தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து US-backed military junta in Egypt sentences 529 Brotherhood members to death அமெரிக்க ஆதரவு பெற்ற எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு 529 முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது
By Johannes
Stern Use this version to print| Send feedback நேற்று எகிப்திய நீதிமன்றம் ஒன்று முஸ்லிம் சகோதரத்துவ (MB) உறுப்பினர்கள் 529 பேருக்கு மரணதண்டனை விதித்துள்ளது. சமீபத்திய வரலாற்றில் மிக அதிக நபர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளமையானது, அமெரிக்க ஆதரவுடைய எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு, அதன் அரசியல் விரோதிகளை அழிப்பதற்கான இரக்கமற்ற முயற்சிகளுக்கு மற்றொரு விரிவாக்கம் என்பதுடன் எகிப்திய புரட்சியையும் குருதியில் மூழ்கடிக்கிறது. முஸ்லிம் சகோதரத்துவ தலைவர் மகம்மது முர்சிக்கு எதிராக நடந்த வெகுஜன எதிர்ப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட ஜூலை 3, 2013 ஆட்சி சதி காலத்திலிருந்து இராணுவ ஆட்சிக்குழு வன்முறையில் உள்ளிருப்புப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அடக்கி, குறைந்தப்பட்சம் 1,400 பேரைக் கொன்றுள்ளது மற்றும் 16,000 பேருக்கு மேலாக சிறையில் அடைத்துள்ளது. இது எகிப்தின் மிகப் பெரிய இஸ்லாமியவாத அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்தை தடை செய்துள்ளது, ஆர்ப்பாட்ட எதிர்ப்புச் சட்டம் ஒன்றை வெளியிட்டு, சமூகத்தில் இராணுவத்தின் மேலாதிக்க பங்கை உள்ளடக்கிய அரசியல் அமைப்பு ஒன்றையும் ஏற்றுள்ளது. மின்யா கவர்னர் ஆட்சியில், பெரும்பாலான வழக்கு தொடரப்பட்டவர்கள் ஆட்சி சதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது கைது செய்யப்பட்டனர். இது ஆகஸ்ட் 14 ஆம் திகதி கெய்ரோவில இரண்டு முர்சி ஆதரவு உள்ளிருப்புப் போராட்டங்களின் போது வெடித்தது. விசாரணைக்கு உட்பட்ட குழுவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் கொலை, கொலை முயற்சி, ஒரு காவல் நிலையத் தாக்குதல், பொதுக் கட்டிடம் மற்றும் தனியார் கட்டிடத்தை சேதப்படுத்துதல் ஆகியவை அடங்கியிருந்தன. 545 குற்றம் சாட்டப்பட்டவர்களில் நீதிமன்றத்தில் 150 பேர்தான் இருந்தனர். மற்றவர்கள் ஆஜராகாமலேயே விசாரணை நடத்தப்பட்டது. முழு விசாரணையும் ஒரு கேலிக்கூத்தாகும், ஒரு காட்சிப்படுத்தும் தன்மையை விசாரணை கொண்டிருந்தது. “இந்த மிகவும் துரிதமாக விசாரிக்கப்பட்ட வழக்கில், நீதித்துறை வரலாற்றிலேயே மிக அதிகம் பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது” என்று முர்சி உட்பட, முக்கிய முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு ஆஜரான வக்கீல் நபி அப்தெல் சலாம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். “ஒரு சொல்கூட கூற எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, 3000 க்கும் மேற்பட்ட பக்கங்களை பார்க்க மற்றும் விசாரணையில் அவர்கள் கூறும் சாட்சியம் என்னவென்று பார்க்கவும் முடியவில்லை.” தலைமை தாங்கிய நீதிபதி யூசெப், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதெல்லாம் கூச்சலிட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவும் இட்டார். சில வக்கீல்கள் நீதிமன்றத்திற்குள் வருவதற்கே தடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவரின் உறவினரான வாலிட் என்பவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்: “விசாரணை சனி தொடங்கும்போது அது ஒரு பெயரளவு விசாரணையாக இருக்கும். நீதிபதி எந்த வக்கீல், சாட்சியங்கள் கூறுவதையும் கேட்பதில்லை, குற்றம் சாட்டப்பட்டவர்களையும் கூப்பிடவில்லை; நீங்கள் குண்டர்கள் குழு முன் இருக்கிறீர்களே ஒழிய, நீதிமன்றம் முன் இல்லை.” தீர்ப்பிற்குப்பின் வியத்தகு காட்சிகள் வெளிப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள் பெருந்திகைப்பில் கூக்குரலிட்டனர்; கோபம் மிகுந்த எதிர்ப்பாளர்கள் அருகிலிருந்த கட்டிடம் ஒன்றிற்கு தீ வைத்தனர் என எகிப்திய அரச தொலைக்காட்சி நிலையம் அறிவித்தது. இன்று மற்றொரு வெகுஜன விசாரணை தொடங்கும்; இதில் 683 பேர் இதேபோன்ற குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முஸ்லிம் சகோதரத்துவத்தின் தலைமை வழிகாட்டி மகம்மது பேடி மற்றும் அதன் அரசியல் பிரிவின் தலைவர் சாத் அல்-கடானி ஆவர். அமெரிக்க அரசாங்கமும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய நட்பு நாடுகளும் வெற்றுத்தன, முற்றிலும் பாசாங்குத்தன அறிக்கைகளுடன் இதனை எதிர்கொண்டன. அமெரிக்க அரச அலுவலகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் மாரி ஹார்ப் “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தி “529 எகிப்தியர்கள் ஒரு பொலிஸ் இறந்ததற்கு மரணதண்டனை பெற்றுள்ளதற்கு அதிர்ச்சியை” தெரிவித்தார். அதே நேரத்தில் வாஷிங்டன் இராணுவ ஆட்சிக் குழுவிற்குக் கொடுக்கும் ஆதரவு தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். வெள்ளை மாளிகை கெய்ரோவுடனான அதன் பிணைப்பை “முக்கிய உறவு” எனக் கருதுகிறது, உறவுகளை “முற்றிலும் முடிக்கும்” விருப்பம் இல்லை என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி கத்ரின் ஆஷ்டன் எகிப்திய இராணுவ ஆட்சிக் குழுவிற்கு “மரண தண்டனை கொடூரமானது, மனிதத்தன்மை அற்றது” என நினைவுறுத்தி, “எகிப்திய இடைக்கால அதிகாரிகள் “சர்வதேச தரங்களை” பொருத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “எகிப்து ஜனநாயகத்திற்கு மாறுவதின் நம்பகத்தன்மைக்கு இது குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமாகும்” என அவர் வலியுறுத்தினார். இராணுவ ஆட்சிக்குழு மிக மிருகத்தன, ஜனநாயகமற்ற வழிவகைகளை பயன்படுத்துகையில் வாஷிங்டனும் பிரஸ்ஸல்ஸும் அதை “ஜனநாயகத்திற்கான” போராட்டம் எனத் தொடர்ந்து காட்டுகின்றன. இராணுவ ஆட்சிக் குழு, ஆட்சி சதியின் தலைவரும் பாதுகாப்பு மந்திரியுமான பீல்ட் மார்ஷல் அப்தெல் பட்டா அல்-சிசியை புதிய ஜனாதிபதியாக இருத்த தயாரிப்புக்கள் நடத்துகையில் இத்தீர்ப்பு வந்துள்ளது. நடைமுறைச் சர்வாதிகாரி வெகுஜனக் கொலைகள் மற்றும் சிறையில் அடைப்புக்கள் என பல மாதங்களாக நடப்பதை மேற்பார்வையிடுகிறார், இப்பொழுது தொழிலாள வர்க்கத்துடன் நேரடி மோதலுக்குத் தயார் செய்கிறார். அரச அடக்குமுறை மற்றும் இராணுவ ஆட்சி மாற்றத்திற்கே தொழிலாள வர்க்கம் முக்கிய இலக்காகும். இம்மாதம் முன்னதாக இளம் மருத்துவர்கள் மாநாட்டில் பேசிய சிசி பல ஆண்டுகள் சிக்கனம், கஷ்டங்கள் இருக்கும் என்று அச்சுறுத்தினார். “நம் பொருளாதார சூழ்நிலை, அனைத்து நேர்மை, உணர்வுடன் கூறுகையில் மிகவும் கடினமாக உள்ளது. எவரேனும் நம் நாட்டிற்கு உதவ நான் செயற்படுகிறேன் என்று கூறினார்களா என நான் வியப்படைகிறேன். வெறும் சொற்களால் நாடு முன்னேற்றம் அடையாது. ஓரிரு தலைமுறைகள் கஷ்டப்பட வேண்டும்; அப்பொழுதுதான் பின்னர் வரும் தலைமுறைகள் வாழமுடியும்” என்றார் அவர். சமூக மோதலுக்கான மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கான பெருகும் அடையாளங்கள் உள்ளன. எகிப்தின் புதிய பிரதம மந்திரி இப்ராகிம் மெஹ்லெப் கடந்த மாத இறுதியில் பல்லாயிரக்கணக்கான ஜவுளித் தொழிலாளர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து பஸ் டிரைவர்கள் உடைய பெரும் வேலைநிறுத்தத்திற்கு நடுவே இருத்தப்பட்டார். அவர் எகிப்திய தொழிலாளர்களின் “தேசப்பற்றுக்கு” அழைப்புவிடுத்து, இது பணி நேரம், வேலைநிறுத்தத்திற்கு அல்ல என வலியுறுத்தினார். “தர்க்கத்தை மீறி விடப்படும் கோரிக்கைகள் நாட்டை அழித்துவிடும்” என்று அவர் அறிவித்து, “பயங்கரவாதத்தை அழித்தல் முதலீட்டிற்கு வழிவகுக்கும்” என்றார். இராணுவ அச்சுறுத்தும் ஆட்சி மற்றும் அனைத்து வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு எதிராக வன்முறைக்கு அது தயாரிப்பது, சர்வதேச மூலதனம் மற்றும் முதலாளித்துவத்தின் ஆணையின் பேரிலாகும்; இது எதிர்ப் புரட்சியின் பங்கு எப்படி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்த தாராளவாத மற்றும் போலி இடது அமைப்புக்களில் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இவற்றுள் முக்கியமானது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) ஆகும்; இது ஜனவரி 2011 வெகுஜனப் போராட்டம் ஆரம்பத்தில் வெடித்ததிலிருந்து எதிர்ப்புக்களை முதலாளித்துவத்தின் ஏதேனும் ஒரு பிரிவிற்கு தாழ்த்தத்தான் உழைத்துள்ளது. அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டபின் நிறுவப்பட்ட இராணுவ ஆட்சி பற்றிய போலித் தோற்றங்களுக்கு ஊக்கம் அளித்த பின், RS ஆனது முர்சி மற்றும் முஸ்லிம் சகோதரத்துவத்தை “புரட்சியின் வலதுசாரி” என வர்ணித்தது. 2013 எதிர்ப்புக்களின்போது RS ஆர்வத்துடன் தமரோட் இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. அதில் தேசிய மீட்பு முன்னணியின் தாராளவாதத் தலைவர்களான மகம்மது எல் பரடேய், எகிப்திய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் மற்றும் முன்னாள் முபாரக் ஆட்சியின் உறுப்பனர்களை அடக்கியிருந்தது. இராணுவத்திற்கு ஆதரவாக வெகுஜன எதிரப்பை திசைதிருப்புவதில் தமரோட் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. தமரோட் இப்பொழுது ஆட்சிக் குழுவின் தேசியவாத, தொழிலாள வர்க்க விரோத பிரச்சாரத்திற்கு எரியூட்டி, அல்சிசி ஜனாதிபதியாக இருத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுக்கிறது. தமரோட்டின் தலைவர் மஹமுட் பட்ர் சமீபத்தில் தமரோட் “முற்றிலும் அப்தெல் பட்டாக அல் சிசியை எகிப்தின் ஜனாதிபதி பதவிக்கு ஆதரவு கொடுக்கிறது” என்று அறிவித்து “அனைத்து எகிப்தியர்களும்” அவருக்கு “தேசிய, செல்வாக்குடைய வேட்பாளராக” ஆதரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தங்களுடைய பங்கிற்கு தொழிற்சங்கங்கள், இராணுவ ஆட்சிக் குழுவின் தேசியவாத பிரச்சாரத்திற்கு மிகவும் வெட்கமில்லாத ஆதரவாளர்கள் ஆவர். எகிப்திய தொழிசங்கக் கூட்டமைப்பின் தலைவர் ஜபலி அல்-மாரகி, இராணுவ ஆட்சிக் குழுவின் தொழிலாள வர்க்கத்துடனான பாரிய மோதல் என்னும் திட்டத்தைத்தான் அவர் “நம் மோதல் உற்பத்தியை அதிகரித்தல், பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பது; நாம் வெற்றிபெறவில்லை என்றால் முழு எகிப்தும் அழிந்துவிடும்” என்று கூறியபோது எதிரொலித்தார். |
|
|