World Socialist Web Site www.wsws.org |
Maternal death in childbirth up 50
percent in America அமெரிக்காவில் பிரசவகால தாய்மார்களின் இறப்புகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதுசீனா மற்றும் சௌதி அரேபியாவை விட அதிக இறப்பு விகிதமாகும்
By Andre Damon பிரிட்டிஷ் மருத்துவ இதழான Lancet வெள்ளியன்று வெளியிட்ட ஒரு சர்வதேச ஆய்வின்படி, 1990 லிருந்து அமெரிக்காவில் பிரசவகால தாய்மார்களின் இறப்பு நிகழ்வுகள் 50 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. 2013-ல் அமெரிக்காவில் ஒவ்வொரு 1 லட்சம் (100.000) குழந்தை பிறப்பிற்கும் சராசரியாக 18.5 வீதம் தாய்மார்கள் இறந்துள்ளதை அவ்வறிக்கை கண்டுபிடித்துள்ளது, இது சௌதி அரேபியாவின் பிரசவகால இறப்பு விகிதமான 7.0 -ஐ விட இருமடங்கும், ஐக்கிய இராச்சியத்தின் (பிரிட்டன்) 6.1 சதவீதத்தை விட மூன்று மடங்கும் அதிகமாகும். பொருளாதார ஏணியின் மிக உச்சியில் செல்வத்தின் அபரிமிதமான அதிகரிப்பினைக் கண்டிருக்கும் ஒரு கால் நூற்றாண்டு காலகட்டத்தில், சமூக உள்கட்டமைப்பின் பயங்கர சிதைவு மற்றும் அமெரிக்காவில் பெரும்பான்மை வெகுஜன மக்களின் நிலைமை ஆகியவற்றை இப்புள்ளிவிபரம் கவனமுடன் வெளிப்படுத்துகிறது. நாகரிகமடைந்த வாழ்க்கையின் அடிப்படைக் கூறுகளின் சரிவிற்கும், அமெரிக்க சமூகத்தை ஆதிக்கம் செய்யும் நிதிய ஒட்டுண்ணிகளால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் அருவருப்பான செல்வத்திற்கும் இடையில் ஒரு நேரடித்தொடர்பு உண்டு. அத்தொடர்பு முதலாளித்துவ அமைப்புமுறை செயற்படுவதிலேயே தங்கியிருக்கிறது. அறியப்பட்டிருக்கப்படும் ”மூன்றாம் உலக”நாடுகளுடன் ஒப்பிடத்தக்க வகையில், அல்லது அதைவிட மோசமாக ”உலகில் செல்வந்த நாடாக”அறியப்படும் நாட்டில், சமூக சீரழிவு மட்டங்கள் காணப்படுகின்றன என்ற உண்மையை The Lancet -ன் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 1990 -க்கும் 2013 -க்கும் இடையில் பிரசவகால இறப்பு அதிகரிப்பு விகிதங்களை காண்கிற எட்டு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஆஃப்கானிஸ்தான், கிரீஸ், எல்.சால்வேடார், தெற்கு சூடான் மற்றும் மிகச் சிறிய நாடான பெலிஸ் (Belize), கினியா-பிஸ்சோ மற்றும் சேசெலஸ் (Seychelles) ஆகியவை பிற நாடுகளாகும். 2011-ல் சூடானிலிருந்து தெற்கு சூடான் பிரிந்ததிலிருந்து, அது இன மோதல்களால் அழிக்கப்பட்டு வரும் வேளையில், ஆஃப்கானிஸ்தானை அமெரிக்கா 2001-ன் ஆரம்பத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தி ஆக்கிரமித்து, நிலைகொண்டது. 2008 ஆண்டு நெருக்கடியின் விளைவு மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளையின் பேரில் சுமத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கிற்கு கிரீஸும் அதன் பொருளாதார சுருக்கத்தைக் கண்டிருக்கிறது. “உலக, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்கள் மற்றும் 1990-2013 காலகட்டத்திய பிரசவகால இறப்பிற்கான காரணங்கள்: நோய் ஆய்வின் உலகளாவிய சுமைக்கான ஒரு முறையான ஆய்வு - 2013” என்ற தலைப்பில், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தால் (IHME) வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. வளங்களும் மருத்துவ நிபுணத்துவமுள்ள அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் பிரசவகால இறப்புகள் அதிகரித்து வருகிறது என்பதற்கு காரணமே இல்லை, என்று IHME-ன் இயக்குனரான டாக்டர். கிறிஸ்டோபர் முர்ரே கூறுகிறார். 1990-ல் 22 வது இடத்திலிருந்து, குறைந்த பிரசவகால இறப்பு விகிதத்தில் 60-ஆவது இடத்திற்கு அமெரிக்கா கீழ்நோக்கி இருப்பதை அந்த ஆய்வு கண்டுபிடித்துள்ளது. பிறக்கும் 1 லட்சம் குழந்தைகளில் 13.5 சதவீதமாக இருந்த ஈரான், 9.5 ஆக இருந்த குவைத், மற்றும் 9.0 ஆக பாலஸ்தீனம், மற்றும் 17.2 ஆக இருந்த சீனா மற்றும் 16.8 ஆக இருந்த ரஷ்யா ஆகியவற்றைவிட அமெரிக்காவில் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. மீதமுள்ள வளர்ந்த நாடுகளை விட, அமெரிக்கா முற்றிலும் வேறுபட்ட ஒரு புள்ளிவிபரவியல் வகையில் இருக்கிறது. பிறக்கும் ஒவ்வொரு 1 லட்சம் குழந்தைகளுக்கும் இறப்பு விகிதம் 6.3 வீதம் என்ற அளவிலிருக்கும் மேற்கு ஐரோப்பா போன்று, குழந்தை பிறப்பின்போது இறப்பு விகிதம் மும்மடங்காகி இருக்கிறது. 1990 -லிருந்து அமெரிக்காவின் மகப்பேறு கால இறப்பு விகிதம் 50 சதவீதமாக உயர்ந்திருக்கும் வேளையில், 1990-ல் இருந்த 12.7 சதவீதத்திலிருந்து அரைவாசியாக மேற்கு ஐரோப்பாவில் இவ்விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மனியில் மகப்பேறு கால இறப்பு விகிதம் 1990-ல் இருந்த 18 சதவீதத்திலிருந்து 2013-ல் 6.5 -ஆக குறைந்திருக்கிறது. சோவியத் யூனியனின் உடைவினையடுத்து, முதலாளித்துவத்தின் மீட்சியால் பாதிக்கப்பட்ட, கிழக்கு ஐரோப்பாவில் 1 லட்சம் பிறப்புகளில் இறப்பு விகிதங்களை விட, அமெரிக்காவில் பிரசவகால இறப்பு நிகழ்வுகள் அதிகம். ”அமெரிக்க பெண்களுக்கு, அதிக-ஆபத்துள்ள பிரசவங்கள் மற்றும் தடுப்பு மற்றும் மகப்பேறு சுகாதார வசதிகள் போதுமான அளவுக்கு கிடைக்காமல் இருப்பது - ஆகியவை இந்த போக்கிற்கு இரு முக்கிய காரணங்களாகும்” என ஆய்வு ஆசிரியர்களுள் ஒருவரான டாக்டர். நிகோலஸ் காஸபாம் தெரிவிக்கிறார். அமெரிக்காவில் காணப்படும் அதிக அளவிலான மகப்பேறு இறப்பு விகிதத்திற்கு, “பிரசவகால கவனிப்புகள் இன்மை மற்றும் பிற சுகாதார சேவைகளுக்கான அணுகல் இன்மை, அதிக விகிதத்திலான அறுவை சிகிச்சை குழந்தை பிறப்புகள் மற்றும் மிகவும் நிறைகூடியவராக இருத்தல், நீரிழிவு மற்றும் பிற நிலைமைகளால் சிக்கலான பிரசவங்கள் ஆகியவை காரணம் என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக IHME ஒரு அறிக்கையில் தெரிவித்தது. உலக சுகாதார அமைப்பின்படி, பிரசவ கால இறப்பு நிகழ்வுகள் ”சுகாதார சேவைகளுக்கான அணுகலில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துவதுடன், ஏழைக்கும் பணக்காரருக்குமான இடைவெளியை மேற்கோள்காட்டுகிறது”. மகப்பேறு இறப்புகளில் தீவிர அதிகரிப்பு, அமெரிக்காவில் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சிக்கு இணையாகியிருக்கிறது. அடிமட்டத்தில் இருக்கும் 90 சதவீதத்தினரது பங்கு வீழ்ந்திருக்கும் வேளையில், 1990 இலிருந்து அமெரிக்காவின் மேல் மட்டத்திலுள்ள 0.1 சதவீத வருமானமீட்டுபவர்கள் நாட்டின் சொத்தினை விட இருமடங்கு அதிகமாக வைத்துள்ளனர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பிலுள்ள (OECD) வேறு எந்த 33 நாடுகளில் இருப்பதையும் விட, அமெரிக்காவில் செழிப்புள்ள 1 சதவீதத்தினர் உயர்ந்த அளவு வருமான பங்கினைக் கொண்டுள்ளனர். பொருளாதார சமத்துவமின்மையின் அதிகரிப்பானது பட்டினி மற்றும் வறுமை அளவுக்கு இணையாகியுள்ளது. ”உணவுப் பாதுகாப்பின்றி” இருக்கும் அமெரிக்க குடும்பங்களின் சதவீதம் 2007-ல் இருந்த 11.1 சதவீதத்திலிருந்து, 2012–ல் 16.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், வறுமை விகிதம் 2000-ல் இருந்த 12 சதவீதத்திலிருந்து 17 சதவீதத்திற்கும் அதிகமாகியிருக்கிறது என்று OECD வின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடம் OECD வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, 2011 –ல் அமெரிக்காவில் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் காலம், ஒவ்வொரு மேற்கு ஐரோப்பிய நாடு மற்றும் கிரீஸ், போர்த்துக்கல், தென் கொரியா மற்றும் ஸ்லோவெனியா அளவை விடவும் குறைவாக இருந்தது. சமூக சமத்துவமின்மை அதிகரிப்பிற்கும், எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் அதிகரிப்பு விகிதத்தில் காணப்படும் குறைவிற்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது. Brookings அமைப்பால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, அமெரிக்காவில் மேல் மட்ட 10 சதவீத வருமானமீட்டும் ஆண்களது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் காலம், அடி மட்டத்திலுள்ள 10 சதவீதத்தினரை விட அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளது. “வருமானம் (வருமானமீட்டுபவர்களில் ஒருவருக்கு) ஏறக்குறைய 4 ஆயிரம் டாலர்களாக அதிகரிக்கும்போது, பொதுவாக அது இன்னுமொரு வருடம் வாழ்வதுடன் தொடர்புடையதாக இருந்தது” என்று அந்த ஆய்வாளர் Atlantic இதழில் சென்ற மாதம் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் மகப்பேறு இறப்பு அதிகரிப்பு, ஆளும் மேல்தட்டு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளால் செயல்படுத்தப்படும், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது. கணக்கெடுப்பு காலகட்டத்தில், தொழிலாளர்களது ஊதியம் தேங்கியிருப்பது மற்றும் குறைந்திருப்பது போல, முதலாளிகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களது சுகாதார நலன்களையும் வெட்டியுள்ளனர். கணக்கெடுப்பு காலகட்டத்தின்போது, நிதிய அதிகார வர்க்கம் இன்னும் அதிக செல்வத்தை குவித்துக்கொள்ள முடிகின்ற வேளையில், அடுத்தடுத்த ஜனாதிபதிகள் மற்றும் காங்கிரஸ்காரர்கள் அதாவது ஜனநாயக மற்றும் குடியரசுவாதிகள், சமூகத்தின் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கும் பிரிவினருக்கு ஆதாயமளிக்கும் திட்டங்களை வெட்டியுள்ளனர். கிளின்டன் நிர்வாகம், புஷ்ஷின் பணக்காரர்களுக்கான வரி வெட்டுக்கள், ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டவை, மற்றும் நீட்டிக்கப்பட்ட வேலையின்மைக்கான ஆதாயங்கள், உணவு முத்திரைகளில் வெட்டுக்கள் மற்றும் வீட்டில் சூடாக்கும் உதவிகள், மற்றும் மருத்துவக்காப்பு, மருத்துவ உதவி மற்றும் ஓய்வூதிய ஆதாயங்களில் கூரிய வெட்டுக்கள், உள்ளிட்ட ஒபாமா நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட இரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகள், மத்திய சுகாதார திட்டத்தின் முடிவு மற்றும் நிதிச் சந்தைகள் முழுமையான கட்டுப்பாட்டினை தளர்த்துவதையும் இது உள்ளடக்கும். மகப்பேறுகால இறப்பு விகித எண்ணிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்ட தீவிர சமூகச் சீரழிவு தொழிலாள வர்க்கத்தை நேரடியாக அரசியல் கேள்விகளுக்கு முகங்கொடுக்க வைக்கிறது. அத்தோடு தொழிலாள வர்க்கம் இரு பெரும் வணிகக் கட்சிகளிலிருந்து உடைப்பதற்கும் முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக ஒரு பரந்த சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதற்குமான தேவையினையும் அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. |
|