சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP/IYSSE to hold final election meeting in Colombo

சோ.. / .வை.எஸ்.எஸ்.இ கொழும்பில் கடைசி தேர்தல் கூட்டத்தை நடத்தவுள்ளன

20 March 2014

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பும் மார்ச் 23 அன்று கொழும்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. இந்தக் கூட்டம் மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான கட்சியின் ஆறு வாரகால பிரச்சாரத்தின் கடைசி கூட்டமாகும். சோசக கொழும்பு மாவட்டத்தில் 43 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

சோசக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தியுள்ளது போல், ஆசியாவில் வளர்ச்சிகண்டுவரும் யுத்த அபாயம், அதே போல் கொழும்பு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராகப் போராடுவதற்கு, சோசலிச அனைத்துலகவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே வேலைத் திட்டத்தை கட்சியின் பிரச்சாரம் அபிவிருத்தி செய்தது. இந்தக் கூட்டத்தில் இந்த வேலைத் திட்டத்தப் பற்றி மேலும் விவரிக்கப்படவிருப்பதோடு சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட சர்வதேசிய தொழிலாள வர்க்கத்தின் யுத்த-விரோத இயக்கமொன்றை கட்டியெழுப்பும் அவசரப் பணியும் கலந்துரையாடப்படும்.

சீனாவைக் கீழறுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்ஆசியாவுக்கு மீண்டும் திரும்புதல் கொள்கையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பூகோள-அரசியல் பகைமைகளின் நீர்ச்சுழிக்குள் இலங்கையும் இழுபட்டுக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் சீனாவுடனான அதன் நெருக்கமான உறவை விலக்கிக்கொண்டு அமெரிக்காவின் வழியில் அடியெடுத்து வைக்க வேண்டும் என வாஷங்டன் கோருகின்றது.

உக்ரேனிலான அபிவிருத்திகள் யுத்த ஆபத்து பற்றி மேலுமொரு எச்சரிக்கையாகும். ஒபாமா நிர்வாகம், ஜேர்மன் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த மாதம் உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, ரஷ்யாவுடனான மோதலில் ஒரு அனுவாயுத யுத்த ஆபத்தை தோற்றுவித்துள்ளது. இதற்கு சாக்குப் போக்காக ரஷ்யாவுடன் இணைவதற்கான கிரிமியன் வாக்கெடுப்பை பற்றிக்கொண்ட அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளும், மொஸ்கோ மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு இராணுவ நடவடிக்கைக்கும் எச்சரிக்கின்றன.

முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும், ஏகாதிபத்திய யுத்த ஆரவாரம் சம்பந்தமாக சதித்தனமாக மௌனம் காக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் பெரும் விளைவுகளைக் கொண்ட சிக்கன நடவடிக்களுடனோ அல்லது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்கள் சம்பந்தமாகவோ முதலாளித்துவக் கட்சிகளுக்கு எந்த வேறுபாடும் கிடையாது.

கூட்டத்தில் பங்குபற்றுவதோடு இந்த முக்கியமான அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இடம்: புதிய நகர மண்டபம், கொழும்பு.

நேரம்: ஞாயிறு, மார்ச் 23, பி.. 3.00 மணி.