தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் US, EU threaten retaliation as Crimea votes to join Russia கிரிமியா ரஷ்யாவுடன் இணைய வாக்களிக்கையில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்துகின்றன
By Alex Lantier Use this version to print| Send feedback நேற்றைய சர்வஜன வாக்கெடுப்பின் ஆரம்ப கருத்துக் கணிப்புக்கள் கிரிமியா உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர பெரும்பான்மையாக வாக்களித்துள்ளதை காட்டியுள்ளபோது, ரஷ்யாவிற்கு எதிராக பேரழிவுதரும் பொருளாதாரத் தடைகள், இராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கம் வரும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அச்சுறுத்தியுள்ளனர். கிரிமியாவில் வாக்காளர்கள் தொகையான 1.5 மில்லியன் பேரில் 80%த்திற்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்து அதில் 93% ரஷ்யாவுடன் சேர வாக்களித்துள்ளனர். மிகுதியான 7%த்தினர் ஒரு பரந்த உள்ளூர் தன்னாட்சி தேவை என்ற நிபந்தனையுடன் உக்ரேனின் ஒரு பிராந்தியமாக இருக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்கெடுப்பை அடுத்து கிரிமியத் தலைநகரான சிம்பெரோபோலில் கொண்டாடி லெனின் சதுக்கத்தை நெரிசலுக்கு உட்படுத்தினர். இதேபோல்தான் முக்கிய ரஷ்ய கடற்படைத் தளமுள்ள நகரமான செவஸ்டோபோலிலும் நடைபெற்றது. ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் ஞாயிறன்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை மேற்கோளிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவர் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரியிடம் ஒரு தொலைபேசி அழைப்பில் “இந்த முடிவுகள் தீபகற்பத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஆரம்பக்கட்டமாக இருக்க வேண்டும்” என்றார் எனக் கூறப்படுகிறது. பின்னர் அமைச்சரகம் கெர்ரி மற்றும் லாவ்ரோவ் “அரசியலமைப்புச் சீர்திருத்தம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவேண்டும்” என்பதற்கு தொடர்ந்து ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனர். அமெரிக்க வெளிவிவகாரத்துறை இத்தொலைபேசி உரையாடல் பதிப்பு பற்றிய அதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது அமெரிக்கா இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதம் எனக் கருதுவதாகவும் இதன் முடிவு அங்கீகரிக்கப்படமாட்டாது என்றும் மீண்டும் உறுதி செயதுள்ளது. வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவர் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்தும் “உக்ரேன் கிழக்கு நகரங்களில் ஆத்திரமூட்டல்கள் தொடர்வது குறித்தும் கெர்ரி “தீவிர அக்கறைகளைக் கொண்டுள்ளார்” என்றார். ரஷ்யா உடனடியாக தன் படைகளை கிரிமியாவிலுள்ள அவற்றின் தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், உக்ரேனின் தெற்கு கிழக்கு எல்லைகளில் நடத்தும் இராணுவப் பயிற்சிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வாக்களிப்பு கடந்தமாத ஆட்சி சதியில் கீயேவில் அதிகாரத்தை மேற்கின் ஆதரவுடைய ஆட்சி ஏற்றதைத் தீவிரமாக நிராகரிக்கிறது. அந்த மாற்றத்திற்கு பாசிச சக்திகள் தலைமைதாங்கின. அதில் Right Sector துணை இராணுவக் குழுக்களும் ஸ்வோபோடா கட்சியும் உள்ளடங்கிருந்தன. கியேவின் புதிய அரசாங்கம் கிரிமியாவின் ரஷ்ய மொழி பேசும் பெரும்பாலான மக்களை விரோதிக்கும் வகையில் ரஷ்ய மொழியை அரசாங்க மொழி என்னும் அந்தஸ்த்தில் இருந்து அகற்றி, கலகமூட்டும் அச்சுறுத்தல்களையும் கொடுத்துள்ளது. Right Sector தலைவர் டிமிட்ரி யாரோஷ் கீயேவிற்கு விரோதம் உடைய கிரிமியர்களுக்கு எதிராக பலாத்காரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளும் கிரிமியா பிரிந்து போகும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக ஒப்புக் கொண்டனர். முன்னொருபோதுமில்லாத பாசாங்குத்தனத்துடன் மேற்கு அதிகாரிகள் ஒரு தேர்ந்தெடுக்கப்படாத தீவிர வலதுசாரி ஆட்சிக்கு கீயேவில் ஆதரவு கொடுத்து வாக்கெடுப்பை சட்டவிரோதம் எனக்கூறி உக்ரேனிய இறைமையை இது மீறுகிறது என்றும் சொல்லுகின்றனர். வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று பின்வருமாறு கூறுகிறது: “உக்ரேனில், கிரிமியா பகுதியில் நடந்த இந்த ‘சர்வஜனவாக்கெடுப்பை’ நாங்கள் நிராகரிக்கிறோம்.” அந்த அறிக்கை மற்ற நாடுகளையும் “இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்து தண்டனைகளை சுமத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறும் உக்ரேனிய மக்களுக்கும், உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் மற்றும் இறையாண்மைக்கும் ஆதரவு கொடுக்க ஒன்றாக இருக்குமாறும்” அழைப்பு விடுத்துள்ளது. கீயேவில் இருந்து திரும்பி வரும் அமெரிக்கச் சட்டமன்ற உறுப்பினர்கள் ரஷ்யாவிற்கு எதிராக விரிவாக்கத்தை வலியுறுத்தினர். கனக்டிக்கட் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் செனட்டர் கிறிஸ் மேர்பி, “ரஷ்யா உண்மையிலேயே கிரிமியாவிற்கும் அப்பால் செல்வது என முடிவெடுத்தால், அது குருதி கொட்டும் போராக, நீண்டகாலம் நீடிக்கும்” என்றார். “உக்ரேனிய இராணுவத்தின் கட்டமைப்பிற்கு நீண்டகால முயற்சிக்கு” அழைப்புவிடுத்த மேர்பி கூறினார்: “திங்கள் அன்று நாம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முடக்கும் பொருளாதாரத் தடைகளை தனிநபர்கள் மீது இல்லாமல் ரஷ்ய வணிகங்களுக்கும் நாம் அறிவிக்கையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ஒரு பலமான தகவல் அனுப்புகின்றது... அதாவது ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயுவை நிறுத்தினால், அது பாதிப்பை ஏற்படுத்தும். ரஷ்ய சொத்துக்களை ஜேர்மனி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் முடக்கினால் அது அவர்களைப் பாதிக்கும்.” என்றார் குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் ஜோன் மக்கெயின் ரஷ்யாவை இலக்கு கொள்ளும் ஒரு இராணுவ தயாரிப்பு தேவை என அழைப்பு விடுத்தார். பொறுப்பற்ற முறையில் ரஷ்யாவை “ஒரு நாடு என்று தன்னை போலியாகக் கூறிக்கொண்டிருக்கும் ஒரு எரிபொருள் நிலையம்” என்று உதறித்தள்ளினார். பரந்த மோதல் தேவை என்று மக்கெயின் கூறனார். “பொருளாதாரத்தடைகள் முக்கியம். உக்ரேனியர்களுக்கு சில இராணுவ உதவி அளியுங்கள். குறைந்த பட்சம் அவர்கள் தங்களைக் பாதுகாத்துக் கொள்ளட்டும்” என்றார் அவர். “போலந்திலும் செக்குடியரசிலும் ஏவுகணைப் பாதுகாப்பு முறையை மீண்டும் தொடங்குங்கள்.” மோல்டோவா மற்றும் ஜோர்ஜியா இரண்டும் “நேட்டோவில் அங்கத்துவத்திற்கான பாதையை அடைய வேண்டும்” என்றும் அழைப்புவிட்டார். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கீயேவ் ஆட்சிக்கு இராணுவ உதவியளிக்க முனைகின்றன. அது கடந்த வாரம் ஒரு புதிய 60,000 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப் படையை நிறுவியது. அதில் பாசிச துணை இராணுவத்தினர், உள்நாட்டுப் பொலிசார் மற்றும் முன்னாள் ஆயுதப்படையினர் ஆகியோர் உள்ளனர். தேசிப்பாதுகாப்புப் படை நாட்டின் பிரிந்துள்ள ஆயுதப்படைகளுக்கு துணையாக அமைக்கப்பட்டுள்ளன. உக்ரேனிய வெளியுறவுமந்திரி ஆண்ட்ரி டேஷ்ஷிட்ஸ்யா இன்று பிரஸ்ஸல்ஸுக்கு நேட்டோவுடன் “இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைபை” நாட சென்றுள்ளார். ஐரோப்பிய குழுத் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பே மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜோஸே மானுவல் பரோசோ உடைய அறிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியம் வாக்களிப்பு பற்றிய கண்டிப்பைத் தெரிவித்தது. “இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதம், நெறியற்றது, இதன் முடிவு அங்கீகரிக்கப்பட மாட்டாது.” என எழுதியது. அவ் அறிக்கை ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் மந்திரிகள் இன்று காலை கூடி பொருளாதாரத் தடைகள் போன்ற “கூடுதலான நடவடிக்கைகள்” பற்றி முடிவெடுப்பர் என்றது. ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மெயர் கூறினார்: “ரஷ்யா கடைசி நேரத்தில் விட்டுக் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் தக்க இடை கொடுப்போம்.... நாம் ஒரு கலகமூட்டும் நிலைமையில் உள்ளோம்.” கிரிமிய வாக்கெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் மிகத் தீவிர சர்வதேச நெருக்கடியின் ஒரு மேலதிக விரிவாக்கத்தைக் குறிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை சுமத்துமா என்ற ஊகம் வந்து ஒருவாரத்தில் இது வந்துள்ளது. அந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றிய-ரஷ்ய வணிகத்தை நிறுத்தி, உலகப் பொருளாதாரத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளை கொடுக்கும். அதேபோல் நெருக்கடி ஐரோப்பாவில் ஒரு பெரிய போரை தூண்டுமா என்ற அச்சுறுத்தலும் வந்துள்ளது. சனிக்கிழமை அன்று அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட கிரிமிய வாக்கெடுப்பைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபை தீர்மானத்தை தடுப்பதிகாரம் மூலம் ரஷ்யா நிறுத்தியது. சீனா வாக்களிப்பில் கலந்துகொள்ளாது, “சர்வதேச ஒருங்கிணைப்பு அமைப்புமுறை” ஒன்று அமைக்கப்பட்டு நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஆராயப்பட வேண்டும் என்று கூறியது. மேற்கு உக்ரேன் எல்லைப் பகுதிக்கு அப்பால் உள்ள கீயேவ் ஆட்சிக்கு மிக அதிக ஆதரவுடைய ருமேனியாவில், வெளியுறவு மந்திரி ரிட்ரூஸ் கோர்லாடீன் நேற்று பிரிந்து செல்வதற்கான கிரிமிய வாக்கெடுப்பு “ஐரோப்பா எல்லைகள் முழுவதையும் உடைத்துவிடும்” என்று எச்சரித்தார். கிரிமிய சர்வஜனவாக்கெடுப்பின் ரஷ்ய சார்புடைய முடிவு, கீயேவ் ஆட்சிக்கும் மோதலைத் தூண்டிவிட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கும் பெரும் பின்னடைவு ஆகும். அதேபோல் இது உக்ரேனில் ஏகாதிபத்திய பாசிசத் தாக்குதலைத் தோற்கடிப்பதற்கு எத்தகைய முற்போக்கான முன்னோக்குகையும் வழங்கவில்லை. உக்ரேனின் வறிய பகுதிகளில் கிரிமியாவும் ஒன்றாகும். வாழ்நாள் எதிர்பார்ப்பு 67 ஆண்டுகள்தான். இது உக்ரேனிய சராசரியை விட 4 ஆண்டுகள் குறைவாகும். தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 19,000 ஹிர்வ்நியா ஆகும் ($US2,004). இது உக்ரேனிய தேசிய சராசரியில் மூன்றில் ஒரு பகுதிகுறைவாகும். வாக்களிப்பை தொடர்ந்து அது இன்னமும் கீயேவ் ஆட்சியின் நேட்டோ ஆதரவாளர்களுக்கும் கிரெம்ளினுக்கும் இடையே பெருகியுள்ள மோதலில் முன்வரிசையில் தன்னைக் காண்கிறது. மேற்கு செய்தி ஊடகத்தில் ரஷ்யாவிடம் வரலாற்றுரீதியாக அதிக விரோதப் போக்கு உடைய கிரிமியாவின் இனவழி டாட்டார் (Tatar) மக்கட்தொகையின் பரந்த பிரிவுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன என்ற பரந்த அறிக்கைகள் உள்ளன. வார இறுதியில், ரஷ்ய துருப்புக்கள் கிரிமியாவிற்கு அருகே உக்ரேனிய தீபகற்பத்தில் உள்ள ஸ்ட்ரில்கோவ் கிராமத்திற்கு அருகே ஒரு இயற்கை எரிவாயு பங்கீட்டு மையத்தைக் கைப்பற்றின. இந்த நடவடிக்கை கிரிமியாவின் சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து வந்துள்ளது என்று கிரிமிய அதிகாரிகள் கூறினர். கீயேவ் இதற்கு விடையிறுக்கையில் ஒரு ஆத்திரமூட்டும் அறிக்கையை வெளியிட்டது. “ரஷ்யாவின் இராணுவப் படையெடுப்பை நிறுத்த உக்ரேன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது” என்றது. கிரிமிய வாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுத்த கிரெம்ளினில் உள்ளவர்கள் உக்ரேனில் வந்துள்ள ஏகாதிபத்திய தலையீட்டை எதிர்க்குமாறு சர்வதேச தொழிலாள வர்கத்திற்கு அழைப்பு விட முடியாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தொழிலாளர்களின் பரந்த பெரும்பான்மையினர் போரை எதிர்க்கின்றனர். உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திடையே கீயேவ் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியம் சுமத்த உள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆழ்ந்த விரோதம் உள்ளது. (பார்க்கவும்: மேற்கத்திய ஆதரவிலான ஆட்சி உக்ரேனிய தொழிலாளர்களுக்காக என்ன திட்டமிடுகிறது). சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மறுபுனருத்தானத்திற்குப் பின் வெளிப்பட்டுள்ள ஒரு தன்னலக்குழுக் கும்பலான புட்டின் ஆட்சி இந்த நெருக்கடியில் ரஷ்ய தேசிய உணர்வை அணிதிரட்டுவதன் மூலம் தன் நலன்களை பாதுகாக்க முயல்கிறது. இது மேற்கு ஏகாதிபத்திய சக்திகளின் கரங்களிலும் மற்றும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசிய சக்திகளின் கரங்களிலும் விழுவது போல் ஆகும். அவைதான் உக்ரேனுக்குளேயே இனவழி மோதலை முடுக்கி விடுகின்றன. கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு குழுக்களுக்கும் தீவிர வலது கியேவ் சார்பு ஆயுதக்குழுக்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் பல மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். டொனெஸ்க்கில் ரஷ்ய சார்பு படைகள் பாதுகாப்புப் பிரிவின் நிலையங்களை கைப்பற்றியபோது ஏற்பட்ட சண்டையில், ஸ்வோபோடா உறுப்பினர் டிமிட்ரோ செம்யாவ்க்யி குத்திக் கொல்லப்பட்டார். ரஷ்ய சார்பு படைகள் டோன்பாஸ் பகுதியில் தன்னைத்தானே ஆளுனர் என்று அறிவித்ததை கொண்ட பாவ்லோ கௌபரேவ் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரினர். அவர் டோன்பாஸ்ஸும் ரஷ்யாவில் மீண்டும் சேரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். கார்க்கிவில் 30 உறுப்பினர்களை கொண்ட ஆயுதமேந்திய தீவிர வலது உக்ரேன் நாட்டுப்பற்றாளர்களுக்கும் ரஷ்ய சார்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தபோது ரஷ்ய சார்பு ஆர்ப்பாட்டக்காரரும், அருகே நின்ற ஒருவரும் கொல்லப்பட்டனர். பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமுற்றனர். |
|
|