World Socialist Web Site www.wsws.org |
Obama administration whitewashes GM cover-up ஒபாமா நிர்வாகம் ஜெனரல் மோட்டார்ஸ் மூடிமறைப்பை பூசிமொழுகிறது
Andre Damon உயிரிழப்பு ஏற்படுத்தக்கூடிய இக்னிஷன் கருவி கோளாறை ஒரு தசாப்த காலமாக மூடிமறைத்து வந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வெறுமனே 35 மில்லியன் டாலர் அபராதம் விதித்து, அமெரிக்க போக்குவரத்து துறை அந்நிறுவனத்தின் மீதான அதன் விசாரணையை முடித்து கொண்டதாக கடந்த வாரம் அறிவித்தது. குறைந்தபட்சம் 13 பேர் அந்த கோளாறு சம்பந்தப்பட்ட விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர், உண்மையான எண்ணிக்கையோ அதையும் விட அதிகமாக இருக்கக்கூடும். அரசாங்கம் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இடையில் எட்டப்பட்ட உடன்பாடு ஒரு பூசிமொழுகும் நடவடிக்கையாகும். ஒரு முக்கிய பாதுகாப்பு குறைபாட்டை மத்திய நெறிமுறை ஆணையத்திற்கு தெரிவிக்க தவறியதற்காக, ஒரு நகைப்பிற்கிடமான அபராதத்தைக் கொண்டு பிரதியீடு செய்து, அந்த நிறுவனம் மற்றும் அதன் செயலதிகாரிகளை அவர்கள் மீதான சிவில் குற்றச்சாட்டுக்களில் இருந்து அந்த உடன்பாடு காப்பாற்றுகிறது. “பணத்தைப் பெற்றதும்" அமெரிக்க அரசாங்கம் கோளாறை மூடி மறைத்தது சம்பந்தமான "சிவில் அபராதங்களுக்கான இழப்பீட்டில் இருந்து... அதன் தற்போதைய மற்றும் முன்னாள் இயக்குனர்கள், அதிகாரிகள் உட்பட ஜெனரல் மோட்டார்ஸை விடுவிக்கிறது" என்று அந்த உடன்படிக்கை குறிப்பிடுகிறது. அந்த உடன்படிக்கையை அறிவிக்கையில் அமெரிக்க போக்குவரத்து துறை செயலர் ஆண்டனி ஃபாக்ஸ், ஜிஎம் அளவிலான ஒரு நிறுவனத்திற்கு "35 மில்லியன் டாலர் என்பது முற்றிலும் ஒரு பிழையாக உள்ளது,” என்பதை ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டார். வாகனத்துறையின் அந்த பெரும் நிறுவனம் 2013இல் 3.8 பில்லியன் டாலர் இலாபம் ஈட்டியது, அது இந்த அபராத தொகையை விட 100 மடங்கு அதிகமாகும். பாதுகாப்பு சம்பந்தமான ஒரு குறைபாடு கண்டறியப்பட்டால் வாகனத்துறை உற்பத்தியாளர்கள் அதை ஐந்து நாட்களுக்குள் போக்குவரத்து துறைக்கு தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசு சட்டம் கோருகிறது. ஆனால் அதற்கு மாறாக, அந்நிறுவனம் அதன் உள்நிறுவன தரமுறை தொழில்நுட்ப குறிப்புகளை அந்த பாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதை முதன்முதலாக 2001இல் கண்டறிந்திருந்தாலும், அதை பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நெறிமுறை ஆணையத்திற்கு தெரிவித்தது. அந்த குறைபாட்டினால் ஏற்பட்ட விபத்துக்களை மூடிமறைக்க முடியாமல் போனதற்கு பின்னர் தான் அதுவும் தெரிவிக்கப்பட்டது. அந்த பாகத்தை மாற்ற மதிப்பிடப்பட்ட ஒரு வாகனத்திற்கு 57 சென்ட்களை சேமிக்க அந்நிறுவனம் மில்லியன் கணக்கான மக்களை ஆபத்திற்குட்படுத்தி, ஒரு தசாப்தத்தின் பெரும் பகுதியில் கோளாறான இக்னிஷன் கருவியோடு கார்களை உற்பத்தி செய்தது. அந்த உடன்படிக்கையை அறிவிக்கையில், ஜிஎம் (ஜெனரல் மோட்டார்ஸ்) திட்டமிட்டு அந்த குறைபாட்டை மூடிமறைத்தது என்ற உணர்வு ஏற்படாமல் தவிர்க்க நெறிமுறை ஆணையம் அதனால் ஆன மட்டும் அனைத்தையும் செய்தது. தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு (NHTSA) நிர்வாகத்தின் தற்காலிக நிர்வாகி டேவிட் பிரெட்மேன் இறுதியாக கூறுகையில், ஜிஎம் நிறுவனம் "எடுத்த முடிவுகளும், அதன் கட்டமைப்பு மற்றும் நிகழ்ச்சிப்போக்கும்" பாதுகாப்பு பிரச்சினையைத் தீர்க்கும் "வழியில் இருந்தது" என்று அறிவித்தார். நிறுவனம் மட்டுமே தொடர்ச்சியான அதன் சொந்த புலன்விசாரணைகளின் கண்டுபிடிப்புகளை அரசாங்கத்திற்கு வழங்கும் என்று வலியுறுத்தி, மேற்படி எந்தவொரு விசாரணைக்கும் போக்குவரத்து துறை முற்றிலுமாக ஜிஎம் நிறுவனத்தையே சார்ந்துள்ளது. ஜிஎம் நிறுவனத்தின் மிகப் பெரும்பான்மையான குறைபாடுடைய கார்கள் சரி செய்யப்படாமல் இருக்கின்றன—இந்த கார்களை "மரண பொறிகள்" (death traps) என்றோ அல்லது "ஓடும் சவப்பெட்டிகள்" என்றோ குறிப்பிட வேண்டாமென அந்நிறுவனம் அதன் உள்நிறுவன ஆவணங்களில் பணியாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. நிறுவனத்தின் சொந்த மதிப்பீட்டின்படி, அது உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள மறுஅழைப்புக்கான 2.4 மில்லியன் கருவிகளில் பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே இந்த மாத இறுதிக்குள் அது செய்து முடிக்கும் என்பதோடு, அதை விட குறைவாகவே வாகனங்களில் நிறுவப்படும். கருவிகளில் கோளாறு உள்ளதை ஜிஎம் சந்தேகிக்கத் தொடங்கியதில் இருந்து 13 ஆண்டுகளில், NHTSA அந்த குறைபாட்டின் மீது கண்மூடி இருக்க அதன் அதிகாரத்திற்குட்பட்டு அனைத்தும் செய்ததோடு, அதிகரித்து வந்த தொடர்ச்சியான புகார்களைக் கிடப்பில் போட்டது. ஜிஎம் உடனான அதன் உடன்பாட்டை விவரிக்கும் ஆவணத்தில், “2007இல் மற்றும் மீண்டும் 2010இல்,” இக்னிஷன் கருவியின் காரணமாக விபத்து காப்பு பைகள் செயல்படாமல் போனது தொடர்பான புகார்களை அரசாங்கம் மீளாய்வு செய்திருந்தது என்பதை போக்குவரத்து துறை ஒப்புக் கொண்டது, ஆனால் "ஒரு உத்தியோகபூர்வ விசாரணையை தொடங்க தேவையான தரவுகள் அங்கே இல்லை என்று தீர்மானித்தது.” 2009இன் திவால்நிலைமை மற்றும் ஜிஎம் மறுசீரமைப்பின் விளைவாக, 2010 நவம்பர் வரையில் அரசாங்கம் ஜிஎம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தது. ஜிஎம் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்கனவே இக்னிஷன் கருவி குறைபாடு குறித்தும், அதனோடு சம்பந்தப்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகள் குறித்தும் தெரிந்திருந்த போதும், ஜூலை 2009க்கு முன்னரில் இருந்து தொடங்கி உற்பத்தி பொருள் இழப்பீட்டு சட்டங்களில் இருந்து மறுசீரமைப்பு செய்யப்பட்ட நிறுவனத்தைக் காப்பாற்ற முயலும் ஒரு சட்டவிதியை திவால்நிலை உடன்படிக்கைக்குள் ஒபாமா நிர்வாகம் உள்ளிணைத்தது. ஜிஎம் இக்னிஷன் மோசடி அனைவருக்கும் தெரிந்த மிக பிரபலமான ஒரு வடிவதைப் பின்தொடர்கிறது. 2008 நிதியியல் நெருக்கடி, 2010இல் ஆழ்கடல் ஹாரிஜன்/BP எண்ணெய் கசிவு மற்றும் Upper Big Branch சுரங்க பேரழிவு, வோல் ஸ்ட்ரீட்டின் "ரோபோ-கையெழுத்திட்ட" முன்கூட்டியே முடித்த மோசடி, 2012இல் பத்திரங்கள் பரிவர்த்தனை கமிஷனுக்கு ஜேபிமோர்கனின் பொய்கள், LIBOR மோசடி, இன்னும் பல பல—இவை அனைத்தும் ஒரே மூலப்பிரதியைப் பின்தொடர்ந்தன. இந்த ஒவ்வொரு விவகாரத்திலும், சட்டத்தை உடைத்து தங்களின் இலாபங்களை உயர்த்த பிரதான பெருநிறுவனங்களால் எடுக்கப்பட்ட திட்டமிட்ட முடிவுகள் நெறிமுறை ஆணையங்களால் உதவி செய்யப்பட்டன மற்றும் மூடி மறைக்கப்பட்டன, அத்தோடு அவற்றின் விளைவுகளை இனியும் திரைக்குப் பின்னால் மறைக்க முடியாது என்று ஆன போது தான் பகிரங்கமாக வெளியே வந்தன. இத்தகைய ஒவ்வொரு குற்றங்கள் மற்றும் பேரழிவுகளுக்குப் பின்னர்—பல விவகாரங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தின, ஏனையவை உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தது—அரசாங்கம் அவற்றிற்குப் பொறுப்பானவர்களை ஒரு சிறிய அபராத தண்டனைகளோடு விட்டுவிட்டதோடு மட்டுமின்றி, அது நிர்வாகிகளைக் குற்றவியல் வழக்குகளில் இருந்து காப்பாற்றியதோடு, நிறுவனங்கள் அவற்றின் வணிகங்களை வழக்கம் போல் தொடர்வதை உறுதிப்படுத்தியது. பல தொடர்ச்சியான பெருநிறுவன குற்றங்களும், அவற்றை அரசாங்கம் மூடிமறைத்ததும் அமெரிக்காவில் நிலவும் சமூக உறவுகளின் இயல்பைக் கட்டுகட்டாக பேசுகின்றன. ஜிஎம் நிறுவனத்தால் நடத்தப்பட்டதைப் போன்ற பெருநிறுவன குற்றங்கள் முதலாளித்துவ அமைப்புமுறையின் விளைபொருளாகும், இந்த அமைப்புமுறைக்குள் எண்ணற்ற மில்லியன் மக்களின் வாழ்க்கை அடிபணிய செய்யப்பட்டுள்ளது மற்றும் பெரு வணிகங்களின் இலாப நலன்களுக்கு தியாகம் செய்யப்பட்டு உள்ளது. அரசு நெறிமுறை ஆணையங்கள், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி அரசியல்வாதிகளோடு சேர்ந்து, பெருநிறுவன குற்றவியல்தன்மையை தடுப்பதில் இருந்து வெகு தூரம் விலகி நின்று, பெரு வணிகத்திற்கான முன்னணி நபர்கள் என்பதற்கும் சற்று கூடுதலாக செயல்படுகின்றன. இந்த அமைப்புமுறையே முற்றிலுமாக பிற்போக்குத்தனமானதும், பகுத்தறிவற்றதும் ஆகும். இது ஏதோவொரு நிறுவனம், ஒரு நெறிமுறை ஆணையம், அல்லது ஏன் ஒரு நிர்வாகம் மீதான பிரச்சினை கூட அல்ல; சமூகத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் செயல்பிறழ்ந்து உள்ளது. இந்த அமைப்புமுறைக்கு மாற்றீடு சோசலிசம் ஆகும்: தனிநபர் இலாபத்திற்காக அல்லாமல், அது சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்கான சமூக அமைப்பு ஆகும். ஜிஎம் போன்ற பாரிய பெருநிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு, ஒரு திட்டமிட்ட, சோசலிச பொருளாதாரத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் பரந்த மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். |
|