தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The OECD’s “Society at a Glance” report: A portrait of a failed system OECD இன் "சமூகம் ஒரு பார்வை" அறிக்கை: ஒரு தோல்வியுற்ற அமைப்புமுறையின் ஒரு சித்திரம்
Andre Damon Use this version to print| Send feedback பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான கூட்டமைப்பு (OECD) அதன் ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் "சமூகம் ஒரு பார்வை" (“Society at a Glance”) அறிக்கையை கடந்த வாரம் பிரசுரித்தது. 2008 பொருளாதார பொறிவுக்குப் பின்னர், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வறுமை, பசி, வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக அவலங்கள் மலைப்பூட்டும் அளவிற்கு அதிகரித்திருப்பதை அந்த அறிக்கை ஆவணப்படுத்துகின்றது. 2008 நிதியியல் பொறிவிலிருந்து ஆறு ஆண்டுகள் அண்மித்தளவிலான காலகட்டத்தின் ஒரு இருப்புநிலைக் குறிப்பை வரைந்தளிக்கும் அந்த அறிக்கை, முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் உலகெங்கிலுமான அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட சமூக கொள்கைகளின் மீதான ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றப்பத்திரிகையாக உள்ளது. குறிப்பாக, உலக முதலாளித்துவத்தின் மையமாக, நிதியியல் நெருக்கடியின் இதயத்தானமாக மற்றும் "உலகின் செல்வ செழிப்பான நாடாக" விளங்கும் அமெரிக்கா சார்ந்த புள்ளிவிபரங்கள் பேரழிவுகரமாக உள்ளன — அங்கே வறுமை, பசி மற்றும் சமூக சமத்துவமின்மை ஏறத்தாழ ஆய்வு செய்யப்பட்ட ஏனைய எந்தவொரு நாட்டையும் விட அதிகளவில் வளர்ந்துள்ளன. அந்த அறிக்கை கிரீஸ், போர்ச்சுக்கல் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் மீது நெருக்கடி ஏற்படுத்திய அழிவுகரமான தாக்கத்தையும் ஆராய்கிறது, அந்நாடுகளில் உழைக்கும் மக்களின் சமூக நிலைமைகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் சீரழிக்கப்பட்டிருந்தன. புள்ளிவிபரங்களில் சில பின்வருவனவற்றை உள்ளடக்கி உள்ளன: சமத்துவமின்மை: வருவாய் சமத்துவமின்மை ஆய்வு செய்யப்பட்ட அனைத்து நாடுகளிலும் அண்மித்தளவில் கூர்மையாக அதிகரித்துள்ளது, ஆனால் அமெரிக்காவில் அதிகரித்த வேகத்திற்கு வேறெங்கும் இல்லை. அமெரிக்காவில், 2013இன் மொத்த வருவாயில் மக்கள் தொகையின் மேலே உள்ள 1 சதவீதனர் 19.3 சதவீதம் சம்பாதித்துள்ளது, இது 1985இல் அவர்கள் சம்பாதித்தை விடவும் இரண்டு மடங்கை விட கூடுதலாகும். அமெரிக்காவில், கடந்த மூன்று தசாப்தங்களாக மேலே உள்ள 1 சதவீதத்தினர் பெற்ற வருவாய் பங்கை விட அதிகமாக மேலே உள்ள 0.1 சதவீதத்தினர் பெற்றுள்ளனர், அதேவேளையில் மேலே உள்ள ஒரு சதவீதத்தினர் தற்போது மேலே உள்ள 5 சதவீதத்தினர் பெற்ற அதேயளவிலான வருவாய் பங்கை பெறுகின்றனர். அமெரிக்காவில், மேலே உள்ள ஒரு சதவீதத்தினர் ஏனைய எந்தவொரு OECD அங்கத்துவ நாட்டையும் விட உயர்ந்தளவிலான வருவாய் பங்கை எடுத்துச் செல்கின்றனர். வேலையின்மை: 2007இல் இருந்து, OECD அங்கத்துவ நாடுகளில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு உயர்ந்து, 48 மில்லியனை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அவர்களில், மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானோர் ஓராண்டிற்கும் மேலான காலத்திற்கு வேலையின்றி இருந்துள்ளனர். “வேலையிலிருந்து எந்தவொரு வருவாயும் கிடைக்கப் பெறாத குடும்பங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை கிரீஸ், அயர்லாந்து மற்றும் ஸ்பெயினில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, மற்றும் எஸ்த்தோனியா, இத்தாலி, லாட்வியா, போர்ச்சுக்கல், சுலோவேனியா மற்றும் அமெரிக்காவில் 20% உயர்ந்துள்ளதாகவும்,” அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. வறுமை: ஆய்வு செய்யப்பட்ட நாடுகளில் பெரும்பாலானவைகளில் வறுமை, குறிப்பிடத்தக்க அளவிற்கு பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் வீழ்ச்சி அடைந்து வரும் ஊதியங்களின் விளைவாக உயர்ந்துள்ளது. 2007 மற்றும் 2010க்கு இடையே, குழந்தைகளின் வறுமை விகிதம் 12.8 சதவீதத்தில் இருந்து 13.4 சதவீதமாக உயர்ந்தது, அதேவேளையில் 18-25 வயதிற்கு இடைப்பட்டவர்களின் வறுமை விகிதம் 12.2 சதவீதத்தில் இருந்து 13.8 சதவீதமாக உயர்ந்தது என அந்த அறிக்கை குறிப்பிட்டது. அமெரிக்கா 17.4 சதவீத வறுமை விகிதத்தைக் கொண்டிருந்தது, இது OECD இன் சராசரியான 11.1 சதவீதத்தை விட அதிகமாகும். ஆய்வு செய்யப்பட்ட நாடுகளிடையே, “சிலி, இஸ்ரேல், மெக்சிக்கோ மற்றும் துருக்கி ஆகியவை மட்டுமே அமெரிக்காவை விட அதிக வறுமை விகிதங்களைக் கொண்டிருந்த நாடுகளாக" அந்த அறிக்கை குறிப்பிட்டது. வருவாய்கள்: OECD அங்கத்துவ நாடுகளில், 2007இல் மற்றும் 2010க்கு இடையே சராசரி வருவாய் மந்தப்பட்டது, அதேவேளையில் கீழே உள்ள 10 சதவீதத்தினரின் வருவாய்கள் ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற விகிதத்தில் வீழ்ச்சி அடைந்தது. பசி: தங்களால் உணவு பொருட்கள் வாங்க முடியவில்லை என கூறிய மக்களில், மெக்சிக்கோ, துருக்கி, ஹங்கேரி, சிலி மற்றும் எஸ்தோனியாவிற்கு அடுத்து, ஐந்தாவது உயர்ந்த எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டிருந்தது. கடந்த பன்னிரெண்டு மாதங்களில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் தங்களால் உணவு வாங்க முடியவில்லை என்று கூறிய அமெரிக்க மக்களின் சதவீதம் 2006இல் 13.4 சதவீதமாக இருந்ததில் இருந்து 21.1 சதவீதமாக உயர்ந்தது. இளைஞர்: இளைஞர்களின் நிலைமைகளோ குறிப்பிடத்தக்க அளவிற்கு இன்னும் கொடுமையாக உள்ளன. “மொத்த இளைஞர்களில் 16-24 வயதிற்குட்பட்டவர்களில் 20 சதவீதத்திற்கும் மேலானவர்கள் வேலைவாய்ப்பின்றி அல்லது செயலற்று இருப்பதாகவும், கிரீஸ், இத்தாலி, மெக்சிக்கோ மற்றும் துருக்கியில் அவர்கள் படிப்பிலோ அல்லது பயிற்சியிலோ இல்லாமல் இருப்பதாகவும்,” அந்த அறிக்கை குறிப்பிட்டது. பிறப்பு விகிதங்கள்: மோசமடைந்து வரும் பொருளாதார பாதுகாப்பின் விளைவாக, OECD நாடுகள் எங்கிலும் கருத்தரிப்பு விகிதங்கள் சரிந்துள்ளன, அதில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. ஆய்வு செய்யப்பட்ட நாடுகளில் எந்தவொரு நாட்டையும் விட அமெரிக்காவில் கருத்தரிப்பு விகிதங்கள் மிக கணிசமான அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருந்தன. ஒருவிதத்தில் மிக முக்கியமாக, பொருளாதார வெளிப்பாடு மீட்சி பெற்று வருவதாக கூறப்படும் நாடுகளில், வளர்ந்து வரும் சமத்துவமின்மை மற்றும் வறுமையின் போக்குகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்று அந்த அறிக்கை முடிக்கிறது. “சமூக பிளவுகளை சரிசெய்ய மற்றும் கடுமையாக திரும்பி வந்து தாக்காமல் இருக்க பொருளாதார மீட்சி மட்டுமே போதுமானதல்ல,” என்று OECD செயலாளர் நாயகம் Angel Gurría குறிப்பிட்டார். உண்மையில், “மீட்சி" என்றழைக்கப்படுவது — மக்கள் தொகையின் பரந்த பெரும்பான்மையினரை விலையாக கொடுத்து — ஏறத்தாழ முற்றிலுமாக பெரும் செல்வந்தர்களின் தரப்பில் உள்ளது. அமெரிக்கா, பிரதானமாக ஒபாமா நிர்வாகத்தின் கீழ், நெருக்கடியை உருவாக்கிய அதே அமைப்புகளின் ஆதாயத்திற்காக, நிதியியல் அமைப்புமுறைக்குள் பாரிய தொகையை பாய்ச்சுவதற்கு பாதை வகுத்தது. “கட்டமைப்பு சீர்திருத்தம்" மற்றும் சமூக திட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கும் ஒரு அமைப்பால் எடுத்துக்காட்டப்பட்ட அந்த அறிக்கை, வறுமை மற்றும் சமத்துவமின்மையின் மலைப்பூட்டும் அதிகரிப்பானது பெரும் சமூக மேலெழுச்சிகளில் விளைவைக் காட்டுமென்று, ஆளும் வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையையும் உள்ளடக்கி உள்ளது. “ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிகள், ஏனையவற்றின் மீதும், அமைப்புகளின் மீதும்.... மக்களிடைய ஆழ்ந்த மறைமுக விளைவுகளைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கலாம். இவற்றை புரிந்து கொள்வது சமூகரீதியிலான ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக மட்டுமல்ல, மாறாக சமூக பதட்டங்கள் மற்றும் மாறிவரும் சமூக கட்டமைப்பு அடிப்படையான சமூக, கலாச்சார மற்றும் அரசியல் மாற்றத்தை தூண்டிவிடும் மற்றும் உந்துதல் தரும் என்பதாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. “உயர்ந்து வரும் சமத்துவமின்மை மற்றும் சமூகப் பிளவுகளை கையாள" “அவசர நடவடிக்கை" அவசியப்படுவதாக OECD அந்த அறிக்கையை முடித்திருந்தது. நிச்சயமாக, முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பு மக்கள் நனவிலும் மற்றும் தற்போதைய "அமைப்புகள்" மீதான நம்பிக்கையை பொறிய செய்வதிலும் பிரதான மாற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது என்பது உண்மையே. எவ்வாறிருந்த போதினும் எதையும் வழங்குவதற்கு, ஆளும் வர்க்கத்திடம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையிடம் ஒன்றுமே இல்லை. 2008 பொறிவிற்கு விடையிறுப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு சமூக கொள்கையும், மக்களை விலையாக கொடுத்து, பேரழிவுகரமான சமூக விளைவுகளோடு, ஆளும் மேற்தட்டை செழிக்க செய்வதை நோக்கமாக கொண்டுள்ளன. உண்மையில், தனியுடைமை உற்பத்தியின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறை, வழக்கற்று போய், பகுத்தறிவிற்கு முரண்பட்டு, மேலதிக சமூக வழிவகைகளோடு பொருத்தமற்று இருப்பதையே OECD அறிக்கை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது. உலக சமூகத்தை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவையின் அடிப்படையில் சோசலிச மறுஒழுங்கமைப்பு செய்வது மட்டுமே, கண்ணியமான வேலை, வீட்டு வசதி, சுகாதாரம், மற்றும் கல்விக்கான அனைத்து மக்களின் உரிமையை உறுதிபடுத்துவதற்கான ஒரே வழியாகும். |
|
|