World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சி மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது கூட்டத்தை கொழும்பில் நடத்தியது

By our correspondents
22 February 2014

Back to screen version

மார்ச் 29 அன்று நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில், மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவரும் (ஐவைஎஸ்எஸ்இ) பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை பெப்பிரவரி 12 கொழும்பில் நடத்தின. பொது நூலக கேட்போர் கூடத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்தும் கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள் மற்றும் இளைஞர்களும் பங்குபற்றியிருந்தனர்.

கொழும்பு மாவட்டத்தில் 43 வேட்பாஈளர்களை நிறுத்தியுள்ள சோசக, ஏகாதிபத்திய யுத்த அச்சுறுத்தலுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக, அனைத்துலக சோசலிசத்துக்காக போரடுகின்றது. சோசக அரசியல் குழுவின் நீண்டகால உறுப்பினரான விலானி பீரிஸின் தலைமையிலான சோசக வேட்பாளர்களில், தொழிலாள வர்க்கத்துக்குள் சோசலிச வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்கப் போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களும் அடங்குவர்.

கூட்டத்தை கட்டியெழுப்புவதற்காக, சோசக அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களும், கொம்பனித் தெரு மற்றும் வனாதமுல்ல உட்பட தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களில் பிரச்சாரம் செய்திருந்தனர். அங்கு அன்றாடம் வளர்ச்சியடையும் மூன்றாம் உலக யுத்த அச்சுறுத்தல் பற்றியும், கொழும்பு நகரை ஆசியாவின் வர்த்தக மையமாக மாற்றும் வேலைத் திட்டத்தின் பாகமாக அங்கிருந்து 70,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அகற்றுவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கம் மேலும் மேலும் பொலிஸ் அரச வழிமுறைகளின் பக்கம் திரும்புகின்றமை பற்றியும் அவர்கள் நேரடியாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த சோசக அரசியல் குழு உறுப்பினர் பாணினி விஜே சிறிவர்தன, இம்முறை மாகாண சபைத் தேர்தல் நடைபெரும் சர்வதேசிய அரசியல் சூழ்நிலையின் பக்கம் சபையினரின் கவனத்தை திருப்பினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது படையெடுப்பை மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் குவிமையப்படுத்தி இருந்த கடந்த தசாப்தத்துக்கும் நெருக்கமான காலப் பகுதியில், சீனா ஆசியா பூராவும் தடையின்றி தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைத்துள்ளது என அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பகுதியினர் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. அந்ந நிலைமையின் கீழ், சீனாவை இராணுவ ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் சுற்றி வளைத்து, அதற்கு எதிரான யுத்த தயாரிப்புடன் ஒபாமா நிர்வாகம் தனது ஆசியாவுக்குத் திரும்புதல் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றது, என விஜே சிறிவர்தன சுட்டிக் காட்டினார்.

கொழும்பு அரசாங்கத்துக்கும் பெய்ஜிங் அதிகாரத்துவத்துக்கும் இடையில், சமீபகாலமாக வளர்ச்சியடைந்திருக்கும் பொருளாதரா மற்றும் மூலோபாய உறவுகளை அறுத்து, இராஜபக்ஷ அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் இலக்குடன், ஒபாமா நிர்வாகம் மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றது. “ஐக்கிய தேசியக் கட்சியும் (யூஎன்பீ) சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டாகச் செயற்படுவதற்கான தமது தயார் நிலையை இப்போதே வெளிப்படுத்தியுள்ளன. நவசமசமாஜக் கட்சி (நசசக), ஐக்கிய சோசலிசக் கட்சி (ஐசோக) போன்ற போலி இடது கட்சிகள் இரண்டும் யூஎன்பி உடன் கூட்டணியில் முன்நிற்பதன் மூலம் ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி அமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை குழப்புவதற்கும் செயற்படுகின்றன. தொழிலாளர்கள் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை நிராகரிக்க வேண்டும். பெருந்தொகையான கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டாலும், சோசக மட்டுமே தொழிலாளர்களுக்கு விஞ்ஞான பூர்வமான வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றதுஎன விஜே சிறிவர்தன தெரிவித்தார்.

சோசக வேட்பாளர் குழு தலைவி விலானி பீரிஸ், 2008ம் ஆண்டில் வெடித்த, 1930களுக்குப் பின்னரான முதலாளித்துவ அமைப்பு முறையின் மோசமான பொருளாதார நெருக்கடியை பற்றி அவதானத்தைத் திருப்பி தனது உரையை தொடங்கினார். இது தற்காலிகமான அல்லது உடனடியாக தீர்க்கக் கூடிய நெருக்கடி அல்ல. வீழ்ச்சியடைந்து வரும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவு செய்யும் அரசாங்கங்கள், ஒவ்வொரு நாட்டிலும் இந்த நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் தோள்களின் மீது சுமத்துவதோடு அதற்கு விரோதமாக எழும் எதிர்ப்புக்களை நசுக்கித் தள்ளுவதற்கு பொலிஸ் அரச வழிமுறையை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தெற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை விளக்கிய பீரிஸ் பின்வருமாறு கூறினார்: “அண்மையில் இந்திய ரூபாய் நூற்றுக்கு 17 வீதத்தாலும் பாகிஸ்தான் ரூபாய் நூற்றுக்கு 14.7 வீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிராந்தியம் பூவிசார் அரசியல் பதட்ட நிலைமைக்குள் இழுத்துத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமையினுள், ஒரு சர்வதேச யுத்த எதிர்ப்பு இயக்கமொன்றை கட்டியெழுப்புவதே எமது தேர்தல் பிரச்சாரத்தின் இலக்காகும்.” எதிர்க் கட்சியான யூஎன்பீக்கு இராஜபக்ஷவின் ஏகாதிபத்திய சார்பு நிகழ்ச்சி நிரலுடன் எந்தவொரு அடிப்படை முரண்பாடும் இல்லாததோடு அது ஆட்சிக்கு வந்தால் இராஜபக்ஷ நிறுத்திய இடத்தில் இருந்து வேலையை ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையில் ஐவைஎஸ்எஸ்இ அழைப்பாளர் கபில பெர்ணான்டோ, தேர்தலில் போட்டியிடும் ஏனைய சகல கட்சிகளும் தொழிலாள-ஒடுக்கப்ட்ட்ட மக்களின் முன்னுள்ள உண்மையான அரசியல் பிரச்சினைகளை அவர்களிடம் இருந்து மறைத்து செய்றபடுகின்ற வித்தத்தை சுட்டிக் காட்டினார். விசேடமாக தொழிலாள வர்கமும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், உலக ஏகாதிபத்தியத்தின் பொதுவான தாக்குதலின் விளைவாகவே தோன்றுகின்றன என அவர் விளக்கினார். “இராஜபக்ஷ அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தின் போது செய்த யுத்தக் குற்றங்கள் பற்றி ஒபாமா அரசாங்கம் கொண்டுவரும் குற்றச்சாட்டுக்களின் மோசடித் தன்மை, அந்த யுத்தம் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தைய வல்லரசுகளின் முழு ஆதரவுடன் இடம்பெற்றதில் இருந்தே தெளிவாகின்றது. வரலாறு பூராவும் இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள், ஏகாதிபத்தியத்தின் முன்னால் பலவீனமடைந்து நிற்பதே இதில் தெளிவாகின்றது,” என பெர்ணான்டோ விளக்கினார்.

202 மில்லியன் ஆக இருக்கும் உலக வேலையற்றவர்களில், 75 மில்லியன் பேர் 15-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே என பெர்ணான்டோ சுட்டிக் காட்டினார். சமூக சமத்துவமின்மையின் முன்னெப்போதுமில்லாத வளர்ச்சி பற்றி கருத்து தெரிவித்த அவர், உலகின் அதி செல்வந்த கோடீஸ்வரர்கள் 2,175 பேரின் சொத்துக்கள், உலகின் பிரமாண்டமான இரு பொருளாதாரங்களான அமெரிக்கா மற்றும் சீனாவையும் இணைத்த பெறுமதியையும் விட அதிகமானது என குறிப்பிட்டார்.

போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையின் கீழ் இருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கம், புதிதாக நடமுறைப்படுத்தும் இடதுசாரி குழுவமைவு, உலகம் பூராவும் வளர்ச்சியடையும் தொழிலாள வர்க்க தீவிரமயமாதலின் எதிரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை தடம்புரளச் செய்வதை குறிக்கோளாகக் கொண்டது என பெர்ணான்டோ சுட்டிக் காட்டினார்.

கூட்டதில் பிரதான உரையாற்றிய உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்துலக ஆசிரியர் குழு உறுப்பினரும் சோசக அரசியல் குழு உறுப்பினருமான கே. ரட்னாயக்க, சோசக அதிக வாக்குகளை சுரண்டிக்கொள்வதை இலட்சியமாகக் கொண்டிருக்கவில்லை எனத் தெளிவுபடுத்தினார். ஏனைய கட்சிகளின் தேர்தல் மேடைகள், வாய்சவடால்கள் மற்றும் போலி வாக்குறுதிகள் மூலம் நிரப்படுகின்றன. “ஆனால் நாங்கள் எந்த வாக்குறுதியும் கொடுப்பதில்லை. அதற்கு மாறாக, மக்கள் எதிர்கொள்கின்ற உண்மையான சர்வதேச பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கே நாம் முயற்சிக்கின்றோம். அதாவது, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக அணிதிரட்டும் போராட்டமே இது.”

கடந்த தசாப்தத்தில் மனித குலத்தை இரு உலக யுத்தங்களுக்குள் இழுத்துத் தள்ளியே உலக முதலாளித்து அமைப்பு தனது உயிரைக் காத்துக்கொண்டது என ரட்னாயக்க விளக்கினார். நிகழ்காலத்திலும், அத்தகைய நிலைமைக்கு காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையின் மிக அடிப்படையான பரஸ்பர முரண்பாடுகளே அதைவிடப் பலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதையும், இரண்டாம் உலக யுத்தம் வெடித்த போது, நான்காம் அகிலம் அவசர மாநாடு ஒன்றைக் கூட்டி யுத்தத்துக்கு தொழிலாள வர்க்கத்தின் பதிலிறுப்பை வரைந்துகொள்வதற்கு செயற்பட்ட விதத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். தோன்றியுள்ள நிலைமைய விளக்கி நான்காம் அகிலத்தின் தலைவர் லியோன் ட்ரொட்ஸ்கி இவ்வாறு எழுதினார்: “ஏகாதிபத்தியம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தலைவிதியை ஆபத்துக்குள் தள்ளியுள்ளது என லெனின் 1914 நவம்பர் 1 அன்று எழுதினார். இந்த யுத்தத்திற்கு இடையில் வெற்றிகரமான புரட்சி இடம்பெறாவிட்டால் மனித குலத்தின் இருப்பே ஆபத்துக்குள்ளாகும். தொழிலாளர்களே, லெனின் வெளியிட்ட இந்த முன்னெச்சரிக்கையை மனதில்கொள்ளுங்கள். தற்போதைய யுத்தம் தற்செயலானது அல்ல. அது ஏதாவதொரு ஏகாதிபத்தியவாதியின் விருப்பத்தின் பேரில் நடப்பதும் அல்லசர்வதேச முதலாளித்துவத்தின் தேவைகளின் விளைவிலேயே அதன் தோற்றுவாய் உள்ளது. உத்தியோகபூர்வமாக கூறப்படும் பல்வேறு கதைகளின் இலக்கு மக்களை பீதிக்குள்ளாக்குவதே.”

அனுவாயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களைப் பெரும் அழிவுக்குள் தள்ளுவதே, தற்போதைய ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில் தயாராகும் யுத்தத்தின் விளைவாக இருக்கும் என ரட்னாயக்க சுட்டிக் காட்டினார். நாம் வாழும் ஆசியப் பிராந்தியம் வரவுள்ள யுத்தத்தின் தீப்பொறியாக இருக்கின்றது. விசேடமாக கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல் பிராந்தியத்தை அண்டி வளர்ச்சியடையும் மோதல்கள் அதற்கு வழிவகுக்கும். சீனாவுக்கு எதிராக சின்சோ அபேவின் தலைமையிலான ஜப்பான் மேற்கொள்ளும் ஆத்திரமூட்டல்கள், கடந்த ஆண்டு மட்டும் பல தடவை வெளிப்படையான மோதலின் விளிம்புக்கே கொண்டு சென்றதை ரட்ணாயக்க சுட்டிக் காட்டினார். 2014ல் சீனாவை, 1914 ஜேர்மனுடன் ஒப்பிட்ட அபே வெளியிட்ட கருத்துக்களின் இலக்கு, தனது ஏகாதிபத்திய பொருளாதார மற்றும் மூலோபாய அவசியங்களை மூடி மறைத்து, இல்லாமல் போன தனது பொருளாதார நிலைமையை மீண்டும் கொண்டுவருவதற்கான யுத்தத்தின் தேவையை நியாயப்படுத்துவதே என ரட்னாயக்க விளக்கினார்.

உலக பொருளாதார நெருக்கடியின் மூலம் தோன்றக்கூடிய யுத்தத்தின் நீர்ச்சுழிக்குள் இலங்கையும் இழுபட்டுப் போயுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கம் இந்த உண்மையை மறைப்பதற்கு செய்யக்கூடிய அனைத்தையும் செய்கின்றது. யுத்த நிலைமையின் மத்தியில், அரசாங்கம் செயற்படும் விதத்தை விரித்த ரட்னாயக்க, தற்போதைய சமூகத் துருவப்படுத்தலை சமாளிப்பதற்காக இராஜபக்ஷ நிர்வாகம் மத்திய வங்கி மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன் சேர்ந்து புள்ளிவிபரங்களை சீரமைக்கின்றதுஎன குறிப்பிட்டார். நவசமசமாஜக் கட்சியினதும் ஐக்கிய சோசலிசக் கட்சியினதும் வரலாற்றைப் பற்றிக் குறிப்பிட்ட ரட்னாயக்க, விசேடமாக நவசமசமாஜ 1970-77 கூட்டணி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்ததோடு பின்னர் யூஎன்பீ அரசாங்கத்தின் வட்ட மேசை மாநாட்டுக்கும் ஊர்ந்து சென்றதை நினைவுபடுத்தினார். இராஜபக்ஷ அரசாங்கம் வெகுஜன எதிர்ப்பை சந்திக்கத் தயாராகின்ற நிலையில், முதலைக் கண்ணீர் வடிக்கும் யூஎன்பீக்கு கீழ் வெகுஜன எதிர்ப்பை முடக்கி விடுவதற்கு மீண்டும் நவசமசமாஜவும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் தயாராகின்றன.

கூட்டத்தின் முடிவில் மேடையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரதிபலனாக 5,000 ரூபாவுக்கும் அதிகாமான தொகை சோசக தேர்தல் நிதிக்காக சேர்ந்தமை, தேர்தல் பிரச்சாரத்தில் சபையோரின் உத்வேகத்தை வெளிப்படுத்தியது.