சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan public meeting discusses significance of online May Day rally

இலங்கை பொதுக் கூட்டத்தில் இணையவழி மேதினக் கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது

By our reporters
3 May 2014

Use this version to printSend feedback

வியாழக் கிழமை கொழும்பில் நடந்த பலம்வாய்ந்த மே தின பகிரங்க விரிவுரைக்கு தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பப் பெண்களுமாக சுமார் 200 பேர் வருகை தந்திருந்தனர். இந்த நிகழ்வு நாளை (4ம் திகதி) நடக்கவுள்ள உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச மே தினக் கூட்டத்துக்கான பிரச்சாரத்தின் பாகமாக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியினால் (சோசக) நடத்தப்பட்டது.


கூட்டத்தில் பங்குபற்றியோரில் ஒரு பகுதியினர்

வியாழக் கிழமை கூட்டத்தில் பங்குபற்றியவர்கள், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதி, அதேபோல் இலங்கையில் போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாணம், மற்றும் தீவின் மத்திய மலையகப் பகுதி மற்றும் தென் பிராந்தியத்திலும் இருந்து வந்திருந்தனர்.

சோசக மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பினதும் பிரச்சாரக் குழுவினர் கொழும்பு கூட்டத்துக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கைள விநியோகித்திருந்தனர். உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் எழுதிய ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்ப்போம்! மே தினத்தின் புரட்சிகர பாரம்பரியங்களை மீட்டெடுப்போம்! என்ற அறிக்கையும் விநியோகிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சோசக அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ், ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைமைக்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாகும் என விளக்கினார். உக்ரேன் நெருக்கடியானதுஅனுவாயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு யுத்தத்தின் விளிம்புக்கே உலகைக் கொண்டுவந்துள்ளதோடு அது மூன்றாவது உலக யுத்தமாக விரைவில் அபிவிருத்தியடையக் கூடும்,” என அவர் தெரிவித்தார்.



கே
. ரட்னாயக்க உரையாற்றுகிறார்

அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க பிரதான அறிக்கையை முன்வைத்தார். 2014ல் பூகோள ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மே தினத்தை ஏற்பாடு செய்துள்ளது அனைத்துலகக் குழு மட்டுமே என அவர் தெரிவித்தார். இது தற்செயலானது அல்ல, ஏனெனில் அனைத்துலகக் குழு அனைத்துலகவாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு தொழிலாள வர்க்க தட்டினர் மத்தியில் ஒரு அனைத்துலகவாத திசையமைவுக்காகப் போராடுகின்றது, என அவர் கூறினார்.

அமெரிக்க மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள், உக்ரேனில் நெருக்கடியை வேண்டுமென்றே உருவாக்கிவிட்டதோடு ரஷ்யாவை சுற்றிவளைக்க துரிதமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவை அரைக்-காலனித்துவ அந்தஸ்த்துக்கு குறைக்கவும் அதன் வளங்களைச் சுரண்டவும் விரும்பும் அமெரிக்காவும் அதன் பங்காளிகளும், மூன்றாவது உலக யுத்தத்துக்கு வழிவகுக்கக் கூடிய ஒரு பெரும் மோதலை தூண்டிவிடுகின்றன.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் இதேவிதமான அச்சுறுத்தல் இருந்துவருகின்றது. இங்கு அமெரிக்கா அதன்ஆசியாவில் முன்னிலைகொள்கையின் பாகமாக சீனாவுக்கு எதிராக மேலும் மேலும் ஈவிரக்கமற்ற ஆத்திரமூட்டல்களை செய்வதோடு அதை இராணுவ ரீதியில் சுற்றி வளைத்துவருகின்றது,” என ரட்னாயக்க தெரிவித்தார்.

பேச்சாளர் போலி-இடது குழுக்களின் பாத்திர பற்றியும் எச்சரித்தார்: “அதன் சர்வதேச கூட்டாளிகளைப் போலவே, நவசமசமாஜக் கட்சி போன்ற இலங்கை போலி இடதுகள், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முரண்பாடுகள் காணாமல் போய்விட்டதாகவும் யுத்த அச்சுறுத்தல் ஒன்று இனிமேலும் இல்லை என்றும் கூறிக்கொள்கின்றன. இந்தக் குழுக்கள் தொழிலாள வர்க்கத்தை முடக்கி வைக்கவும் அவர்களை ஏகாதிபத்திய கொலைக் களத்துக்குள் தள்ளிவிடவும் முயற்சிக்கின்றன.”

சர்வதேச மே தின கூட்டத்துக்கு பதிவு செய்யுமாறும், சர்வதேச தொழிலாள வர்க்கத்துள் ஒரு புதிய புரட்சிகர தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தை முன்னெடுக்க சோசகயில் இணைந்துகொள்ளுமாறும் சபையில் இருந்தவர்களுக்கு ரட்னாயக்க வேண்டுகோள் விடுத்தார். அனைத்துலக கீதத்த்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.

கூட்டத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட கணினிப் பகுதியில் இந்த இணையவழி உலக நிகழ்வுக்காக பல தொழிலாளர்களும் இளைஞர்களும் பதிவுசெய்துகொண்டனர். ஏனையோர் கூட்டத்தில் பங்குபற்றுவது பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில்உலக அரசியல் அபிவிருத்திகள் பற்றி அதிகம் அறிந்துகொண்டதாககொழும்பில் இருந்து வந்த தீசர நமது நிருபர்களிடம் கூறினார். “மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு மற்றும் உக்ரெயினில் நெருக்கடி பற்றியும் எனக்குத் தெரியும், ஆனால் இந்த தலையீடுகளின் உண்மையான காரணங்களை அறிந்திருக்கவில்லை. உலக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு இணையவழி மே தினக் கூட்டம் நிச்சயமாக ஒரு பெரும் அடியெடுப்பு, அதற்காக நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்,” என அவர் கூறினார்.

15 ஆண்டுகளாக தான் எந்தவொரு மே தினக் கூட்டத்திலும் பங்குபற்றவில்லை சம்பத் தெரிவித்தார். “நான் சிறு வயதில் மே தினக் கூட்டங்களால் ஈர்க்கப்பட்டுள்ளேன். குறிப்பாக அந்த மாபெரும் கோஷமானஉலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுங்கள்!’ என்பதில் ஈர்க்கப்பட்டுள்ளேன். எவ்வாறெனினும், எனக்கு வயதான போது இந்த கோஷம் மே தினக் கூட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டது. ஆனால் இன்று கூட்ட மண்டபத்துக்குள் நுழையும் போதே பெரிய எழுத்துக்களில் மேடையில்உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ என்ற சுலோகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை கண்டு மகிழ்ந்தேன்.

சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்று பாரம்பரியங்களை மீட்க நீங்கள் முயற்சிக்கின்றீர்கள் என்பதை உங்கள் துண்டுப் பிரசுரம் கூறுகின்றது. இணையவழி கூட்டம் அதற்கான ஒரு சக்திவாய்ந்த பாலமாகும். நான் நிச்சயமாக பங்குபற்றுவேன்.”

மத்திய மலையகப் பகுதியில் ஹட்டனில் இருந்து வந்த மேரி, ஒரு மூன்றாவது உலக யுத்தம்மனித இனத்துக்கே அழிவாகும்என்று தெரிவித்தார். பெருந்தோட்டப் பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்களும் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகின்றன என அவர் தெரிவித்தார். “இந்த யுத்த அச்சுறுத்தல் பற்றி எவரும் பேசுவதில்லை. சர்வதேச மே தினத்தை ஒழுங்கமைப்பதன் மூலம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியில் சோசக மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் ஈடுபட்டுள்ளன,” எனத் தெரிவித்தார்.

ஹட்டனில் இருந்து வந்த ஜெயலக்ஷ்மி தெரிவித்ததாவது: “நான் கூட்டுத்துக்கு வந்த வழியில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மே தின ஆர்ப்பாட்டத்தை கண்டேன். ‘தாய் நாட்டை பாதுகாப்போம்என்று கோஷமிட்டனர். இது பிற்போக்கானதும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்கும் எதிரானதாகும். இராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் நாங்கள் அனைவரும் வறுமையில் வாழ்கின்றோம். முதலாளித்துவத்தை தூக்கி வீசாமல் தொழிலாளர்களால் அவர்களது உரிமைகளை வெற்றிகொள்ள முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் [மே 4 அன்று] சர்வதேச தலைவர்களின் உரையைக் கேட்கும் ஆவலில் உள்ளேன்.”

பண்டாரவளை தேயிலைத் தோட்டப் பகுதியில் இருந்து வந்திருந்த வடிவேல், சர்வதேச மே தின கூட்டம்மிகவும் பெறுமதியானதுஎனக் கூறினார். அனைத்துலகக் குழு மட்டுமேநூறு ஆண்டுகளுக்கு முன்னர் முதலாம் உலக யுத்தம் வெடித்தது எப்படி என்பதை கலந்துரையாடுகிறது. தொழிலாளர்கள் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். கடுமையான உலக அபிவிருத்திகள் ஒரு புதிய யுத்த அபாயத்தை எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி ஏனைய கட்சிகள் பேசுவதில்லை,” என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வட கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கம்பஹாவில் இருந்து வந்த மாணவனான அஞ்சன, சர்வதேச மே தின நிகழ்வை ஏற்பாடு செய்ய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதுஒரு உயர்ந்த விடயம்என்றார். “அமெரிக்க ஏகாதிபத்தியமும் உலகில் மற்ற அரசாங்கங்களும் போரை முன்னிலைப்படுத்தவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை மேலும் சுரண்டவுமே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனஎன தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு முகவரமைப்பு உலகம் பூராவும் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக் கேட்பதை சுட்டிக் காட்டினார்.

மனித இனம் மீண்டும் ஒரு உலக யுத்தத்தை எதிர்கொள்வதோடு இது முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியினால் உந்தப்படுகின்றது என்பதை வலியுறுத்துவது சோசக மட்டுமே. உலக சக்திகளுக்கு இடையிலான மோதல்களின் பிரதான புள்ளியில் அமைந்துள்ள இலங்கை, இந்த மோதலுக்குள் ஏற்கனவே இழுபட்டு வருகின்றது. முதலாளித்துவத்தின் கீழ் மனித இனத்திற்கு முன் செல்வதற்கு வழி கிடையாது. இந்த விடயம் சம்பந்தமாக நாம் உலகம் பூராவும் உள்ள இளைஞர்களுக்கு கல்வியூட்ட வேண்டும்.”