தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India’s election campaign goes into high gear இந்தியாவின் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்ட வேகமெடுக்கிறது
By Keith Jones Use this version to print| Send feedback இந்தியாவின் இரு அவை நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லோக் சபாவின் தேர்தல்களுக்கான தேதிகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்துள்ளது. அந்த தேர்தல் ஒன்பது கட்டங்களில் நடத்தப்பட உள்ளன. வாக்குப்பதிவு ஏப்ரல் 7இல் தொடங்கி, ஐந்து வாரங்களுக்குப் பின்னர் மே 12இல் நிறைவடையும். இருப்பினும், பெரும்பான்மை வாக்கெடுப்பு (545 இல் 425 லோக் சபா இடங்களுக்கான வாக்கெடுப்பு) ஏப்ரல் 9இல் இருந்து 30க்குள் ஒரு மாதத்திற்கும் குறைந்த காலத்தில், மூன்று வார காலத்திற்குள் நடத்தப்படும். இந்தியாவின் புதிய அரசாங்கம் மே இறுதி வாக்கில் பதவியேற்கும் என்ற எதிர்பார்ப்போடு, வாக்கு எண்ணிக்கை மே 16இல் எண்ணப்பட உள்ளது. இந்திய முதலாளித்துவத்திற்கு ஆழமடைந்துவரும் நெருக்கடி நிலைமைகளின் கீழ், மற்றும் இந்தியாவை ஒரு மலிவுழைப்பு உற்பத்தியாளராக, பின்புல அலுவலகமாக, மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு ஆதாரவள உற்பத்தியாளராக மாற்றும் அதன் உந்துதலுக்கு தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலைமைகளின் கீழ், இந்த தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்திய பொருளாதாரம் தேக்கநிலையில் (stagflation) சிக்கியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அந்த பொருளாதாரம் ஆண்டுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாக வளர்ந்துள்ளதோடு, தொழிலாளர் சந்தைக்குள் புதிதாத நுழைபவர்களை ஈர்க்க அவசியப்படும் 8 சதவீதத்திற்கு கூடுதலான வளர்ச்சி விகிதத்தில் இருந்து வெகு தொலைவில் நிற்கிறது. இதற்கிடையில், உணவுப்பொருட்களின் மிக வேகமான விலையுயர்வோடு, நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலருக்கு குறைவான வருமானத்தில் வாழும் இந்திய மக்கள்தொகையின் மூன்று-கால்பங்கினரின் வருமானம் மேலதிகமாக சுருங்கி வருவதோடு சேர்ந்து, பணவீக்க விகிதம் இரட்டை இலக்க விகிதங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆணையம், பண சந்தைக்குள் கடன்களைப் பாய்ச்சுவதைக் குறைக்க ஆலோசித்து வருவதாக அறிவித்ததற்கு விடையிறுப்பில், ரூபாய் மதிப்பு சரிந்த போது, நிலையற்ற உலக மூலதன ஓட்டத்திற்கேற்ப இந்திய பொருளாதாரத்தின் அதீத நிலையற்றதன்மை கடந்த கோடைகாலத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வட்டிவிகிதங்களைக் குறைக்குமாறு இந்திய வியாபாரங்கள் அந்நாட்டின் மத்திய வங்கியின் மீது நீண்டகாலமாக அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்ற போதினும், அந்தவொரு நடவடிக்கை பணவீக்கத்திற்கு எரியூட்டி, மூலதனங்கள் வெளியேறுவதைத் தூண்டிவிடும் என்ற அச்சத்தால் மத்திய வங்கி அவ்வாறு செய்ய விருப்பமில்லாமல் உள்ளது. புதிய அரசாங்கம் சமூகரீதியில் வெடிப்பார்ந்த "சீர்திருத்தங்களைக்" கொண்டு வரவில்லையானால், இந்தியாவின் தரமதிப்பீட்டை வெற்று பத்திர அந்தஸ்திற்கு கீழிறக்க இருப்பதாக, பிரதான சர்வதேச கடன் தரமதிப்பீடு அமைப்புகள் அறிக்கை அனுப்பி உள்ளன. அந்த "சீர்திருத்தங்களில்" பின்வருவனவையும் உள்ளடங்கும்: எரிசக்தி விலை மானியங்களைக் குறைத்தல், பொருளாதாரத்தை மேலதிகமாக அன்னிய முதலீட்டிற்குத் திறந்துவிடுதல்; வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் மீதிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்குதல்; தேசிய பண்டங்கள் மற்றும் சேவை வரியை பிற்போக்குரீதியில் நடைமுறைப்படுத்துதல்; மற்றும் சமூக செலவின வெட்டுக்கள் மூலமாக வரவுசெலவு கணக்கு பற்றாக்குறையைக் கூர்மையாக குறைத்தல் ஆகியன. உலக புவிசார் அரசியல் பதட்டங்களின் திடீர் அதிகரிப்பாலும் இந்தியா சுழற்றி அடிக்கப்பட்டு வருகிறது. 2008 இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்படிக்கையும், அது இந்தோ-அமெரிக்க உலகளாவிய மூலோபாய கூட்டுறவைப் பலப்படுத்தியதும் அவரது 10 ஆண்டுகால அரசாங்கத்தின் பெரும் சாதனைகளாக அவர் கருதுவதாக பதவியிலிருந்து வெளியேற உள்ள இந்தியாவின் காங்கிரஸ் கட்சி பிரதம மந்திரி மன்மோகன் சிங் மீண்டும் கூறி உள்ளார். இருப்பினும், மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான, மற்றும் அனைத்திற்கும் மேலாக இந்தியாவின் வடக்கு அண்டைநாடான சீனாவிற்கு எதிரான அமெரிக்க மூலோபாய நோக்கங்களுக்குள் அதை முன்பில்லாத விதத்தில் கட்டிப்போட வாஷிங்டனிடம் இருந்து இடைவிடாமல் இந்தியா மீது அளிக்கப்படும் அழுத்தத்தால் புது டெல்லி கலக்கமடைந்துள்ளது. இரண்டொரு டஜன் இந்திய பில்லினியர்கள் உலகளாவிய வளர்ச்சியை எட்டிய இந்திய நிறுவனங்களின் தலைவர்களாக உயர்ந்திருந்த நிலையில், ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்திய முதலாளித்துவம் அந்த வெற்றிக்களிப்பில் மயங்கி கிடந்தது. இப்போது அது பீதிக்கு அருகாமையில் பீடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் பெரும்பாலான பெருநிறுவன இந்தியாவால் ஒரு மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. இந்திய முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு சாதனையளவிலான வேகத்தில் விரிவடைந்த போது, UPA அதன் முதல் பதவிகாலத்தில் (2004-9) அதிகளவில் சமூக செலவினங்களுக்குள் திரும்பி இருந்ததாக அவை அந்த சிறிய தொகையை ஆட்சேபிக்கின்றன. மேலும் பாரிய மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்ததில் இருந்தும், நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட மற்றும் உறுதியளிக்கப்பட்ட "சீர்திருத்த" வாக்குறுதிகளில் இருந்தும், அது தொடர்ந்து பின்வாங்கிவிட்டதாகவும் அவை ஆத்திரமடைந்துள்ளன. அரசியலை கூர்மையாக வலதிற்கு நகர்த்தும் குறிக்கோளுடன், பெரும்பாலான பெருநிறுவன இந்தியா அதன் ஆதரவை உத்தியோகப்பூர்வ எதிர்கட்சியான இந்து மேலாதிக்க பிஜேபி மற்றும் அதன் பிரதம மந்திரி வேட்பாளரான குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் தரப்பில் திருப்பி உள்ளன. சுய-பாணியிலான இந்து மத சக்திமான் மோடி, இந்திய நிறுவனங்களின் இலாப நலன்களுக்காக அவரின் ஒரேசீரான அர்பணிப்பால் அதன் ஜாம்பவான்களைக் கவர்ந்துள்ளார். அவர் முதலீட்டாளர்களுக்கு வரி விட்டுக்கொடுப்புகளை, நிலம் மற்றும் ஏனைய ஊக்குவிப்புகளை வாரி வழங்கி உள்ளதோடு, உள்ளூர் எதிர்ப்புகளுக்கு இடையிலும் வியாபார திட்டங்களைத் திணித்துள்ளார், மேலும் நடைமுறையில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கி உள்ளார். ஒரு ஆயிரத்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்ட மற்றும் பத்து ஆயிரக் கணக்கானவர்களுக்கும் அதிகமானவர்களை வீடற்றவர்களாக ஆக்கிய 2002 குஜராத் முஸ்லீம்-விரோத படுகொலைகளை நேரடியாக நின்று நடத்தியவர்களை ஊக்கப்படுத்துவதிலும், பாதுகாப்பதிலும் அவர் வகித்த பாத்திரத்தை, மோடியின் பெருநிறுவன ஆதரவாளர்கள், ஓர் உயர்ந்த சாதனைகளின் மீது வேறுவிதத்தில் ஏற்பட்ட பெரும்பாலும் ஒரு சிறிய, மன்னிக்கக்கூடிய களங்கமாக பார்க்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய பில்லினியர்களில் ஒருவரான அனில் அம்பானி அவரை "இராஜாதி ராஜர்" என்று புகழ்ந்துள்ள நிலையில், இந்திய ஆளும் மேற்தட்டின் பெரும்பான்மையான பிரிவுகள் இந்த வகுப்புவாத வனப்புரையாளரை ஓர் உண்மையான இரட்சகராக தழுவி வருவது, அவற்றின் கடுமையான நெருக்கடி மற்றும் சமூகரீதியில் அவற்றின் "சந்தை-சார்" நிகழ்ச்சிநிரலைத் திணிக்க சர்வாதிபத்திய ஆட்சி வடிவங்களை நோக்கி அவை திரும்ப தயாராக இருப்பதன், இரண்டுக்குமான ஒரு முறைமையாக உள்ளது. செல்வாக்குமிக்க சர்வதேச முதலாளித்துவ பத்திரிகைகள், மோடி தலைமையிலான ஓர் அரசாங்கத்திற்கான பெருநிறுவன இந்தியாவின் அழுத்தத்தின் மீது அவற்றின் பங்கிற்கு பெருங்கவலைகளை வெளியிட்டுள்ளன. இதற்கு ஒரு சான்றாக எகானோமிஸ்ட் இதழில், “மோடி இந்தியாவை காப்பாற்றுவாரா அல்லது சிதைப்பாரா?” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் பெரும்பான்மை பிரிவுகள் சமரசமின்றி BJPஇன் நச்சார்ந்த வகுப்புவாதத்திற்கு எதிராக உள்ளனர் என்பதோடும், மற்றும் பிஜேபி அதுவே கூட ஸ்திரமின்றி, திடீரென பற்றிக் கொண்ட அரசியல் உதயமாக இருக்கிறதென்பதோடும் இத்தகைய விமர்சகர்கள் உடன்படுகின்றனர். (அது இந்தியாவின் இரண்டாவது "தேசிய கட்சியாக" இருந்தாலும் கூட, பிஜேபி மக்கள் வாக்குகளில் ஒரு கால்பங்கிற்கு அதிகமான வாக்குகளைக் கூட இதுவரையில் ஒருபோதும் வென்றிருக்கவில்லை என்பதோடு, நாட்டின் பரந்த பகுதிகளில் வெகு குறைந்த ஆதரவையே கொண்டுள்ளது.) இந்தியாவிற்குள் அது கட்டவிழ்க்கும் சமூக சக்திகளை மோடி தலைமையிலான அரசாங்கத்தால் கட்டுப்படுத்த இயலாது என்றும், சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் பொறுப்பற்ற அழிவுகரமான சர்ச்சைகளோடு பதட்டங்களைத் தூண்டிவிடும் என்றும் அதிகளவில் அனுமானிக்கும் சர்வதேச முதலாளித்துவ விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே "உள்ளார்ந்த வளர்ச்சி" மற்றும் "மதசார்பற்ற" ஒரு கட்சியாக காட்டிக் கொள்ள அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கி இருப்பதன் மூலமாக, பிஜேபி தலைவராக மோடி எழுந்திருப்பதற்கு விடையிறுப்பு காட்டி உள்ளது. இத்தகைய முறையீடுகள், புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில், பாரிய மக்களை வெகு சிறியளவில் தான் இழுத்து வரக்கூடியதாய் உள்ளது. இந்தியாவின் 1991க்குப் பிந்தைய திருப்பத்தை நவ-தாராளவாத "சீர்திருத்தத்திற்குள்" திருப்ப காங்கிரஸ் தாக்குமுனையாக செயல்பட்டதோடு, கடந்த 23 ஆண்டுகளில் 15 ஆண்டு இந்திய அரசாங்கத்திற்கும் தலைமை கொடுத்துள்ளது. “சீர்திருத்தத்தால்" இட்டுச் செல்லப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியின் ஏறத்தாழ ஒரு கால்-நூற்றாண்டிற்குப் பின்னரும், இன்று பரந்தளவிலான மக்கள் தொடர்ந்து கடுமையான வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்—ஏறத்தாழ மொத்த இந்திய குழந்தைகளில் பாதி முறையான உணவின்றி ஆற்றலிழக்க செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் பொது கல்வி மற்றும் சுகாதார திட்டங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் உபயோகமின்றி உள்ளன. மதசார்பின்மைக்கான காங்கிரஸின் பொறுப்புணர்வைப் பொறுத்த வரையில், அது போலித்தனமாக உள்ளது. தேர்தல் என்று வரும் போது, அது வகுப்புவாத பிஜேபி குறித்த அருவருப்பான உண்மைகளை உச்சரிக்கும், அதை பாசிச பாணியிலானதென்று கூட முத்திரை குத்தும். ஆனால் காங்கிரஸ் அதுவே இந்து வலதோடு இரகசியமாய் உடந்தையாய் உள்ளது. அது 2002 படுகொலைகளில் யார் உடந்தையாய் இருந்தார்களோ, மோடி அமைச்சரவையின் அந்த முன்னாள் அங்கத்தவர்களைக் குஜராத் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்குள் வரவேற்றது. மேலும் கடும் உழைப்பாளர்களுக்கு எதிராக மற்றும் இந்திய மேற்தட்டின் அன்னிய நாட்டு போட்டியாளர்களுக்கு எதிராக அதன் நலன்களைத் தூக்கிப்பிடிப்பதில் பிஜேபி உடன் அது விஸ்வாசத்தோடு ஒன்றிணைந்துள்ளது. இவ்விதத்தில் 2008இல், பாகிஸ்தானை நிலைகுலைக்க, புதிய ஜனநாயக-விரோத "பயங்கரவாத-எதிர்ப்பு" சட்டங்களைக் கொண்டு வர, மற்றும் இராணுவத்துடன் தொடர்புபட்ட ஓர் இந்து தேசியவாத பயங்கரவாத-தடுப்பு பிரிவை பொது மக்கள் பார்வையிலிருந்து அம்பலப்படாமல் இருக்க செய்யப்பட்ட முயற்சிகளை அதிகரிக்க என மும்பை பயங்கரவாத அட்டூழியத்தைப் பயன்படுத்துவதில் அது பிஜேபி உடன் கை கோர்த்தது. பெரும் எண்ணிக்கையிலான பிராந்தியரீதியிலான இனவாத மற்றும் ஜாதிய கட்சிகளோடு கூட்டணி அமைக்க முடிந்ததே, கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு திறவுகோலாக இருந்தது. இருப்பினும், தேசிய முற்போக்கு கூட்டணியை (UPA) ஒரு எச்சசொச்சமாக ஆக்கி, காங்கிரஸ் அது சார்ந்திருந்த பெரும்பாலான அதன் கூட்டாளிகளாலேயே கைவிடப்பட்டுள்ள நிலையில், அது மிக மிக வெளிப்படையாக அவமதிக்கப்பட்டது. பெருநிறுவன ஊடகங்கள் மோடி மற்றும் BJPக்கு மக்கள் ஆதரவு அலை இருப்பதாக சித்தரிக்க வேலை செய்து வருகின்ற போதினும், பெருநிறுவன பொதுக்குழு அறைகளுக்கும், மத்திய தட்டின் ஒரு சிறிய அடுக்கிற்கும் வெளியே அங்கே அந்த இரண்டுக்குமே உண்மையான வரவேற்பு இருக்கவில்லை. இந்திய மேற்தட்டுக்களின் அந்த இரண்டு பிரதான கட்சிகளின் மீதான மக்கள் அதிருப்தியின் ஒரு வெளிப்பாடாக, கடந்த டிசம்பரில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP – சாமானிய மனிதரின் கட்சி) அதிர்ச்சியூட்டும் தேர்தல் ஆரங்கேற்றம் இருந்தது. தன்னைத்தானே ஊழல் அரசியல் ஸ்தாபகத்தின் ஓர் எதிர்ப்பாளராக சித்தரித்துக் கொண்டு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஏறத்தாழ மூன்று பங்கு வாக்குகளை வென்ற ஆம் ஆத்மி கட்சி, இந்தியாவின் தலைநகர் பிராந்தியம் மற்றும் மிகப் பெரிய நகர்புற மையத்தில், விரைவாக ஒரு சிறுபான்மை அரசாங்கம் அமைக்கும் அளவிற்குச் சென்றது. தேசிய அரசியலில் ஒரு பிரதான பங்கு வகிப்பாளராக எழுவதற்கு ஒரு நல்ல வாய்ப்புள்ளதென்ற நம்பிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை, அது "போலி முதலாளித்துவத்தையே" எதிர்க்கிறது, முதலாளித்துவத்தை அல்ல என்றும், அது அரசாங்கம் அமைத்தால் அரசு தலையீடுகளில் இருந்து வியாபாரங்களுக்கு "சுதந்திரம்" வழங்க அது வேலை செய்யுமென்றும் அறிவித்து, பெரு வியாபாரங்களுக்கான அதன் விசுவாசம் குறித்து மறுஉத்தரவாதம் அளிக்க விரைந்தது. டெல்லி தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பரந்த அடுக்குகளிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சியால் ஆதரவை வென்றெடுக்க முடிந்ததென்றால் அது காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியை அன்னியமாக்குவதற்கான மற்றும் மக்கள் கோபத்திற்கான அடையாளம் மட்டுமல்ல. அது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய நாடாளுமன்ற ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவற்றின் இடது முன்னணி மீது வைக்கப்பட்ட ஒரு குற்றபத்திரிகையும் ஆகும். "மக்கள்-சார் கொள்கைகளை" நடைமுறைப்படுத்த செய்ய இந்திய ஆளும் வர்க்கத்திற்கு தொழிலாளர் வர்க்கத்தால் அழுத்தம் கொடுக்க முடியுமென்றும் அல்லது BJPஐ பதவியில் ஏறவிடாமல் தடுப்பதற்கான ஒரே கருவியென்ற அடித்தளத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்த அல்லது அந்த கட்சிக்கு தொழிலாளர் வர்க்கத்தை முறையாக அடிபணிய செய்ய வேலை செய்தும், பல தசாப்தங்களாக இந்த ஸ்ராலினிச கட்சிகள் முதலாளித்துவத்தின் முதன்மை அரசியல் தூண்களாக சேவை செய்துள்ளன. 1990களின் முதல் பாதியில் "நவ-தாராளவாத" சீர்திருத்தங்களை ஆரம்பித்த சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஸ்ராலினிஸ்டுகள் முட்டு கொடுத்ததோடு, 2004இல் UPA கூட்டணியை உருவாக்குவதில் அவர்கள் கருவியாக இருந்தனர். அதற்கடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சிறுபான்மை UPA அதிகாரத்தில் நிலைத்திருக்க அவர்கள் ஆதரவளித்தனர். அதற்கு முந்தைய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கைகளைப் போன்ற அதே கொள்கைகளையே அதுவும் நடைமுறைப்படுத்தி வருகிறதென்பதை ஏற்றுக் கொண்டே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். அனைத்திற்கும் மேலாக, அவர்களின் அரசாங்கம் இருந்த மாநிலங்களிலேயே ஸ்ராலினிஸ்டுகள், அவர்கள் எதை "முதலீட்டாளர்கள்-சார்பு" கொள்கைகள் என்று வரையறுத்தார்களோ அதையே நடைமுறைப்படுத்தினார்கள். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைநிறுத்தங்களுக்கு தடைவிதித்தது மற்றும் பெருநிறுவன திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான விவசாயிகளின் எதிர்ப்பை ஒடுக்கியது ஆகியவையும் அதில் உள்ளடங்கும். முதலாளித்துவ பரந்த அடுக்குகளால் மோடி அரவணைக்கப்பட்டதால், குறிப்பாக வெளிப்பட்ட வர்க்க போராட்ட தீவிரத்திற்கு, ஸ்ராலினிஸ்டுகள் மேலதிகமாக வலதிற்கு மாறியதன் மூலமாக விடையிறுப்பு காட்டி உள்ளனர். பிஜேபி அல்லது காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்த நீண்ட வரலாறைக் கொண்ட வலதுசாரி ஜாதிய மற்றும் பிராந்தியவாத கட்சிகளின் கலவையாக, கடந்த மாதம் அவர்கள், பிஜேபி-விரோத, காங்கிரஸ்-விரோத "மாற்றீடு" ஸ்தாபிக்கப்பட்டதை அறிவித்தனர். அந்த "மாற்றீடு" எந்தவொரு பொதுவான வேலைதிட்டமோ அல்லது பொதுவாக கையிலெடுக்கும் விடயம் கூட இல்லாமல் முற்றிலுமாக ஒரு திசைதிருப்பும் விவகாரமாக உள்ளது. இது ஏனென்றால் ஸ்ராலினிஸ்டுகள் உட்பட அதில் உள்ளடங்கி இருப்பவர்கள் அனைவரும், இந்திய முதலாளித்துவத்தின் இந்த அல்லது அந்த பிரதான கட்சிகளுடனான வலதுசாரி, தேர்தலுக்குப் பிந்தைய உபாயங்களின் போது அவர்களின் கரங்கள் கட்டப்படாமல் இருக்க விரும்புகின்றனர். |
|
|