World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் US puppet regime in Kiev escalates violence after fascist massacre in Odessa ஒடெசாவில் பாசிஸ்ட்டுக்கள் படுகொலை செய்தபின், கியேவில் உள்ள அமெரிக்க கைப்பாவை ஆட்சி வன்முறையைத் தீவிரமாக்குகிறது
By Alex Lantier ஒடெசாவில் வெள்ளியன்று நிகழ்ந்த படுகொலைக்குப்பின் வார இறுதியில் கிழக்கு உக்ரேனில் மோதல்கள் தீவிரமடைந்துவிட்டன; இவை கியேவில் உள்ள மேற்கத்திய ஆதரவு தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்றன. அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள், இவை ரஷ்ய-சார்பு எதிர்ப்பாளர்கள் மீதான பயங்கரவாத நடவடிக்கைகளை இலக்காக கொண்டு, உக்ரேன் முழுவதிலும் அத்துடன் ரஷ்யாவுடனும் அழுத்தங்களை எரியூட்டும் நோக்கம் கொண்டது என்று உறுதிப்படுத்துகின்றன. கிட்டத்தட்ட 1,000 நன்கு ஆயுதமேந்திய கால்பந்துக் கைக்கூலிகள், கார்க்கிவில் இருந்தும் மற்றும் வலது பிரிவு பாசிஸ்ட் குண்டர்களும் இணைந்து ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களை தாக்கினர், நகரத்தின் தொழிற்சங்க அரங்கினுள் அவர்களைத் தள்ளி, பின்னர் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதன் மீது சிறு ஆயுதங்களை எறிந்து, அதற்கு மோலோடோவ் காக்டெயில் (Molotov cocktails) மூலம் தீயையும் வைத்தனர். மொத்தத்தில் 42 பேர் இறந்தனர், 170 பேர் காயமுற்றனர், எதிர்ப்புக்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் இது ஒற்றை மிகப் பெரிய இரத்தம் தோய்ந்த இறந்தோர் எண்ணிக்கையைக் கொண்டது. ஒடெசா பொலிசார் தாக்குதலை தொடர அனுமதித்தனர், பின்னர் தீயில் இருந்தும் கட்டிடத்தில் இருந்தும் மற்றும் அவர்களைத் தாக்கும் வலது பிரிவு குண்டர்களிடம் இருந்தும் குதித்து தப்பித்த ரஷ்ய எதிர்ப்பாளர்களை சிறையிலும் அடைத்தனர். ஞாயிறன்று ஒடெசாவில் 1,000க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் பொலிஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு 67 காவலில் இருந்தவர்களை விடுவிக்கக் கட்டாயப்படுத்தினர்; “ஒடெசா ஒரு ரஷ்ய நகர்” மற்றும் “ஒருவர் அனைவருக்கும், அனைவரும் ஒருவருக்கு” என்றும் கோஷமிட்டனர். கட்டிடத்திற்குள் நுழைந்தபின் அவர்கள் உக்ரேனிய கொடியை கீழிறக்கி பொலிசாருடன் காவலில் இருப்பவர்களை விடுவிக்க பேச்சுக்கள் நடத்தினர். வார இறுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தொழிற்சங்க கட்டிடத்திற்கு முன் கூடி இறந்தவர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தும் வகையில் மலர்களை வைத்தனர். சனிக்கிழமையன்று உக்ரேனிய உள்துறை மந்திரி ஆர்சென் அவகோவ் கிழக்கில் ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிரான இராணுவ வன்முறை தொடரும் என்று அறிவித்து, “நாங்கள் நிறுத்தப்போவது இல்லை” என்றும் கூறினார். “சிறப்புப் பிரிவுகளுடன்” செயற்பாடுகள் கிழக்கு உக்ரேன் முழுவதும் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். பெப்ருவரி 22ல் கியேவில் பாசிசத் தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் மூலம், தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சியை வாஷிங்டனும் பேர்லினும் பிற்போக்குத்தனமாக தலையிட்டு இருத்தியது குறித்த ஒரு குற்றச்சாட்டுத்தான் ஒடெசா படுகொலை ஆகும். நவ-நாஜி வலது பிரிவு, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளால் ஆட்சி கவிழ்ப்பிற்கு அதிர்ச்சித் துருப்புக்களாக பயன்படுத்தப்பட்டன. வாஷிங்டனும் பேர்லினும் தங்கள் ஊழல் மிகுந்த செய்தி ஊடக நடைமுறையை, ஆட்சி கவிழ்ப்பை பரந்த மக்களின் ஜனநாயகப் புரட்சி என்று தொகுத்துக் கூற நம்பியிருந்தன; அதே நேரத்தில் அவை மக்கள் எதிர்ப்பை நசுக்குவதற்கு அவற்றின் தீவிர வலது கூட்டணி அமைப்புக்கள் நடத்தும் வெகுஜனக் கொலைகளுக்கூடாக நசுக்குவதற்கு தயாராக இருந்தன. இக்கொடூரத்தின் பொறுப்பு முதலிலும் முக்கியமாகவும் கியேவ் ஆட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளிடம்தான் உள்ளது. அரசாங்க எதிர்ப்பு எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு நகரங்களின் மீது நடந்த இரண்டு அலைகள் இராணுவத் தாக்குதல் படுகொலைகளும் அநேகமாக மேற்கத்திய அதிகாரிகளுடன் விவாதித்துத் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். முதல் தாக்குதல் ஏப்ரல் 12-13 கியேவிற்கு CIA இயக்குனர் ஜோன் பிரென்னன் இரகசியமாக வந்து சென்றபின்னும், இரண்டாவது ஏப்ரல 21-22 அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் வருகைக்குப்பின்னும் நடந்தது. ஜேர்மனிய பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் கியேவ் ஆட்சிக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவுகளை உறுதிப்படுத்தும் புதிய செய்தித் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஞாயிறு அன்று Bild am Sonntag கொடுத்த தகவல்: “கியேவில் உள்ள உக்ரேனிய இடைக்கால அரசாங்கம், டஜன் கணக்கான CIA இரகசியப் பிரிவு மற்றும் FBI கூட்டாட்சி சட்டத்தை செயல்படுத்தும் அமைப்பின் வல்லுனர்களின் ஆலோசனையைப் பெறுகிறது.” Bild இன் கருத்துப்படி CIA, FBI அதிகாரிகள கியேவில் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து “நாட்டின் கிழக்கே எழுச்சிக்கு முடிவு காணவும், ஒரு செயல்படும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை நிறுவவும்” செயல்படுகின்றன. வார இறுதியில் டோனெட்ஸ்க் பகுதி முழுவதும் மோதல்கள் பெருகின. டஜன் கணக்கான ஆயுதமேந்திய கவச வாகனங்களும் 20 ஹெலிகாப்டர்களும் வெள்ளியன்று ஸ்லாவ்யன்ஸ்க்கில் உள்ள ரஷ்ய-சார்பு போராளிகளை தாக்கின, வார இறுதியிலும் மோதல் தொடர்ந்தது. வலது பிரிவு சக்திகளின் தாக்குதலால், ஸ்லாவ்யன்ஸ்க்கில் உள்ள ரஷ்ய-சார்பு சக்திகள் 10 பேர் கொலையுண்டனர், 40 பேர் காயமுற்றனர் என்று கூறின; ஆனால் ரஷ்ய செய்தி ஊடகத்திடம் தாங்கள் தொடர்ந்து நகரத்தை கைப்பற்றியுள்ளதாகவும், கியேவ் ஆதரவுடைய சக்திகளால் பற்றியெடுக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளை மீண்டும் கைப்பற்றும் வகையில் தாக்குதல்களை ஏற்பாடு செய்வதாகவும் கூறின. கியேவ் சார்பு பிரிவுகள், மாரியுபோல் என்ற துறைமுக நகரத்தில் ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களை தாக்குவதற்கும் அப்பால், க்ரமடோர்ஸ்க் தொழில்நகரத்தின் பெரும் பிரிவுகளையும் மீண்டும் எடுத்துக் கொண்டதோடு 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர், நகரத்தின் மையம் மட்டும் ரஷ்ய-சார்பு சக்திகளிடம் உள்ளது. Novokramatorsky மற்றும் Starokramatorsky நகரங்களின் இயந்திரங்கள் கட்டும் ஆலைகள், Energomashsepstall உலோக ஆலை மற்றும் Kramatorsk கருவிகள் அமைக்கும் ஆலை என மொத்தத்தில் 50,000 தொழிலாளர்களை நியமித்திருப்பவை அனைத்தும் மூடப்பட்டன. ஒடெசா படுகொலை, கியேவ் ஆட்சி மற்றும் அதன் மேற்கத்திய ஆதரவுகளின் பொறுப்பற்ற தன்மையையும் உச்சமாக உருவகப்படுத்தியுள்ளன. ஒரு ஆட்சி கவிழ்ப்பு மூலம் செல்வாக்கற்ற ஆட்சியை நிறுவி, ஒரு நெருக்கடியை தூண்டியபின், அவை இப்பொழுது வெகுஜன கொலைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளன; இது, கியேவின் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கையால் ஏற்பட்டுள்ள சமூக சீற்றத்தை உள்நாட்டுப் போரை தூண்டுவதின் மூலம் திசைதிருப்பவும் அதே நேரத்தில் கிரெம்ளினை உக்ரேனில் பேரழிவு தரும் போரில் ஈர்க்கும் கணக்கீட்டிலும் செய்யப்படுகிறது. ஒடெசா படுகொலைக்கு முதல் நாள், கியேவ் ஆட்சி சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட ஒரு செல்வாக்கிழந்த 50% எரிவாயு விலை உயர்வை சுமத்தியது. இந்த நடவடிக்கை ஏராளமான உக்ரேனிய தொழிலாளர் குடும்பங்களை திவாலாக்கும். ரஷ்ய அதிகாரிகள் தாங்கள் கிழக்கு உக்ரேன்மீது படையெடுக்கும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளனர்; ஆனால் இனவழி ரஷ்யர்கள் மற்றும் அங்கு இருக்கும் ரஷ்ய-சார்பு சக்திகள் மீதான படுகொலைகளை தடுத்து நிறுத்த இராணுவத் தலையீட்டை மேற்கொள்வர் என்றும் கூறியுள்ளனர். ஒடெசா படுகொலைக்கு மறுநாள் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரேனில் இருந்து ரஷ்ய பாதுகாப்பைக் கேட்டு “ஆயிரக்கணக்கான” அழைப்புக்களை கிரெம்ளின் பெற்றுள்ளது என்றார். “பெருந்திகைப்பில் மக்கள் உதவ கேட்டு அழைக்கின்றனர். பெரும்பாலான மக்கள் ரஷ்ய உதவியை கோருகின்றனர்” என்றார் அவர்; கியேவ் ஆட்சியும் அதன் ஆதரவாளர்களும் “முழங்கை வரை குருதியைக் கொண்டுள்ளனர்.” எனச் சேர்த்துக் கொண்டார். நேற்று பெஸ்கோவ், நிலைமை “மோசமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது” என எச்சரித்தார். பின் அவர்: “உக்ரேனில் என்ன நடக்கிறது என்பது பற்றி ஒரு பொது விளக்கம் எமக்கிடையே தேவை என நாங்கள் நம்புகிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் மதிப்பீட்டில் உரிய அறிவைக் காட்டவில்லை என நாம் காண்கிறோம்” எனக் கூறினார் கிரெம்ளின் தன்னலக்குழுவினர் சந்தேகத்தற்கு இடமின்றி “ஒரு பொது விளக்கம்” கண்டுபிடித்து ஏகாதிபத்தியத்துடன் உடன்பாடு காண்பதில் திகைப்பில் உள்ளனர், ஆனால் அத்தகைய உடன்பாட்டைக் காணும் அளிப்பு எதுவும் இல்லை. உள்நாட்டில் ஆழ்ந்த வர்க்க அழுத்தங்களால் உந்தப்பெற்று மற்றும் மத்திய கிழக்கு, காகசஸ் பகுதிகள் மற்றும் பால்கன்களில் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பில் இருந்து பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய தலையீடுகளால் புவி அரசியல் மோதல்கள் தீவிரமாகி இருக்கையில், நேட்டோ சக்திகள் சமாதானத்தை நாடவிலை, மோதலைத்தான் நாடுகின்றன. அவை உக்ரேனிய நெருக்கடியைப் பயன்படுத்தி துருப்புக்களையும், போர்க் கப்பல்களையும், போர் விமானங்களையும் ரஷ்யாவின் மேற்கத்திய எல்லை முழுவதும் நிறுத்தியுள்ளன; போலந்து, பால்டிக் நாடுகள் மற்றும் ருமேனியாவிற்கு துருப்புக்களையும் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களயும் அனுப்பியுள்ளன. ரஷ்ய எதிர்ப்பு வெறித்தன ஆட்சியை உக்ரேனில் நிறுவியதே, ரஷ்யாவை தகர்த்து உறுதிகுலைக்கவும் அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை நிரந்தர போர் நிலைப்பாட்டில் இருத்துவதற்குமான பரந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்த அசாதாரண பொறுப்பற்ற கொள்கையின் மூலமும், அணுவாயுதங்கள் கொண்ட சக்திகளை உலகப் போருக்குத் தூண்டுவதின் மூலமும், பல ஏகாதிபத்திய சக்திகளின் நிதியப் பிரபுத்துவங்கள் உலக அரசியலில் தங்கள் மேலாதிக்கத்தை தக்க வைக்க முயல்கின்றன. ஜேர்மனியின் Frankfurter Allgemeine Zeitung உடன் தொடர்ச்சியான பல பேட்டிகளில், நேட்டோவின் தலைமைச் செயலர் ஆண்டெர்ஸ் போக் ராஸ்முசென் உக்ரேன் நெருக்கடியை “ஒரு திருப்புமுனை” என்று அழைத்து நேட்டோ “மறு ஆயுதபாணி” ஆக வேண்டும் என்று கோரினார். செய்தித்தாள் ராஸ்முசெனை, திருப்புமுனை என்பது, சோவியத் ஒன்றிய கலைப்பு, வார்சோ ஒப்பந்த அழிவு, அல்லது மத்திய கிழக்கு முழுவதும் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப்பின் “பயங்கரவாதத்தின் மீதான போரை” தொடக்கிய அளவிற்கு இருக்குமா எனக் கேட்டிருந்தது. ராஸ்முசென் ஏற்புடையதாக விடையிறுத்தார்: “இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதல் தடவையாக ஐரோப்பிய நாடு ஒன்று வன்முறையில் நிலப்பகுதி ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளது. கிரிமியாவில் என்ன நடைபெற்றது என்பதை நாம் பார்த்தோம். கிழக்கு உக்ரேனில் கடந்த காலத்தை அனுபவிக்கிறோம். ஆனால் இது 21ம் நூற்றாண்டில் நடக்கிறது! நாம் விடையிறுக்க வேண்டும்!” உண்மையில், கிரிமிய வாக்கெடுப்பின்போது அதிக வன்முறை இல்லை மற்றும் நிச்சயமாக நேட்டோவின் பாசிச சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரங்களின் அளவில் இல்லை. ஆனால் உக்ரேன் நெருக்கடி ஐரோப்பாவின் செப்டம்பர் 11 என்னும் கூற்று, இது பரந்த இராணுவ நடவடிக்கைகளை வெளிநாட்டிலும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் உள்நாட்டிலும் நடத்தப்படும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Daily Beast ல் வந்துள்ள குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றில், அமெரிக்க வெளியுறவுக் குழுவின் கௌரவத் தலைவரான லெஸ்லி ஜெல்ப், பென்டகன் மிகப் பெரிய அளவில் ரஷ்யாவிற்கு எதிராக கியேவிற்கு ஆயுதங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் ஆயுதங்கள் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் சிரிய ஆட்சிக்கு எதிராக வாஷிங்டன் அல் குவேடா பிணைப்பு சக்திகளுக்கு அளித்தவற்றிற்கு ஒப்பானது ஆகும். “இந்த இராணுவ உதவி அமெரிக்க சிறப்புப் படைகள் மூலம் நடத்தப்பட வேண்டும், சாலையோரக் குண்டுகள் (IED க்கள்), வெடிகுண்டுகள், கையெறிகுண்டுகள், பிற வெடிபொருட்கள், திறமையான சிறிய ஆயுதங்கள் மற்றும் பயனுள்ள தன்மை இருக்கவேண்டும். அமெரிக்க பயிற்சி உக்ரேனிலேயே வழங்கப்பட வேண்டும், முடியாவிட்டால் அருகிலுள்ள நாடுகளில் கொடுக்கப்பட வேண்டும்” என்றார் அவர். அத்தகைய ஆயுதங்களை, ரஷ்யாவில் ஷேச்சென் இஸ்லாமியவாத பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் வலது பிரிவு போன்ற குழுக்களுக்கு அளித்தல், ரஷ்யாவிற்குள்ளேயே அமெரிக்க இராணுவ செயற்பாடுகளை நேரடியாக நடத்துவதில் முக்கிய படியாக அமையும். |
|