சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

India’s watershed election

இந்தியாவின் திருப்புமுனை தேர்தல்

Keith Jones
19 May 2014

Use this version to printSend feedback

கடந்த வாரத்தின் இந்திய தேசிய தேர்தலில் இந்து வகுப்புவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அதிகாரத்திற்கு வந்துள்ளது. குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத படுகொலையை தூண்டிவிட்டதில் அவர் வகித்த பாத்திரத்திற்காக இந்தியாவிலும் உண்மையில் சர்வதேச அளவிலும் இழிபெயர் பெற்ற குஜராத் முதல் மந்திரியும், சுய-பாணியிலான இந்து இரும்புமனிதருமான நரேந்திர மோடி பிரதம மந்திரியாகவுள்ளதுடன், அவர் பொருளாதார "வளர்ச்சிக்கு" இட்டுசெல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் விரோத, சுதந்திர-சந்தை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் மற்றும் இந்தியாவை இன்னும் நெருக்கமாக அமெரிக்க வெளியுறவு கொள்கையோடு இணைக்கும் கருவியாக ஏற்று இந்திய மற்றும் சர்வதேச மூலதனம் BJP' அரவணைத்து உள்ளது. சமூக சேவைகளின் மீது ஆழ்ந்த வெட்டுக்கள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் விலை மானியங்களைக் குறைத்தல்; அரசுடமையான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல்; அன்னிய முதலீடுகள் மீது மிஞ்சி இருக்கும் வரம்புகளை நீக்குதல்; வரிச் சுமையை தொழிலாளர்களுக்கு மாற்றுதல்; மற்றும் வங்கிகளுக்கு பாரிய அரசு உதவிகள் ஆகியவை அந்த கட்சியின் வேலைத்திட்டத்தில் உள்ளடங்கும்.

நூறு மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்கான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியை இல்லாதொழிக்கும் திட்டங்களும் இலக்கு வைக்கப்பட்டிருப்பவற்றில் உள்ளடங்கும். வர்க்க போராட்டத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு முழு நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றிருக்கும் முதல் கட்சியாக பிஜேபி உள்ளது என்ற போதினும், இந்திய மக்கள் தீவிரவலதிற்கு மாறியுள்ளனர் என்று பத்திரிகைகள் வாதிடுவது ஒரு மோசடி ஆகும். காங்கிரஸ் கட்சி மற்றும் ஒரு வரலாற்று உடைவினை சந்தித்த இரண்டு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வைத்திருந்த பாரிய நப்பாசைகள் பூர்த்திசெய்யப்படாததால் பிஜேபி அதிலிருந்து ஆதாயமடைந்தது.

சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டுகளில் 13 முறை தேசிய அரசாங்கத்திற்கு தலைமை ஏற்றிருந்த காங்கிரஸ், இப்போது 545 மக்களவை இடங்களில் வெறும் 44 இடங்களைக் கொண்டுள்ளது. இது உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக அங்கீகரிக்கப்பட கூட போதுமான எண்ணிக்கை இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய நாடாளுமன்றத்தில் 60 இடங்களுக்கு மேல் வென்ற ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி, உடனடியாக தம்மை காங்கிரஸிடம் ஒப்படைத்துவிட்டது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் ஒரேயொரு இடம்தான் கிடைத்துள்ளது, மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெறும் 9 இடங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் இப்போதும் சரி, எப்போதுமே ஒரு முதலாளித்துவ கட்சியாக இருந்துள்ளது. மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு தலைமையின் கீழ், அது பாரிய ஏகாதிபத்திய-எதிர்ப்பு போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தது மற்றும் ஒடுக்கியது. 1947இல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் அது ஒரு உடன்பாட்டை எட்டியது, அதன் அடிப்படையில் அந்த துணை கண்டம், மில்லியன் கணக்கானவர்களை உயிரிழிக்க செய்த மற்றும் இடம் பெயர செய்வித்த இந்தியாவின் இன மற்றும் பிரிவினைவாத சமூகங்களுக்கு இடையிலான சண்டைக்கு இடையே, ஒரு முஸ்லீம் பாகிஸ்தான் மற்றும் இந்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு இந்தியா என்று வகுப்புவாதரீதியில் பிரிக்கப்பட்டது.

இருந்த போதினும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருந்ததன் காரணமாக, காங்கிரஸ் இந்தியா எங்கிலும் பரந்துபட்ட பல்வேறு இன மற்றும் வகுப்புவாத குழுக்களிடம் ஓரளவிற்கு ஆதரவைப் பெற்றிருந்த ஒரே முதலாளித்துவ கட்சியாக விளங்கியது. அவ்வாறு இருந்தாலுங்கூட, அதை இந்திய முதலாளித்துவத்திடம் இருந்து பிரிக்க முடியாது என்பதை நிரூபித்திருந்தது. இறக்குமதிக்கான மாற்றீடு மூலமும், பிரதான தொழில்துறைகளை அரசு உடைமையில் வைத்திருந்தமை மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்துடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலமாகவும் அது ஏகாதிபத்திய அழுத்தங்களை சமப்படுத்திக்கொள்ள முனைந்தது.

1970களில், இந்த மூலோபாயம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. தொழிலாள வர்க்கத்துடன் கண்மூடித்தனமான மோதலுக்கு வந்த இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம், 1974-75 இரயில்வே துறை வேலை நிறுத்தத்தை நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்தியதோடு, இரண்டு ஆண்டுகள் அவசரகால சட்டம் பிறப்பித்து,  அக்காலகட்டத்தில் மக்கள் சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டன.

1991இன் சோவியத் ஒன்றிய பொறிவில் இருந்து, காங்கிரஸ் இந்திய முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதார கொள்கையில்" முன்னனி பாத்திரம் வகித்துள்ளதோடு, இந்தியாவை உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக மாற்றியது. 1991-96 வரையிலான நரசிம்ம ராவ்வின் காங்கிரஸ் அரசாங்கம், அன்னிய மூலதனங்களை ஈர்க்க ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி மற்றும் சுதந்திர-சந்தை கொள்கை ஆகியவற்றிற்கு சாதகமாக தேசிய பொருளாதார நெறிமுறைகளை அழித்து, இந்த மாற்றத்தைத் தொடங்கி வைத்தது.

கடந்த தசாப்தத்தின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் சுதந்திர-சந்தை மறுகட்டமைப்பை மேற்கொண்டு விரிவாக்கி, நீட்டித்தது. பிரதம மந்திரி மன்மோகன் சிங் செப்டம்பர் 2012இல் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், மேலதிக அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்திய மக்கள் "அவர்களின் வயிற்றை கட்டுப்படித்திக்கொள்ள வேண்டும்" என்று கூறுமளவிற்குச் சென்றார்.

இந்திய முதலாளித்துவம் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு மலிவு உழைப்பை வழங்கி அதனை அதுவே செல்வ செழிப்பாக்கி கொண்ட நிலையில், காங்கிரஸூம் அமெரிக்கா உடன் அதன் உறவுகளை ஆழப்படுத்தி இருந்தது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா உட்பட பல நாடுகளை வாஷிங்டன் அடுத்தடுத்து ஆக்கிரமித்திருந்த நிலையில், மீண்டும் காங்கிரஸின் தலைமையில், இந்தியா 2000இல் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு "உலகளாவிய மூலோபாய கூட்டுறவை" மேற்கொள்ள முனைந்துள்ளது. இந்தியா உடனான அமெரிக்க உறவுகள், சீனாவைத் தனிமைப்படுத்தி "ஆசியாவினை நோக்கி திரும்புதலின்" பாகமாக இருந்துள்ளன.

காங்கிரஸின் பேரழிவுகரமான தோல்வி எதை பிரதிபலிக்கிறது என்றால், இதுபோன்ற கொள்கைகளை ஒரு கால் நூற்றாண்டிற்கு நடைமுறைப்படுத்திய பின்னர், அது இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் மொத்த நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது என்பதையே ஆகும்.

இதற்கு இணையாக ஏற்பட்டுள்ள ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் பொறிவு, ஏதோ சந்தர்ப்பவசத்தால் நிகழ்ந்ததல்ல. 1930களில் சிபிஐ உருவாக்கப்பட்டதில் இருந்தே, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் எடுத்துக் காட்டப்பட்டதைப் போல, ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சோசலிசத்திற்கான போராட்டத்தை எதிர்த்துள்ளனர். அது மட்டுமின்றி, அவர்கள் தொழிலாளர்களை திட்டமிட்டபடி முதலாளித்துவ கட்சிகளுக்கு அடிபணிய செய்தார்கள்.

1991க்கு முன்னர், அவை சோசலிசம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இன்னும் இல்லை என்று வலியுறுத்தினார்கள். "தேசிய ஜனநாயக புரட்சியை" நடத்த அவர்கள் இந்திய முதலாளித்துவத்தின் "முற்போக்கான,” “நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான" அல்லது "ஏகாதிபத்தியத்திற்கு எதிரான" பிரிவுகளிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்தார்கள். 1991க்கு பின்னர் இருந்து, இந்திய முதலாளித்துவம் கூர்மையாக வலதிற்கும், ஏகாதிபத்தியத்தை நோக்கியும் நகர்ந்த போது, ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களோடு வலதை நோக்கி சாய்ந்தார்கள்.

அடுத்தடுத்த அரசாங்கங்கள் சுதந்திர-சந்தை மற்றும் ஏகாதிபத்திய-சார்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள், BJP' எதிர்க்கிறோம் என்ற பெயரில், முட்டுக் கொடுத்தார்கள்.

சோசலிசத்திற்கான போராட்டத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் தடுத்து, காங்கிரஸ் மற்றும் பல வலதுசாரி ஜாதி-அடிப்படையிலான மற்றும் பிராந்திய கட்சிகளுக்கு (இந்த கட்சிகள் அனைத்தும் ஸ்ராலினிஸ்டுகளால் "மதசார்பற்ற இந்தியாவின்" பாதுகாவலர்களாக புகழப்பட்டன) அதை அடிபணிய செய்ததால், காங்கிரஸ் மீதும் மற்றும் ஒரு கால் நூற்றாண்டு கால சந்தை-சார் "சீர்திருத்தம்" மீதும் ஏற்பட்டிருந்த பாரிய வெறுப்பை பிஜேபி சுரண்டிக் கொள்ள சுதந்திரமாக விடப்பட்டது.

இந்தியாவின் பிஜேபி-தலைமையிலான அரசாங்கம் ஆழ்ந்த நெருக்கடியின் ஒரு ஆட்சியாக இருக்கும். அது பாசிச, இந்து-மேலாதிக்கவாத ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பிற்கும், பாதுகாப்பு படைகளின் யுத்தம் நாடும் உட்கூறுகளுக்கும், மற்றும் பெரு வணிகத்தின் மிகவும் பேராசை கொண்ட பிரிவுகளுக்கும் கடமைப் பட்டுள்ளது. மக்கள் விரோத சமூக நிகழ்ச்சி நிரலைத் திணிக்க முயல்கின்ற போதே, அது அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கி திரும்புதலின்" மற்றும் பெருமளவிலான யுத்தத்திற்கான தயாரிப்புகளுக்கு பொறுப்புகளை எடுத்துக்கொண்டு, ஏகாதிபத்தியத்துடன் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் உடன் நெருக்கமான உறவுகளை பின்தொடரும்.

தொழிலாள வர்க்கம் மிகத் தெளிவாக மரணகதியிலான அபாயங்களை முகங்கொடுத்துள்ளது. இருந்தாலும், பிஜேபி வெற்றியும காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிஸ்ட் கட்சிகளின் பொறிவும் வர்க்க போராட்டத்தின் பரந்தளவிலான தீவிரமயமாக்கலுக்கு மட்டுமல்லாது, தொழிலாள வர்க்க அரசியலின் ஒரு அடிப்படை மறுஒழுங்கமைவிற்கும் அறிகுறி காட்டுகிறது.

அதுபோன்ற ஒரு மறுஒழுங்கமைவு, "சுதந்திர கால" முதலாளித்துவ ஆட்சி மற்றும் இந்திய ஸ்ராலினிசம் கவிழ்ந்து போனதன் மீது ஒரு வரலாற்றுரீதியிலான இருப்புநிலை கணக்கை வரைய கோருவதுடன், லியோன் ட்ரொட்ஸ்கியால் விவரிக்கப்பட்ட மற்றும் 1917 ரஷ்ய புரட்சியில் உயிரூட்டப்பட்ட நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய பாரிய கட்சியைக் கட்டுவதும் அவசியமாகின்றது.

துணைக் கண்டத்தின் மக்களை ஐக்கியப்படுத்துவது, ஜாதி ஒடுக்குமுறையை மற்றும் நிலப்பிரபுத்துவத்தைக் இல்லாதொழிப்பது, மற்றும் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை ஆகியவை உட்பட அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக கடமைகளை தீர்க்க முதலாளித்துவம் இலாயக்கற்று இருப்பதை இந்தியாவின் ஒட்டுமொத்த அனுபவமும் எடுத்துகாட்டி உள்ளது. இந்த பணிகளை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நிறைவேற்ற முடியும்.