சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

US, EU press Russia to recognize Ukraine’s putschist regime

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனிய சதி ஆட்சியை அங்கீகரிக்க ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கின்றன

By Alex Lantier 
26 March 2014

Use this version to printSend feedback

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மத்தியில், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அதிகாரிகள், கடந்த மாதம் மேற்கின் ஆதரவு பெற்ற பாசிசவாதிகள் தலைமையிலான கியேவில் நடந்த ஆட்சி சதியினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அங்கீகாரம் கொடுக்குமாறு மாஸ்கோவிற்கு அழுத்தம் கொடுத்தனர்.

ஹேக்கில் நடைபெற்றுவரும் ஒரு அணுசக்தி உச்சிமாட்டில் டச்சு பிரதம மந்திரி மார்க் ருட்டேயுடன் பேசுகையில், ஒபாமா உக்ரேனிய நெருக்கடி குறித்து சுருக்கமாக குறிப்பிட்டார். மார்ச் 16 வாக்கெடுப்பில், கிரிமியா உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது குறித்து கண்டிக்கையில், அவர் கூறினார்: உக்ரேனில் இன்னும் ஊடுருவல்களை ரஷ்யா செய்யுமோ என்பது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். எனவே ரஷ்யா அடுத்த நடவடிக்கையை எடுக்குமானால் நானும் ஐரோப்பிய குழுவும் கூடுதல் பொருளாதாரத் தடைளை, கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும் ஒரு வடிவமைப்பை நடைமுறைப்படுத்த கலந்தாலோசித்து இருக்கிறோம்.

அவர் மேலும் கூறியது: ரஷ்யாவிற்கு இன்னொரு வழி உள்ளது. உக்ரேனிய அரசாங்கம் அது ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடத்தத்தயார், அதன் சர்வதேச கடமைப்பாடுகளை அங்கீகரிக்க தயார் என்று கூறியுள்ளது. சர்வதேச சமூகம் ஒரு இராஜதந்திர முறைக்கு ஆதரவு கொடுக்கிறது. அது அழுத்தங்களை குறைக்க அனுமதிக்கும், ரஷ்ய துருப்புக்கள் உக்ரேன் எல்லைகளில் இருந்து திரும்பிச் செல்லவைக்கும், விரைவில் முறையான தேர்தல்கள் நடத்தப்பட்டு உக்ரேனிய மக்கள் தங்கள் தலைமையை தேர்ந்தெடுக்க அனுமதிக்கும்.

மேற்கு ஆதரவு பெற்ற உக்ரேன் ஆட்சி சதியை மாஸ்கோ ஏற்க வேண்டும் என்னும் ஒபாமாவின் கோரிக்கை, ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் திங்களன்று கியேவ் அரசின் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி டேஷ்சிடசியாவைச் சந்திக்க ஒப்புக் கொண்டார் என்ற தகவல்களை அடுத்து வந்துள்ளது. இதுவரை ரஷ்ய அதிகாரிகள் கியேவ் ஆட்சியின் பிரதிநிதிகளை சந்திக்க வேண்டும் என்னும் மேற்கின் கோரிக்கைகளை மறுத்துள்ளனர்.

எங்கள் பார்வையில் உக்ரேனின் அனைத்து மக்களையும் கணக்கில் கொண்டு நல்ல தேசிய கலந்துரையாடலை நிறுவ விழைகிறோம் என்று டேஷ்சிட்சியாவைச் சந்தித்தபின் லாவ்ரோவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஒபாமாவின் கருத்துக்கள் இழிந்த மோசடியாகும். இது ஒரு சட்டரீதியற்ற, பாசிச ஆட்சி கியேவில் இருப்பதற்கு ஜனநாயகக் கொள்கைகள் கொண்ட ஒரு மூடிமறைப்பைக் கொடுக்க முற்படுவதாகும். ஒபாமா புதிய தேர்தல்களை முன்மொழிகையில், விஞ்ஞானத்துக்கும் அரசியலுக்குமான ஜேர்மன் கூடம் (Institute for Science and Politics -SWP) என்னும் சிந்தனைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு கியேவ் ஆட்சி ஒரு ஒழுங்கான முறையில் தேர்தல்களை நடத்த போதுமான உறுதியானதாக உள்ளதா என்பது கேள்விக்குரியதாக இருப்பதாக கூறியுள்ளது.

கியேவ் ஆட்சி தங்கியிருக்கும் பாசிச, ரஷ்ய எதிர்ப்புத் தன்மை மாஸ்கோவுடன் எத்தகைய அர்த்தமுடைய ஜனநாயக வழிமுறை அல்லது நீடித்திருக்கும் உடன்பாட்டை விலக்கிவைக்கின்றது. டேஷ்சிட்சியாவுடன் லாவ்ரோவுடைய பேச்சுக்கள் முடிவடைந்தபின், உக்ரேனிய பொலிஸார் பாசிச Right Sector ஆயுதக் குழுவின் தலைவர் ஒலெக்சார்ந்தர் முஜிச்கோவைச் சுட்டுக் கொன்றனர். இது Right Sector இடம் இருந்து அச்சுறுத்தல்களுக்கு வழிவகுத்துள்ளது. அது கடந்த மாத ஆட்சி சதியில் முக்கிய பங்கைக் கொண்டருந்தடன், தான் பதிலடி கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் கியேவில் உள்ள தீவிர வலது ஆட்சிக்கு ஆதரவாக ரஷ்யாவிற்கு எதிரான இன்னும் இராணுவ நடவடிக்கையை அதிகரிப்பதற்கு ஆழ்ந்த எதிர்ப்பு உள்ளது. ஒரு சமீபத்திய CBS கருத்துக்கணிப்பு, அமெரிக்கர்களில் 65% இனர், அமெரிக்கா கியேவ் ஆட்சிக்கு இராணுவ உதவி அளிக்கக்கூடாது என கண்டறிந்துள்ளது. 26%த்தினர் தான் அத்தகைய உதவி அளிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

மக்களில் 61%த்தினர் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் நடக்கும் மோதலில் அமெரிக்காவிற்கு தலையிடும் பொறுப்பு ஏதும் இல்லை என கருதுகின்றனர் என்றும் கருத்துக் கணிப்பு கண்டுள்ளது.

ஒபாமாவின கருத்துக்கள், ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகள் சுமத்தப்படாது என தெரிவிக்கின்றன. இது ரஷ்யாவுடன் கிரிமியா மீண்டும் இணைய வாக்களித்தால் அல்லாது, மாஸ்கோ பலமுறை வலியுறுத்திக் கூறியிருப்பதுபோல் உக்ரேன் மீது ரஷ்யப் படைகள் படையெடுக்காதுவிடுமானால் இவை சுமத்தப்படாது.

ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்காவின் இராணுவப்பெருக்கம் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார அழுத்தத்திற்கு ஒரு இடைநிறுத்தம் இருக்கும் என்பதற்கு அடையாளம் ஏதும் இல்லை. இதில் மாஸ்கோவை இலக்கு கொண்டு பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது, அமெரிக்க போர் விமானங்களை பயன்படுத்தல், போலந்து, பால்டிக் நாடுகள் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இராணுவப் பயிற்சியாளர்கள் அனுப்புவது ஆகியவை உள்ளடங்கும்.

தன்னுடைய சர்வதேசப் பயணத்தின் ஒரு பகுதியாக ஒபாமா நாளை பிரஸ்ஸல்ஸில் நேட்டோவின் தலைமைச் செயலர் ஆண்டெரஸ் போக் ராஸ்முசனைச் சந்திக்கிறார். ராஸ்முசன் வெள்ளை மாளிகையில் உக்ரேனில் இராணுவக் கட்டமைப்பு குறித்து நெருக்கமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார். பிரஸ்ஸல்ஸில் தங்கிய பின் ஒபாமா ரோமிற்கு போப்பை சந்திக்கவும், இத்தாலியின் புதிய பிரதம மந்திரி மாட்டியோ ரென்ஜியைச் சந்திக்கவும் செல்கிறார். அதன் பின் அவர் சவுதி அரேபியாவிற்கு மன்னர் அப்துல்லாவை சந்திக்கச் செல்கிறார்.

ஏகாதிபத்தியவாதிகளின் மூலோபாயத்தில் முக்கிய கூறுபாடு இப்பொழுது ரஷ்ய முதலாளித்துவம் அமெரிக்க, ஐரோப்பிய நிதிய மூலதனத்தை நம்பியிருப்பதாகும். இது மாஸ்கோவை உக்ரேனில் அதன் கோரிக்கைகளை கைவிடக் கட்டாயப்படுத்தும்.

.நா. தலைமை செயலர் பான்கி மூனை நேற்று சந்தித்தபின், பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது கொண்டுள்ள பொருளாதார நெம்புகோலை பற்றி வலியுறுத்தினார். குறிப்பாக, ரஷ்யாவின பாரிய எரிசக்தி ஏற்றுமதிகள் ஐரோப்பாவில் வாங்குவது வெட்டப்படும் என்று அச்சுறுத்திய முறையில்.

ரஷ்ய அதிகாரிகளே மேற்கு ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்ய பொருளாதாரத்தின் மீது சுமத்தியுள்ளதின் மிகப் பெரிய நிதிய அழுத்தத்தின் பாதிப்பை ஒப்புக் கொண்டுள்ளனர்.

ரஷ்யாவின் துணைப் பொருளாதார மந்திரி ஆண்ட்ரி க்ளேபாச் ரஷ்யாவில் இருந்து மூலதன வெளியேற்றங்கள் 2014 முதல் காலாண்டில $70 பில்லியனை அடையலாம் என்றார். ஏனெனில் முதலீட்டாளர்கள் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேன் நெருக்கடியை அடித்து மேற்கின் பொருளாதாரத் தடைகள் குறித்து கவலை கொண்டுள்ளதுடன், நாட்டில் இருந்து பணத்தை திருப்ப எடுத்துக் கொள்கின்றனர். மூலதன வெளிப்பாய்வை தாமதப்படுத்தும் நோக்கம், மற்றும் ரஷ்ய நாணயமான ரூபிள் சரிவதை தடுக்கவும் ரஷ்ய அதிகாரிகள் வட்டி விகிதங்களை 1.5% இம்மாதம் அதிகரித்துள்ளனர்.

இலாபங்களை அதிகரிப்பதற்காக கடன் வாங்குபவர்களையும் நிறுவனங்களையும் அதிக வட்டியை கொடுக்கக் கட்டாயப்படுத்துவதின் மூலமும், ரஷ்யாவை முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்புள்ளதாக்க முனைவது ரஷ்ய பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு வட்டிவிகிதங்கள் இந்த அளவு உயர்ந்திருந்தால், தீவிர பிரச்சனைகள் இருக்கும் என்று BNP Paribas உடைய பார்டோஸ் பாவ்லோவ்ஸ்கி கூறினார். இலவச மதிய உணவு இல்லை. உங்கள் நாணயத்தை பாதுகாக்கலாம், ஆனால் நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் பொருளாதாரத்தை அழிக்கிறீர்கள். என்றார்.

ரஷ்ய அதிகாரிகள் மிக அதிகளவு மூலதனம் வெளியே பாய்வதையும், அதையொட்டி ரூபிள் சரிவு ஏற்படுவதையும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே ரூபிள் இந்த ஆண்டு 11% குறைந்துவிட்டது. ரஷ்ய வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயத்தில் $650 பில்லியன் கொண்டிருக்கின்றன. இவற்றில் $155 பில்லியன் அடுத்த ஆண்டு மறு நிதியமளிக்கத் தேவை. இன்னும் ரூபிளின் மதிப்பில் குறைவு ஏற்பட்டால், இக்கடன்களை திருப்பிக் கொடுப்பது ரஷ்யாவிற்கு இன்னும் செலவைத் தரும்.

Danske Bank இன் லார்ஸ் கிறிஸ்டென்சென் இதன் விளைவாக ரஷ்ய அதிகாரிகள் பணம் வெளியேறுவதை தடுக்க மூலதனக் கட்டுப்பாடுகளை சுமத்தலாம் என்றார். மூலதனக் கட்டுப்பாடுகள் தீவிர ஆபத்தானவையும், வராது என கூறவும் முடியாது. இப்பொழுது என்ன நடந்தாலும், ரஷ்ய பொருளாதாரத்திற்கு நிரந்தர சேதம் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் முதலீட்டாளர்கள் இதை எளிதில் மறக்க மாட்டார்கள்.

அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவின் எண்ணெய், எரிபொருள் தொழிற்துறை மீது அழுத்தங்களை அதிகரிக்க முற்பட்டுள்ளனர். இவை ஐரோப்பாவின் தேவைக்கு மூன்றில் ஒரு பகுதியை விநியோகிப்பதுடன், ரஷ்ய பொருளாதாரத்திற்கு மிகமுக்கியமானதும் ஆகும்.

திங்கள் அன்று உக்ரேன் பற்றிய மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக ஐரோப்பா ரஷ்ய எரிபொருள் இறக்குமதிகளை ஐரோப்பா வெட்டுமானால் ஐரோப்பாவின் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு உதவியாக தாங்கள் இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளை ஒரேகானில் உள்ள ஜோர்டன் கோவ் -Jordan Cove in Oregon- இல் இருந்து ஐரோப்பாவிறகு அனுமதிக்கலாம் என்று குறிப்பிட்டனர். இது கூடுதல் நலனைத் தரும், சுமத்தப்பட்டுள்ளதை, நிறுத்தினால். அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமெரிக்காவின் shale எரிவாயு கிட்டத்தட்ட 80 பில்லியன் கன மீட்டர்கள் இயற்கை எரிவாயுவை மேலதிகமாக விற்பனை செய்ய தயாராக உள்ளது எனக் கூறியுள்ளனர். ஐரோப்பா ரஷ்யாவிடம் இருந்து தற்பொழுது ஆண்டிற்கு 130 பில்லியன் கன மீட்டர்களை இறக்குமதி செய்கின்றது.