சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Israel backs far-right coup in Ukraine

உக்ரேனில் தீவிர வலது ஆட்சிசதிக்கு இஸ்ரேல் ஆதரவு கொடுக்கிறது

By Jean Shaoul 
18 March 2014

Use this version to printSend feedback

இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகுவின் அரசாங்கம் உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றிய பாசிசத் தலைமையிலான ஆட்சிசதிக்கு ஆதரவு கொடுத்துள்ளது. யூத-எதிர்ப்பை எதிர்ப்பதற்கும் உக்ரேனிய யூதர்களை புதிய கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்துள்ள நவநாஜிக் கட்சிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கும் பதிலாக இஸ்ரேல் அத்தகைய அச்சுறுத்தல் உள்ளது என்பதை திறம்பட மறுக்கின்றது.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி அவிக்டர் லிபர்மன் கடந்த வாரம் ஒரு மாற்று அறிக்கையை வெளியிட்டார்: உக்ரேனில் நடக்கும் நிகழ்வுகளைப் பெரும் கவலையுடன் இஸ்ரேல் கவனிக்கிறது. உக்ரேனிய மக்களுடைய பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றது. நிலைமை மோசமடைந்து மனித உயிர்கள் இழக்கப்பட மாட்டாது என நம்புகிறது. வாஷிங்டனுக்கு நெத்தெனியாகு சென்ற இரண்டு நாட்களுக்குப் பின்னரும், அமெரிக்க வெளிவிவகாரத்துறையில் இருந்து கியேவின் புதிய அரசாங்கத்திற்கு பகிரங்க ஆதரவைக் காட்டுமாறு அழுத்தம் வந்தபின் இந்த அறிக்கை வந்தது.

இஸ்ரேலில் அரசாங்கமும் செய்தி ஊடகமும் நவநாஜி மற்றும் யூத எதிர்ப்புச் சக்திகள் உக்ரேனில் வளர்ச்சியடைவது குறித்துக் கருத்துக் கூறுவதில்லை என்ற முறையில் இதை எதிர்கொண்டுள்ளனர். அதேபோல் மேற்கு ஆதரவுடைய ஆட்சிசதியில் இப்பிரிவுகளின் முக்கியமான பங்கு பற்றியும் ஏதும் கூறவில்லை. அவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் பலமாதங்களாக யானுகோவிச் ஆட்சியை அகற்ற ஸ்வோபோடா கட்சி, Right Sector போன்ற பாசிச அமைப்புக்களுக்கு நிதி கொடுத்து அவற்றுடன் கூடியுழைப்பதையும் முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன அல்லது புறக்கணித்துள்ளன. ஸ்வோபோடா தலைவர்கள் பகிரங்கமாக யூத எதிர்ப்பு அறிக்கைகளை கொடுத்தும், Right Sector இன் துணை இராணுவப்படையினர் ஹிட்லரின் Waffen SS இனது போன்ற உடைகளை அணிந்து ஸ்வாஸ்திகா போன்ற அடையாளங்களை அணிந்தாலும் கூட இவ்வாறு செய்கின்றனர்.

ஆர்செனி யாட்சென்யுக்கின் வலதுசாரி Fatherland கட்சியின் தலைவரால் தலைமை தாங்கப்படும் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தில் குறைந்தப்பட்சம் 6 ஸ்வோபோடாவின் உறுப்பினர்கள் உள்ளனர்; அதில் துணைப் பிரதம மந்திரி, தலைமை வக்கீல் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஆகியோர் உள்ளனர். இது யானுகோவிச்சை அகற்ற நடந்த மைதான் எதிர்ப்புக்களில் அதிர்ச்சித் துருப்பினர் பலவற்றை அளித்ததற்கு ஸ்வோபோடாவிற்கு வெகுமதி ஆகும்.

Right Sector இன் தலைவரான டிமிட்ரோ யாரோஷ் தேசிய பாதுகாப்புப் படைகளின் மற்றும் பாதுகாப்புக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஓராண்டிற்கு சற்று குறைவான காலத்தில், உலக யூதர் மாநாடு உக்ரேனிய யூதர்களை இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் படுகொலை செய்த நாஜி ஒத்துழைப்பாளர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்திய ஸ்வோபோடாவை தடைசெய்ய வேண்டும் என்றது. ஸ்வோபோடாவின் பெரும் வீரப்பிரதாபி உக்ரேனிய தேசியவாதியும் நாஜி சார்புடைய போர்க்குற்றவாளியுமான ஸ்டீபன் பண்டேரா ஆவார். இவர் உக்ரேனிய எழுச்சிப் படையின் (OUN) தலைவராவார். இது யூதர்களையும் போலந்து மக்களையும் நாஜிகள் பாரிய படுகொலை செய்ததற்கு ஆதரவு காட்டியது. கட்சியின் நிறுவனரும் தலைவருமான ஓலே தியானிபோக் பலமுறையும் உக்ரேனை கட்டுப்படுத்திய ருஸ்கி-யீட் மாபியாவை (Russkie-Yid mafia) நசுக்குவதாக தன் உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.

இந்த நவபாசிச மற்றும் யூதஎதிர்ப்பு சக்திகளுடைய ஆபத்தான நிலைப்பாட்டை முற்றிலும் கவனிக்காமல் இருக்க இயலாது என்று முன்பு கருதப்பட்டது. இவர்கள் முக்கியமாக கியேவில் உள்ள கிட்டத்தட்ட 200,000 பேருள்ள உக்ரேனின் யூதச் சமூகத்தின் மீது தாக்குதல்களை செய்வதுடன் யூதர்களின் ஆலயங்களை இலக்கு வைக்கின்றனர்.

பெப்ருவரி 22, ஆட்சிசதி நடந்த தினத்தன்று, உக்ரேனிய யூத மதகுரு ராபி மோஷே ரெயுவென் அஜ்மான் இஸ்ரேலிய Ma  ariv  செய்தித்தாளிடம் தான் கியேவ் யூதர்களை நகரத்தை விட்டு, முடிந்தால் நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று, நடக்கும் பெரும் குழப்பத்தில் யூதர்கள் இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் கூறியதாகவும்... சில யூதர்களின் கடைகள் நொருக்கப்பட்டுள்ளன, யூத சமூகத்திற்கு பிற அச்சுறுத்தல்கள் வந்துள்ளன என்றார்.

செய்தித்தாள் இஸ்ரேலின் ரெயுவென் இனை மேற்கோள்காட்டி: நான் விதியை அழைக்க விரும்பவில்லை... ஆனால் யூத நிறுவனங்களைத் தாக்குவது குறித்த இடைவிடா அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர் கியேவில் வன்முறை காரணமாக யூதர்கள் பள்ளிகளை மூடிவிட்டார் என்று கூறியது.

பெப்ருவரி 25ம் திகதி இஸ்ரேலின் Ha  aretz பத்திரிகை வெற்றிபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் நவநாஜி அடையாளக் கொடிகளை பறக்கவிட்டனர், புதிதாக மொழிபெயர்க்கப்பட்ட Mein Kampf மற்றும் The Protocols of the Elders of Zion ஆகியவற்றை புதிதாக மொழிபெயர்க்கப்பட்டு சுதந்திர சதுக்கத்தில் வழங்கினர். என தகவல் கொடுத்துள்ளது.

உக்ரேனிய யூத சமூகம் மோல்டோவோவில் இருந்து வந்த இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி லிபர்மானிடம் தொடர்பு கொண்டு உதவியை நாடியது. இஸ்ரேலிய அரசாங்கம் இதற்கு விடையிறுக்கவும் இல்லை, அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை. சமீபத்திய கலகத்தில் தீவிரமாக காயமுற்ற ஒன்பது உக்ரேனியர்கள் இஸ்ரேலிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது அவர்களுக்கு நிதி உதவியும் கொடுக்கவில்லை. யூத நிறுவனம் அற்பத்தொகையான $5,000ஐ கொடுத்தது.

முக்கியமாக இஸ்ரேல் இத்தகைய கவலைகள் அனைத்தையும் குறைத்துக் காட்டுகின்றது. உதாரணமாக Jerusalem Post பத்திரிகை பெப்ருவரி 24 அன்று யூதர்கள் இலக்கு வைக்கப்படுவதாக இதுவரை தகவல் இல்லை; யூத நிறுவனங்கள் தாமாகவே செயல்படவில்லை என்றும் வலியுறுத்தியது. அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட அச்சுறுத்தல் ஏதும் இல்லை. என எழுதியது.

கடந்த வாரம் உக்ரேனின் யூத சமூகத்தின் சில முக்கிய உறுப்பினர்கள் மிகவும் ஒரு முக்கியமான பகிரங்கக் கடிதம் ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு அனுப்பினர். அதில் புரட்சியில் ஈடுபட்ட மிகமுக்கிய பங்கெடுக்காத சக்திகள் கூட, யூத எதிர்ப்பை அல்லது வேற்று இனத்தவருக்கு எதிரான தன்மையை காட்ட தயங்கவில்லை என அதில் இருந்தது. தேசிய சிறுபான்மையினர், உக்ரேனிய யூத சமூகத்தின் சார்பில் தங்கள் ஆதரவை உக்ரேனின் இறைமைக்கு அவர்கள் வலியுறுத்தினர்.

மிக அசாதாரணமான முறையில், நெத்தெனியாகு வாஷிங்டனுக்குச் சென்றதை தொடர்ந்து இஸ்ரேலின் உக்ரேனுக்கான தூதர் ரெவுன் டின் எல் மற்றும் Right Sector தலைவர் யாரோஷுக்கும் இடையே பேச்சுக்கள் நடைபெற்றன. தூதரகம் இந்த பாசிசவாதிகளுக்கு ஒப்புதல் முத்திரை அளித்தது. தன் வலைத் தளத்தில் பின்வருமாறு கூறியது: டிமிட்ரோ யாரோஷ் Right Sector அனைத்து இனவெறி நிகழ்வுகளையும், குறிப்பாக யூதஎதிர்ப்பை அனைத்து நியாயபூர்வமான வழிவகைகளிலும். எதிர்க்கும் என வலியுறுத்தினார்.

இதைத் தவிர எதிர்த்தரப்பு நடத்திய கலகங்களிலும் இஸ்ரேலிய ஈடுபாடு இருந்தது என்ற தகவல்கள் உள்ளன. யூதர்கள் செய்தி நிறுவனமான JTA இன் கருத்துப்படி ஒரு முன்னாள் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி எதிர்ப்புக்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவர் 40 உக்ரேனிய துணைஇராணுவக்குழு மற்றும் Blue Helmet unit எனப்படும் ஐந்து இஸ்ரேலியர்கள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார். இது ஸ்வோபோடாவின் கீழ் இயங்கியது. உக்ரேனில் பிறந்த நான்கு மற்ற முன்னாள் இஸ்ரேலிய இராணுவத்தினர், இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து இஸ்ரேலிய இராணுவத்தில் பணிபுரிந்து பின்னர் உக்ரேனுக்கு திரும்பியவர்களும் எதிர்த்தரப்பு அணிவகுப்புக்களில் கலந்து கொண்டனர்.

Blue Helmet குழு இஸ்ரேலில் உள்ள சக்திகளுக்கு இயங்கி நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அதன் தலைவர் கூறினார்: நான் ஸ்வோபோடாவில் இல்லை, ஆனால் அவர்களின் குழுவிடம் இருந்து ஆணைகளைப் பெறுகிறேன். நான் இஸ்ரேலி, யூதர், முன்னாள் இராணுவத்தினர் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் என்னை சகோதரர் என அழைக்கின்றனர். அவர் மேலும் கூறியது: ஸ்வோபோடாவைப் பற்றி அவர்கள் கூறுவது மிகையாகும். இது உண்மையென எனக்கு தெரியும். அவர்கள் முன்னுக்குபின் முரணாணவர்கள் என்பதால் எனக்கு அவர்களை பிடிக்கவில்லையே ஒழிய, அவர்களுடைய யூதஎதிர்ப்பு பிரச்சினையால் அல்ல.

Jerusalem Post கடந்த டிசம்பரில் சர்வதேச அமைப்புக்களான JDC, Hillel, Limmud போன்றவற்றில் உழைக்கும் சில இளம் யூதர்கள் உக்ரேனில் சாலைத்தடுப்புக்களை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர். உண்மையில் சாலைத்தடுப்புக்களை ஏற்பாடு செய்வது, ஆதரவுதருவது இவற்றில் தீவிரமாக உள்ளனர் என்று தகவல் கொடுத்துள்ளது.

யூத எதிர்ப்பிற்கு எதிராக யூதமக்களைக் பாதுகாப்பதுதான் தனது இருப்பிற்கே காரணம் என்று கூறும் சியோனிச அரசாங்கம், இப்பொழுது 1945க்குப்பின் ஒரு ஐரோப்பிய அரசாங்கத்தில் யூத எதிர்ப்பு, நாஜி சார்புடைய கட்சி அரசாங்கத்தின் அதிகாரத்தின் முக்கிய நெம்புகோல்களை இயக்குவதற்குக் சிறிதும் கலப்பற்ற ஆதரவை கொடுக்கிறது.

இந்த நெருக்கடிக்கு இஸ்ரேலின் பிரதிபலிப்பு இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கு தான் கூறிக்கொள்வதுபோல் யூதர்களுக்காக பேசவில்லை என்ற உண்மைக்குச் சான்றாகும். மாறாக பாலஸ்தீனியர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் வாஷிங்டனுடன் சேர்ந்து தாக்குதலை நடத்தும் ஊழலும் மிகுந்த கூலிக்கு உழைக்கும் சமூக அடுக்கான இஸ்ரேலின் முதலாளித்துவ வர்க்கத்திற்காகத்தான் பேசுகிறது. 20 செல்வச் செழிப்புடைய இஸ்ரேலிய குடும்பங்கள் கிட்டத்தட்ட பாதிப் பங்குச் சந்தைகளையும் 25% மிகப் பெரிய பெருநிறுவனங்களையும், குறிப்பாக செய்தித்தாட்கள், வங்கிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன. இத்தன்னலக்குழுக்களில் பல ரஷ்யாவில் இருந்தும், முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்தும் வந்தவை. அவை தங்கள் செல்வத்தை, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கியதில் இருந்து ஈட்டியவர்களாவர்.

இந்த வர்க்கம் நீண்டநாளாக இஸ்ரேலுக்கு வெளியே இருக்கும் பாசிச சக்திகளுடன் தன் நலன்களை பாதுகாக்க நட்பு கொண்டுள்ளது. குறிப்பாக லெபனானில் 1975-1989 உள்நாட்டுப்போரின் போது பலாஞ்சிஸ்ட் இயக்கத்துடனும் (Phalange movement), இன்னும் சமீபத்தில் அது ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் சிரிய ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சவுதிஅரேபியா, கட்டார், துருக்கி மற்றும் CIA நிதி கொடுக்கும் வலதுசாரி இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவு, பயிற்சி கொடுத்தல், சேர்ந்து உழைப்பது ஆகியவற்றில் மன உளைச்சலைக் காட்டவில்லை. அதேபோல் இஸ்ரேலும் ஆட்சிமாற்றங்களை எதிர்ப்பதில்லை. எகிப்தில் முபராக் சகாப்த காலத்தைவிட ஜூலை 2013 இராணுவ ஆட்சிசதிக்கு பின்னர் அது கூடிய ஒத்துழைப்பு கொடுக்கின்றது.

உள்நாட்டில், செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடைவெளி வலது மற்றும் பெயரளவு இடது அரசாங்கங்கள் தொடரும் பொருளாதாரக் கொள்கைகளால் வளர்ந்தவிட்டது. அரசாங்கம் பெருகிய முறையில் வலதுசாரி குடியேற்றவாசிகளையும் தேசியவாத வெறியர்களையும் நம்புகிறது. இந்த தேசியவாத வெறியர்கள் இஸ்ரேலுக்குள்ளேயே பாசிசப் போக்கு எழுச்சி பெற அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றனர். இது தேசியவாதத்தின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வீழ்ச்சியடையும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக சமத்துவமின்மையினால் அதிகரித்துள்ள கோபத்தை பிற்போக்கு வழிகளில் திசைதிருப்பியுள்ளது.

இந்நிகழ்வுகள் ஒடுக்குமுறையிலிருந்தும், யூதஎதிர்ப்பில் இருந்தும் யூதர்களை பாதுகாப்பதற்கு மாறாக, சியோனிச அரசாங்கம் ஒடுக்குவதற்கும் மற்றும் யூதஎதிர்ப்பின் மீள்எழுச்சிக்கும் உடந்தையாகவும் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன.