சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

US, Europe step up pressure as Ukrainian crisis intensifies

உக்ரேனிய நெருக்கடி தீவிரமாகையில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அழுத்தங்களை அதிகரிக்கின்றன

By Peter Symonds 
8 March 2014

Use this version to printSend feedback

ரஷ்யா மற்றும் ரஷ்ய-சார்பு உக்ரேனிய அதிகாரிகளுக்கு எதிரான அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய (EU) தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை வெள்ளியன்று ரஷ்யா கண்டிக்கையில் உக்ரேனில் அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் வியாழன் அன்று நடத்திய தொலைபேசி உரையாடலில், ஒபாமா முழு நிபந்தனையற்ற சரணாகதி என்பதற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தார். ரஷ்யா, கியேவில் பாசிசத் தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் மேற்கத்தைய-சார்பு ஆட்சிக்குழு நிறுவப்பட்டுள்ளதை அங்கீகரித்து, பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்றும் கிரிமியாவில் இருந்து அனைத்து துருப்புக்களையும் அகற்றி, “சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு” கதவு திறக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் அமெரிக்கா, பெயர் குறிப்பிடப்படாத ரஷ்ய, உக்ரேனிய தனிநபர்கள், நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்து; அதற்கு போலிக்காரணமாக, கிரிமிய பிராந்திய பாராளுமன்றம், உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியது பயன்படுத்தப்பட்டது. ரஷ்ய ஆதரவுடைய இராணுவ சக்திகள், ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையில் உள்ள கிரிமிய தீபகற்பத்தை எடுத்துக் கொண்டுள்ளன; அங்கு, கருங்கடல் துறைமுகமான செவெஸ்டோபோலில் ரஷ்ய கடற்படை ஒரு பெரிய தளத்தையும் கொண்டுள்ளது.

ஒபாமா நிர்வாகம், லித்துவேனியாவிறகு 6, F-16 போர் விமானங்கள் மற்றும் 12, F-16 உட்பட 300 அமெரிக்கத் துருப்புக்களையும் அடுத்த வாரம் போலந்திற்கு அனுப்புவதின் மூலமும் மற்றும் அமெரிக்க அழிக்கும் கப்பல் ஒன்றை கருங்கடலுக்கு அனுப்புவதின் மூலமும் அழுத்தங்களை அதிகரித்துள்ளது. மோதலுக்கு நடுவே, நேட்டோ நட்பு நாடான துருக்கி, எட்டு F-16 போர் விமானங்களோடு கருங்கடல் பகுதி மீது வேவுபார்த்த ரஷ்ய விமானம் ஒன்றை இடைமறித்து தடுத்தது.

பொருளாதாரத் தடைகளுக்கான தன்னுடைய மூன்று கட்ட திட்டத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்துவிட்டது. பிரான்சின் வெளியுறவு மந்திரி லோரோன்ட் ஃபாபியுஸ் நேற்று மாஸ்கோ பின்வாங்காவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று எச்சரித்தார். "மிகவும் துரிதமான முடிவுகள் இல்லை என்றால், அதற்கு பொறுப்பானவர்கள் மற்றும் ரஷ்ய வணிகங்கள் புதிய நடவடிக்கைகளுக்கு இலக்காக இருக்கும்” என்று France Info வானொலிக்கு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய தடைகள், அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் “ரஷ்ய ஆக்கிரமிப்பை” கண்டித்து, “உக்ரேனின் இறையாண்மை” அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு  ஒரு பிரளய பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பாசாங்குத்தனத்தின் தரம், அதிரச்சி அளிக்கிறது. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உக்ரேனில் ஆக்கிரோஷமாக தலையிட்டு, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மட்டும் அகற்றவில்லை; ஆனால் வாஷிங்டன் சூழ்ச்சிகள், தலையீடுகள் மூலம் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போர்களை ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவிலும் நடத்தியுள்ளது.

சமீபத்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சரகத்தின் அறிக்கை ஒன்று நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்களை “மிகத் தீவிர ஆக்கபூர்வமற்ற அணுகுமுறை” என்று கண்டித்துள்ளது. அது, “ரஷ்யா பொருளாதார தடைகள், அச்சுறுத்தல்கள் சொல்லாட்சியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, ஆனால் அவை சுமத்தப்பட்டால், விடையிறுக்கப்படாமல் இருக்க மாட்டாது.” என எச்சரித்தது

புட்டின் ஒபாமாவுடன் தொலைபேசியில் நடத்திய உரையாடல் குறித்த தனி அறிக்கை, ரஷ்ய ஜனாதிபதி உக்ரேனில் உள்ள நிலைமை “அரசியலமைப்பிற்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பின்” விளைவு என்று சுட்டிக்காட்டினார் என குறிப்பிட்டுள்ளது. புட்டின் ரஷ்ய நடவடிக்கைகளை பாதுகாத்து, கியேவில் உள்ள ஆட்சி “கிழக்கு, தென் கிழக்கு, கிரிமியா பிராந்தியங்களில் முற்றிலும் சட்டவிரோதமான முடிவுகளை எடுத்துள்ளது” என்றார்.

ஆனால் ஒரு சமரச அடையாளத்தையும் புட்டின் காட்டிய முறையில் அமெரிக்க-ரஷ்ய உறவுகள்  “தனிப்பட்ட வேறுபாடுகளுக்காக தியாகம் செய்யப்பட்டுவிடக்கூடாது, அவை சர்வதேசப் பிரச்சினைகளில் முக்கியமாக இருந்தாலும்” என்று கூறினார். பின் நேற்று அவருடைய செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யாவிற்கும் மேற்கிற்கும் “இடைய உள்ள மிக ஆழமான கருத்து வேறுபாடுகள்” ஒரு புதிய பனிப்போருக்கு இட்டுச் சென்றுவிடாது என்னும் நம்பிக்கையை வெளியிட்டார்.

அமெரிக்க ஆதரவு கொண்ட உக்ரேனிய ஆட்சியின் தீவிர வலதுசாரித் தன்மை நேற்று பாசிச வலது பிரிவு அமைப்பின் தலைவர் டிமிட்ரோ யரோஷ் மே மாதம் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களில் நிற்பார் என்ற அறிவிப்பில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. ரஷ்ய-பிணைப்பு கொண்டிருந்த ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை அகற்றிய ஆட்சி கவிழ்ப்பில் வலது பிரிவு மற்றும் தீவிர வலது ஸ்வோபோடா கட்சி கொண்டிருந்த பங்கை உயர்த்திக் காட்டி, செய்தித்தொடர்பாளர் ஆண்ட்ரி டராசென்கோ: “இப்புரட்சியின் தலைவர்களாக நாங்கள் இருக்கிறோம்” என அறிவித்தார்.

யரோஷ், யானுகோவிச்சின் பிராந்தியங்களின் கட்சி, மற்றும் உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்; மிக சமீபத்திய தேர்தல்களில், இவை இரண்டும் ஸ்வோபோடாவை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தன. வலது பிரிவு —இதன் ஆயுதமேந்திய குண்டர்கள் யானுகோவிச் எதிரப்புக்களில் முக்கியமாக இருந்தனர்— ரஷ்யாவுடன் போருக்கு தயாரிப்புக்களை “திரட்டுகிறது” என்று டாரசென்கோ பெருமையாகக் கூறினார்.

கியேவ் ஆட்சியின் இடைக்காலப் பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் நேற்று ரஷ்யாவுடன் சமரசத்திற்கு இடமில்லை என அப்பட்டமாக தெரிவித்தார்; உக்ரேனில் இருந்து கிரிமியா பிரிவதற்கான எந்த முயற்சியும் “சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று கண்டித்தார். வாக்கெடுப்பிற்கு ஆதரவு கொடுப்பவர்கள் “பிரிவினைவாதிகள், துரோகிகள” என்றார். நேற்று ஒரு நீதிமன்றம் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் Sergei Aksyonov க்கு கைது ஆணை ஒன்றை பிறப்பித்திருந்தது.

நேற்று உக்ரேனிய நிர்வாகம், ரஷ்ய எரிவாயு பெருநிறுவனமான காஸ்ப்ரோம் அண்மையில் கொடுத்த எரிவாயுவிற்கு பணம் கொடுக்கவில்லை; பாக்கித் தொகை இப்பொழுது கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்கள் என உள்ளது. பணம் கொடுக்க மறுப்பது காஸ்ப்ரோம் எரிவாயு அளிப்பதை நிறுத்தும் என்ற அச்சுறுத்தலுக்குப் பின் தீவிரமாகும்; அது “நாங்கள் ஒன்றும் இலவசமாக எரிவாயுவை அளிக்க முடியாது” எனக் கூறியுள்ளது. காஸ்ப்ரோம் மேற்கொள்ளும் எத்தகைய எரிவாயு விநியோகம் நிறுத்தமும், உக்ரேனை மட்டும் தாக்காமல், உக்ரேன் வழியாக இயங்கும் குழாய்கள் வழியாக எரிவாயுவை பெறும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்க தலைமையிலான ஆக்கிரோஷ மோதலுக்கு ரஷ்யாவின் விடையிறுப்பு, ஊழல் மிகுந்த ரஷ்யத் தன்னலக்குழுக்களின் நலன்களைத்தான் புட்டின் ஆட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற பலவீனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ரஷ்ய தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தை கிளறிவிட்டு, உக்ரேனை ஒரு உள்நாட்டுப் போரில் ஆழ்த்தும் ஆபத்தை புட்டின் உயர்த்திக்காட்டுகிறார்; இது அனைத்து பிரதான சக்திகளையும் ஈர்த்து உலகத்தையும் பேரழிவில் ஆழ்த்திவிடும்.

கிரிமியாவில் தனது நிலையை பலப்படுத்திக்கொள்ள ரஷ்யா முயல்கிறது. நேற்று மாஸ்கோவில் கிரிமிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தபின், ரஷ்ய பாராளுமன்றத்தின் மேல் பிரிவின் தலைவர் வாலென்டினா மாட்வியன்கோ மாஸ்கோவில் ரஷ்ய தேசியவாதிகளின் பெரும் அணிவகுப்பில் கூறுகையில், கிரிமியா ரஷ்ய கூட்டமைப்பில், வாக்கெடுப்பில் அது அவ்வாறு விரும்பினால், ஒரு பகுதியாக வரவேற்கப்படும் என்றார்.

கிரிமிய தீபகற்பம், கருங்கடலுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் ரஷ்ய கடற்படை செல்லுவதற்கு முக்கிய மூலோபாயத் தளம் ஆகும். Lake Donuzlav நுழைவாயில் அருகே இரண்டு போர்க்கப்பல்களை, ரஷ்ய கடற்படை விரைந்து நிற்க அனுப்பியுள்ளது; இது பல உக்ரேனிய கடற்படை கப்பல்கள் தங்கள் தாயக தளங்களை நெருங்காமல் திறமையுடன் தடுத்துவிடும். செவெஸ்டோபோலில் உக்ரேனிய இராணுவத் தளத்திற்கு வெளியே, ரஷ்ய ஆதரவுடைய சக்திகள் நிலை எடுத்துக்கொள்ள முயற்சித்த போது ஒரு மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது, ஆனால் தீவிர நிகழ்வின்றி முடிந்துவிட்டது.

இத்தகைய எளிதில் தீப்பற்றக்கூடிய நிலைமைக்கான முக்கிய பொறுப்பு ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் நட்பு நாடுகளிடமே உள்ளது; இவை, என்ன செலவு மற்றும் என்ன ஆபத்துக்கள் இருந்த போதிலும் கூட ரஷ்ய அரசாங்கத்தின்மீது அவமானகரமான இழிந்த பின்வாங்கலை சுமத்த முற்பட்டுள்ளன.