சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US economic “recovery” dominated by low-wage jobs

அமெரிக்க பொருளாதார மீட்சியில்ஆதிக்கம் செலுத்தும் குறைந்த ஊதிய வேலைகள்

By Andre Damon 
29 April 2014

Use this version to printSend feedback

தேசிய வேலைவாய்ப்பு சட்ட திட்டம் (NELP)திங்களன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, பொருளாதார மீட்சி எனப்படும் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒரு விகிதாசாரமற்ற எண்ணிக்கையிலான வேலைகளுக்கு கிட்டத்தட்ட மணிக்கு 13 டாலர்களுக்கும் குறைவாகவே ஊதியம் கொடுக்கப்படுகின்றன.

இந்த அறிக்கையின் படி, மொத்தத்தில் அமெரிக்க வர்த்தகங்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் 1.85 மில்லியன் குறைந்த ஊதிய வேலை வாய்ப்புகளை சேர்த்திருக்கும் வேளையில், 1.83 மில்லியன் நடுத்தர-ஊதிய (மணிக்கு 13 முதல் 20 டாலர்கள் வரை, உயர் ஊதிய வேலைகளையும் ($20 முதல் $32 வரை) இல்லாதொழித்துள்ளன.

இந்த தரவுகள், 2008 நெருக்கடிக்கு பின்னர் தொழிலாளர்களது கூலிகள் மற்றும் வாழ்க்கைத்தரங்கள் மீது ஒரு முழுமையான தாக்குதலாக ஆளும் வர்க்கம் அதனை பயன்படுத்தி வர்க்க உறவுகளை மறுகட்டமைப்பு செய்வதில் வெளிப்பாடாகும்.

வீழ்ச்சிக்கு பிந்தைய ஒரு தற்காலிக பின்அதிர்ச்சி என்பதிலிருந்து வெகுவாக விலகி, 2008 நெருக்கடியினை தொடர்ந்து குறைந்த ஊதிய தொழிலாளர்களின் அதிகரிப்பு அதற்கு பிந்திய ஒட்டு மொத்த காலகட்டத்தையும் அவ்வாறே ஆக்கியிருப்பதாக, NELP ஆல் 2011இல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் ஓர் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்த ஆறு ஆண்டுகளில், பொருளாதாரம் விகிதாசாரமற்ற எண்ணிக்கையிலான குறைந்த ஊதிய வேலைவாப்புகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது, என்று திங்களன்று ஒரு தொலைபேசி நேர்காணலில் NELP இன் அறிக்கையின் ஆசிரியரும் ஒரு கொள்கை ஆய்வாளருமான மைக்கேல் எவெங்கெலிஸ்ட் கூறினார்

மீட்சி காலகட்டம் முழுவதிலும், குறைந்த-ஊதிய தொழிற்துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்புகள் இன்னும் தீவிர கவனம் செலுத்தப்பட்டுவருகிறது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. குறைந்த-ஊதிய வேலை உருவாக்கம் என்பது ஆரம்பகால மீட்சியின் தன்மையை கொண்டிராது, இப்போதிருந்து நான்கு வருடங்களாக நிலைத்துருக்கிற ஒரு மாதிரி (pattern) போல் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

2008 மந்தநிலை காலகட்டத்தில், குறைந்த ஊதிய தொழிற்துறையில் 22 சதவீத வேலை இழப்புகள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் 2008 இலிருந்து 44 சதவீத வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பதை அவ்வறிக்கை கண்டுபிடித்துள்ளது.

இதற்கு எதிர்மறாக, உயர்-ஊதிய வேலைகள் 41 சதவீத வேலை இழப்புகளும் ஆனால் 30 சதவீத புதிய வேலை வாய்ப்புகளும் மற்றும் நடுத்தர-ஊதிய வேலைகளால் 37 சதவீத வேலை இழப்புகள் ஏற்பட்டதோடு, 26 சதவீத வேலைகள் மட்டுமே அதிகரித்தன என கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றது.

உணவுச் சேவைகள் மற்றும் குடிநீர் விநியோகம், நிர்வாகம் மற்றும் துணை சேவைப்பிரிவு மற்றும் சில்லறை வணிகம் போன்ற சேவைத்துறை நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுதாக அவ்வறிக்கை தெரிவித்தது. கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள தனியார்துறையில் 39 சதவீதமான இந்த தொழிற்துறைகளிலேயே ஒப்பீட்டளவில் குறைந்த ஊதியம் வழங்கப்படுகின்றது.

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய துறைகளில் சராசரி ஊதியமாக 18.52 டாலர்கள் கொடுக்கும் மருத்துவமனை சுகாதாரத்துறை சேவைகள், சராசரி ஊதியமாக 9.48 டாலர்கள் கொடுக்கும் உணவு மற்றும் குடிநீர் சேவைத்துறை மற்றும் 12.28 டாலர்கள் கொடுக்கும் தனியார் சமூக உதவிகள் ஆகியவை அடங்கும்.

கட்டுமானம், பாவனைப்பொருட்கள் உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை வர்த்தகப் பிரிவுகள், நல்ல ஊதியத்துடன் தொடர்புடைய நீல-காலர் வேலைகள் ஆகியவை வீழ்ச்சிக்கு முன்பு இருந்த அளவை விட மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. 2008 நெருக்கடி, பொருளாதாரத்தின் அனைத்து தோற்றங்களையும், குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறையை மோசமாக பாதித்திருக்கிறது என்று எவெங்கெலிஸ்ட் கூறுகிறார்.

உணவு மற்றும் ஆடை உற்பத்தி உள்ளிட்ட சாதாரண பாவனைக்கற்ற பொருட்கள் துறையில் வேலைவாய்ப்புகள் 2008 இல் இருந்ததை விட 11 சதவீதம் குறைவாகவே இருந்து வரும் வேளையில், கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்புகள் வீழ்ச்சிக்கு முன்பு இருந்ததைவிட, 20 சதவீதம் குறைவாக இருக்கிறது.

2008 மந்த நிலையை அடுத்த 4 வருடங்களின் 30 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், 2001 மந்த நிலையை அடுத்த 4 வருடங்களில் உருவாக்கப்பட்ட மொத்த புதிய வேலைவாய்ப்புகளில் 40 சதவீதம் உயர்-ஊதிய வேலைகளாகும்.

2009 இருந்து, அரசு வேலைகள் 6,27,000 ஆக குறைந்துள்ளது. ஆசிரியர்கள், நிர்வாகிகள், துணை அலுவலர்கள் உள்ளிட்ட உள்ளூர் கல்வித்துறை வேலைவெட்டுகளையும் சேர்த்து அது 44 சதவீதமானது. என அறிக்கை தெரிவிக்கின்றது.

கௌரவமான சம்பள வேலைகளை அழித்தல் மற்றும் அதற்கு பதிலாக குறைந்த-ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதலின் விளைவாக, அமெரிக்க சராசரி குடும்ப வருமானம் 2007 இற்கும் 2012 இற்கும் இடையில், 8.3 சதவீதம் சரிந்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க பில்லியனர்களின் நிகர மதிப்பு கடந்த வருடம் 1.2 டிரில்லியன் டாலர்களை அடைந்துள்ளது. இது 2009இல் இருந்ததை விட இருமடங்கிற்கும் அதிகமாகும்.

ஜனநாயக கட்சியின் சில பிரிவுகள், குறைந்த ஊதிய பிரிவில் ஒரு அடையாள ஊதிய அதிகரிப்பிற்கான தங்களது அழைப்புகளை புதுப்பிப்பதற்காக NELP அறிக்கையினை பயன்படுத்தியிருக்கின்றன.  இது செனட்டில் இவ்வார வாக்கெடுப்பிற்குவிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள செனட்டில் நிறைவேறும் என்றபோதிலும், குடியரசுக் கட்சிவாதிகளின் ஆதிக்கத்திலான பிரதிநிதிகள் சபையில்  நிறைவேறும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஜனநாயகக் கட்சியினரின் முன்மொழிவு உண்மையான உள்ளடக்கத்தில் குறைந்த ஊதியங்களை கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் 1968ல் இருந்ததை விட கீழ்மட்டத்திற்கு இட்டுச்செல்லும். ஒரு வார வழக்கமான வேலையில் இந்தளவு ஊதியம் பெறும் ஒரு தொழிலாளி மூன்று பேருள்ள ஒரு குடும்பத்திற்கான மத்திய அரசின் வறுமைக்கோட்டு மட்டத்தை விட குறைவாகவே சம்பாதிப்பார். உண்மையில், பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு ஒன்றின் படி, தொழிலாளரின் உற்பத்தித்திறனின் அதிகரிப்புடன் இந்த குறைந்த ஊதியம் வைக்கப்பட்டிருந்தால், அது 2012ல் அது மணிக்கு 21.72 டாலர்களை எட்டியிருக்கும்.

உயர் ஊதியங்கள் மற்றும் நடுத்தர வர்க்க வேலைகளுக்காக போராடுதல் என்ற வார்த்தைஜாலமான கூற்றுகளுக்கு அப்பால் யதார்த்தம் என்னவென்றால், ஜனநாயக கட்சியும் ஒபாமா நிர்வாகமும் தங்களது அதிகாரத்தில், தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைப்பதன் மூலம் பெருநிறுவனங்களின் ஆதாயங்களை அதிகரிப்பதற்கான அனைத்தையும் செய்துள்ளன.

மிகவும் குறிப்பிடும்படியாக, 2009இல் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் மறு கட்டமைப்பில், ஒபாமாவின் வாகனத்துறைக்கான திட்டக்குழு (Auto Task Force), அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு பிணையெடுப்பு நிதி வழங்குவதற்கான நிபந்தனையாக, புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களுக்கு  50% கூலி வெட்டுக்களை விதித்தது. இதன் விளைவாக, மிகப்பெரும் மூன்று வாகன உற்பத்தியாளர்களுக்கான இலாபங்களில் அதிகூடிய அதிகரிப்பை ஏற்படுத்தும் விதமாக, 2009 இலிருந்து வாகன தொழிற்துறையில் சராசரியாக ஊதியங்கள் 10 சதவீதமாக குறைந்துள்ளன.