World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Washington, EU imposes new sanctions on Russia

வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கிறது

By Alex Lantier 
29 April 2014

Back to screen version

வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளை ரஷ்ய நிறுவனங்கள், வணிகம் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது சுமத்தியுள்ளன; அதேவேளை கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களுக்கும் கியேவில் இருக்கும் மேற்கத்திய ஆதரவுடைய ஆட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை பெருகியுள்ளது.

கிழக்கு உக்ரேனிய நகரமான கார்க்கோவின் மேயர் ஜென்னடி ஏ. கெர்ன்ஸ் சுடப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார், இது உக்ரேனில் இரண்டாம் மிகப் பெரிய நகரத்தில் பெருகியுள்ள வன்முறை மோதல்களுக்கும் எழுச்சி பெற்றுள சமூக துன்பங்களுக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகள், பெப்ருவரி 22 பாசிசத் தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் தற்போதைய ஆட்சியை கியேவில் இருத்திய பின் ரஷ்யாவிற்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே பெருகிவரும் மோதலின் ஒரு பகுதியாக இருக்கின்றன. கியேவில் உள்ள அரசாங்கம் அமெரிக்க ஆதரவுடன் கூடிய வன்முறையை கிழக்கு உக்ரேனிய எதிர்ப்பாளர்களுக்கு எதிராகத் தொடக்கியிருக்கையில் மற்றும் ரஷ்யா இனவழி ரஷ்யர்களைக் காக்க தலையீடு செய்வேன் என்று எச்சரித்து உலகம் யுத்தத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கையில் இது நடந்துள்ளது. சமீபத்திய பொருளாதாரத் தடை சுற்றுக்கள் இந்த அழுத்தங்களை அதிகரித்து ஒரு வர்த்தக யுத்தத்தை தூண்டும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது.

அமெரிக்க நிதியப் பொருளாதாரத் தடைகளும் பயணத் தடைகளும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு நெருக்கமான உயர்மட்ட ரஷ்ய அதிகாரிகள் மற்றும் எண்ணெய், பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்களை தாக்குகின்றன. இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களில் துணைப் பிரதம மந்திரி டிமிட்ரி கோஜக், ஜனாதிபதி அலுவலகத் தலைமை நிர்வாகி வ்யாஷேஸ்லாவ் வோலோடின், பாராளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் ஆணையத்தின் தலைவர் அலெக்சே புஷ்கோவ், ரோஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனத்தில் தலைவர் ஐகர் சச்சின் ஆகியோர் உள்ளனர். தங்கள் பங்கிற்கு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இன்னும் 15 தனிநபர்களை தடைகளுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள தங்களின் பட்டியலில் சேர்க்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ஒபாமா அங்கிருந்து, இந்த நடவடிக்கைகள் ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் “அளவுகோட்டு திருத்த முயற்சி” என அழைத்துள்ளார். “இங்கு இலக்கு, தனிப்பட்ட முறையில் திரு புட்டின் பின்னே செல்வதல்ல. இலக்கு அவருடைய கணக்கீட்டை மாற்றுவதாகும்.” என்றார்.

இது சரியாக வேலை செய்யுமா என்பது பற்றி எங்களுக்கு இன்னும் தெரியாது” என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

பல அமெரிக்க அதிகாரிகள் பொருளாதாரத் தடைகளை போதுமானவை அல்ல எனத் தாக்கினர்; குடியரசு செனட்டர்கள் பாப் கோர்க்கர் மற்றும் கெல்லி ஆயோட்டே “மணிக்கட்டில் ஒரு தட்டு” என இவற்றை உதறித்தள்ளினர். கியேவில் உள்ள அமெரிக்க கைப்பாவை அரசாங்கமும், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குதல் நிறுத்தப்படவேண்டும் என்பது உட்பட ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை கோரியுள்ளது.

இது ஐரோப்பிய பொருளாதாரத்தையே ஒரு நிறுத்தத்திற்கு கொண்டு வந்துவிடும் என்பதால், இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதில் இருந்து பின்னடித்து நிற்கிறது. பல முக்கிய எரிசக்தி இறக்குமதி நாடுகள் ரஷ்ய அளிப்புக்களைத்தான் பெரும்பாலும நம்பியுள்ளன; ஜேர்மனி (30%), நெதர்லாந்து (34%). இத்தாலி 28% ஆகியவை இதில் அடங்கும். பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கிட்டத்தட்ட முற்றிலும் ரஷ்யாவை நம்பியுள்ளன: போலந்து (91%), லித்துவேனியா (92%), ஸ்லோவாக்கியா (96%), ஹங்கேரி (86%) மற்றும் பல்கேரியா (90%).

Rosneft ல் 20% பங்குகளைக் கொண்ட BP உட்பட, பிரித்தானிய மின்சார நிறுவனங்கள் ஈரான் மீது சுமத்தப்பட்டுள்ளவற்றின் மாதிரியிலான ரஷ்யாவிற்கான தடைகள் பற்றிய அமெரிக்காவின் திட்டங்களை எதிர்த்து தலையீடு செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன. ஈரான் உலக வணிகத்தில் இருந்து பெரிதும் ஒதுக்கப்பட்டுள்ள நாடாகும். Rosneft  உடன் நெருக்கமாக உழைக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ExxonMobil, அது தன் செயற்பாடுகளில் ரஷ்யாவிற்கு எதிரான தடைகளின் பாதிப்புத்திறன்பற்றி ஆராய்வதாக கூறியுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் பொருளாதாரத் தடைகளை உதறித்தள்ளி பதிலடி கொடுப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளனர். “எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், நாங்கள்  விடையிறுப்போம்” என துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியப்கோவ ITAR-TASS  இடம் கூறினார். “ஆனால் அரசியல் எதிர்கொள்ளல் இன்றி, எங்கள் சொந்த முடிவுகளுடைய விடையிறுப்பு இல்லாமலும், நாங்கள் நிலைமையை எதிர்வினை இல்லாமல் விட்டுவிட முடியாது. அமெரிக்காவின் தள நடவடிக்கை ஆத்திரமூட்டல் தன்மையை பெற்றுள்ளது.”

கடந்த வாரம் பொருளாதாரத் தடைகளை “திறனற்றவை” எனக் கூறிய புட்டின், அவை  முக்கியமாக ரஷ்யாவுடன் உழைக்கும் உக்ரேனிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை பாதிக்கும் என்றார். “உக்ரேனிய பாதுகாப்பு தொழில்துறைக்கு, ரஷ்யப் பங்காளிகளுடன் உறவுகளை நீக்குவது என்பது பேரழிவிற்கு வகை செய்யும். ஏன்? அவர்களுக்கு வேறு சந்தைகள் இல்லை. அவற்றை பொறுத்தவரை வேறு கிடையாது. ஒரே நுகர்வோர் ரஷ்ய ஆயுதப்படைகள்தான்” என்றார் அவர்.

வணிக உறவுகள் சீர்குலைதல் ஏற்படாது எனத் தான் நம்புவதாக புட்டின் சேர்த்துக் கொண்டார். ஆனால் அவ்வாறு ஏற்பட்டால், ரஷ்ய ஆயுத்படைகள் உக்ரேனில் இருந்து முன்பு கிடைத்த உதிரிபாகங்களை ரஷ்ய உற்பத்தியாளர்களிடம் பெறுவர். பாதுகாப்புத் தொழில்துறையில் வேலைகளை இழந்த உக்ரேனியர்களுக்கு அங்கு வேலையும்  தருவதாக அவர் கூறினார்.

ரஷ்ய அதிகாரிகள், மேற்கத்திய அதிகாரிகளிடம் நேட்டோ படைகளை ரஷ்ய எல்லைகளுக்கு அருகே அல்லது எல்லைகளில் கட்டமைப்பதை நிறுத்துமாறும் முறையீடு செய்தனர். இதில் உக்ரேன் மட்டும் அடங்கியிருக்கவில்லை. போலந்து, பால்டிக் நாடுகள் மற்றும் ருமேனியாவும் அடங்கியுள்ளன. ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, ரஷ்ய எல்லைகளில் இத்தகைய நிலைப்பாடு “முன்னோடித்தன்மை இல்லாதது” என்றார். தான் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி சக் ஹேகலுடன் பேசியுள்ளதாகவும் “சொல்லாட்சியை குறைக்க உதவுமாறு” வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கியேவ், வாஷிங்டன் இரண்டும் கிழக்கு உக்ரேனில் கொண்டிருக்கும் தூண்டுதல் கொள்கைகளுக்கு பெருகும் எதிர்ப்பினால் சர்வதேச அழுத்தங்கள் அதிகமாகின்றன; இது பிராய்தியத்தை உள்நாட்டுப்போருக்கு இன்னும் அருகே எடுத்துச் செல்லுகிறது.

ரஷ்ய சார்பு போராளிப் படைகளின் கோட்டையாகிய ஸ்லாவ்யன்ஸ்க்கில், இப்பொழுது கியேவின் இராணுவ மற்றும் பாசிச துணை இராணுவப் பிரிவுகளால் முற்றுகைக்குட்பட்டவை, தன்னைத்தானே மேயர் என அறிவித்துக் கொண்ட வ்யாஷேஸ்லாவ் போனோமரேவ் OSCE எனப்படும் Organization or Security and Cooperation in Europe ஸ்லாவ்யன்ஸ்க்கிற்குஅனுப்பி வைத்துள்ள 8 இராணுவ நோக்கர்களில் ஒருவரை திருப்பி அனுப்பியுள்ளது. ஸ்வீடனில் இருந்து விடுவிக்கப்பட்ட காவலில் வைக்கப்பட்டிருந்தவர் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர். மற்றவர்கள ஒரு செய்தியாளர் கூட்டத்திறகு அழைத்துவரப்பட்டனர்; தாங்கள் நல்ல நிலைமையில் இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

நியூ யோர்க் டைம்ஸினால்நடுத்தர வயதுடையவர்கள்” என விவரிக்கப்பட்ட ரஷ்ய-சார்பு ஆயுதமேந்திய எதிர்ப்பாளர்களின் குழு ஒன்று, கோன்ஸ்டான்டினோவிகா நகரத்தில் கட்டிடங்களைப் பற்றினர்; இந்நகரம் டோனெட்ஸ்க் மற்றும் ஸ்லாவ்யன்ஸ்க்கிற்கு நடுவில் உள்ளது. அவர்கள் கியேவின் தீவிர வது ஆட்சியில் இருந்து, கூடுதல் பிராந்திய தன்னாட்சி உரிமை அனுமதிக்கப்பட வேண்டும், கூட்டமைப்பிற்கு வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரினர்.

கார்க்கோவின் மேயர் கெர்ன்ஸ் தன்னுடைய சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது முதுகில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார். டாக்டர்கள் தோட்டாங்கள் அவருடைய கல்லீரல் மற்றும் நுரையீரல்களில் ஒன்றை சேதப்படுத்தியுள்ளன என்றனர். அவர் ஒரு அவசர அறுவைச் சிகிச்சைக்குப்பின் தீவிர அபாயத்தில்தான் உள்ளார். அவர் சுடப்பட்டபின் அவருக்கு அருகே வெடிக்காத கிரென்ட், அச்சு அகற்றப்பட்டு காணப்பட்டது. கியேவ் ஆட்சி சதி தொடங்கியபின் கிழக்கு உக்ரேனில் ஒரு முக்கிய அரசியல்வாதியின்மீது நடந்த முதல் படுகொலை முயற்சி ஆகும்.

எவர் கெர்ன்ஸைச சுட்டது என்பது தெளிவாக தெரியவிலை. அவர் ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை (பெப்ருவரியில் பாசிச தலைமையில் நடந்த ஆட்சி சதியில் அகற்றப்பட்டவரை)ஆதரித்தாலும் ஆட்சி கவிழ்ப்பிற்குப் பின் கியேவில் இருக்கும் மேற்கத்திய சார்பு அராசங்கத்தை ஆதரித்தார், ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்கள் தொடர்பாக விமர்சனங்களை கொண்டிருந்தார்.

கிழக்கு உக்ரேனில் முக்கிய நகரங்களில் கலகங்கள் வெடித்துள்ளன. கார்க்கோவில், கெர்னஸ் கொலை செய்யப்பட்டதற்கு முதல் நாள் ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் கால்பந்து ஆதரவுக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு இடையே பூசல்கள் வெடித்தன; அவற்றுள் பல, கியேவ் ஆதரவு கொடுக்கும் ஆயுதம்தாங்கிய பாசிச வலது பிரிவுடன் பிணைந்தவை.

ரஷ்ய-சார்பு மற்றும் கீவ்-சார்பு ஆதரவாளர்கள் நேற்று டோனெட்ஸ்க்கில் மோதினர்; இதில் 14 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 1,000 கியேவ்- சார்பு போராளிகளுக்கும் ரஷ்ய-சார்பு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது; பிந்தையவர்களுக்கு உள்ளூர் பொலிஸ் ஆதரவு இருந்தது, வழிப்போக்கர்களும் மோதலில் சேர்ந்து கொண்டனர்.

கியேவ் எதிர்ப்பு “டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின்” செய்திப் பிரிவிலுள்ள விட்டலி ஐவனோவ் கூறினார்: “நாங்கள் ஒரு தாக்குதலை எதிர்பார்த்திருந்தோம். புறநிலையான தகவல் ஒன்று வந்துள்ளது. உண்மையில் பேஸ்பால் மட்டைகள், தடிகள் மற்றும் இரும்புத் துண்டுகளுடன் துப்பாக்கிகளும் வந்துள்ளன. இவர்கள் டினெப்ரோபெட்ரோவ்ஸ்க் FC Dnipro Dnipropetrovsk ஆதரவாளர்கள் மற்றும் தீவிர விசிறிகளாவர். எங்கள் தகவல்படி FC Dynamo Kiefv fan baseல் இருந்தும் மக்கள் உள்ளனர்.”

இம்மோதல் ஒரு சமூக நெருக்கடிக்கு நடுவே வந்துள்ளது; அது கியேவின் தொழிலாள வர்க்க விரோத சிக்கன கொள்கைகளால் மோசமாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய சார்பு எதிர்ப்பாளர்களால் நகரவை நிர்வாக கட்டிடங்கள் கைப்பற்றப்படுமுன், டோனெட்ஸ்க் நகரவைக்குழு, சமூகநல தொழிலாளர்களின் எண்ணிக்கையில 50% குறைப்பை அறிவித்தது. இது நகரவை வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து 308 மில்லியன் ஹிர்யின்வியா (27 மில்லியன் டாலரை) குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இம்மாதம் முன்னதாக, கியேவில் உள்ள நகரவை தொழிலாளர்களின் பரந்த பணிநீக்கத்தை எதிர்த்து எதிர்ப்புக்கள் நடைபெற்றன.

பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக்கும் அவருடைய வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ஆதரவாளர்களும் மக்கள் கருத்தை மீறி, சிக்கன நடவடிக்கை, போர்க் கொள்கைகளை செயல்படுத்த இருக்கும் திட்டத்தைத்தான் வெளியிட்டனர்.

Washington Post இற்கு கடந்த வாரம் கொடுத்த பேட்டி ஒன்றில், யாட்சென்யுக் அவருடைய அரசாங்கம் சிக்கன நடவடக்கைகளை செய்படுத்துகையில் எப்படி பொதுமக்கள் ஆதரவை தக்க வைத்துக்கொள்ளும் எனக் கேட்கப்பட்டார். மக்கள் ஆதரவு சரிந்துவிடும் என்பதை கிட்டத்தட்ட ஒப்புக் கொண்ட அவர் “நாங்கள் எரிவாயு கட்டணத்தை இருமடங்காக்கியுள்ளோம், பல சமூகநலத் திட்டங்களை மூடிவிட்டோம். பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர் என்று நான் உறுதியாகக் கூறமுடியாது.” என்றார்.