சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

What took place in Odessa on May 2?

மே 2ல் ஒடிசாவில் என்ன நடந்தது?

By Stefan Steinberg
13 May 2014

Use this version to printSend feedback

மே 2ல் உக்ரேனிய நகரமான ஒடிசாவில் பாசிச சக்திகள் நடத்திய படுகொலையின் அளவை வெளிக்காட்டும் புதிய தகவல்கள், நேரடி சாட்சியங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிப்பட்டுள்ளன.

அன்றைய தினம் கியேவ் ஆட்சியின் எதிர்ப்பாளர்கள் ஒடிசா மையத்தில் இருந்த முகாம்களில் கூடி உக்ரேனில் கூட்டாட்சி முறைக்கு ஆதரவாக வாக்கெடுப்பிற்கு கையெழுத்து சேகரிப்பதில் தொடங்கியது. இந்த அமைதியான கூட்டம் பின்னர் பாசிசக் குண்டர்களால் தாக்கப்பட்டது; அவர்கள் நகரத்திற்கு கியேவில் இருந்தும் கார்கோவில் இருந்தும் பேருந்துகளில் வந்திருந்தனர். முகாம்கள் தாகப்படுவது இந்த வீடியோவில் காட்டப்படுகிறது; இது நூற்றுக்கணக்கான குண்டர்கள் தடிகள், கேடயங்கள், மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் நகர மையத்திற்கு அணிவகுத்து வருவதையும் அரசாங்க எதிர்ப்பாளர்களை தாக்குவதையும் காட்டுகிறது.

பாசிசத் தாக்குதலில் இருந்து தப்பிக்க, கியேவ் எதிர்ப்பு நடவடிக்கையாளர்கள் நகரத்தின் மைய தொழிற்சங்க கட்டிடத்திற்குப் பின்வாங்கினர். அது ஐந்து மாடிகளைக் கொண்ட ஒரு பெரிய கல் கட்டமைப்பு கட்டிடம். பின்னர் நவ-நாஜிக் கும்பல் இக்கட்டிடத்தை சூழ்ந்து, கதவுகளை தடுக்கத் தொடங்கினார். அவர்களை எரியுங்கள்என்று கூச்சலிட்டுக்கொண்டு தேசியவாத குண்டர்கள் கட்டிடத்தின் முன்பகுதிக்கு எரிகுண்டுகள் மூலம் தீ வைத்தனர். தெருக்களில் மோலோடோவ் எரிகுண்டுகளை பாசிஸ்ட்டுக்கள் தயாரிப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

இந்த முழுக்காலத்திலும் உக்ரேன் பொலிசார் பார்த்துக் கொண்டிருந்தனர், பாசிஸ்ட்டுக்களை தடுக்க ஏதும் செய்யவில்லை. மாறாக அவர்கள், படுகொலையில் இருந்து தப்பியவர்கள் உட்பட 130 கியேவ் எதிர்பாளர்களை கைது செய்தனர். தொழிற்சங்க கட்டிடத்திற்குள் நுழைந்து தாக்கிய நவ-நாஜிக்கள் எவரையும் பொலிஸ் கைது செய்தனர் என்ற தகவல்கள் ஏதும் இல்லை.

கட்டிடத்தைச் சூழ்ந்த குண்டர்களின் நடவடிக்கைகளை ஒரு வீடியோ காட்டுகிறது. மஞ்சள்-நீல கைப்பட்டை அணிந்த ஒரு நபர், பெப்ருவரியில் மைதான் ஆர்ப்பாட்டங்களில் தீவிரமாக இருந்தவர் என அடையாளம் காணப்பட்டவர் ஜன்னல் வழியே தப்பி ஓட முயன்றவர்களை சுடுவது தெரிகிறது.

வீடியோ காட்சியில் நான்காவது நிமிடத்தில் கட்டிடத்திற்குள் போடுவதற்கு ஒரு நபர் இன்னும் கூடுதல் எரிகுண்டுகளை கேட்கிறார். அவற்றைத் தூக்கி எறி!, “அவற்றைத் தூக்கி எறி! ஒரு சில வினாடிகளுக்குள் ஒரு வெடி கட்டிடத்தின் முன்பகுதியில் வெடிக்கிறது.

நெருப்பு இரண்டாம் மாடிக்கு பரவுகையில், மக்கள் ஜன்னல்களில் இருந்து குதிக்கத் தொடங்குகின்றனர். தரையில் அதிதீவிர தேசிய வாதிகள் கூச்சலிடுகின்றனர்குதி! உக்ரேன் நீடுழி வாழ்க!

பொலிஸ் வரிசைக்கு பின்னாலிருந்து எரியும் கட்டிடத்தில் இருந்தவர்கள் மீது தோட்டாக்கள் இயக்கப்பட்டன. இது பொலிசார் பாசிஸ்ட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்தனர் என்று காட்டுகிறது. தீயை அணைப்பதற்கு செல்ல முயற்சித்த தீயணைப்பு இயந்திரங்களின் பாதையை மறைத்த கும்பலை தடுக்க, பொலிசார் ஏதும் செய்யவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி இது அதிக உயிர்களைக் குடித்தது.

ஆரம்பத்தில் செய்தி ஊடகம் படுகொலைகளில் பாதிக்கப்பட்ட 40 பேர் புகையை இழுத்தல் போன்ற தீயின் நேரடி விளைவினால் அல்லது ஜன்னல்களில் இருந்து குதித்தல் போன்றவற்றால் உண்டான காயங்களால் இறந்தனர் எனக் கூறியது.

தீ அணைக்கப்பட்டவுடன் கட்டிடத்திற்குள் எடுக்கப்பட்ட கொடூர புகைப்படங்கள், பல பாதிக்கப்பட்டவர்கள் தீயினால் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டனர் என்பதை காட்டுவது குறித்து செய்தி ஊடகம் முழு மௌனத்தை சாதிக்கிறது. இது பாசிஸ்ட்டுக்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து உள்ளே இருப்பவர்களை முறையாகக் கொன்றனர் என்பதைக் காட்டுகிறது. ஒரு புகைப்படம் கர்ப்பிணிப்பெண் ஒருவர் ஒரு மேசை மீது பின் கழுத்தில் காயத்துடன் ஒயர் சுற்றப்பட்டு இருப்பதைக் காட்டுகிறது. அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது வெளிப்படை.

இத் தகவல்கள், மேற்கத்திய அதிகாரிகள் மற்றும் செய்தி ஊடகம் கியேவில் உள்ள பிற்போக்குத்தன தீவிரவலதுசாரி ஆட்சியை மூடிமறைக்கும் முயற்சியை அம்பலப்படுத்துகின்றன. அதனால் பாதிக்கப்பட்ட ரஷ்ய சார்பு சக்திகளையும் படுகொலைக்குக் குற்றம் சாட்டுகின்றன. நீண்ட காலமாக புதிய அமெரிக்க கன்சர்வேடிவ் சிந்தனைக் குழுக்களுடன் பிணைப்புக் கொண்ட சுவீடனின் வெளியுறவு மந்திரி கார்ல் பில்டிட், படுகொலை அன்றே ட்விட்டரில் எழுதினார்  - ஒடிசாவில் குறைந்தப்பட்சம் 38 பேர் இறந்துள்ளது கொடூரம். கட்டிடங்களை கைப்பற்றும் ரஷ்ய சார்பு முயற்சி தொடங்கியுள்ளது போல் தோன்றுகிறது.....

முந்தைய நாட்களில் Mariupol இல் உக்ரேனிய இராணுவ தாக்குதலைத் தொடர்ந்த தூண்டுதலின் நோக்கம், கியேவ் ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு காட்டுவோர் அனைவரையும் மிரட்டுவதாகும். இது சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிடும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த உறுதி கொண்டுள்ளது. இந்த இலக்கிற்காக வாஷிங்டன் மற்றும் பேர்லின் அரசாங்கங்கள் மே 2 கொடூரத்திற்கு பொறுப்பான பிற்போக்குத்தன இழிந்த சக்தியுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளன மற்றும் ரஷ்யாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கும் தயாராக உள்ளன.