தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் The New York Times deploys C.J. Chivers to Ukraine நியூயோர்க் டைம்ஸ் உக்ரைனுக்கு சி.ஜே.சிவர்ஸ் ஐ அமர்த்துகிறது
By Patrick Martin Use this version to print| Send feedback கிரிமியா பிராந்தியத்தை இணைத்துக் கொள்ள முயலும் ரஷ்யாவின் செயலுக்கு எழுகின்ற வெகுஜன எதிர்ப்பை துப்பாக்கிகள் மற்றும் சாட்டைகள் கொண்டு ஒடுக்குகின்ற ஒரு கோபாவேசக் கூட்டமாக, கிரிமியாவில் இருக்கின்ற ரஷ்ய இராணுவப் படைகளையும் ரஷ்ய-ஆதரவு போராளிகளையும், சென்ற வார இறுதியில் நியூயோர்க் டைம்ஸில் வெளிவந்த முறையற்ற வார்த்தைகளுடனான ஆத்திரமூட்டும் கட்டுரை ஒன்று, சித்தரித்தது. “பிரிவினை வாக்கெடுப்புக்கு முன்னதாக எதிர்ப்பை நெரிக்க ரஷ்யா துரிதமாக செயல்படுகிறது” என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரையின் மொழி ரஷ்ய ஆதரவு கிரிமியா ஆட்சியின் “ஓர்வெல்லிய நெடி”, அதன் “மறைமுகமான படைவலிமைப் பிரயோக அச்சுறுத்தல்”, “குறிவைத்து மிரட்டுதல்”, மற்றும் “மேலோங்கிய-கை தந்திரம்”அவற்றுடன் “பழைய சோவியத் உலகமெங்கும் தேர்தல் மோசடிகள் உடன்வர நடந்தேறி வந்திருக்கும் தேர்தல்கால திருவிழாக்களின் பொறிகள்” ஆகியவற்றுக்கான குறிப்புகளைக் கொண்டு பழைய பனிப்போர் கால கம்யூனிசவிரோத காலகட்டத்தை நினைவூட்டுகிறது. சென்ற மாதத்தில் கீவில் உக்ரைன் அரசாங்கத்தை தூக்கிவீசுவதில் முன்னிலை வகித்த பாசிச குண்டர்களை ஜனநாயகத்திற்கான போராளிகளாக, அல்லது இன்னும் மோசமாய், “தேசியவாதி”களாக டைம்ஸ் சித்தரிக்கிறது. ஞாயிறன்றான கட்டுரை கிரிமியாவில் இருக்கும் ரஷ்ய ஆதரவுப் படைகளை “சட்டரீதியற்ற காவற்படையினர்” என்றும் “பலதரப்பட்ட ஆடைகளில் கைகளில் கலாஷ்னிகோவ் ரைபிள்கள் தாங்கி நின்ற முகமூடி மனிதர்கள்” என்றும் அல்லது இன்னும் சிறுமைப்படுத்துகின்ற வார்த்தை விவரிப்புகளில் விவரிக்கிறது. இந்தக் கட்டுரையின் கீழே பெயர் தாங்கி இருக்கக்கூடிய இரண்டு டைம்ஸ் பத்திரிகையாளர்களில் ஒருவரும் இதுவரை ஈடுபடுத்தப்பட்டிருப்பதில் மிகவும் மூத்த பத்திரிகையாளருமான சி.ஜே. சிவர்ஸ் குறித்து WSWS ஏற்கனவே முன்னதாக எழுதியிருக்கிறது.(காணவும்: அத்தனை அமைதியான அமெரிக்கர் அல்ல: நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளர் மத்திய ஆசியா குறித்து எழுதுகிறார்.”) உக்ரேனுக்கு சிவர்ஸை அனுப்பியிருப்பதென்பது(அங்கு அவர் Instagram இல் எழுதுகிறார், பதிவிடுகிறார்)அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுடன் நியூயோர்க் டைம்ஸ் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதன் ஒரு எடுத்துக்காட்டாகும். சிவர்ஸ் போகும் இடங்களுக்கு, பொதுவாக அமெரிக்க உளவாளிகளும், ஆத்திரமூட்டல் அதிகாரிகளும், சிறப்புப் படை நடவடிக்கை வீரர்களும் முன்னரே சென்றிருக்கின்றனர். அவர்களது புகழ்பாடுவது, பல சந்தர்ப்பங்களில், அவர்களின் நடவடிக்கைகளுக்கு உகப்பான சூழலை உருவாக்கித் தருவது இவை இரண்டும் தான் டைம்ஸ் செய்தியாளரின் வேலை. அமெரிக்காவின் முன்னணி தினசரிக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவ-உளவு எந்திரத்துக்கும் இடையே வெகுகாலமாக ஒரு நெருக்கமான உறவு நிலவி வருகிறது. சிவர்ஸ் விடயத்திலோ, இந்த உறவுகள் இன்னும் நெருக்கமானவையாக இருக்கின்றன. கடந்த 12 வருட காலத்தில், முன்னாள் சோவியத் ஒன்றியம், மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா முழுவதிலும் நடந்திருக்கக் கூடிய அமெரிக்க ஆதரவு கெரில்லாக்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் “எதிர்ப்பாளர்க”ளின் நடவடிக்கைகள் குறித்த களச் செய்திகளுக்கு கீழே இவரது பெயரைக் காண முடிந்தது. ஆப்கானிஸ்தான் ஈராக் இரண்டு நாடுகளிலும், அங்கிருந்த அமெரிக்க போர்த் துருப்புகளுடன் உடன்செல்லும் செய்தியாளராக, மத்திய ஆசியா முழுக்க பயணித்து, அமெரிக்காவினால் ஊட்டி வளர்க்கப்பட்ட பெட்ரோலிய-சர்வாதிகாரிகளை சிவர்ஸ் மதிப்பாய்வு செய்து கொண்டிருந்தார், அத்துடன் லிபியா மற்றும் சிரியாவில் இருந்த அமெரிக்க ஆதரவுப் படைகளின் சண்டைக்களத்தில் இருந்தும் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார். இப்போது அவர் உக்ரைன் மற்றும் கிரிமியாவில் காட்சியளிக்கிறார். இவர் சிரியாவில் செய்த வேலை மிகவும் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் அல்கெய்தாவுக்கு விசுவாசத்தை உறுதியளித்திருந்த அதேசமயத்தில் பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்துச் சண்டையிட்ட அமெரிக்க ஆதரவுப் படையின் பகுதியாகவும் வேலை செய்த அல்-நுஸ்ரா முன்னணியின் ஒரு பாகமான, தவ்ஹீத் சிங்கங்கள் என்று தம்மை அழைத்துக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத கெரில்லாக்களுடன் சிவர்ஸ் பல வாரங்களுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். டைம்ஸ் நளினமாகச் சொல்வதைப் போல, ”தவ்ஹீத் போராளிகள் ஒரு சிறைக்கைதியை அவருக்குத் தெரியாமல் தற்கொலை படைவீரராக பயன்படுத்தியதை” சிவர்ஸ் கண்டது மட்டுமல்ல, அந்த குழுவை ஒரு காணொளியில் அவர் மிக மும்முரமாக பாராட்டவும் செய்தார். குழுவின் தலைவர் ஒரு சண்டையில் கொல்லப்பட்டதை அடுத்து சிவர்ஸ் எழுதியிருந்த ஒரு கட்டுரை அந்த தலைவரை “ஒரு மகா மனிதர்” என்று விவரித்தது. எண்ணற்ற போர்கள் மற்றும் கிளர்ச்சிகளுக்கான டைம்ஸ் பிரதிநிதியாக சிவர்ஸ் அவரது பாத்திரத்திற்கு தயாரிக்கப்பட்டிருப்பது நிச்சயமாக அசாதாரணமான விடயமாகும். கல்லூரிப் பட்டம் பெற்றதும் மரைன் கார்ப்ஸ் படையில் சேர்ந்த அவர் 1990-1991 வளைகுடாப் போரில் சண்டையிட்டவர், கேப்டன் பதவி வரை உயர்ந்தவர், ஆர்மி ரேஞ்சராகவும் பயிற்சியளிக்கப் பெற்றவர், அத்துடன் அதிவேகத்தில் வண்டி ஓட்டிய ரோட்னி கிங் என்ற கருப்பின மனிதர் போலிசாரால் பலமாக அடிக்கப்பட்ட சம்பவத்தினை ஒட்டி உண்டாக்கப்பட்டிருந்த 1992 கலகத்திற்குப் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளிலும் சிவர்ஸ் பங்குபெற்றிருந்தார். இராணுவத்தில் சுமார் ஒரு தசாப்தத்தை செலவிட்ட பின்னர், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பத்திரிகைப் பள்ளியில் அவர் சேர்ந்து ஒரு செய்தியாளராக தனது மினுமினுப்பான தொழில் வாழ்க்கையைத் தொடக்கினார். 1996 இல் ரோட் ஐலண்ட் இல் இருக்கும் Providence Journal இல் வேலை செய்யத் தொடங்கிய அவர் 1999 இல் டைம்ஸ் பத்திரிகைக்கு மாறினார். அங்கு மூன்று ஆண்டுகளுக்கு அவர் நியூயோர்க் போலிஸ் துறை செய்திகளைக் கையாண்டார், அதன் பின் வெளிநாட்டு செய்தியாளராக ஆன அவர், துரிதமாக மாஸ்கோவுக்கான செய்திப்பிரிவின் தலைவராக உயர்ந்தார். இராணுவத் தளவாடங்கள், சிறு அலகு கெரில்லாத் தந்திரங்கள் மற்றும் உளவுத் துறை நடவடிக்கைகள் குறித்த பிரத்யேக அறிவு அவசியப்படுகின்ற கட்டுரைகளை சிவர்ஸ் அடிக்கடி எழுதுகிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த மூலோபாய நோக்கங்கள், அத்துடன் அன்றாடம் நடத்தப்படும் குறிப்பான தந்திரோபாய முன்னெடுப்புகள் இரண்டுடனும் அடியொற்றி செயல்படுவதை வெளிப்படுத்துவனவாக இவை இருக்கின்றன. தனது இராணுவ மற்றும் சிறப்புப் படை பயிற்சி தனது செய்தி சேகரிப்புத் தொழிலில் எவ்வாறு உதவி செய்கிறது என்பதை 2005 இல் லூஸியானா வழக்கறிஞரான பேடன் ரவுஜுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் சிவர்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: “முன்னாள் மரைன் வீரர்கள் மற்றும் ரேஞ்சர்களை நான் எப்போதும், ஏறக்குறைய எல்லா இடங்களிலும் சந்திக்கிறேன். எங்களுக்குள் ஒரு பொதுவான புரிதல் உணர்வை நாங்கள் காண்கிறோம், பொதுவான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம், குழுவான இலட்சியங்களையும் கோபங்களையும் கூட பகிர்ந்து கொள்கிறோம். ஆப்கானிஸ்தான், ஈராக், ஜார்ஜியா, உஸ்பெகிஸ்தான், ஜேர்மனி, ரஷ்யா இன்னும் எந்தெந்த நாடுகளிலும் இது நடந்திருக்கிறது”. சிவர்ஸ் தனது முன்னாள் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற “பொதுவான புரிதல்” மற்றும் “இலட்சியங்கள்” என்ன தன்மை கொண்டனவாக இருக்கும் என்பதையோ, அல்லது இந்த நாடுகளில் முன்னாள் மரைன் வீரர்களும் ரேஞ்சர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையோ புரிந்து கொள்வதற்கு அதிக சிந்தனைத்திறன் அவசியமில்லை. |
|
|