக்காரர்கள் உலக மக்கள் தொகையில் கீழ் மட்டத்தில் இருக்கும் 50 சதவீத மக்களை விட அதாவது, 3.5 பில்லியன் பேரை விட, அதிக சொத்துக்களைக் கொண்டிருப்பதை அவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது. உலகின் சொத்துக்களில் 46 சதவீதத்தினை அல்லது 110 டிரில்லியன் டாலர்களை (80 டிரில்லியன் யூரோக்கள்)… இந்த 1 சதவீத பணக்காரர்கள் கொண்டுள்ளனர். அனைத்து தொழிற்துறைமயமான நாடுகளுக்கும் மத்தியில் 2008 முதல் அமெரிக்காவில் அதிக அளவிலான சமூக சமத்துவமின்மை நிலவுவதாக தெரிவிக்கும் ஒரு வரைபடத்தையும் இவ்வறிக்கை உள்ளடக்குகிறது. இந்த கணக்கெடுப்பு சீனாவை எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் எண்ணிக்கைகள் உள்நாட்டிற்கு மட்டுமே கிடைக்கும்படி உள்ளன. 2000 முதல் சீனாவிலிருந்து மட்டுமே மதிப்பிடப்பட்ட 4 டிரில்லியன் டாலர்கள் (2.9 டிரில்லியன் யூரோக்கள்) வரி ஏய்ப்புகளுக்காக நகர்த்தப்பட்டுள்ளதாக Süddeutsche Zeitung செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஜேர்மனியின் அதி பணக்காரர்களும் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு பணக்காரர்களாக உள்ளனர். Spiegel குழுவின் Manager Magazin தனது ஆராய்ச்சி முடிவினை வெளியிட்டது அதன்படி, ஜேர்மனியின் 100 பணக்கார தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் சொத்துக்கள் கடந்த 12 மாதங்களில் சாதனை மதிப்பான 336.6 பில்லியன் யூரோக்கள் அளவிற்கு அதாவது, 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளன. முந்தைய வருடத்தில், அவர்கள் 319 பில்லியன் யூரோக்கள் “மட்டுமே” கொண்டிருந்தனர். மற்ற ஒவ்வொரு நாட்டினைப்போன்றும், ஜேர்மனியிலும் வறுமை அதிகரித்துவரும் வேளையில், அதன் பில்லியனர்களின் எண்ணிக்கையும் சாதனை அளவிற்கு உயர்ந்துள்ளது. இதழின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அவர்களின் சொத்து மதிப்பு 135 பில்லியன் யூரோக்கள் (184 அமெரிக்க டாலர்கள்). சமீபத்திய வருடங்களைப் போன்று, பணக்கார ஜேர்மனியர்கள் Aldi நிறுவனர்களான Karl மற்றும் Theo Albrecht குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இதில் முதல் இடத்தை பிடிப்பவர் 93 வயதான Karl Albrecht, இவரது சொத்துக்கள் 17.8 பில்லியன் யூரோக்கள் (24.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஐ எட்டியுள்ளன. இந்த குடும்பத்தை சேர்ந்தவரும் 2010 -ல் இறந்த சகோதரருமான Theo Albrecht, 16 பில்லியன் யூரோக்கள் (21.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தை பெறுகிறார். Lidl மற்றும் Kaufland discount chains களின் நிறுவனரான பில்லியனர் Dieter Schwarz, மூன்றாவது பணக்காரராவார். இவருக்கு கடந்த வருடத்தை விட ஒரு பில்லியன் அதிகமாக 13 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பினைக் கொண்டிருப்பதாக Manager Magazin தெரிவிக்கிறது. Quandt தொழிற்துறை குடும்பத்தின் பல வாரிசுகளும் 20 பணக்காரர்களில் உள்ளடங்குவர், இவர்கள் தங்களது செல்வத்திற்காக நாஜி ஆட்சியின் கீழ் தங்களது நிறுவனத்தை வைத்தனர். Quandt இன் பெண் வாரிசான Susanne Klatten, 10 பில்லியன் யூரோக்கள் சொத்து மதிப்புடன் ஜேர்மனியில் ஐந்தாவது பணக்கார நபராவார்; 7.2 பில்லியன் யூரோக்கள் சொத்து மதிப்புடன் பில்லியனர்கள் பட்டியலில் Stefan Quandt ஒன்பதாவது இடம் பிடிக்கிறார்; நிறுவன பரம்பரையின் பெண்காப்பாளரான Johanna Quandt 6.75 பில்லியன் யூரோக்கள் சொத்துக்களுடன் பத்தாமிடத்தில் உள்ளார். உலகின் பணக்காரர்கள், சமூக சமத்துவமின்மையும் வறுமையும் பெருமளவில் காணப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயலானது கிடையாது. சமீபத்திய Forbes பட்டியலின்படி, 73 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (56 பில்லியன் யூரோக்கள்) சொத்து மதிப்புடன் மெக்ஸிக்கோவின் பெரும் வர்த்தகரான Carlos Slim பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார், இவருக்கு அடுத்து, அமெரிக்காவில் 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் மற்றும் 57 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் Zara parent firm Inditex இன் இணை நிறுவனரான Spaniard Amancio Ortega ஆகியோர் உள்ளனர். சமூக சமத்துவமின்மையின் தரவரிசையில் அதன் 34 உறுப்பு நாடுகளில், மெக்சிக்கோ இரண்டாவது இடமும், அமெரிக்கா நான்காவது இடமும் மற்றும் ஸ்பெயின் எட்டாவது இடமும் பெறுவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளிப்படுத்துகிறது. பில்லியனர்கள் குறித்த Manager Magazin மற்றும் Forbes இரண்டின் மதிப்பிடல்களும் வியாபாரம் மற்றும் பங்கின் மதிப்புகள், நில உடன்படிக்கை மற்றும் சொத்துக்கள் மற்றும் கலைப் பொருட்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. கலைச்சந்தை வரலாற்றிலேயே பிரிட்டிஷ் ஏல நிறுவனமான கிரிஸ்டி கடந்த ஆண்டு பெருமளவு வியாபாரத்தை பதிவு செய்தது வியப்பானதல்ல. கடந்த வருடத்தின் 5.5 பில்லியன்களுடன் ஒப்பிடுகையில், இதன் வருவாய் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. பில்லியனர்களின் செல்வம் குவிதலுக்கும் பெருமளவிலான மக்களது வாழ்க்கைத்தரங்கள் குறைவதற்கும் இடையிலான பெரும் இடைவெளி உலக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சமாகும் என்பதுடன் அது ஜனநாயக நிலைமைகளுட ன் பெருமளவு ஒத்து போகாத ஒன்றாகும். பெரும் பணக்காரர்களது சிறிய அடுக்கு ஒன்று, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையினையும் தனது இரும்புப்பிடியில் வைத்திருக்கிறது. தங்களது செல்வத்தினை பாதுகாத்துக்கொள்வதற்காக, சமுதாயத்தை தடையின்றி கொள்ளையடிப்பதை அவர்கள் முடுக்கிவிட்டுக் கொண்டிருப்பதுடன் பெரும்பாலானவர்களை வறுமை, துயரம் மற்றும் துரதிர்ஷ்டங்களுக்காக கண்டித்தும் வருகின்றனர். 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒரு நாளைக்கு 2.50 அமெரிக்க டாலர்களுக்கும் (1.80 யூரோக்களுக்கும்) குறைவானதில் வாழ்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். |
|
|