தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India’s parliamentary landscape transformed இந்தியாவின் நாடாளுமன்ற இயற்கையமைப்பு மாற்றமடைகின்றது
By
Keith Jones Use this version to print| Send feedback இந்திய பெருநிறுவன ஊடகங்கள், சிலநாட்களுக்கு முன்னர் முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் இந்து வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) வெற்றியை, சந்தை-சார்பு "சீர்திருத்தத்திற்கு" பாரிய மக்கள் வழங்கிய ஒரு ஒப்புதலாக அறிவித்துள்ளன. இதுவொரு பொய்யாகும். 31 சதவீத வாக்குகளோடு இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் ஒரு பெரும்பான்மையைப் பெற்ற முதல் கட்சியாக பிஜேபி உருவாகி உள்ள போதினும், அக்கட்சியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியாளர்களாக ஆனதற்கு காரணம், வாக்குறுதிகள் பூர்த்தி செய்யப்படாததால் ஆகும். பத்தாண்டு கால காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட பாரிய மக்கள் கோபத்தினால் பிஜேபியினர் எந்தக் காரணமும் இன்றி ஆதாயமடைந்தார்கள். அந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களை நேராக கட்டுக்கடங்கா பணவீக்கம், பாரிய வேலைவாய்ப்பின்மை, தொற்றுநோய்போன்ற வறுமை, மற்றும் முன்பில்லாத அளவிற்கு விரிவடைந்த சமூக சமத்துவமின்மை ஆகியவற்றோடு இணைத்து விட்டிருந்தது. எந்தவொரு பிஜேபி-சார்பு "சுனாமியும்", மேல்மட்ட மத்திய வர்க்கத்தின் மிகவும் பேராசை மிக்க பிரிவுகளான பெருநிறுவன பொதுக்குழு அறைகளுக்குள் எல்லைக்குட்பட்டு இருந்ததோடு, அது ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் இந்து மேலாதிக்கவாத அமைப்புகளின் வலையமைப்பில் இருந்த குட்டி முதலாளித்துவ பிரிவினரால் தூண்டிவிடப்பட்டிருந்தது. BJP'இன் தேர்தல் வெற்றிக்காக இந்தியாவின் வணிக அமைப்புகள் பில்லியன் கணக்கில் பணத்தை பாய்ச்சி இருந்தன. பெருநிறுவன ஊடகங்கள், அதன் பங்கிற்கு, பிஜேபி பிரதம மந்திரி வேட்பாளரும், சுய-பாணியிலான இந்து இரும்புமனிதரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியை "வளர்ச்சியின்" நாயகனாக காட்டி வந்தன. 2002 குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலையைத் தூண்டிவிட்டதில் அவரது பாத்திரத்தை அவை மூடி மறைத்தன. பாரிய மக்கள் எதிர்ப்பின் முன்னால் சமூகரீதியில் எரியூட்டும் நவ-தாராளவாத சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் அளிக்கும் கருவியாக மோடி-தலைமையிலான BJP இனை முதலாளித்துவம் ஏற்று தழுவிக் கொண்டது. பாரிய சமூக செலவின வெட்டுக்கள், எரிபொருள் மற்றும் உர விலைகளுக்கான மானியங்களை நீக்குவது, வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் மீதிருக்கும் தடைகளை வெட்டுதல், வரிச்சுமையை மேலும் அதிகமாக உழைக்கும் மக்களுக்கு மாற்றுவது, ஒட்டுமொத்த தனியார்மயமாக்கம், மற்றும் நடைமுறை அளவில் அன்னிய முதலீட்டின் மீது மிஞ்சியிருக்கும் அனைத்து தடைகளையும் நீக்குவது ஆகியவை அவர்களின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முனைந்திருந்தது, ஆனால் அது மிகவும் மெதுவாகவும், தயக்கத்தோடும் அதை செய்து வருவதாக கருதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனம் இறுதியாக அதன் மீது நம்பிக்கை இழந்தது. இதுவரையில் மோடி மற்றும் பிஜேபி மீது இந்திய உழைக்கும் மக்களுக்கு ஏதேனும் ஆர்வம் இருந்ததென்றால் அது பொய்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும், பிஜேபி தலைவர் சுப்ரமணிய சுவாமி உற்சாகமாக இந்து நாளிதழுக்கு கூறுகையில், பிஜேபி அனைத்து உணவு-விலை மானியங்களை மற்றும் நடைமுறைரீதியில் அனைத்து வருமான வரிகளையும் நீக்க விரும்புகிறது, வருமான வரிகளையும் நீக்குவதால் ஏற்படும் வருமான பற்றாக்குறையை இயற்கை ஆதாரவளங்கள் மற்றும் ஏனைய பொது சொத்துக்களின் விற்பனை மூலமாக ஈடுசெய்யும் என்றார்; ஆனால், அவை “பணக்காரர்களுக்கு-சார்பானது" என்று தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அது இத்தகைய "புரட்சிகர" கருத்துக்களை அதன் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கவில்லை என்றும் சுவாமி விவரித்தார். BJP'இன் வெற்றி பரந்த மக்களின் தீர்ப்பாகும் என்ற ஊடகங்களின் வாதங்கள், தொழிலாள வர்க்கத்தை மிரட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதோடு, அக் கட்சியின் வர்க்க யுத்த கொள்கைகளால் விரைவிலேயே எழக்கூடிய மக்கள் எதிர்ப்பின் மீதான அரச ஒடுக்குமுறைக்கு அவை சட்டபூர்வத்தன்மையை வழங்குகின்றன. தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கும் அத்தோடு ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு மக்கள் மத்தியிலான ஆதரவு பரந்தளவில் குறைந்து போயிருப்பதை எடுத்துக்காட்டுவதாக அவை குறிப்பிட்டன. இந்து வகுப்புவாத பிஜேபியை அதிகாரத்தை எடுக்காதிருக்க செய்வது என்ற பெயரில், ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ச்சியாக வலதுசாரி இந்திய அரசாங்கங்களுக்கு முட்டு கொடுத்துள்ளன. முதலாளித்துவ நவ-தாராளவாத "புதிய பொருளாதார கொள்கையை" தொடங்கிய 1991 மற்றும் 1996க்கு இடையே இருந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவும் இதில் உள்ளடங்கும். இந்தியாவை உலக மூலதனத்திற்கு ஒரு மலிவு-உழைப்பு பூமியாக மாற்றுவதே அக்கொள்கையின் நோக்கமாக இருந்தது. UPA'இன் முதல் பதவி காலத்தின் போது (2004-9), அவர்களின் ஆதரவு காங்கிரஸிற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் மிகுந்ததாக இருந்தது. 2004 தேர்தல்களைத் தொடர்ந்து UPAக்குள் பிராந்திய மற்றும் ஜாதிய அடிப்படையிலான கட்சிகளின் ஒரு குழுவை ஒரே குடையின் கீழ் கொண்டு வர ஸ்ராலினிஸ்டுகள் உதவியதோடு, பின்னர் அதற்கடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதை அதிகாரத்தில் வைத்திருக்கவும் உதவினர். இப்போது வரையில், இந்திய முதலாளித்துவத்தின் ஆதரவான அரசாங்க கட்சியாக காங்கிரஸ் இருந்து வந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் நான்கு தசாப்தங்களில், இரண்டரை ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து இந்திய அரசாங்கத்தையும் அதுவே அமைத்தது. கடந்த கால் நூற்றாண்டின் போது, அதே கட்சி தான் உலக மூலதனத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு-உழைப்பு மையமாக உருவாக்கும் முதலாளித்துவத்தின் உந்துதலை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் இந்தியாவிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒரு "மூலோபாய கூட்டணியை" உருவாக்குவதில் பெரும் பொறுப்பைத் தோளில் சுமந்திருந்தது. ஆனால் அது இப்போது ஒரு வரலாற்று பொறிவை அனுபவிக்கிறது. வெறும் 19 சதவீத வாக்குகளைப் பெற்று, 545 இடங்கள் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் 44 இடங்களை மட்டுமே வென்றது. இது உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட கூட போதுமானதல்ல. இதுவரையில் காங்கிரஸ் 114 இடங்களுக்குக் குறைவாக மற்றும் 26 சதவீத வாக்கு விகிதங்களுக்குக் குறைவாக ஒருபோதும் பெற்றதில்லை. மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்கள் சிலவற்றில் காங்கிரஸ் இப்போது நான்காவது கட்சி அந்தஸ்திற்கு, ஏன் ஐந்தாவது கட்சி அந்தஸ்திற்கும் கூட குறைந்து போயுள்ளது. அதன் நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஐந்தில் ஒரு பங்கு பிரதிநிதிகள் தற்போது இந்தியாவின் மக்கள் தொகையில் 3 சதவீதத்திற்கும் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட கேரளாவில் இருந்து வருகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், காங்கிரஸால் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதுவும் கட்சி தலைவர் சோனியா காந்தியும் மற்றும் அவரது மகனும் நேரு-காந்தி அரசியல் பரம்பரையின் வாரிசுமான ராகுல் காந்தியும் வென்ற இடங்களாகும். இந்தியாவின் தலைநகரும், மிகப் பெரிய மகாநகரும், காங்கிரஸின் நீண்டகால கோட்டையாகவும் விளங்கிய டெல்லியில், காங்கிரஸ் ஒரு இடம் கூட வெல்லவில்லை என்பதோடு அது வெறும் 15 சதவீத வாக்குகளைப் பெற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ஒரு மத்திய-வர்க்க "ஊழல்-எதிர்ப்பு கட்சியான" ஆம் ஆத்மி கட்சி (சாமானிய மக்களின் கட்சி) மற்றும் பிஜேபி இரண்டுக்கும் வெகு பின்னால் பின்தங்கி இருந்தது. இந்தியாவின் இரண்டாவது மக்கள்தொகை மிகுந்த மாநிலமான மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் அதன் UPA பங்காளியான தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Press), முறையே 2 மற்றும் பூஜ்ஜியம் இடங்களைப் பெற்றன. 2009 தேர்தலில் இந்த கூட்டணி ஒன்று சேர்ந்து 25 இடங்களைப் பெற்றிருந்தன. இந்த ஆண்டின் இறுதியில் அம்மாநில தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் காங்கிரஸ் முதல் மந்திரியை இராஜினாமா செய்ய கோரி அங்கே காங்கிரஸிற்குள் பலத்த கோரிக்கைகளும் உள்ளன. இதுவரையில் காங்கிரஸின் இரும்புபிடியில் இருந்த ஆந்திர பிரதேசத்தைப் பிரிக்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ்-தலைமையிலான அரசாங்கம் அழுத்தம் அளித்தது. அந்த நடவடிக்கை அதற்கு தேர்தல் ஆதாயங்களை அளிக்கும் என்ற கணக்கீட்டில் அது அவ்வாறு செய்திருந்தது. ஆனால் இறுதியில் 2009இல் பெற்ற 33 இடங்களில் இருந்து குறைந்து அது ஆந்திர பிரதேசத்தில் வெறும் 2 இடங்களையே வென்றது. காங்கிரஸின் தேர்தல் தோல்வியை பல பிராந்திய கட்சிகளும் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றில் பல, அல்லது சமீபத்தில் வரையில், காங்கிரஸ் கூட்டாளிகளாக இருந்தவை. தமிழ்நாட்டை மையமாக கொண்ட திமுக அதன் அனைத்து மக்களவை இடங்களையும் இழந்தது. UPA அதிகாரத்தில் இருந்த பத்து ஆண்டுகளில் ஒன்பது ஆண்டுகள் அதற்கு அது சேவை செய்திருந்தது. UPAஇன் தொலைதொடர்பு அலைக்கற்றை ஏலத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு இலஞ்ச மோசடியில் திமுக தலைமை உடந்தையாய் இருந்தது. இந்த ஊழல், பொதுச் சொத்துகளை பெரிய வணிகங்களுக்கு அடிமட்ட விலைக்கு, அல்லது சில விடயங்களில் ஒட்டுமொத்தமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டதில் இருந்து எழுந்த பல தொடர்ச்சியான பெரும் ஊழல் மோசடிகளில் ஒன்றாகும். இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தில் ஆட்சி செலுத்தும் கட்சியும், UPA'இல் உள்ளடங்கி இருந்ததுமான ஜம்மு & காஷ்மீர் தேசிய கூட்டமைப்பும் மக்களவையில் இருந்து பிரதிநிதிகள் நீக்கப்பட்டதைக் கண்டது. அதற்கு முந்தைய அதிகபட்ச இடங்களை விட 100க்கும் அதிகமான இடங்களை வென்ற பிஜேபி'இன் வெற்றிக்கு முன்னோடியாக இருந்தவை வடக்கு மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில், குறிப்பாக உத்தர பிரதேசம் மற்றும் பீஹாரில் பெற்ற பலமான வெற்றியாகும். இந்த இரண்டு மாநிலங்களும் ஹிந்தி பேசும் இந்தியாவின் மையமாக மற்றும் அந்நாட்டின் மிக வறிய மாநிலங்களில் இரண்டு மாநிலங்களாக விளங்குகின்றன. உத்தர பிரதேசத்தில், பிஜேபி 80 இடங்களில் 71 இடங்களை வென்றது, இது 2009இல் பெற்றதை விட 10 இடங்கள் அதிகமாகும். அதன் வெற்றிக்கு பெரிதும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (BSP) விலை கொடுத்திருந்தன. சமாஜ்வாதி கட்சி UPAஇன் பாகமாக இல்லை என்றாலும் பல முக்கிய வாக்கெடுப்புகளில் அது அதன் பெரும்பான்மையை அதற்கு வழங்கியது. சமாஜ்வாதி கட்சி மற்றும் BSP இரண்டுமே இந்தியாவில் வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட கீழ் ஜாதி குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொள்கின்றன, ஆனால் உண்மையில் இந்தியாவின் இட ஒதுக்கீடு முறையால் (சிறுபான்மையினருக்கு ஒதுக்கிகொடுக்கும் நடவடிக்கை) ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு சிறிய தனிச்சலுகைப் படைத்த மேற்தட்டுக்காக பேசுகின்றன என்பதோடு, அவை இந்திய முதலாளித்துவத்தின் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலை முழுமையாக ஆதரித்துள்ளன மற்றும் நடைமுறைப்படுத்தி உள்ளன. பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தின் தோல்வியிலிருந்து பிஜேபி ஆதாயமடைந்திருந்தது, ஐக்கிய ஜனதா தளம் பிஜேபி-தலைமையிலான NDAஇல் கடந்த ஆண்டு வரையில் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக இருந்தது. பிஜேபி உடன் அதன் 17 ஆண்டுகால கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் உடைத்துக் கொண்ட உடனேயே, ஸ்ராலினிஸ்டுகள் அதை ஒரு "மதசார்பற்ற கட்சியாக" மற்றும் "காங்கிரஸ் அல்லாத, பிஜேபி அல்லாத" மூன்றாவது முன்னணிக்கு சாத்தியமான உறுப்பினராக அதை வியாபாரம் செய்ய தொடங்கினார்கள். இந்த தேசிய தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 21 இடங்களில் இருந்து 2 இடங்களாக சுருங்கியதால், பீஹாரின் ஐக்கிய ஜனதா தள முதல் மந்திரி நிதிஷ் குமார் அவரது இராஜினாவை அறிவித்தார். பிஜேபி'இன் பெரும் தேர்தல் வெற்றியின் ஒரு முக்கிய காரணியாக இருந்தது அது பெற்றிருந்த பெரும் எண்ணிக்கையிலான புதிய பிராந்திய கூட்டாளிகளின் ஆதரவாகும். இரட்டை இலக்க பணவீக்கம் மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மையின் தாக்கத்திற்கு UPA அரசாங்கம் காட்டிய இரக்கமற்ற அலட்சியம், அத்தோடு உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆக்ரோஷத்தோடு போதியளவிற்கு நகராததால் அரசாங்கத்தின் மீதான பெருநிறுவன இந்தியாவின் ஏமாற்றத்தோடு சேர்ந்து, அதற்கு எதிராக இருந்த மக்கள் கோபத்தின் ஒருங்கிசைவை உணர்ந்து, சுமார் இரண்டு டஜன் பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் தேர்தல் ஓட்டத்தின் போது NDA உடன் சேர்ந்து கொண்டன. இது அதை ஏறத்தாழ 30 கட்சிகள் உள்ளடங்கிய நிலைக்கு உயர்த்தியதோடு, அதை தோற்றப்பாட்டளவில் இந்தியாவின் அனைத்து பாகங்களுக்குள்ளும் விஸ்தரித்தது. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் அதன் வலுவான பாரம்பரிய பகுதிகளுக்கு அப்பாலும் பிஜேபி ஆதரவு உயர்ந்துள்ளது என்ற போதினும், கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவில் அது ஒரு மிகவும் சிறுபான்மை கட்சியாகயாகவே நீடிக்கிறது. அது மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் 63 இடங்களில் வெறும் 3 இடங்களையே பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு தென்னிந்திய மாநிலங்களின் 129 இடங்களில் அது வெறும் 21 இடங்களை மட்டுமே வென்றது, இதில் ஆந்திர பிரதேசத்தில் அதன் கூட்டாளியான தெலுங்கு தேச கட்சி கூடுதலாக 16 இடங்களை வென்றிருந்தது. மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மற்றும் ஒடிசாவில், பெரும் பங்கைக் கொண்ட இந்த இடங்களை, வலதுசாரி பிராந்திய கட்சிகளான முறையே திரிணாமுல் காங்கிரஸ், அஇஅதிமுக, மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகியவை வென்றன. இவை அனைத்துமே முன்னதாக பிஜேபி-தலைமையிலான NDAஇல் பாகமாக இருந்துள்ளன, ஆனால் இறுதியாக அவை காங்கிரஸிற்கு எதிரானவையாக மற்றும் பிஜேபி-க்கு எதிரானவையாக காட்டிக் கொண்டு அவற்றின் சொந்த மாநிலங்களில் மற்றும் தேசிய களத்தில் தங்களுக்கென ஒரு பலமான பாத்திரத்தை பெற முடியுமென கணக்கிட்டன. 2009 தேர்தலில், பிஜூ ஜனதா தளம் மற்றும் அஇஅதிமுக இரண்டுமே "மதசார்பற்ற, மக்கள்-சார்பான" கட்சிகள் என்ற ஸ்ராலினிஸ்டுகளின் ஆசிர்வாதங்களை பெறுவது ஆதாயமளிக்கும் என்று கருதின. ஆனால் இந்த தேர்தலின் போது ஒரு தேர்தல் கூட்டணிக்கான அவற்றின் நேசக்கரத்தைப் புறந்தள்ளிவிட்டன. அதன் NDA கூட்டாளிகளோடு, பிஜேபி தேசியளவில் 38 சதவீத வாக்கு விகிதங்களைப் பெற்றது, இது காங்கிரஸ்-தலைமையிலான UPAஐ விட 15 சதவீத புள்ளிகள் அதிகமாகும். திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, அஇஅதிமுக மற்றும் இந்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இதர ஐந்து கட்சிகள் ஒவ்வொன்றும் 3 மற்றும் 4 சதவீதத்திற்கு இடையே வாக்குகளை வென்றன. தொடர்ச்சியாக இரண்டாவது தேசிய தேர்தலில், எந்த வரையறைகளின் படியும் ஸ்ராலினிஸ்டுகள் தான் மிகப்பெரிய தோல்வியாளர்களாக இருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வெறும் ஒரு இடத்தை வென்றது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) 9 இடங்களை மட்டும் வென்றது, இது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஐந்து தேசிய கட்சிகளில் ஒன்றாக அதன் அந்தஸ்தை வைத்திருக்க போதுமானதல்ல. 2011இல் அதன் ஆட்சி முடிவுக்கு வந்த, தொடர்ந்து 34 ஆண்டுகளாக மாநில அரசாங்கத்தைத் தக்க வைத்திருந்த மேற்கு வங்காளத்தில் சிபிஎம்-தலைமையிலான முன்னணி வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. தேசியளவில் நான்கு கட்சி இடது முன்னணியின் வாக்குகள் 7 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைந்தது. ஸ்ராலினிஸ்டுகளுக்கும் மற்றும் காங்கிரஸிற்குமான ஆதரவில் ஒரே சமாந்தரமாக ஏற்பட்ட வீழ்ச்சி ஏதோ தற்செயலாக நடந்ததல்ல. இடதுகள், இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியோடு வேகமாக ஆரவாரத்தோடு வலதிற்குள் ஒன்றிணைந்து கொண்டன. சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவின் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களால் செய்யப்பட்ட முதலாளித்துவ மீட்சி "சோசலிசத்திற்கு வெகுதூரமிருப்பதை” நிரூபித்திருப்பதாக கூறிய கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ பொருளாதார "சீர்திருத்த" வேலைத்திட்டத்திற்கு மாற்றீடு இல்லை என்று வாதிட்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கங்களுக்கு முட்டு கொடுத்த அதேவேளையில், இடது முன்னணி அதிகாரத்தில் இருந்த மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலேயே ஸ்ராலினிஸ்டுகள், பொது செலவினங்களை வெட்டியும், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த (ITES) தொழில்துறைகளில் வேலைநிறுத்தங்களுக்கு தடை விதித்தும், மற்றும் பெரு வணிக திட்டங்களுக்காக நிலங்களை அபகரிப்பதற்கு எதிராக எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பை ஒடுக்க பொலிஸ் மற்றும் அடியாட்களின் வன்முறையைப் பயன்படுத்தியும், அவர்கள் எதை "முதலாளிகள்-சார்பு" கொள்கைகள் என்று வர்ணித்தார்களோ அதையே நடைமுறைப்படுத்தினார்கள். |
|
|