WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
Greek students face prosecution for protests
எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கிரேக்க மாணவர்கள் வழக்கை எதிர்கொள்கின்றனர்
By Katerina Selin
13 March 2014
Back to screen version
ஏப்ரல்
21ம் திகதி,
கிரேக்க மாணவர்கள்
2011 ல் ஒரு பள்ளி
ஆக்கிரமிப்பில் பங்கு கொண்டதற்கு குற்ற வழக்கை எதிர்கொள்வர்.
அவர்கள் ஆறு மாத காலம் வரையான
சிறைத்தண்டனை பெறக்கூடும்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டின் இலக்கு,
சிக்கன நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகையில்,
கல்வியில் வெட்டுக்களுக்கு எதிராக எவர் எதிர்ப்புத்
தெரிவித்தாலும் அதை குற்றவியல் நடவடிக்கையாக்குவதே.
டிசம்பர்
2011ல்,
13 மாணவர்கள்,
தெற்கு கிரேக்கத்தில் ஒரு சிறிய கடலோர நகரான
லௌட்ராகியில் உள்ள தங்கள் தொழில்நுட்பக்கூடத்தில் ஆக்கிரமிப்பிற்கு ஏற்பாடு செய்தனர்.
“எங்கள் பள்ளி அழிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டது,
நாங்கள் எங்களைக் பாதுகாக்கவும் எங்கள்
உரிமைகளைக் கோரவும் முடிவெடுத்தோம்” என்று பங்கு பெற்றவர்களில் ஒருவர் கூறினார்.
லௌட்ராகி பள்ளி ஆக்கிரமிப்பு,
2011 அக்டோபரில்
800
பள்ளிகள் உள்ளிட்ட ஒரு வேலைநிறுத்தப் பேரலையின் ஒரு பாகமாகும்.
ஓராண்டிற்குப்பின்,
பல பள்ளிகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டன.
மேற்கு கிரேக்கப் பிராந்தியமான மக்னீசியாவில்
துறைமுக நகரமான வோலோஸில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் கல்வி நிலையத்தை ஆக்கிரமிக்க
வாக்களித்தனர்.
பல பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறை,
கட்டிட பராமரிப்பு இன்மை மற்றும்
சில பள்ளிகள் இணைக்கப்படுவதால் ஏற்படும் வரவிருக்கும் வெட்டுக்கள் ஆகியவற்றை எதிர்த்துத்
தங்கள் கதவுகளை மூடினர்.
லௌட்ராகியிலோ அல்லது வோலோசிலோ உள்ள பள்ளிகள்
எதிர்கொண்ட பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
மாறாக வெட்டுக்கள்
தீவிரப்படுத்தப்பட்டன.
ஆகஸ்ட்
2013ல் லௌட்ராகி
தொழில்நுட்பக்கூடத்தின் மாணவர்களுடைய பெற்றோர்கள்
(2011ல் அங்கு
வேலைநிறுத்தம் நடைபெற்றது)
கல்வி அமைச்சரகம் திட்டமிட்ட இன்னும்
கூடுதல் வெட்டுக்களை எதிர்த்து கடிதம் ஒன்றை எழுதினர்.
கிரேக்கம் முழுவதும் தொழில்சார்
இலக்கணப் பள்ளிகளில், 52
பாடத்துறைகள் மூடப்பட உள்ளன.
மாணவர்கள் முகங்கொடுக்கும் குற்றச்சாட்டு,
கோஸ்டாஸ் சிமிடிஸ் உடைய சமூக ஜனநாயக
PASOK அரசாங்கத்தால் மார்ச்
2000த்தில்
இயற்றப்பட்ட சட்டத்தை தளம் கொண்டது.
இது “சுமூகமாக
நடக்கும் அரச பள்ளிகளை தடை செய்பவர்கள் மீது” கிரிமினல்
வழக்கு தொடர அனுமதி தருகிறது.
மாணவர்களை பொறுத்தவரை பள்ளிகளுக்கு சேதம் விளைவித்தவர்களாக
குற்றம் சாட்டப்படவில்லை,
வெறுமனே பள்ளி ஆக்கிரமிப்பு நடத்துபவர்கள் எனப்பட்டனர்.
இச்சட்டமே,
1998-99ல் பள்ளி
மாணவர்கள் எதிர்ப்பு இயக்கம் ஒன்றிற்கு விடையிறுப்பு ஆகும்.
அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான
இளைஞர்களும் ஆசிரியர்களும் கல்வி மந்திரி ஜேராசிமோஸ் ஆர்செனிஸ்
(PASOK) உடைய
சீர்திருத்தங்களை பள்ளி ஆக்கிரமிப்புக்கள்,
ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்கொண்டனர். “ஆர்செனிஸ்
சட்டம்” என அழைக்கப்பட்டது,
உயர்நிலைப் பள்ளி பட்டம் மற்றும்
பல்கலைக்கழகத்திற்கு செல்வதை மிகவும் கடினமாக்கியது.
கிரேக்கத்தில் பள்ளி ஆக்கிரமிப்புக்கு நீண்டகால
மரபுகள் உள்ளன. 1970
களில் மாணவர்கள் அடிக்கடி தங்கள் கல்வி
நிலையங்களை எதிர்ப்பை ஒட்டி ஆக்கிரமித்தனர். 1973ல்
ஏதென்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சிக்குழுவிற்கு எதிராக எதிர்ப்புத்
தெரிவித்தபோது அவர்கள் ஒரு இரத்தக்களரி கொண்ட படுகொலையை சந்தித்தனர்.
கேர்னல்களின் ஆட்சிக்குப்பின்,
மாணவர்கள் “கல்விக்கூடத் தஞ்சம்” என்பது
குறித்து,
ஆராய்ச்சி மற்றும் கல்வியை பாதுகாக்க பொலிஸ்,
இராணுவம் பல்கலைக்கழக வளாகங்களில்
நுழைவதைத் தடுத்தனர்.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஆக்கிரமிப்புக்கள்
பலமுறை நடந்தன.
ஆனால்,
வர்க்க மோதல் தீவிரமாகும்
சூழ்நிலையில், ஆளும்
வர்க்கம் இத்தகைய எதிர்ப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரமாக உள்ளது.
ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின்
PASOK அரசாங்கம்
கல்வித்தஞ்ச விதிகளை ஆகஸ்ட் 2011ல்
ஒழித்தது.
இராணுவ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பின்னர் முதல் முறையாக,
டிசம்பர்
17, 2011ல் பொலிசார் பல்கலைக்கழக
சொத்துக்கள் மீது சோதனையை நடத்தினர்.
வருங்கால எதிர்ப்புக்களைத் தடுக்கும் நோக்கத்துடன்,
இப்பொழுது இத்தாக்குதல் பள்ளி
ஆக்கிரமிப்புக்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் நடக்கும் வெட்டுக்கள்,
கிரேக்கப் பள்ளிகளில் மக்கள் எதிர்ப்பு
மீண்டும் ஏற்பட வகை செய்துள்ளன.
கோடையில் ஆசிரியர்களும் பள்ளிக் காவலர்களும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இலையுதிர்காலத்தில் நாடெங்கிலும் மாணவர்கள்
தேசிய ஒருமைப்பாட்டு நடவடிக்கையை அவர்களுடன் மேற்கொண்டு
120 பள்ளிகளை ஆக்கிரமித்தனர்.
அரசாங்கம் அடக்குமுறையைக் கையாண்டது.
ஆசிரியர்களின் வேலைநிறுத்தம்,
இராணுவச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு
தொழிற்சங்கங்களின் உதவியால் நிறுத்தப்பட்டன.
பொலிசார் குழந்தைகளுக்கு எதிராக
குவிக்கப்பட்டனர்.
அக்டோபர் மாதம் லாமியாவில் இடைநிலைத்
தொழில்நுட்ப பள்ளி ஒன்றில் பொலிசார் குறிப்பிட்ட வகையில் கடுமையாக இருந்தனர்.
பொலிசாரின் வேலைநிறுத்தத்தை கைவிடுக
என்னும் உத்தரவை மாணவர்கள் மறுத்தபின்,
அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அரச வக்கீல் உத்தரவில்
முடித்து, 20
மாணவர்களையும் கைது செய்தனர்.
நவம்பர்
2013 ல் அரசாங்கம்
வேலைநிறுத்தம் செய்த பல்கலைக்கழக ஊழியர்களுக்கு எதிராக இராணுவச் சட்டம் சுமத்தப்படும்
என அச்சுறுத்தியது.
பெப்ருவரி 2014ல்
பொலிஸ் அதிகாரிகள் ஏதென்ஸில் பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை அக்டோபர் பள்ளி
வேலைநிறுத்தங்களில் எவர் கலந்து கொண்டனர் என வினவினர்.
பொலிஸ் நிலையம் ஒன்றில்,
ஐந்து மாணவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட அரசியல்
கருத்துக்கள் பற்றியும் அவர்களுடைய ஆசிரியர்கள்,
பெற்றோர்களுடைய கருத்துக்களையும் பற்றி
வினவப்பட்டனர்.
ஏற்கனவே சிக்கன நடவடிக்கைகள் பேரழிவுப் பாதிப்பை
ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசாங்கத்தின் செயல்கள் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தை
கொண்டவை.
இன்னும் அதிக வெட்டுக்கள் தயாரிப்பில் உள்ளன.
இக்குளிர்காலத்தில்,
கிட்டத்தட்ட
50 பள்ளிகளில்
வெப்ப எண்ணெய்க்கு பற்றாக்குறை இருந்தது.
Eleftherotypia செய்தித்தாளில் வெளிவந்துள்ள
ஆய்வின்படி,
கிரேக்க மாணவர்களில் 60%த்தினருக்கு
உணவு பாதுகாப்பாக கிடைப்பதில்லை.
இவர்களில் 23%த்தினர்
கிட்டத்தட்ட 8,000
பேர் ஊட்டச்சந்து குறைந்தவர்கள் ஆவர். 2010ல்
இருந்து கற்பிக்கும் ஆசிரியர் எண்ணிக்கை 25%
குறைக்கப்பட்டுவிட்டது.
புதிய ஆசிரியர்கள்
650 முதல்
700 யூரோக்கள்தான் மாதம் ஒன்றிற்குப்
பெறுகின்றனர். சர்வதேச கடன்கொடுப்போர்
சுமத்திய நடவடிக்கைகளின் விளைவாக,
மார்ச் 22
ஐ ஒட்டி
400 ஆசிரியர்கள்
மற்றும் 1,600 பள்ளிக்
காவலர்கள் வேலையின்மையை எதிர்நோக்குவர். |