சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

US-EU sanctions against Russia: A barely veiled threat of war

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்தடைகள்: ஒரு அதிகம்மறைக்கப்படாத போர் அச்சுறுத்தல்

By Alex Lantier 
18 March 2014

Use this version to printSend feedback

கிரிமியா உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான ரஷ்ய ஆதரவைக் கொண்டிருந்த சர்வஜனவாக்கெடுப்பிற்கு பதிலடியாக நேற்று கிரெம்ளின் அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்த தனது உரையில், ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளும் இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து வழிவகைகளையும் ரஷ்யாவை அவமானப்படுத்தி, நசுக்கப் பயன்படுத்தப்படும் என்றார்.

ரஷ்யாவுடன் வணிகப் போரைத் தொடங்கி உக்ரேன் போன்ற ரஷ்யாவின் எல்லைகளில் உள்ள வலதுசாரி ஆட்சிகளுக்குக் அதற்கு முடிவிலா இராணுவ ஆதரவு, பாதுகாப்பு ஆதரவுகளை கொடுக்கையில், அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எளிதில் பேரழிவில் சென்று முடியக்கூடிய ஒரு மோதலைத் தொடங்குகின்றன. இத்தகைய மோதல் பாரிய ஆபத்துக்களை கொண்டிருப்பதுடன், அதற்கு ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு இல்லை.

தன் கருத்துக்களில், ஒபாமா உண்மையை தலைகீழாக கூறியுளார். அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனில் தலையிடுவதை ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சர்வதேச சட்டத்தை  கொள்கைரீதியான, வன்முறையற்ற வழியில் பாதுகாப்பது என காட்ட முற்பட்டுள்ளார். அவர் கூறியது: சமீபத்திய மாதங்களில உக்ரேன் குடிமக்கள் தங்கள் குரல்களை எழுப்பியபோது நாம் அடிப்படைக் கொள்கை ஒன்றினால் வழிநடாத்தப்படுகிறோம். உக்ரேனின் வருங்காலம் உக்ரேன் மக்களால் முடிவெடுக்கப்பட வேண்டும்... எனவே, கிரிமியாவிற்குள் துருப்புக்களை அனுப்பும் ரஷ்யாவின் முடிவு உலகத்தின் கண்டனத்தை சரியானவழியில் ஈர்த்துள்ளது.

ஞாயிறு கிரிமியாவில் நடைபெற்ற வாக்கெடுப்பை ஒபாமா உக்ரேனிய அரசியலமைப்பு, சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறியது என்று கண்டித்துள்ளார். அவர் மேலும் கூறியது: உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு, அரசாங்கம் ஆகியவற்றின் இறைமையைக் குழிபறிப்பதற்கு பொறுப்பான குறிப்பிட்ட தனிநபர்கள்மீது தடைகளை நாம் சுமத்துகிறோம். அது வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் ரஷ்ய பொருளாதாரத்தின் மீது இன்னும் அதிக சுமையை ஏற்றும்வகையில் தடைகளை இயற்றுவோம் என்று அவர் உறுதியளித்தார்.

ஒபாமாவின் அறிக்கை இழிவானது. வாஷிங்டனும் பேர்லினும்தான் ஒரு பெரும் அரசியல் ஆத்திரமூட்டலை வழிநடத்தி, பாசிசக் குழுக்கள் ஒரு ஆட்சிசதி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதமளித்து சட்டவிரோதமாக உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவியில் இருந்து அகற்ற செய்தன. உக்ரேனிய மக்களின் கருத்தை மீறிச் செய்யப்பட்டதுடன் உக்ரேனின் அரசியலமைப்பு, இறைமையை அப்பட்டமாக மீறிய இச்செயலின் முக்கிய இலக்கு உக்ரேனை இராணுவ நடவடிக்கைகளுக்கு ஏகாதிபத்திய சக்திகளின் புறக் காவல்நிலையமாக மாற்றுவதும் மற்றும் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல்களைக் கொடுப்பது ஆகும்.

இதற்கு பெரிய வங்கிகளின் கடன் நிறுத்தப்பட்டுவிட்டது. தேர்ந்தெடுக்கப்படாத கீயேவ் ஆட்சி திவால்தன்மையை தவிர்க்க முற்றிலும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றைத்தான் நம்பியுள்ளது. இதன் உயரமட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாசிஸ்ட்டுக்கள் ஆவர். அவர்கள் மேற்கின் ஆதரவுடைய கீயேவின் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற கலகங்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இதில் தீவிர வலதுசாரி ஸ்வோபோடா கட்சியின் இணை நிறுவனரும் தேசியப்பாதுகாப்பு செயலருமான ஆண்ட்ரே பரூபி, Right Sector துணைஇராணுவக்குழுவின் தலைவரான தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் துணைச் செயலர் டிமிட்ரோ யாரோஷ் ஆகியோர் முக்கியமாவர்.

இச்சக்திகள் ஒபாமா கூறுவது போல் உக்ரேனிய மக்களுக்காக பேசவில்லை, ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பேசுகின்றனர். அமெரிக்கா கிட்டத்தட்ட $5 பில்லியனுக்கு மேல் அமெரிக்க சார்பு எதிர்க்குழுக்களை சோவியத் கலைப்பிற்குப்பின் உக்ரேனில் உருவாக்கச் செலவழித்துள்ளது என்று அமெரிக்க வெளிவிகாரத்துறை அதிகாரி விக்டோரியா நியூலாந்து கூறியுள்ளார்.

இப்பிரிவுகள் ரஷ்யாவிற்கு எதிரான தங்கள் வன்முறை விரோதப் போக்கை இரகசியமாக வைக்கவில்லை. நாஜி SS பிரிவுகள் உக்ரேனிய யூதர்களை இரண்டாம் உலகப் போரின்போது கொல்ல உதவிய உக்ரேனிய பாசிஸ்ட்டுக்களை மதிப்பளிப்பதும் இரகசியமான ஒன்றல்ல. மார்ச் 12 நியூஸ்வீக்கிற்குக் கொடுத்தபேட்டியில் யாரோஷ் மாஸ்கோவுடன் போராடும் ஷெச்ஷேனிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் உடன் தன்னுடைய உறவுகளை பற்றிக் குறிப்பிட்டு, உக்ரேனிய பாசிசத்தின் சிவப்பு-கறுப்பு  நிறக்கொடி பறப்பது குறித்துப் பெருமிதம் கொண்டார்.நாம் சிவப்பு-கறுப்புக் கொடிகளின் கீழ் புரட்சிக்காலம் முழுவதும் நின்றோம் என அவர் அறிவித்தார். சிவப்பு உக்ரேனிய இரத்தம் கறுப்பு உக்ரேனிய மண்ணில் சிந்தப்பட்டது. அந்தக்கொடி தேசிய புரட்சியின் அடையாளம் ஆகும். என்றார்.

இச்சக்திகள இப்பொழுது கீயேவ் ஆட்சி நிறுவும் புதிய தேசியப் பாதுகாப்புப் படையினுள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது விரைவில் நேட்டோவின் ஆதரவையும் ஆயுதங்களையும் பெறும். ஒபாமா தன் அறிக்கையை வெளியிடுகையில், உக்ரேனிய வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி டேஷ்சிட்சியா உயர்மட்ட நேட்டோ அதிகாரிகளை பிரஸ்ஸல்ஸில் சந்தித்தார். நேட்டோவுடன் தொழிலநுட்ப இராணுவ ஒத்துழைப்பு வலியுறுத்தப்படும் என அவர் உறுதியளித்தார். பெல்ஜிய நாளேடான Le Soir இன் கருத்துப்படி, கீயேவில் உள்ள அதிகாரிகள் விரைவில் நேட்டோவிற்கு, ஒருவேளை திங்களே கூட தங்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்களின் பட்டியலை முன்வைப்பர்.

கிழக்கு உக்ரேனில் ரஷ்ய அரசியல் சுற்றுலாவாசிகளை கண்டித்து டேஷ்சிட்சியா தற்போதைய உக்ரேன் நிலைமை 2008ல் ஜோர்ஜியா இருந்த நிலைமையுடன் கூடுதலாக ஒத்துள்ளது. அதில் ஆத்திரமூட்டல்கள் எளிதில் இராணுவ மோதலுக்கு இட்டுச்சென்றது.

இந்த அசாதாரண அறிக்கை கியேவ் ஆட்சி இராணுவ அச்சுறுத்தலைக் கொடுக்கிறது என்று பொருளாகும். 2008 ஜோர்ஜியாவில் போர் ஜோர்ஜிய படைகள் ரஷ்ய சமாதானப்படையினரை மோதலுக்குட்பட்ட தென் ஒசிஷியாவில் தாக்கியதில் தொடங்கியது. டேஷ்சியிட்சா கூறுகிறபடி தற்போதைய மோதல் 2008 போரை நினைவுறுத்துகிறது என்றால்,கீயேவ் ரஷ்யாவை அல்லது ரஷ்ய சார்புடைய சக்திகளை கிரிமியா அல்லது கிழக்கு உக்ரேனில் தாக்கத் திட்டமிட்டுள்ளது என்று பொருளாகும்.

கிரிமியா மீது ரஷ்யா படையெடுத்துள்ளது என ஒபாமா கண்டித்துள்ளது பாசாங்குத்தனமானதும், அரசியல்ரீதியாக அபத்தமானதாகும். முதலில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் எல்லைகளில் பதவிக்கு வந்த ஆட்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. 1911ல் மெக்சிக்கோ புரட்சிக்கு பின்னும், 1959ல் கியூப புரட்சிக்கு பின்னும் அது அவற்றிற்கு எதிராக இராணுவத் தாக்குதலை நடத்தத் தயங்கவில்லை. 1962 கியூபா ஏவுகணை நெருக்கடியின்போது அது அணுப்போரை நடத்துவேன் என்றுகூட அச்சுறுத்தியது.

தங்கள் வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பிற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் என அங்கீகரிப்பதில்லை. புஷ்ஷின் கோட்பாடான முன்கூட்டிதாக்கும் போர் என்பது இயற்றப்படு முன்னரே, அமெரிக்க அரசாங்குமும் செய்தி ஊடகமும் ஒரு சிறப்பு வகைப்பட்ட நாட்டைக் கண்டுபிடித்தன. அதாவது தோற்றுவிட்ட நாடுகள் என அழைக்கப்பட்டவை (சோமாலிய, ஆப்கானிஸ்தான்) வகைப்படுத்தப்பட்டு அவற்றின் மீது படையெடுக்கலாம் அல்லது விரும்பியபோது குண்டுவீசப்படலாம் என்று முடிவெடுத்தன.

இரண்டாவது ஒபாமாவின் மறைமுகமான கூற்றான கிரிமியா ரஷ்யாவின் பகுதி அல்ல என்பது வரலாற்றை மறக்கிறது. இனவழிப் பெரும்பான்மை கொண்ட ரஷ்ய பிராந்தியமான கிரிமியா, ரஷ்ய பேரரசியான கத்தரினாவின் பாரிய படைகள் 18ம் நூற்றாண்டில் கைப்பற்றியதில் இருந்து 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் வரை ரஷ்யாவினதும், பின்னர் சோவியத் ஒன்றியத்தின் பகுதியாகும். சோவியத் பிரதம மந்திரி நிகிடா குருஷ்சேவிற்கு 1954ல் இதை உக்ரேனுக்கு கொடுத்தார். இம்முடிவு சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும்வரை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடைமுறை முக்கியத்துவத்தையே கொண்டிருந்தது. செவெஸ்டோபோலில் தனது முக்கிய ரஷ்ய கடற்படைத் தளத்தையும் தொடர்ந்து வைத்திருந்தது.

கிரிமியா மீது படையெடுப்பு என்னும் ஆபத்து மாஸ்கோவிடம் இருந்து வரவில்லை, கீயேவில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகளிடம் இருந்து வருகிறது. இந்த பாசிசத் துணை இராணுவத்தினர் நேட்டோ சக்திகளால் அசாதாரண விருப்புரிமை வழங்கப்பட்டு, ஒரு பாரிய போர் ஒன்றை எந்நேரத்திலும் தொடக்கி நேட்டோ ஆதரவைப் பெறலாம்.

தன்னுடைய உரையில் ஒபாமா: துணை ஜனாதிபதி பிடென் ஐரோப்பாவிற்குச் செல்லுகிறார். அவர் அங்கு நமது நேட்டோ நட்பு நாடுகளான போலந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா தலைவர்களை சந்திப்பார். நான் அடுத்த வாரம் ஐரோப்பாவிற்குச் செல்லுகிறேன். எங்கள் தகவல் மிகவும் தெளிவானது. நேட்டோ நட்பு நாடுகள் என்னும் முறையில் எங்களுக்கு எங்கள் கூட்டுப் பாதுகாப்பில் ஒரு சீரிய உறுதிப்பாடு உண்டு. நாங்கள் இந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவோம். என்றார்.

இப்படிப் போலந்தையும் முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளையும் இராணுவ புறச்சாவடிகளாக பயன்படுத்துவது என்பது சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்ததின் பேரழிவுதரும் விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது முந்தைய சோவியத் ஒன்றியம் முழுவதையும் பிராந்திய உடைவிற்கு உட்படுத்துவதுடன், அரைக்காலனித்துவ அந்தஸ்த்திற்கும் தள்ளுகிறது. இவை குறைவூதிய தொழிலாளர் பிரிவுகளாக நிதிமூலதனத்திற்கு உதவுவதுடன், ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்கும் இரையாகும். எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா போல் ரஷ்யாவில்கூட சோவியத் ஒன்றித்தின் கலைப்பிற்குப்பின் அதிகாரத்திற்கு வந்த ஆளும் உயரடுக்குகள் முதலாளித்துவ தன்னலக்குழுக் கும்பல்கள்தான்.

இப்பொழுது இடைவிடா இராணுவ அச்சுறுத்தல்களும் விரிவாகும் பொருளாதாரத் தடைகளும் புட்டினை ஆதரிக்கும் தன்னலக்குழு வட்டங்களை முறிக்கும், ரஷ்யாவின் மேல் மத்தியதரத்தட்டு தனது விசுவாசத்தை கிரெம்ளினுக்குக் காட்டப்படுவதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று ஏகாதிபத்திய சக்திகள் கணக்கிடுகின்றன.

Süddeutsche Zeitung பத்திரிகை எழுதியது: தற்போதைய பொருளாதாரத் தடைகள் அற்புத ஆயுதங்களுமல்ல, விரைவில் செயல்படுபவையும் அல்ல. சொத்துக்களை முடக்குவது, பயணங்களைத்தடை செய்வது என்பது புட்டினை மாஸ்கோவின் அரசியல், பணம் கொண்டுள்ள உயரடுக்கில் செல்வாக்கைப் பெறச்செய்யாது. ஆனால் மக்களுடன் நிற்கும் அவருடைய நிலைப்பாடு ஆரம்பத்தில் பெரிதும் உயரும். பொருளாதாரத் தடை விரிவாக்கப்படும் என்று அச்சறுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த கட்டத்தில் உள்ள பொருளாதாரத் தடைகள், புட்டினுக்கு ஆபத்தானது. அவை பல ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பவர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தும், ஆனால் புட்டினுக்கு இன்னும் பேரிழப்பு ஆகும்.

வணிகத்தின் உடைவு மற்றும் உலகப் போரை அச்சுறுத்தும் இந்த ஆழ்ந்த பொறுப்பற்ற கொள்கை, ரஷ்யாவிலும் உக்ரேனிலும் உள்ள மக்களின் கருத்தை இழிவாகக் கருதி நடத்தப்படுவதோடு மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பிய மக்களின் கருத்தை மீறுவதும் ஆகும். ஒபாமா அமெரிக்க அல்லது ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை லித்துவேனிய திருட்டுத் தலைவர்களுக்கும் கியேவில் உள்ள பாசிஸ்ட்டுக்களும் தனது தனித்துவமான உறுதிப்பாட்டை கொடுத்ததற்காக அது ரஷ்யாவுடன் போரை ஆதரிக்கிறதா என்று கேட்கவில்லை. தயார்செய்யப்படுவது என்னவெனில் ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிர்ப்பான சர்வதேச தொழிலாள வர்க்கத்திடையேயான வெடிப்புத்தான்.