சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Kiev to build new army, impose austerity as civil war threatens Ukraine

உக்ரேனை உள்நாட்டுப்போர் அச்சுறுத்துகையில், சிக்கன நடவடிக்கைகளை சுமத்த கியேவ் ஒரு புதிய இராணுவத்தை கட்டமைக்கிறது

By Alex Lantier
12 March 2014

Use this version to printSend feedback

பெப்ருவரி 22ல் அதிகாரத்தை கைப்பற்றிய புதிய வலதுசாரி உக்ரேனிய ஆட்சி, ரஷ்யாவுடன் அழுத்தங்கள் பெருகிய நிலையில், புதிய இராணுவத்தைக் கட்டமைக்கும் முயற்சியை கிரிமிய சுதந்திரம் பற்றிய மார்ச் 16 வாக்கெடுப்பிற்கு முன் அறிவித்துள்ளது.

கியேவ் ஆட்சியின் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ஒலெக்சாந்தர் ருர்ஷிநோவ் இராணுவ அணிதிரட்டலுக்கும் ஒரு புதிய தேசிய பாதுகாப்புப் படை அமைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். “உக்ரேனிய துருப்புக்களின் அடிப்படையில், ஒரு தேசிய பாதுகாப்புப் படையை தோற்றவிப்பது அவசியமாகும்; அதன் நோக்கம் நாட்டையும் குடிமக்களையும் அனைத்து குற்றவாளிகள், உள், வெளி ஆக்கிரமிப்புக்கள், ஆகியவற்றிடம் இருந்து பாதுகாப்பதாகும். தேசிய பாதுகாப்பு மற்றும் உக்ரேனிய படைத் தொகுப்பின் ஒரு பகுதி அணிதிரட்டலையேனும் அறிவிப்பது தேவையாகும்” என்றார் அவர்.

உக்ரேனின் கிழக்கு எல்லையில் இருக்கும் 200,000 ரஷ்ய துருப்புக்களுடன் ஒப்பிடப்பிடும்போது, உக்ரேனிடம் 6,000 செயற்பாட்டுத் துருப்புக்கள்தான் உள்ளன என்றார் ருர்ஷிநோவ்.

கியேவ், புதிய இராணுவத்தை கட்டமைக்க அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் தான் கேட்கப்போவதாக ருர்ஷினோவ் சேர்த்துக் கொண்டார். “பாராளுமன்றத்தின் முதல் பணி, நம் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் நாடுகள் தங்கள் உறுதிப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்பதாகும்.”

கியேவ், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுக்கள் நடத்துகையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அந்த அமைப்பு உக்ரேனின் 50 பில்லியன் ஹிர்வ்நியா ($5.4 பில்லியன்) வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை தீர்ப்பதற்கு உக்ரேனிய தொழிலாளர்கள் மீது ஆழ்ந்த வெட்டுக்களை சுமத்த வேண்டும் என்று கூறியுள்ளது. உக்ரேனிய தன்னலக் குழுவினரின் பரந்த செல்வம், பாசிசத் தலைமை ஆட்சி கவிழ்ப்பால் தொடப்படாததாக இருப்பதோடு, எந்த பாதிப்பிற்கும் உட்படவில்லை. மாறாக, தொழிலாளர்களின் ஊதியங்களையும், ஓய்வூதியங்களையும் வெட்டுவதற்கும், வீடுகளில் வெப்பம் ஏற்ற இயலுவதற்குக் காரணமாக இருக்கும் எரிசக்தி உதவி மானிய தொகைகளை வெட்டுவதற்கான திட்டங்கள் உள்ளன.

அமெரிக்க ஆதரவுடைய முன்னாள் மத்திய வங்கியாளர் ஆர்செனி யாட்செனியுக் இன்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து உக்ரேன் நிலைமையை விவாதிக்க உள்ளார்.

கியேவில் இப்படி போர்முரசு ஒலிப்பது, சிம்ஃபெரோபோலில் இருக்கும் கிரிமிய பாராளுமன்றம் 78-3 வாக்குகளில் நேற்று கிரிமியாவை சுதந்திர நாடு என்று மார்ச் 16 வாக்கெடுப்பிற்கு முன் அறிவித்திருக்கையில் வந்துள்ளது; அந்த வாக்கெடுப்பு ரஷ்யாவுடன் கிரிமியா தன்னை இணைத்துக் கொள்ளுமா என்றும் தீர்மானிக்கும். தனது நடவடிக்கைக்கான சட்ட முன்மாதிரியாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவில் சேர்பியாவில் இருந்து கொசோவோ பிரிந்து சென்றதை இது மேற்களிட்டுள்ளது.

பாராளுமன்றம், மேற்கத்திய ஆதரவுடன் கியேவில் நடந்த பெப்ருவரி 22 ஆட்சி கவிழ்ப்பு தெருப்பூசல்களில் பங்கு கொண்ட வலது பிரிவு (Right Sector) ஆயுதக்குழு போன்ற நாஜிசார்பு மற்றும் பாசிசக் கட்சிகளை தடைசெய்தது. அவை “கிரிமியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலைக் கொடுக்கின்றன” எனக் கூறியுள்ளது.

இன்று இரவு வரை கிரிமியாவிற்கு வாக்கெடுப்பை இரத்து செய்ய நேரம் உள்ளது என்று கியேவ் ஆட்சி கூறியுள்ளது; அமெரிக்காவின் உக்ரேனுக்கான தூதர் ஜெஃப்ரி பயாட் வாஷிங்டன் வாக்கெடுப்பின் முடிவை அங்கீகரிக்காது என்றார்.

செவஸ்டோபோலில் முக்கிய ரஷ்ய கடற்படைத் தளத்தை கொண்டுள்ள கிரிமியாவில் பெரும்பாலான மக்கள் ரஷ்ய மொழி பேசுகின்றனர்; அவர்கள் கியேவில் புதிய ஆட்சியைக் கண்டு அஞ்சுகின்றனர். அது, ரஷ்ய மொழியை உத்தியோகபூர்வ மொழி என்னும் அந்தஸ்த்தில் இருந்து அகற்றிவிட்டு, ரஷ்ய மொழி பேசுவோரை அகற்ற பாசிச கட்சிகள் கொடுத்துள்ள அழைப்பையும் ஏற்றுள்ளது. (பார்க்க, உக்ரேனில் பாசிச அபாயம்) சமீப வாரங்களில், கிரிமியாவை எடுத்துள்ள ரஷ்ய படைகள் மற்றும் பாதுகாப்புக் குழுக்கள், கியேவிற்கு விசுவாசமாக இருக்கும் பிரிவுகளை தனிமைப்படுத்தியுள்ளன.

கியேவ் சார்பு மற்றும் மாஸ்கோ சார்பு ஆதாரங்கள் ஒன்றின்மீது ஒன்று வன்முறைக் குற்றச்சாட்டுக்களைக் கூறி, உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளை இலக்கு கொண்டுள்ளன. திங்களன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம், “உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் இப்பொழுது சட்டமற்ற நிலை நிலவுகிறது; இதற்குக் காரணம், உக்ரேனின் புதிய ஆட்சியின் முழு ஆதரவுடன் செயல்படும் வலது பிரிவு எனப்படும் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளாகும் என்றது.

பெப்ருவரி 22 ஆட்சி கவிழ்ப்பில் அகற்றப்பட்ட ரஷ்ய ஆதரவு கொண்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச், ரஷ்ய ரோஸ்டோவ்-ஆன்-டோனில் இருந்து கியேவ் ஆட்சியைக் கண்டித்து பேசி, உள்நாட்டுப்போரை அது கட்டவிழ்க்கிறது என்ற குற்றச்சாட்டையும் தொடுத்துள்ளார்.”நவ-நாஜி” கூறுபாடுகளின் பங்கை குறிப்பிட்ட யானுகோவிச் கியேவ் ஆட்சி ஏற்பாடு செய்யும் எத்தகைய தேர்தல்களும் “நெறியற்றவை” என்றார்.

அவர் ஆரம்பத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கலைந்து விட்ட உடன்பாட்டில் இதே போன்ற வெட்டுக்களுக்கு பேச்சு நடத்தினாலும், யானுகோவிச் சிக்கன நடவடிக்கைகள் “மனிதத்தன்மை அற்றவை, மக்களுக்கு எதிராக இயக்கப்படுபவை” என்றார். கியேவிற்கு தான் விரைவில் திரும்ப இருப்பாதகவும் அவர் கூறினார்.

சமூகப் பேரழிவு, உள்நாட்டுப்போர் என உக்ரேனின் கீழ்நோக்குச் சரிவு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் யானுகோவிச்சை அகற்ற தீவிர வலதுசாரிக்குழுக்கள் தெருப்பூசல்களை யானுகோவிச்சின் “பெர்குட்” கலகப்பிரிவு பொலிசாருடன் நடத்த ஆதரவு கொடுத்ததில் அடிக்கோடிடப்பட்டுள்ளது.

கிரிமியாவிலும் நாட்டின் பிற பிராந்தியங்களிலும் பரந்த மக்கள் எதிர்ப்பு ஏகாதிபத்திய பாசிச குழுக்களுக்கு எதிராக இருக்கையில், கியேவ் ஆட்சி தன் அதிகாரத்தை சுமத்த இயலவில்லை. தெற்கு, மற்றும் கிழக்கு உக்ரேன் ஒருபுறம் கியேவிற்கும் மேற்கத்தை சக்திகளுக்கும் மறுபுறம் கிரிமியாவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையிலான பூகோள-அரசியல் மோதல்களால் விரிவாக்கம் அடைந்துள்ளது.

அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி திடீரென வார இறுதியில் தான் மாஸ்கோவிற்கு பயணிக்க இருந்ததை இரத்து செய்துவிட்டதை அடுத்து, மேற்கு மற்றும் புதிய ஆட்சியுடன் ஏதேனும் சமரசத்தை நாடும் கிரெம்ளினின் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

உக்ரேன் நெருக்கடியை ஒட்டி, ஐரோப்பிய அதிகாரிகள் நேற்று லண்டனில் கூடி ரஷ்யாவின் மீது தடைகள் வரும் என அச்சுறுத்தினர். பிரெஞ்சு வெளியுறவு மந்திரி லோரோன்ட் ஃபாபியுஸ் France Inter Radio விடம் உக்ரேன் மீதான மேற்கத்தைய கோரிக்கைகளை மாஸ்கோ புறக்கணித்தால், ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் இந்த வாரம் தொடங்கக் கூடும் என்றார். அவர்கள் சாதகமாக விடையிறுத்தால் [அமெரிக்க வெளிவிவகாரச் செயலர்] ஜோன் கெர்ரி மாஸ்கோவிற்கு செல்வார், தடைகள் உடனடியாக வராது. ஆனால் அவர்கள் விடையிறுக்கவில்லை என்றால் அல்லது எதிர்மறையாக விடையிறுத்தால், தொடர்ச்சியான தடைகள் இந்த வாரமே எடுக்கப்படலாம் என்றார் ஃபாபியுஸ்.

லண்டன் கூட்டங்களுக்குப்பின், போலந்தின் பிரதம மந்திரி டோனால்ட் டஸ்க், பொதுஜன வாக்கெடுப்பின் மறுதினத்தில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது தடைகள் சுமத்தப்படுவதை ஆரம்பிக்கும், அதன் விளைவு எப்படி இருந்தாலும் என்றார். “ரஷ்யா மீது தடைகள் என வரும்போது, குறிப்பாக தடைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து ஏற்கனவே உண்மையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு திங்களன்று பொருளாதார தடைகளின் தொடக்கம் இருக்கும்.” என்றார் டஸ்க்.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் CDU பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றில் கிரிமியாவை திருடுவதற்காக” ரஷ்யாவை கண்டித்தார்; கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் அவர் பேச்சை “உணர்ச்சி மிக்கது” என்றனர்.

ரஷ்யாவை கையாள்வதில் “ஒரு கடினப்போக்கு தேவை” என்ற மேர்க்கெல், “கிரிமியாவிற்கான செயல்முறையில், அதை இணைப்பது உள்ளது; ரஷ்யா அவ்வாறு செய்தால் அதை அனுமதிக்க முடியாது.” என்றார்.

ஆனால், 2 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை கொண்ட ரஷ்யாவை பொருளாதார முறையில் அடிமைப்படுத்துவது மற்றும் மேற்கத்தைய சந்தைகளில் இருந்து அகற்றுவது என்பது வெடிப்புத் தன்மை உடைய பொருளாதார, அரசியல் விளைவுகளை கொண்டது. ஐரோப்பாவிற்கான ரஷ்ய ஏற்றுமதிகள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆகும்; ரஷ்யாவே ஐரோப்பிய ஏற்றுமதிகளில் 1% த்தான் வாங்குகிறது. ஐரோப்பா தன் இயற்கை எரிவாயுத் தேவைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்கு ரஷ்யாவை நம்பியுள்ளது.