சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government detains human rights activists under anti-terror law

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களை தடுத்து வைத்துள்ளது

By Athiyan Silva and S. Jayanth
19 March 2014

Use this version to printSend feedback

இலங்கை பொலிஸ் கடந்த வாரத்தில் மனித உரிமை பிரச்சாரகர்களை கைது செய்துள்ளது. இவர்கள் 2009 மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிக்குமாறு கோரி வருபவர்களாவர்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், அதனது யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துபவர்கள் மீது புதிய தாக்குதல்களை முன்னெடுப்பதோடு புலிகளின் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்ற கதையையும் சோடிப்பதையே இந்தக் கைதுகள் சுட்டிக் காட்டுகின்றன.

*கடந்த வியாழன், பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தமிழ் விதவையையும் அவரது 13 வயது மகள் விபூசிகாவையும், வடக்கில் கிளிநொச்சியில் தர்மபுரம் கிராமத்தில் வைத்து, “ஒரு புலி உறுப்பினருக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்ற சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசார் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான இராணுவச் சிப்பாய்களும் பொலிசாரும் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பிரதேசத்தை சுற்றி வளைத்ததோடு, தாம் ஒருபயங்கரவாதியை தேடுவதாகவும் கூறினர்.

இரவு பூராவும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் (டீஐடி) தாயையும் மகளையும் விசாரித்த பின்னர், அரசாங்கம் ஜெயக்குமாரியை தீவின் தெற்கில் உள்ள பூஸ்ஸ சிறைச்சாலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தது. ஜெயக்குமாரியின் மகள் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட இதுவும் ஒரு தடுத்து வைப்பே ஆகும்.

பயங்கரவாத தடைச் சட்டம், விசாரணையின்றி 18 மாதங்கள் ஒருவரைத் தடுத்து வைக்க பாதுகாப்புச் செயலாளரை அனுமதிக்கின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து கறக்கப்படும் எந்தவொருஒப்புதல் வாக்குமூலத்தையும் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட முடியும். நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் பூஸ்ஸவில்புலி சந்தேக நபர்களாக வருடக்கணக்காக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

2009 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த தனது 15 வயது மகனை விடுதலை செய்யுமாறு பிரச்சாரம் செய்தது மட்டுமே ஜெயக்குமாரியின்குற்றமாகும்

ஞாயிறு மாலை, INFORM மனித உரிமை குழுவின் ஒரு கத்தோலிக்க மதகுருவான ருகி பெர்ணான்டோவையும், சமாதானம் மற்றும் நல்லிணக்க மையத்தின் பிரவீன் மஹேசனையும் டீஐடி கிளிநொச்சியில் வைத்து கைது செய்தது. அவர்கள் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளும் கைது செய்யப்பட்ட சூழ்நிலையை தெரிந்துகொள்ள முயற்சித்தனர்.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கூறிக்கொண்டதாவது: “இனவாத அமைதியின்மை மற்றும் தொந்தரவுகளை ஏற்படுத்த முயற்சித்தமைக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” ஆனால், ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வதுஇனவாத அமைதியின்மை மற்றும் தொந்தரவுகளை ஏற்படுத்துவது எப்படி என்பதை அவர் விளக்கவில்லை.

யுத்தத்தின் முடிவில் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து தப்பிய, கோபி எனப்படும் ஒரு முன்னாள் புலி உறுப்பினர் வடக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதைப் பற்றியே டீஐடி விசாரிப்பதாக பொலிஸ் தெரிவிக்கின்றது. ஜெயக்குமாரியின் வீட்டில் ஒழிந்திருந்த அவரை பொலிஸ் கைது செய்ய முயற்சித்த போது, அவர் தப்பிச் சென்றதோடு பெயர் குறிப்பிடப்படாத ஒரு பொலிஸ் அதிகாரியை சுட்டுவிட்டதாகவும் பொலிஸ் கூறிக்கொள்கின்றது.

அவரது வீட்டில் வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் உபகரணம் ஒன்று இருந்ததாகவும் பொலிஸ் குறிப்பிட்டது. முன்னாள் புலி உறுப்பினரை பிடிப்பதற்காக எனக் கூறிக்கொண்டு நூற்றுக்கணக்கான படையினர் பிரதேசத்தை சுற்றி வளைத்திருந்த போதிலும், அவரை அவர்கள் பிடிக்கவில்லை. சகல மூலை முடுக்குகளையும் இராணுவம், பொலிஸ் மற்றும் புலணாய்வுத் துறையினர் கண்காணித்துக்கொண்டிருக்கும் போது, அவ்வாறு ஒருவர் எப்படி தப்ப முடியும் என்பதை பொலிஸ் மற்றும் இராணுவப் பேச்சாளர்கள் விளக்கவில்லை.

இதே போல், சுற்றி வளைக்கப்பட்டு முற்கம்பிகளால் வேலியிடப்பட்டுள்ள, கனமான பாதுகாப்பின் கீழ் இராணுவத்தால் நடத்தப்பட்டு வந்த தடுப்பு முகாமில் இருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர்கோபி தப்பிவிட்டதாக இராணுவம் கூறுகின்றது. இறுதியில் அடிப்படை வசதிகள் இன்றிமீளக் குடியேற்றப்படும் வரை, பல ஆண்டுகளாக இலட்சக்கணக்கான மக்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த முழுக் கதையும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகத்தின் சிறு பகுதியாகும். ஜெயக்குமாரியின் சட்டத்தரணி பொலிசின் கூற்றை நிராகரித்தார். வடக்கு மற்றும் கிழக்கில் இத்தகைய முறையிலான பல தமிழர்களின் கைதுகள் பற்றிய செய்திகள் வந்துள்ளன.

உழைக்கும் மக்கள் மற்றும் அரசியல் எதிரிகள் மீது பாய்ந்து, அவர்களுக்குபயங்கரவாத முத்திரை குத்துவதற்கான ஒரு சாக்குப் போக்காக, இத்தகைய அவதூறுகளை புணைவது அரசாங்கத்துக்கும் பாதுகாப்பு ஸ்தாபனத்துக்கும் வாடிக்கையான விடயமாகும், அதை மிகைப்படுத்தும் ஊடகங்கள் அதை அப்படியே பிரசுரிப்பதும் வழமையாகும். வடக்கில், தற்போது தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கு விரோதமான எதிர்ப்புகளை நசுக்குவதற்கு இத்தகைய முறைகளை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்கின்றது.

கல்வி கற்றுக்கொண்டிருந்த ஜெயக்குமாரியின் மூத்த மகன் யுத்தத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். போரின் கடைசி நாட்களில் அவரது இரண்டாவது மகன் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மூன்றாவது மகன், புலிகளால் பலாத்காரமாக சேர்த்துக்கொள்ளப்பட்ட பின்னர், இராணுவத்திடம் சரணடைந்தார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைத் தருமாறும் கோரி நடத்தப்பட்ட பல ஆர்ப்பாட்டப் பிரச்சாரங்களில் ஜெயக்குமாரி பங்கெடுத்துக்கொண்டார்.

யுத்தத்தின் கடைசி மாதங்களில் அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் இழைக்கப்பட்ட கொலைகள், யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்கள் பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (யுஎன்எச்ஆர்சி) இந்த மாதம் அமெரிக்க அனுசரணையிலான தீர்மானம் ஒன்றை அரசாங்கம் எதிர்கொள்கின்ற நிலைமையிலேயே, அது தனது பாய்ச்சலை புதுப்பித்துள்ளது. தாக்குதல்களின் கடைசி மாதங்களில் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்கள் குழு மதிப்பிட்டுள்ளது.

யுஎன்எச்ஆர்சியில் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கொடுப்பதன் பேரில், “பயங்கரவாதிகள் எனப்படுவோரை கைது செய்யும் அலையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், வடக்கில் புலிகளின் மிச்சங்கள் இன்னமும் இயங்கிக்கொண்டிருப்பதாக காட்டுவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிக்கின்றது. தனது யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்துவதையும் அல்லது அதன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பதையும் அது தாங்கிக்கொள்ளப் போவதில்லை என்ற செய்தியையும் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு தெரிவிக்கின்றது.

அதே சமயம், அமெரிக்கா தனது சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் தனது தீர்மானத்தை தயாரிப்பது, தமிழ் மக்களை அல்லது அவர்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ அல்ல. இராஜபக்ஷவை சீனாவிடம் இருந்து தூர விலகச் செய்வதற்காக அவர் மீது வாஷிங்டன் அழுத்தத்தை குவிக்கின்றது. இது சீனாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்துவதோடு, இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதையும் இலக்காகக் கொண்ட ஒபாமா நிர்வாகத்தின்ஆசியாவுக்கு மீண்டும் திரும்புதல் கொள்கையின் பாகமாகும்.

இதே போல், தமிழ் முதலாளித்துவ தட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரங்களைப் பகிர்வதற்காக அது கொடுக்கும் அழுத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்காவுக்கும் ஏனைய பெரும் வல்லரசுகளுக்கும் வேண்டுகோள் விடுப்பதன் பேரில் அண்மைய கைதுகளை சுரண்டிக்கொள்கின்றது. அமெரிக்க ஆதரவிலான தீர்மானத்துக்கு ஆதரவு தேடுவதற்காக தற்போது பல தமிழ் கூட்டமைப்புத் தலைவர்கள் ஜெனீவா சென்றுள்ளமை, இலங்கையில் தமது சொந்த பிற்போக்கு அதிகாரப் பரவலாக்கல் நோக்கை அடைவதன் பேரில், வாஷிங்டனின் மூலோபாய நலன்களுக்கு ஆதரவளிப்பதற்கான அவர்களின் தயார் நிலையை காட்டுகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒடுக்குமுறை தமிழர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்லை. சரிந்துவரும் பொருளாதார நிலைமையின் மத்தியில், தெற்கிலும் அது இத்தகைய இராணுவ-பொலிஸ் பாய்ச்சல்களை முன்னெடுக்கின்றது. உண்மையில், அரசாங்கம் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட சகல பொலிஸ்-அரச வழிமுறைகளையும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு எதிராக ஒன்றுகுவிக்கின்றது. இதன் அண்மைய உதாரணமாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பு மாவட்டத்தில் ஹங்வெல்லையில் உள்ள இரப்பர் கையுறை தொழிற்சாலையினால் நிலத்தடி நீர் மாசுபடுத்தப்படுவதற்கு எதிராக நூற்றுக்கணக்கான கிராமத்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, அவர்கள்மீது பொலிஸ் கொடூரத் தாக்குதல் நடத்தியதோடு 60 பேரை கைது செய்துள்ளது.