World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Climate scientists warn of more super-typhoons

அதிக அளவிலான அதிவேக-புயல்கள் குறித்து காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்

By Peter Symonds
15 November 2013

Back to screen version

கிரீன்ஹவுஸ் வாயு (greenhouse gas) வெளியேற்றத்திற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால், அவரது நாட்டினை சீரழித்த, ஹையான் மாதிரியான பெரிய வெப்பப் புயல்கள் (Super Typhoon Haiyan) அடிக்கடி வரும் என்று வார்சோவில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டில் உணர்ச்சிகரமான உரை ஒன்றில் பிலிப்பைன்ஸிற்கான தலைமைப் பிரதிநிநிதியான Naderev Saño எச்சரித்தார்.

கடந்த வெள்ளியன்று மத்திய பிலிப்பைன்ஸை ஹையான் தாக்கியதில், முழுமையான பேரழிவிற்கான தடயங்களை விட்டுச்சென்றுள்ளது. .நா. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,460 என உயர்த்துள்ளதாக அறிவித்தது, இது கிட்டத்தட்ட முந்தைய நாளை விட இரு மடங்கு அதிகமாகும். மேலும் வாரத்தின் முன்னதாக ஜனாதிபதி பெனிங்னோ அக்யூனோ கணித்த இறுதி எண்ணிக்கையை விட மிக அதிகமானதும் ஆகும். 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 12 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மேலும் தெரிவித்தது. இந்த பேரழிவிற்கு ஒரு வாரம் கழித்து, மில்லியன் கணக்கானவர்கள் போதுமான இடம், உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி உள்ளனர்.

இந்த தீவிர காலநிலை நிகழ்வின் விளைவால், என் நாட்டில் நடந்து கொண்டிருப்பது என்னவென்றால், முட்டாள்தனம்தான்என்று Saño வார்சோவ் மாநாட்டில் தெரிவித்தார். ”காலநிலை நெருக்கடி ஒரு முட்டாள்தனம். நாம், நடக்கும் இந்த முட்டாள்தனத்தை நிறுத்த முடியும். இங்கேயே இப்போது வார்சோவில். ஹையான் மாதிரியான புயல்களும் அதன் தாக்கங்களும், காலநிலை நடவடிக்கைகள் குறித்து தள்ளிப்போடுவதை நாம் இனியும் சமாளிக்க முடியாது என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக நினைவூட்டுகின்றன

காலநிலை மாற்றத்திற்கு தீவிர வெப்ப மண்டலப் புயல்கள் என்று பொருள் என்பதாக விஞ்ஞானிகள் எளிதாக கூறுகின்றனர். புவி வெப்பமடையும்போது, சமுத்திரமும் அதில் உள்ளடங்கும். பிலிப்பைன்ஸிற்கு அப்பால் நீரில் சேகாரமாகியுள்ள ஆற்றல் புயலின் தீவிரத்தை அதிகரிப்பதுடன் இப்போது நாம் காண்பதை விட அதிக அழிவுள்ள புயல்கள் புதிய விதிமுறைகளாகும்என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய காலநிலை ஆராய்ச்சிகளை உள்ளடக்கும் காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் ஐந்தாவது மதிப்பீடு (IPCC) பின்வருமாறு ஒரு முடிவுக்கு வந்துள்ளது: ”சராசரி வெப்ப மண்டலப் புயல் காற்றின் வேகம் அதிகரிக்கிறது ஆனால் வெப்ப மண்டலப் புயல்களின் உலகளாவிய அலைவரிசை குறைவது போல் அல்லது மாறாமல் இருக்கிறது”. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், புவி வெப்பமயமாதல் புயல்கள் (typhoons), சூறாவளிகள் (hurricanes) என்றும் அழைக்கப்படுகின்ற, வெப்ப மண்டலப் புயல்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருக்கலாம், ஆனால் அதி வலுவான மற்றும் அதிக பாதிப்புள்ள புயல்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

கரையைத் தாக்கியவைகளில் இதுவரை பதிவானவைகளில் ஹையான் புயல் மிக தீவிரமானவற்றுள் ஒன்று. அமெரிக்க இராணுவத்தின் இணை புயல் எச்சரிக்கை நிலையத்தின் படி, மணிக்கு 315 கிலோமீற்றர்கள் (கிமீ / மணி) வேகத்திற்கு நிலையான உயரத்தில் எட்டும் காற்றினையும், ஒரு மலைப்பூட்டும் மணிக்கு 380 கிலோமீற்றர்கள் வரை (கிமீ / மணி) பெரும் காற்று உயர்ந்து கொண்டது. கிட்டத்தட்ட 5 மீட்டர்களுக்கு மாபெரும் புயல் கடல் அலையையும் ஹையான் புயல் கொண்டிருந்தது. துல்லியமாக இருந்தால், இந்த எண்ணிக்கைகள், இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலுவானதும், அமெரிக்காவின் வடக்கு வளைகுடா கடற்கரையை மணிக்கு 305 கிலோமீட்டர் வேகத்தில் நிலையான காற்றுடன் 1969-ல் தாக்கியதுமாகிய Camille புயலை விட ஹையான் மிக மோசமானதாக இருக்கும்.

2010 -ல் இந்த நூற்றாண்டின் இறுதி வாக்கில் வெப்ப மண்டலப் புயல்களின் சராசரி தீவிரம் 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என முன்கணிக்கும் ஆராய்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானியான கெர்ரி இமானுவேலும் ஒருவராவார்.

இமானுவேல் ஊடகங்களுக்கு பின்வருமாறு விவரித்தார்: “இந்த குறிப்பிட்ட புயலின் சோகம், அது கரையை அடைந்த நேரத்தில் தன் (உச்சகட்ட) எல்லையை எட்டியது.” Leyte மற்றும் Samar போன்ற கடற்கரை நகரங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் தீவுகளின் நகரங்கள் தீவிர காற்றினால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் 2004 ஆசிய சுனாமியினை ஒத்த நீரலையாலும் மூழ்கடிக்கப்பட்டன. அவர்களுள் பலர் மூழ்கி இறந்தனர்.

மணிக்கு 275 கிலோமீட்டரில் வீசும் அதாவது, நீட்டித்த உச்சமான மணிக்கு 235 கிலோமீட்டர் என்ற அளவில் இணை புயல் எச்சரிக்கை மையத்தினை விட ஹையானின் காற்று வேகம் கணிசமான அளவு குறைவானதே என்று பிலிப்பைன்ஸ் காலநிலை ஆய்வாளர்கள் மதிப்பிட்டனர். விவரங்களை சேகரிக்க பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளின் குறைபாடுகளை இந்த முக்கிய வித்தியாசம் குறிப்பிடுகிறது, அது மேற்கு பசிபிக்கில் அடிப்படையில் செயற்கைக்கோள் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தது. பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வாளர்களுக்கு அமெரிக்க இராணுவத்தின் புயல் கண்காணிப்புகள் மற்றும் முன்கணிப்பு பொறிஅமைப்புகளை அணுக முடியாது.

புயல் தேடிகள்” (hurricane hunters) என்றறியப்படுவதும், புயல்களின்போது நேரடியாக பறப்பதுமாகிய உயர்ரக காலநிலை கருவிகள் பொருத்தப்பட்ட ஆகாய விமானத்தின் நேரடி கவனிப்புகளிலிருந்து வடக்கு அட்லாண்டிக்கிற்கு செயற்கைக்கோள் தகவல்கள் கிடைக்கின்றன. இந்த கூடுதல் தகவல்கள், அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் வடக்கு அட்லாண்டிக் புயல்களின் பாதைகள் மற்றும் தீவிரங்களின் முன்கணிப்புகளை சிறப்பாக மேம்பாடு செய்ய அனுமதிக்கின்றன.

பசிபிக்கில் 1987-ல் அமெரிக்க இராணுவம் விமானங்களை இடைநிறுத்தியது மேலும் வேறு எந்த அரசும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ”அதிலிருந்து, நாம் மிகவும் குருட்டுத்தனமாக இருந்து வந்திருக்கிறோம்என்று நியூயோர்க் டைம்ஸிடம் வானிலை விஞ்ஞானி இம்மானுவேல் தெரிவித்தார். சர்வதேச புயல் மையத்தை நிர்மாணிப்பதையும், பசிப்பிக்கில் எதிர்கால வெப்பமண்டல புயல்களை கண்டுபிடிப்பதற்கான விமானங்கள் மற்றும் ட்ரோன்களையும் அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.

பசிப்பிக்கில்புயல் தேடிகள்” (hurricane hunters) இல்லாதிருப்பது, ஒரு வெளிப்படையான கேள்வியை எழுப்புகிறது; ஹையானாவின் தீவிரம் மற்றும் வீசும் பாதைகள் குறித்த அதிக துல்லியமான எச்சரிக்கைகள் உயிர்களை காப்பாற்ற இயலுமைப்படுத்துமா?

புவி வெப்பமயமாதல் நீரின் வெப்பநிலையை மட்டுமல்லாமல், புயல்களுடன் தொடர்புடைய புயல் அலைகளின் ஆபத்துகள் அதிகரித்து வரும் கடல் மட்டத்தையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உயர்ந்துவரும் கடல் மட்டங்கள் ஹையானின் புயல் அலைகள் கிட்டத்தட்ட 5 சதவீதம் உயர்வை அடைந்திருப்பதாக, Weather Underground web site –இன் வளிமண்டலவியல் இயக்குனர் ஜெஃப் மாஸ்டர்ஸ் Reuters இடம் தெரிவித்தார்.

வார்சோ மாநாட்டில் பிலிப்பைன்ஸின் பிரதிநிதியான Saño வின் கருத்து செவிடன் காதில் விழுவதாகத்தான் இருக்கும். முந்தைய சர்வதேச மாநாடுகள் போன்று, தேசியவாதப் போட்டியாளர்கள் மற்றும் பொருளாதார நலன்களுக்கு, குறிப்பாக பிரதான சக்திகளுக்கு கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான தேவை முற்றிலும் முக்கியமில்லாத ஒன்று. புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு தேவைப்படுவது, காலநிலை விஞ்ஞானிகளால் பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் குறைப்புகளை செயல்படுத்துவதற்கு தேவையான அளவீடுகள் மட்டுமல்ல, மேற்சொன்ன கியோட்டா நெறிமுறையில் உள்ளடங்கிய, மிக எளிதான திட்டங்களை பதிலாக வைப்பதற்குகூட எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை.

இது, குறிப்பாக காலநிலை மாற்றங்களின் தாக்கங்களுக்கான நிதி இழப்புகளுக்காக ஏழை நாடுகள் அமெரிக்காவை வற்புறுத்தப்படுவதை தடுக்கும் எண்ணத்துடன் உள்ளது, இது பெருமளவு வளர்ச்சியடைந்த தொழிற்துறை நாடுகளின் தொன்று தொட்டு வரும் பழக்கமே. மிக தீவிரமான வெப்பப் புயல்களால் ஏற்படும் பொருளாதார சேதங்களும் தீவிரமாக இருக்கும். கடந்த நூற்றாண்டில், ஒரு புயலுக்கு சராசரியாக 200 மில்லியன் டாலர்கள் சேதம் என்ற அளவில், வருடத்திற்கு பிலிப்பைன்ஸை சராசரியாக 22 புயல்கள் தாக்கியுள்ளது.

ஹையான் புயலால் ஏற்பட்டிருக்கும் அழிவு இயற்கையின் தீவிர ஆற்றலின் வெளிப்பாடு மட்டுமல்ல, இதுபோன்ற பேரழிவுகளுக்கு மில்லியன் கணக்கான மக்களை மிகவும் பாதிக்கப்படுபவர்களாக ஆக்குகின்ற ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான தீவிர சமூக இடைவெளியும் ஒரு காரணமாகும். மத்திய பிலிப்பைன்ஸின் நகரங்களில் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள் மிகப்பெருமளவில் சமூகத்தின் ஏழ்மையான அடுக்கின் பலவீனமான குடிசைகளாகவே இருந்தன. காலநிலை மாற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் எதிர்கால பேரழிவுக்கான ஆபத்துகளை அதிகரித்துவரும் வேளையில், ஜனாதிபதி பெனிங்னோ அக்யூனோ முதலான பிலிப்பைன்ஸின் அரசியல்வாதிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெருவியாபாரிகள் ஆகியோர், பிரிவினையை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் வர்க்க சுரண்டல்களின் தற்போதைய அமைப்பினை தக்கவைத்துக் கொள்வதிலும், அவர்களது சொந்த பொறுப்புகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும்  ஒரு பயனுள்ள கருவியாக இந்தப் பேரழிவுள்ளது.