WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
Toyota
locks out auto workers in India
இந்தியாவில்
வாகனத்துறை தொழிலாளர்களுக்கு டொயோடா கதவடைப்பை அறிவிக்கிறது
By Kranti Kumara
24 March 2014
Back to screen version
தென்னிந்திய
மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரூவில்
(முன்னர்
பெங்களூர் என்றறியப்பட்ட நகரம்)
இருந்து
சுமார்
50 கி.மீ.
தொலைவில்,
பிடதியின்
இரண்டு கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருக்கும்
டொயோடா மோட்டார்ஸ்,
மார்ச்
16இல்
இருந்து,
4,200க்கும்
மேற்பட்ட தொழிலாளர்களுக்குக் கதவடைப்பை அறிவித்துள்ளது.
அவர்களின்
ஊதிய உயர்வு மற்றும் தொழிலாளர் நலக் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களுக்குக் கதவடைப்பை
அறிவித்த நான்கு நாட்களுக்குப் பின்னர்,
அந்நிறுவனம்
17
தொழிலாளர்களை
"ஒழுங்குப்படுத்த"
அவர்களைத்
தற்காலிக பணிநீக்கம் செய்தது.
கதவடைப்பை
நடைமுறைப்படுத்த,
நிர்வாகம்
ஆலை நுழைவாயிலுக்கு முன்னால் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளதோடு,
தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆலைக்குள் நுழைவதைத் தடுக்க பாதுகாப்பு
காவலர்களையும் நிறுத்தியது.
தொழிலாளர்
சக்தியைப் பிரிக்கும் ஒரு முயற்சியாக,
மிகக்
குறைந்த ஊதியம் பெறும்
1,300
ஒப்பந்த
தொழிலாளர்கள் மற்றும்
800
தொழிற்பயிற்சி
பெறுநர்களுக்கு இந்த கதவடைப்பு பொருந்தாது.
எவ்வாறிருந்த போதினும்,
ஆலைகளின்
உற்பத்தி முற்றிலுமாக நின்று போயுள்ளது.
தற்போதிருக்கும்
எந்தவொரு தொழிற்சங்கத்தோடும் உத்தியோகப்பூர்வமாக இணைப்பு பெறாத டொயோடோ மோட்டார்ஸ்
பணியாளர் சங்கம்
(TMEU or TKMU),
2014
நிதியாண்டிற்கான
(ஏப்ரல்
2014இல்
இருந்து மார்ச்
2015
வரையில்)
பிரதி மாதம்
ரூ. 4000
($65) என
ஒரு சிறிய கூலி உயர்வுக்காக கடந்த
10
மாதங்களாக
பேரம்பேசி வருகிறது.
இது இந்த
மாத இறுதியோடு முடிவடையும்
2013ஆம்
நிதியாண்டில் நிறுவனத்தால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அதே உயர்வாகும்.
இந்தியாவின்
பிற்போக்குத்தனமான தொழிற்சங்க கூட்டமைப்புகளில் இருந்து சுயாதீனமானது என்ற அதன்
வாதங்களுக்கு இடையில்,
TKMU
சங்கமும்,
கூட்டமைப்புகளின் அதே தந்திரோபாயங்களைப் பின்பற்றுகிறது.
இத்தகைய
குறைந்தபட்ச கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஒரு தீர்க்கமான போராட்டத்தில்
தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதற்கு மாறாக,
TKMU
அவர்களின் சார்பாக தலையீடு செய்ய மாநில தொழிலாளர் நலத்துறையிடம் மற்றும் ஒரு
முன்னாள் ஊழல் முதல் மந்திரியிடம் முறையிட்டுள்ளது.
இருந்த போதினும்,
நிறுவனமோ ரூ.
3,050 ($50)
என்ற அதன்
"இறுதி
தொகையில்"
பிடிவாதமாக
நிற்பதோடு,
மாதந்தோறும்
ஒரு தொழிலாளருக்கு
$15
டாலர் என்றளவிற்கு
சேமிக்க,
நிறுவனம்
எந்தளவிற்கும் அசாதாரணமாக செல்லும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
2006இல்
ஊதிய கோரிக்கைகளின் போது,
நிர்வாகம்
தொழிலாளர்களுக்கு
15
நாட்கள் கதவடைப்பை
அறிவித்தது.
"தொழிற்சங்கத்தால்
தூண்டிவிடப்பட்ட தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் திட்டமிட்டு உற்பத்தி நிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளதோடு,
மேற்பார்வையாளர்களையும் அச்சுறுத்தினார்கள் மற்றும் கடந்த
25
நாட்களாக தொழிலைத்
தொடர்ந்து தொந்தரவுக்கு உட்படுத்தி உள்ளார்கள்"
என்பதே,
இந்திய
பத்திரிகைகளில் பரவலாக வெளியான,
கதவடைப்புக்கு நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட போலி காரணமாக இருந்தது.
TKMU
பொதுச் செயலாளர்
சதீஸ்
உலக சோசலிச வலைத் தளத்திற்கு
கூறுகையில்,
“மாதத்திற்கு
ரூ.
8,500
உயர்வு கோரிய பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு மார்ச்
7இல்
இருந்து நீண்டகாலமாக நடந்து வருகின்றன.
இதுவரையில்
நிர்வாகத்துடன்
48
சுற்று
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன,
அவற்றில்
7-8
பேச்சுவார்த்தைகள் மாநில தொழிலாளர் நலத்துறையின் பங்களிப்போடு நடந்துள்ளன.
மாதத்திற்கு
ரூ. 4000
ஊதிய உயர்வு
என்றளவில் எங்கள் கோரிக்கையைத் தொழிற்சங்கம் குறைத்துவிட்ட போதினும்,
நிர்வாகம்
இன்னமும் பிடிவாதமாக
3,050
ரூபாயிலேயே
நிற்கிறது,”
என்றார்.
இருந்தபோதினும்,
“இந்த
மனக்குறைக்கு இடையிலும் உற்பத்தி ஒருபோதும் தடுக்கப்படவில்லை,"
என்று சதீஷ்
வலியுறுத்தினார்.
அங்கே ஒரு
போராட்டத்திற்கான பரந்த ஆதரவு,
டொயோடோ
தொழிலாளர்களிடம் இருந்து மட்டுமல்ல,
மாறாக
அதற்கு பாகங்கள் வினியோகிக்கும் நிறுவனங்களின் தொழிலாளர்களிடம் இருந்தும்
இருந்துள்ளது என்ற உண்மையும் அங்கே உள்ளது.
சதீஸ்
தொடர்ந்து கூறினார்,
“நாங்கள்
பெப்ரவரி
10, 2014இல்
ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை சமர்ப்பித்திருந்தோம்.
தாய்
ஆலைகளுக்கு அப்பாற்பட்டு,
பாகங்கள்
வினியோகிக்கும்
15
தொழிற்கூடங்களுடனான
(1,500
தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட)
பிரச்சினையும் தீர்க்கப்படாமல் இருந்தன.
நாங்கள்
அனைத்திந்திய டொயோடோ மற்றும் துணை நிறுவன பணியாளர் கூட்டமைப்பு என்பதை உருவாக்கி
உள்ளோம்.
அதை பதிவு
செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும்
பெப்ரவரி
28, 2014இல்
ஒரு அடையாள வேலைநிறுத்தமும் நாங்கள் நடத்த உள்ளோம்.
இந்த
பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக தொழிலாளர் நலத்துறை உறுதி அளித்திருந்தது,
ஆனால்
மார்ச்
16
கதவடைப்பால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,”
என்றார்.
ஊதிய உயர்வுக்கு
கூடுதலாக தொழிலாளர்கள் குடியிருப்பு வசதிகள்,
மருத்துவ
உதவிகள் மற்றும் ஏனைய சேவைகளும் கோரி வருகின்றனர்.
இந்த வாகனத்துறை
ஆலைகளில் ஜப்பானின் வாகனத்துறை பெருநிறுவனம்
89
சதவீத பங்குகளைக்
கொண்டுள்ளது,
அதேவேளை
மீதமுள்ள
11
சதவீத பங்குகளை ஓர்
இந்திய குழுமமான கெர்லோஸ்கர் கொண்டுள்ளது.
அனைத்து ரக
வாகனங்களும் சேர்ந்து ஆண்டுக்கு
310,000
வாகனங்கள்
தயாரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலைகள்,
பல்நோக்கு
வாகனமான
(MPV) இனோவா,
பார்ச்சுனர்
SUV
மற்றும்
இந்திய சந்தைக்கான கொரோலா மற்றும் காம்ரெ உட்பட கார்களைத் தயாரிக்கின்றன.
நீண்டகால மற்றும்
பலனற்ற பேச்சுவார்த்தைகள் தொழிலாளர்களை எரிச்சலூட்டி கோபமூட்டி உள்ளன.
பல அன்றாட
அத்தியாவசிய பண்டங்களின் விலைகள் இரட்டிப்பாகி உள்ள நிலையில் அல்லது மூன்று மடங்கு
கூட உயர்ந்துள்ள நிலையில்,
அதீத
பணவீக்கத்தால் தொழிலாளர்களின் ஊதியங்கள் கடந்த தசாப்தத்தில் தொடர்ந்து
ஒன்றுமில்லாமல் போயுள்ளன.
ஒரு புதிய நிரந்தர
தொழிலாளரின் ஊதியம்,
ஒரு சிறிய
ஆண்டு உயர்வோடு மாதத்திற்கு வெறும் ரூ.
16,000ஆக
($262)
உள்ளது.
ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு அதில் பாதியளவு,
அதாவது ரூ.
8,000
அல்லது
$131,
வழங்கப்படுகிறது மற்றும் தொழில்பயிற்சி பெறுநர்களுக்கு அதை விட குறைவாக மாதத்திற்கு
ரூ.
6,000ஐ
($98)
விட குறைவாக
வழங்கப்படுகிறது.
உற்பத்தியைப்
பாதிக்கும் விதத்தில் தொழிலாளர்கள் எந்தவொரு வேலை மெதுவாக்கும் நடவடிக்கையிலோ,
வேலைநிறுத்தங்களிலோ அல்லது ஏனைய வேலை நடவடிக்கைகளிலோ ஈடுபட மாட்டோம் என
உறுதியளித்து,
ஒரு
"நன்னடத்தை
பத்திரத்தில்"
அவர்கள்
கையெழுத்திட்டால்,
மார்ச்
24இல்,
திங்களன்று
நிறுவனம் கதவடைப்பை முடித்துக் கொள்ளும் என நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.
சனியன்று
நடந்த ஒரு கூட்டத்தில் தொழிலாளர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில்,
இக்கட்டுரை
எழுதப்படுகின்ற இந்நேரம் வரையில் கதவடைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜப்பானிய மற்றும்
ஏனைய வெளிநாட்டு வாகனத்துறை உற்பத்தியாளர்களுக்கான உலக கார் சந்தைகளில் இந்தியா ஒரு
சிறிய பகுதியாக தான் இருந்து வருகிறது என்ற போதினும்,
அவை மலிவு
உழைப்பைச் சுரண்ட இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
டொயோடா
உட்பட பிரதான வாகனத்துறை நிறுவனங்கள் ஆஸ்திரேலியாவில் கார் உற்பத்தியை நிறுத்த
முடிவெடுத்துள்ள நிலையில்,
இந்த
முதலீடுகள் உள்ளே வந்துள்ளன என்பதோடு,
அவை
அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வரையில் ஒரு கொடூரமான கூலி-வெட்டு
மூலோபாயத்தைத் திணித்து வருகின்றன.
ஜப்பானிய
வாகனத்துறை ஜாம்பவான்கள் இந்தியாவின் எந்த நிலைமைகள் குறித்து அறிந்து வைத்துள்ளனரோ,
அந்த
கொடூரமான வேலையிட நிலைமைகள் மற்றும் அற்ப ஊதியங்களுக்கு எதிராக இந்திய தொழிலாளர்கள்
ஒரு கடுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய
எதிர்ப்பு வட இந்திய மாநிலமான ஹரியானாவில் கடுமையாக ஆண்டு கணக்கில் நீண்டிருந்த
மாருதி சுசூகி தொழிலாளர்களின் போராட்டத்தால் முன்னரே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
அத்தகைய
தொழிலாளர்களில் நூற்றி ஐம்பது பேர் மாருதி சுஜூகி நிர்வாகத்தின் சார்பாக பொலிஸால்
கைது செய்யப்பட்டு,
சித்திரவதை
செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை
2012இல்
நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு சம்பவத்தில் ஓர் ஆலை மேலாளர் கொல்லப்பட்டதன்
மீது ஜோடிக்கப்பட்ட வழக்கிற்காக அவர்கள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு
உட்பட்டுள்ளனர்.
(பார்க்கவும்:
"இந்தியா:
மாருதி சுஜுகி வாகனத்துறை தொழிலாளர்கள் மீதான பொய் வழக்கு விசாரணை
தொடர்கிறது")
தொழிற்சங்கங்கள்
தொழிலாளர்களுக்கு எந்தவொரு முற்போக்கான பாதையையும் வழங்காது.
ஸ்ராலினிச
கட்சிகள்,
காங்கிரஸ்
கட்சி மற்றும் ஏனைய முதலாளித்துவ கட்சிகளோடு இணைந்துள்ள இந்த தொழிற்சங்கங்கள்
அன்னிய முதலீட்டை ஈர்க்க இந்தியாவை ஒரு குறைந்த-கூலி
சொர்க்கமாக தக்க வைப்பதற்காக தங்களை அர்பணித்துள்ளன.
டொயோடா
தொழிலாளர்கள்,
கர்நாடக
மாநில அரசாங்கத்திற்கு முறையிடுவதன் மூலமாக அவர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளுக்கான
கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது.
அந்த
அரசாங்கம் தவிர்க்க முடியாதபடிக்கு நிர்வாகத்தின் பக்கம் தான் சாயும்.
தொழிலாளர்களுக்குத் தங்களின் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல புதிய
அமைப்புகளும்,
தொழில்துறைரீதியிலான மற்றும் அரசியல்ரீதியிலான ஒரு புதிய மூலோபாயமும்
அவசியப்படுகிறது.
இந்த
கதவடைப்பானது டொயோடா ஆலைகளில் உள்ள நிரந்தர,
ஒப்பந்த
மற்றும் தொழில்பயிற்சி பெறும் தொழிலாளர்களின் ஒரு தடுப்பில்லா
வேலைநிறுத்தத்திற்குள் திருப்பப்பட்டு,
பாகங்கள்
உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களையும் அதில் உள்ளடக்க விரிவாக்கப்பட
வேண்டும்.
டொயோடா போன்ற
பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு,
தொழிற்சங்கங்களின் தேசியவாதத்தை நிராகரிப்பதும் மற்றும் வேலைகள்,
வாழ்க்கை
தரங்களைப் பாதுகாக்கும் ஒரு பொதுவான போராட்டத்தில் இந்திய தொழிலாளர்களை ஆஸ்திரேலியா,
ஜப்பான்,
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பாவில் உள்ள அவர்களின் சகோதர,
சகோதரிகளுடன் இணைக்க போராடுவதும் மற்றும் அடிமட்டத்திலிருப்பதைப் பெறுவதற்கான ஒரு
போட்டியில் ஒவ்வொரு நாட்டு தொழிலாளர்களை மற்றொரு நாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக
நிறுத்தும் முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்ப்பதும் அவசியமாகும். |