World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington responsible for fascist massacre in Odessa

ஒடெசாவில் நடைபெற்ற பாசிசப் படுகொலைகளுக்கு வாஷிங்டன்தான் பொறுப்பு

By Mike Head
3 May 2014

Back to screen version

ஒரு படுகொலை என விவரிக்கக்கூடிய நிகழ்வில், 38 அரசாங்க-எதிர்ப்பு நடவடிக்கையாளர்கள் வெள்ளியன்று பாசிசத் தலைமையிலான படைகள் ஒடெசாவில் தொழிற்சங்க கட்டிடத்திற்கு தீ வைத்தபோது கொல்லப்பட்டனர்; அந்த கட்டிடம் உக்ரேனில் அமெரிக்க ஐரோப்பிய ஆதரவுடைய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்வர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தது.

நேரில் பார்த்தவர்களின் சாட்சியப்படி, எரியும் கட்டிடங்களில் இருந்து கீழே விழுந்து தப்பியவர்கள் சூழப்பட்டு நவ-நாஜி வலது பிரிவுக் (Right Sector) குண்டர்களால் தாக்கப்பட்டனர். வீடியோ காட்சிகள் குருதி கொட்ட நின்ற, காயமுற்ற தப்பியவர்கள் தாக்கப்படுவதைக் காட்டுகின்றன.

இக் கொடூரம் கியேவில் மேற்கத்திய சக்திகள் நிறுவியுள்ள வலதுசாரி அரசாங்கத்தின் மிருகத்தன்மையையும் மற்றும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரேனில் தெற்கு மற்றும் கிழக்கே முக்கியமாக ரஷ்ய மொழி பேசும் மையத்தில் உள்ள மக்கள் எதிர்ப்பை ஆட்சி வன்முறையில் நசுக்குவதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒடெசா கொடுமை நடக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் உடன் நடத்திய கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படாத கியேவ் அரசாங்கம் கிழக்கு உக்ரேனில் உத்தியோகபூர்வக் கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள எதிர்பாளர்களுக்கு எதிராக நடத்தும் இராணுவத் தாக்குதல்களுக்கு வெளிப்படையாக ஒப்புதல் கொடுத்தனர்.

மேற்கத்திய செய்தி ஊடகங்கள் ஒடெசாவில் நடந்ததை மூடிமறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாலும் –பல தகவல்கள் “சரியான நிகழ்ச்சித் தொடர்பு இன்னும் தெளிவாகவில்லை” என்று கூறின – தெற்குத் துறைமுக நகரத்தின் கொலைகள் வலது பிரிவின் அடையாளங்களைஅணிந்த குண்டர்களால் தூண்டப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; அவர்கள் அதேபோன்ற மனோபாவம் கொண்ட ஸ்வோபோடா கட்சியுடன் கியேவ் ஆட்சியில் பதவிகளை கொண்டுள்ளனர்.

பல வாரங்களாக ஒடெசாவின் குலிகோவோ பீல்ட் சதுக்கத்தின் முன்னே இருக்கும் அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கையாளர்களின் கூடாரம் முகாமிற்கு தீவைத்தபின், தொழிற்சங்க கட்டிடம் கியேவ்-சார்பு கூறுபடுகளால் அதைச் சுற்றி நின்று தீ வைக்கப்பட்டது. அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அதற்குள் நின்று தடைகளை ஏற்படுத்தியிருக்கையில் கட்டிடம் தீயூட்டப்பட்டது.

கட்டிடம் தீயால் சூழப்பட்ட நிலையில், டிவிட்டரில் வெளிவந்துள்ள புகைப்படங்கள் மக்கள் பல மாடிகளில் இருந்து சன்னல்கள் வழியே பார்ப்பதையும், சன்னல் முகப்பில் உட்கார்ந்திருப்பதையும், குதிப்பதற்குத் தயாராக இருப்பதையும் காட்டுகின்றன. மற்ற புகைப்படங்கள் ஆட்சி-சார்பு கூறுபாடுகள் கொடூரத்தைக் களிப்புடன் காண்பதைக் காட்டுகின்றன. சிலர் டிவிட்டரில் “கோலோரோடோ வண்டுகள் ஒடெசாவில் வறுக்கப்படுகிறன” என கேலியாக எழுதியுள்ளனர். இது ரஷ்ய-சார்பு நடவடிக்கையாளர்கள் செயின்ட் ஜோர்ஜ் ரிப்பன்களை அணிந்திருப்பது குறித்த இழிந்த குறிப்பு ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களில் முப்பது பேர் கட்டிடத்தின் தரைகளில் காணப்பட்டனர்; புகையை இழுத்ததில் திணறியிருக்க வேண்டும் என்பது வெளிப்படை. இன்னும் எட்டு பேர் தீயில் இருந்து தப்ப சன்னல்கள் வழியே குதித்ததில் இறந்திருக்க வேண்டும் என்று பொலிஸ் கூறுகிறதுஉக்ரேன் அதிகாரிகள், மொத்தம் 43 பேர் ஒடெசாவில் வெள்ளியன்று இறந்தனர் என்றும் 174 பேர் காயமுற்றனர் என்றும், 25 பேர் அவர்களில் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

நகரத்திற்கு சமீபத்தில் வந்த கியேவ் அதிகாரிகளின் ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 1,500 பேர், மத்திய ஒடெசாவில் சோபோர்னயா சதுக்கத்தில் கூடியபோது தொடங்கியது. “உக்ரேனுக்கு பெரும்புகழ்”, “விரோதிகளுக்கு மரணம்”, “மோஸ்கல்களைக் குத்துக (ரஷ்யர்களை இழிந்தவகையில் குறிப்பிடுதல்)எனக் கோஷமிட்டப்படி சங்கிலிகள் மற்றும் மட்டைகள், கேடயங்களைக் கொண்ட அவர்கள் நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்றனர்.

பெப்ருவரி ஆட்சி கவிழ்ப்பிற்குப்பின், எதிர்ப்புக்கள் நிறைந்த தென் கிழக்கு உக்ரேனிய நகரங்களில் ஒடெசாவும் ஒன்றாகும். மார்ச் இறுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் நகரத்தில் அணிவகுத்து ஆட்சி கவிழ்ப்பு சுமத்திய அரசாங்கத்தின் நெறியை சவாலுக்கு உட்டுத்தி தன்னாட்சிக்கான கருத்துக் கணிப்பையும் நாடினர்.

ஒடெசா படுகொலை, ஒபாமா நிர்வாகத்தின் வலியுறுத்தலில் உக்ரேனிய ஆட்சி அதன் முழு அளவு அரசாங்க எதிர்ப்பாளர்கள், ஆக்கிரமிப்புக்களை புதுப்பித்ததில் இருந்து வந்துள்ள பெரிய இறப்பு எண்ணிக்கை ஆகும்.

முன்னதாக வெள்ளியன்று இடைக்கால உக்ரேனிய ஜனாதிபதி ஒலெக்சாந்தர் டர்ஷினோவ் பல பிரிவினைவாதிகள் ஸ்லாவயன்ஸ்க்கில் அரசாங்கத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர் என்று கூறினார்;  130,000 மக்கள் வசிக்கும் நகரத்தைச் சுற்றி எழுச்சியாளர்கள் அமைத்திருந்த சோதனைச்சாவடிகளை துருப்புக்கள் அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் கைப்பற்றியது என்று கியேவ் அதிகாரிகள் கூறினர். நகரம் இப்பொழுது “இறுக்கமாக சூழப்பட்டுள்ளது.”

ஹெலிகாப்டர் துப்பாக்கித் தாக்குதல் பயன்படுத்தப்பட்டபோதிலும், உள்ளூர் எதிர்ப்பால் தாக்குதல் நிறுத்தப்பட்டிருந்தது. பிற்பகல் தொடக்கத்தில் உக்ரேனிய துருப்புக்கள் பில்பசோவ்கா மற்றும் ஆண்ட்ரேயெவ்கா கிராமங்களில் நிறுத்தப்பட்டனர்; அங்கு மக்கள் வரிசைகளில் நின்று சிப்பாய்களுடன் வாதிட்டு அவர்களை போரிட வேண்டாம் என வலியுறுத்தினர்.

ஆண்ட்ரேயெவகாவில் கிட்டத்தட்ட 200 பேர் மனிதச்சங்கிலி ஒன்றை அமைத்து கவச வாகனங்கள், டிரக்குகளை சூழ்ந்தனர். பில்பசோவ்காவில் மக்கள் “வெட்கம்!, வெட்கம்! வெட்கம்!” என்று கோஷமிட்டனர். அருகில் இருக்கும் கிரமடோர்ஸ்க்கில் மக்கள் டிராலி கார்களையும் நிறுத்தி இராணுவம் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் தடைக்கு உட்படுத்தினர்

மேர்க்கெலுடன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், ஒபாமா இரண்டு உக்ரேனிய ஹெலிகாப்டர்கள் தரையில் இருந்து தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட தகவலைப் பற்றிக் கொண்டார். உக்ரேனிய உளவுத்துறை SBU ஒன்று தரையில் இருந்து வெப்பத்தை கண்டறிந்து தாக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டது என்ற ஆதாரமற்ற கூற்றை கூறி, ரஷ்ய படைகள் தொடர்பு கொண்டுள்ளன என்பதற்கு நிருபணம் என்றார். ஆனால் மாலையில் நியூ யோர்க் டைம்ஸே வெப்பத்தை கண்டறிந்து தாக்கும் ஏவுகணைகள் பற்றி சான்றுகள் ஏதும் இல்லை என ஒப்புக் கொண்டது.

ஒபாமாவின் கலகத்தை விளைவிக்கும் கூற்றுடன், கியேவ் இராணுவத் தாக்குதலுக்கு அவருடைய ஆதரவு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் நிர்வாகம் தலையிடத் தூண்டுதல் மற்றும் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும் உள்நாட்டுப்போர் சூழலுக்கான நிலைமையை தோற்றுவிக்கும் உந்துதலை சுட்டிக் காட்டுகின்றன. இதையொட்டி முடக்கிவிடும் பொருளாதாரத் தடைகளை சுமத்த முடியும் மற்றும் நேட்டோ ரஷ்யாவுடன் மோதலையும் கொள்ள போலிக்காரணத்தை வழங்கும்.

குறைந்தப்பட்சம் 17 நகரங்கள், சிறு நகரங்களுக்குப் பரவியிருந்த கட்டிட ஆக்கிரமிப்புக்களை அது நிறுத்த “உதவமுடியவில்லை” என்று கியேவ் ஆட்சி ஒரு முழு இராணுவத் தாக்குதலில் இருந்து பின்வாங்குவது போல் தோன்றிய சில நாட்களுக்குப்பின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல் வாஷிங்டனால் முன்தள்ளப்படுகிறது.

அமெரிக்கத் தலைமையிலான அழுத்தத்தை தாமதிக்கும் வகையில், புட்டின் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரேனுடன் இரண்டு வாரங்களுக்கு முன்பு சமாதான உடன்படிக்கை என அழைக்கப்பட்டதில் கையெழுத்திட்டார்; இது கட்டிட ஆக்கிரமிப்புக்கள் முடிக்கப்படவும் இராணுவத் தாக்குதலை நிறுத்தவுமான திட்டமாகும். இந்த உடன்படிக்கை கியேவ் மற்றும் அதன் ஆதரவாளர்களால் தூக்கியெறியப்பட்டது. நேற்று புட்டினுடைய செய்தித் தொடர்பாளர், உக்ரேன் தொடக்கிய “தண்டனை நடவடக்கை” உடன்பாட்டை அழித்துவிட்டது என தெரிவித்தார்.

ரஷ்யா, உக்ரேன் நடவடிக்கைகளை கண்டிக்க மற்றொரு அவசர ஐ.நா. பாதுகாப்புக்குழு கூட்டத்திற்கு வெள்ளியன்று அழைப்பு விடுத்தார். மாஸ்கோவின் தூதர் விட்டாலி சுர்க்கின் இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால், வரும்பேரழிவு விளைவுகள் பற்றி” எச்சரித்தார்; ஆனால் இது அமெரிக்க தூதர் சமந்தா பவரால் கண்டிக்கப்பட்டது; அவர் தாக்குதல் “பெரும்பான்மையானது மற்றும் நியாயமானது” என்றார்.

லிபியாவிலும் மற்ற இடங்களிலும் “மனித உரிமைகள்” குடிமக்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் அமெரிக்க இராணுவத் தலையீடு தேவை என வாதிட்டு புகழ் பெற்ற பவர், ரஷ்யா உறுதிக்குலைப்பு விரிவாக்கத்திறகுக் காட்டும் அக்கறை,இழிந்தது, கபடத்தனமானது” என்றார். நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்க அரசாங்கப் பிரச்சாரத்துடன் இணைந்த வகையில் அவர் வெற்றுத்தனமாக ரஷ்யாதான் உறுதியற்ற தன்மைக்கு காரணம் என்றார்.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும்தான், குறிப்பாக ஜேர்மனிய அரசாங்கம், கியேவில் பெப்ருவரி மாத தீவிர-தேசியவாத ஆட்சி கவிழ்ப்பிற்கு ஏற்பாடு செய்தனர், பின் மாஸ்கோ மற்றும் உக்ரேனின் ரஷ்ய மொழிபேசும் சனத்தொகையின் விடையிறுப்பை பயன்படுத்திக் கொண்டு ரஷ்யா உக்ரேனை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டின.

வன்முறை துணை இராணுவ நடவடிக்கைகள் மூலம் கியேவ் ஆட்சியை இருத்த கிட்டத்தட்ட $5 பில்லியனைக் கொட்டியபின், இப்பொழுது அது ரஷ்யாவை, எந்தத் தீவிர சான்றும் இல்லாமல், அதையே செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த மாதம் உக்ரேனின் ஆரம்ப இராணுவத் தாக்குதல், CIA இயக்குனர் ஜேம்ஸ் பிரென்னென் இரகசியமாக கியேவிற்கு விஜயம் செய்தபின் தொடங்கியது. இரண்டாவது அழுத்தம் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் வருகையின்போது கொடுக்கப்பட்டது.

தற்போதைய அமெரிக்க ஈடுபாடுக்கு சான்றுகள் உள்ளன. ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம், ஆங்கில மொழி பேசும் வெளிநாட்டினர் வெள்ளியன்று ஸ்லாவ்யன்ஸ்க்கின் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியபோது காணப்பட்டனர் என்று கூறுகிறது. இது முன்பு உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து வேலைசெய்யும் அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர் கூறிய குற்றச்சாட்டுக்களைத்தான் எதிரொலிக்கிறது.

ஓரளவிற்கு அமெரிக்கச் செயல்கள், மே 11 கியேவ் எதிர்ப்பாளர்கள திட்டமிட்டிருந்த தன்னாட்சி வாக்கெடுப்பை தடுக்க இயக்கியது போல் தோன்றுகின்றன. இதைத்தவிர, உக்ரேனிய ஜனாதிபதித் தேர்தல் மே 25 நடக்க உள்ளது; இது கியேவில் இருக்கும் ஆட்சி கவிழ்ப்பில் வந்துள்ள அரசாங்கத்திற்கு சட்டபூர்வமான தன்மையை கொடுப்பதற்கு வழிவகையாக மேற்கத்திய சக்திகளால் காணப்படுகிறது. மிகவும் பிரபலப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பில்லியனர், தன்னலக்குழு உறுப்பினர் பெட்ரோ போரோஷெங்கோ, உக்ரேனுக்கு நேட்டோ உறுப்புரிமைக்கும் மற்றும் நாட்டை ஐரோப்பாவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் தாழ்த்தவும் வாதிடுகிறார்.

ஆனால், எதிர்ப்பை கியேவ் ஆட்சி நசுக்க முடியாமற் போகையில், வாஷிங்டன ஒரு மோதலைத் தூண்டுவதில் தீவிரமாக உள்ளது; பின்னர் ரஷ்யா, ஜனாதிபதி வாக்கெடுப்பை தடுக்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில் பயிற்சி என்ற பெயரில், அமெரிக்கத் துருப்புக்கள் லாட்வியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா மற்றும் போலந்தில் நிலை கொண்டுள்ளன, நேட்டோ படைகள் ரஷ்யாவின் எல்லைகள் வரை வந்துவிட்டன.