சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Vote for SEP candidates

சோசலிச சமத்துக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

Socialist Equality Party
28 March 2014

Use this version to printSend feedback

மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதானது, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் தூண்டிவிடும் உலக யுத்த அச்சுறுத்தல் மற்றும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி அமுல்படுத்தும் வாழ்க்கை நிலைமையை வெட்டிக் குறைப்பது உட்பட தாக்குதல்களுக்கு எதிராகவும் வாக்களிப்பதாகும்.

அரசியல் நிலைமையில் வேகமான மாற்றங்கள் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த பகுப்பாய்வு நிரூபிக்கப்பட்டுள்ளது.

யுத்தப் பிரச்சினையை தீர்த்ததும் நானே. பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தியதும் நானே. வாழ்க்கைச் செலவு பிரச்சினையையும் நானே தீர்ப்பேன்என ஜனாதிபதி இராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது முற்றிலும் மோசடியான அறிவிப்பாகும். தொழிலாள வர்க்கம் உட்பட சகல உழைக்கும் மக்கள் மீதும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியதோடு வடக்கு கிழக்கில் யுத்த குற்றங்களையும் செய்தே இராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் அவர்களின் கீழ் உள்ள இலங்கை முதலாளித்துவத்துக்கும் நல்ல நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அபிவிருத்தி செய்யப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களையுமே பொருளாதார அபிவிருத்தி என அவர் போலியாக மிகைப்படுத்திக் காட்டுகிறார். மேலும் மேலும் கீழ் நிலைக்குச் செல்லும் வாழ்க்கை நிலைமைக்குள் மிகவும் மலிவான உழைப்புக் களத்தில் வேலை செய்யும் நிலைமையே உழைக்கும் மக்களும் இளைஞர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தியாகும்.

1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாதளவு ஆழமடையும் உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமையின் கீழ், ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு அல்லது ஐக்கிய தேசியக் கட்சி (யூஎன்பீ) மற்றும் மக்கள் விடுதலை முன்னிணியினால் (ஜேவிபீ) பாதுகாக்கப்படும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு, தொழிலாள வர்க்கம், கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு உள்ள ஒரே தீர்வு, அவர்களை இந்த நெருக்கடிக்கு இரையாக்குவது மட்டுமே.

மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபைக்கும் மட்டுமே தேர்தல் நடந்தாலும், தொழிலாள வர்க்கம், வறியவர்கள் மற்றும் இளைஞர்களும் முகங்கொடுத்திருப்பது எந்தவகையிலும் பிரதேசவாரியான பிரச்சினைகளுக்கு அல்ல. எல்லா நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களைப் போலவே இவர்களும், அபிவிருத்தியடையும் மூன்றாம் உலக அச்சுறுத்தலையும் 1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள வளர்ச்சி கண்டுவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியினால் இலங்கை பொருளாதாரமும் இறுக்கப்பட்டுள்ள நிலைமையையுமே எதிர்கொள்கின்றனர்.

உக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உட்பட மேற்கத்தைய சக்திகளின் ஆதரவுடன் நாஜிவாதிகள் உட்பட வலதுசாரி சதிகாரர்களால் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், ரஷ்யாவுடனான ஒரு மோதலின் விளிம்புக்கே வந்துள்ளதோடு அனுவாயுதங்களை பயன்படுத்தி நடத்தும் யுத்தமொன்றின் அழிவுக்குள் உலகத்தை இழுத்துச் செல்லும் நிலைமையே உருவாகியுள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததன் பின்னர், உயர் இராணுவ சக்தியை பயன்படுத்தி உலகத்தின் மீது மேலாதிக்கத்தை ஸ்தாபித்துக்கொள்ளும் நிகழ்ச்சி நிரலையே அமெரிக்கா கண்மூடித்தனமாக நடைமுறைப்படுத்துகின்றது.

ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குள், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சீனாவை இராஜத்திர ரீதியில் தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில சுற்றி வளைத்திருப்பது, அந்த நாட்டை அடிமைப்படுத்தி மலிவு உழைப்புக் களமாக பேணுவதற்கே ஆகும். இந்த திட்டத்தின் மூலம் யுத்த அச்சுறுத்தல் தூண்டிவிடப்பட்டுள்ளது.

பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை எழுப்புவது சம்பந்தமாக, ஜனாதிபதி இராஜபக்ஷ வாஷிங்டன் மற்றும் மேற்கத்தை சக்திகளுக்கு எதிராக பிற்போக்கு தேசப்பற்று வாய்ச்சவடால்களை பரப்பிவிட்டாலும், அவர் அமெரிக்காவுடன் சமரசமாக செல்வதற்கான விருப்பத்தையே சமிக்ஞை செய்துள்ளார்.

ஏகாதிபத்திய விரோத போலி வாய்சவடால்களுக்கும் மேலாக, தேர்தல் சட்டங்களை பகிரங்கமாக மீறி, அரச மற்றும் குண்டர் பலத்தைப் பயன்படுத்தி தமது எதிரிகளுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிவிடுவது மற்றும் அரச வளங்களை தாராளமாகப் பயன்படுத்திக்கொண்டு தேர்தல் இலஞ்சம் கொடுப்பது போன்றவை ஊடாக, பலாத்காரமாக வாக்குகளை சுரண்டிக்கொள்ளும் முயற்சியில் இராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தனது அரசாங்கத்தின் பிற்போக்கு அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது எனக் கூறிக்கொள்வது, அந்தக் கொள்கைகளையும் அத்தோடு இணைந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களையும் தீவிரமாக்குவதன் பேரில் அரசாங்கத்தின் கைகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கே ஆகும்.

யூஎன்பீக்கும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் மூலோபாய நலன்களுடன் கூட்டுச் சேர்வதில் எந்தவொரு சங்கடமும் கிடையாது. நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி இடதுகள், ஏற்கனவே இலங்கையில் மனித உரிமைகளை காக்கும் சாக்கில் அமெரிக்காவுடனான கூட்டை சமிக்ஞை செய்துள்ளன.

அமெரிக்கா தலைமையில் மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளின் மனித உரிமை பிரேரணை ஒன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது, இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவோ ஜனநாயக உரிமைகள் தொடர்பாகவோ உள்ள அக்கறையினால் அல்ல. சீனாவுக்கு எதிரான யுத்தத் தயாரிப்பில் இருக்கும் வாஷிங்டனுக்கு, இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங்குடன் உறவை வளர்த்துக்கொண்டு முன்னெடுக்கும் கொள்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது அவசியமாகும்.

ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கம், மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்துள்ள அமெரிக்க பிரேரணையை பயன்படுத்திக்கொண்டு, போலி ஏகாதிபத்திய-விரோத வாய்ச்சவடால் விடுப்பதன் மூலம் தமிழர் விரோத இனவாதத்தை கிளறிவிடுகின்றது. அத்துடன் இராஜபக்ஷ அரசாங்கம் வடக்கு பிரதேசத்தில் புலிகள் மீண்டும் ஒழுங்கமைவது பற்றி பிரச்சாரம் செய்து, பயங்கரமான யுத்த காலத்தில் நடைமுறைப்படுத்தியதற்கு சமமான வகையில் இராணுவத்தை ஈடுபடுத்தி, கிராமங்களை சுற்றி வளைத்தல், வீடு வீடான சோதனை வேட்டை மற்றும் கைது செய்வதையும் உக்கிரமாக்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிலான இராணுவ ஒடுக்குமுறையை உக்கிரமாக்குவதுடன் சேர்த்து தமிழர் விரோத இனவாதத்தை ஊதிப் பெருக்கச் செய்வதன் பிரதான இலக்கு, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதே என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல், பொருளாதாரத்தை மறுசீரமைப்பு, இலவச சுகாதரா சேவையை திட்டமிட்டு துடைத்துக் கட்டுவது மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் காணமாக, தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் மாணவர்கள் உட்பட இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்து வரும் ஒரு எரிமலை மீது இராஜபக்ஷ அமர்ந்துள்ளார். இரு மாகாணங்களுக்கான தேர்தலின் மத்தியிலேயே இராஜபக்ஷ மீனவர்களின் எண்ணெய் மானியத்தின் மீது கோடரியை வீசியுள்ளதோடு பல தசாப்தங்களாக அரசாங்க ஊழியர்கள் அனுபவித்து வந்த ஓய்வுபெறும் போது கிடைக்கும் கொடுப்பனவை இல்லாமல் ஆக்குவதற்கு முடிவெடுத்திருப்பதானது, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் தாக்குதல் பற்றிய சமிக்ஞையே ஆகும்.

தொழிலாள வர்க்கத்தை இனரீதியில் பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அவர்களதும் வறியவர்களதும் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் வரலாற்றை கொண்டுள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் தற்போதைய அரசாங்கத்துக்கு, இந்த தாக்குதல்களை முன்னெடுப்பதற்காக இனவாத யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும் இனவாத மோதல்களை உருவாக்கிவிடுவது அவசியமாகும். பொலிஸ் அரச வழிமுறைகளை இறுக்கும் இராஜபக்ஷ அராசங்கம், தன்னுடன் இருக்கும் ஹெல உறுமய மற்றும் தேசிய விடுதலை முன்னணி போன்ற இனவாதிகளையும் மறு பக்கம் பாசிச கன்னைகளான பொதுபல சேனா, சிஹல ராவய மற்றும் ராவணா பலகாய போன்ற தாக்குதல் கும்பல்களையும் தமிழ் மக்களுக்கும் அப்பால் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிராக தூண்டி விட்டுள்ளது.

அரசாங்கத்தின் எல்லை மீறிய ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக கூக்குரலிடும் யூஎன்பீக்கு, இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளுடன் அடிப்படை முரண்பாடுகள் எதுவும் கிடையாது. தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை நசுக்குவதிலும் யுத்தத்தை முன்னெடுப்பதிலும் இரத்தம் தோய்ந்த சாதனையை செய்துள்ள இந்தக் கட்சி, அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பைச் சுரண்டிக்கொள்ள மட்டுமே முயற்சிக்கின்றது. நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் யூஎன்பீக்கு ஜனநாயக வெள்ளைப் போர்வையை போர்த்துவதன் மூலம் அதன் முயற்சிகளுக்கு தோள் கொடுத்துக்கொண்டிருகின்றன.

வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தினதும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களதும் எதிர்ப்பு வளர்ச்சியடைகின்ற நிலைமையின் கீழ், நவசமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி இடதுகள், தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து முன்னணிக்கு கொண்டுவர யோசனை தெரிவிக்கின்றன. அவர்களது கூற்றுக்களுக்கு மாறாக, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை முடக்கி வைத்து, அந்த தாக்குதல்களை தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட ஒத்துழைப்பதே இன்று தொழிற்சங்கங்களின் வகிக்கும் பாத்திரமாக இருக்கின்றது. அத்தகைய நிலைமையினுள், நவசமசமாஜ, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சியும், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக தொழிலாள வர்க்கம் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் முன்னெடுப்பதை தடுப்பதற்கே முயற்சிக்கின்றன.

அபிவிருத்தியடைந்து வரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில், அரசியல் ஸ்தாபனத்தின் வெகுஜன ஊடகங்களும் ஏகாதிபத்திய-சார்பு மத்தியதர வர்க்க புத்திஜீவிகளும் ஜேவீபீக்கு முண்டுகொடுத்து முன்னணிக்கு கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றனர். தமிழர் விரோத இனவாத வரலாறு கொண்ட, பாசிச கொலைகார நடவடிக்கைகளுக்கு பேர்போன ஜேவிபீ, அரசாங்கத்துக்கு எதிரானசிறந்த எதிர்க் கட்சியாக மிகைப்படுத்தப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க் கட்சியின் பணிகளை செய்ய வேண்டியது அவசியம் என ஜேவிபீயும் கூறுகின்றது.

யூஎன்பீ நெருக்கடிக்குள் மூழ்கியிருக்கும் நிலையில், உழைக்கும் மக்களை முடக்கி வைப்பதற்கு இன்னொரு கட்சியை முன்னணிக்கு தூக்கி நிறுத்துவது முதலாளித்துவ வர்க்கத்துக்கு அவசியமாகியுள்ளது: பெப்பிரவரி மாதம்எதிர்கால நோக்குஎன்ற பெயரில் ஜேவிபீ ஏகாதிபத்திய-சார்பு முதலாளித்துவ அமைப்புமுறையை பேணிக் காக்கும் தனது வேலைத் திட்டத்தை வெளியிட்ட பின்னரே, அதை மிகைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கின.

இந்த சகல முதலாளித்துவ கட்சிகளுக்கும் மற்றும் அவற்றுக்கு பந்தம் பிடிக்கும் போலி இடது கட்சிகளுக்கும் எதிராக, சோசலிச மற்றும் அனைத்துலகவாத முன்னோக்கின் அடிப்படையில் சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றைஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை- இலங்கைக்குள் ஆட்சியில் இருத்துவதே சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டமாகும். அது தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்துக்கும் உலக சோசலிச வேலைத் திட்டத்துக்குமான போராட்டத்தின் பாகமாகும்.

தொழிலாள வர்க்கத்தை சகல முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் அரசியல் ரீதியில் சுயாதீனமாக்கி, இந்த புரட்சிகர வேலைத் திட்டத்துக்காக அணிதிரட்ட சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்.

சோசலிச சமத்துவக் கட்சியிலும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பிலும் இணைந்துகொள்ளுங்கள்.