World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR US, European Union impose sanctions against Russia அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை சுமத்துகின்றன
By Alex Lantier அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பாவில் மிகப் பெரிய இராணுவ கட்டமைப்பை அதிகரிக்கின்றபோது, மேற்கத்திய சக்திகள், வியாழன் அன்று ரஷ்யாவிற்கு ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் அதிகரித்தனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிடம் இருந்தான தடைகளுக்கு உடனடிப் போலிக்காரணம், கிரிமிய தீபகற்பத்தின் பிராந்திய பாராளுமன்றத்தில் உக்ரேனிடம் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்குகளும், பின்னர் இந்த மாதம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பிற்கும் தீர்மானம் இயற்றப்பட்டதாகும். ரஷ்ய ஆதரவு சக்திகள் இந்த மூலோபாய தீபகற்பத்தை எடுத்துள்ளன; அங்கு ஒரு முக்கிய ரஷ்ய கடற்படைத்தளம் செவெஸ்டோபோலில் உள்ளது, பெரும்பாலான மக்கள் ரஷ்ய மொழி பேசுபவர்களாவர். பிப்ரவரி 22 அன்று ஒரு மேற்கத்திய ஆதரவு, பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பு மூலம் நிறுவப்பட்டுள்ள கியேவ் ஆட்சி, நாட்டின் ரஷ்ய சார்பு பகுதிகளில் இருந்து பரந்த எதிர்ப்பை முகங்கொடுக்கிறது. அதன் முதல் நடவடிக்கை, உக்ரேனில் ரஷ்ய மொழியை உத்தியோகபூர்வ மொழி என்ற அந்தஸ்த்தில் இருந்து அகற்றியது ஆகும். வியாழன் காலையில், ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை விவாதிக்க சந்திக்கத் தயாராக இருக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா ஒருதலைப்பட்சமாக ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான விசா தடைகளுக்கும், பொருளாதார தடைகளுக்கும் ஒப்புதல் கொடுத்து நிர்வாக ஆணை ஒன்றை வெளியிட்டார். ஒபாமாவின் வாதங்களை எதிரொலித்த வகையில் பின்னர் நேற்று, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அதையொத்த ரஷ்யாவிற்கு எதிரான மூன்று-கட்ட திட்டம் கொண்ட தடைகளை அறிவித்தனர். கிரிமியாவில் ரஷ்ய செயல்கள் “அசாதாரணமானவை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் அசாதாரண அச்சுறுத்தல் ஆகும்” என்று ஒபாமாவின் ஆணை விவரிக்கிறது. காங்கிரசிற்கு நிர்வாக ஆணையை அறிவித்த ஒபாமாவின் செய்தி, அது “நபர்களை இலக்கு கொள்ளும் – கிரிமிய பிராந்தியத்தில் உக்ரேன் அரசாங்கத்தின் இசைவு இல்லாமல அரசாங்க அதிகாரத்தை உறுதிப்படுத்துபவர்கள் உட்பட— உக்ரேனில் ஜனநாய வழிவகைகள், நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துபவர்கள் இதில் அடங்குவர்.” எனக் கூறுகிறது. நாளின் பிற்பகுதியில் ஒரு செய்தி அறிக்கையில் ஒபாமா: “கிரிமியா வருங்காலம் பற்றி முன்வைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு உக்ரேனிய அரசியலமைப்பை மீறுவதுடன் சர்வதேச சட்டத்தையும் மீறும். உக்ரேன் வருங்காலம் பற்றிய எந்த விவாதமும் உக்ரேனின் நெறியான அரசாங்கத்தை அடக்கியிருக்க வேண்டும். 2014ல் நாம், ஜனநாயக தலைவர்களை தாண்டி எல்லைகளை வரையும் கடந்த காலத்தில் இல்லை.” என்று சேர்த்துக் கொண்டார். உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து வரும் ஒவ்வொரு அறிக்கையையும், அதை ஊடகம் கிளிப்பிள்ளை போல் எதிரொலிக்கையில், இந்த அறிக்கைகள் பாசாங்குத்தனம் நிறைந்து முற்றிலும் முரண்பாடுகளுடன் காணப்படுகின்றன. உண்மையில் வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும்தான் உக்ரேனிய அரசியலமைப்பை மிதிக்கின்றன; சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆட்சி கவிழ்ப்பு மூலம் ஒரு வலதுசாரி ஆட்சி நிறுவப்பட உதவின. உக்ரேனின் உறுதிப்பாட்டை குலைக்கின்றனர்" அதன் அரசியலமைப்பை மீறுகின்றனர் என்பதற்காக எவரேனும் காவலில் வைக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துக்களும் பறிமுதல்செய்யப்பட வேண்டும் என்றால், அவர்கள் வாஷிங்டனிலும் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகளேயேகும். “ஜனநாயக தலைவர்களை மீறி வரையப்பட்ட....எல்லைகள்” என்பதை விமர்சிக்கும்போது ஒபாமா, தேசிய இறையாண்மையை மீறி நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய தன்மையை உயர்த்தியுள்ள மற்றும் முடிவிலா போரில் ஈடுபடும் ஒரு நாட்டின் தலைமை நிர்வாகியாக பேசுகிறார். மேற்கத்தைய சக்திகள் ஒருதலைப்பட்சமாக ஒரு ஐரோப்பிய நாட்டின் (யூகோஸ்லாவியா) எல்லைகளை திரும்ப வரைந்து, கொசோவோவை சேர்பியாவில் இருந்து பிரித்தன; பால்கன்களில் சேர்பிய, ரஷ்ய செல்வாக்கை சீர்குலைக்கும் நோக்கில் அதை சுதந்திரம் என அறிவித்தன. இன்னும் பரந்த அளவில், வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவும், மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளின் இறையாண்மையை மீறி ட்ரோனைப் பயன்படுத்தி கொல்லும் உரிமையையும் கொண்டுள்ளனர். “நெறியான”, “ஜனநாயக” அரசாங்கங்கள் பற்றிய ஒபாமாவின் மேற்கோள், வலதுசாரி மற்றும் யூத எதிர்ப்பு சக்திகள், Right Sector ஆயுதக்குழுக்கள், ஸ்வோபோடா கட்சி போன்றவற்றை அடிப்படையாக கொண்டது: இவை, இரண்டாம் உலகப்போரின் போது யூத இனப்படுகொலையை நடத்திய உக்ரேனிய SS பிரிவுகளை பாராட்டின. அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் செயல்பாட்டுக்கு பாசிச சக்திகளில் தங்கியிருப்பது, பொருளாதார தடைகள் குறித்த ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளன. விவாதங்களின்போது, கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகள், போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, பால்டிக் நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும கடுமையான விதிகள் தேவை என அழுத்தம் கொடுத்துள்ளன. “எத்தகைய துணை இராணுவ அமைப்புக்களையும் கலைப்பதற்கான விரைவான நடவடிக்கைகள் தேவை” என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது – இக்கோரிக்கை ரஷ்ய சார்பு கிரிமியாவில் உள்ள தற்காப்புக் குழுக்களை இலக்கு கொண்டது. எனினும், பிரித்தானியாவின் Daily Telegraph இக்கோரிக்கை கைவிடப்பட்டது என குறிப்பிட்டிருந்தது, “ஏனெனில், அது கியேவ் குழுக்களுக்கும், குறிப்பாக தீவிர-வலது தேசியவாதக் குழுக்கள் என்று புதிய அரசாங்கத்தின் முதுகு எலும்பாக இருப்பவற்றிற்கும் பொருந்தும்.” வாஷிங்டன், கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு எதிரான அதன் இராணுவ நிலைப்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. வியாழன் அன்று அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் 12, F-16 போர்விமானங்களை போலந்துக்கு அனுப்புவதாகவும், ஏவுகணைத் தாக்குதலை அழிக்கும் USS Truxtun ஐக் கருங்கடலுக்கு அனுப்புவதாகவும் கூறினர்; அது உக்ரேன் மற்றும் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ளது. அமெரிக்க கடற்படையின் வலைத் தளங்களின் கூற்றின்படி, Truxtun, சமீபத்தில் இப்பிராந்தியத்திற்கு வந்துள்ள விமானம் தாங்கி USS George H.W. Bush போர்க்கப்பல் குழுவின் ஒரு பகுதி ஆகும். மாஸ்கோ இதை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு ரஷ்யாவில் மாபெரும் வான்பாதுகாப்பு பயிற்சிகளை நடத்தியது. இராணுவச் செய்தித் தொடர்பாளர் கேர்னல் ஒலெக் கொச்டோவ் இதை இப்பிராந்தியத்தில் வான் பாதுகாப்பு பிரிவுகளால் நடத்தப்பட்ட “மிகப் பெரிய பயிற்சி” என்றார். மேற்கத்தைய சக்திகள் உக்ரேனுக்கு Organization for Security and Cooperation in Europe உடைய இராணுவ அவதானிகளை அனுப்புகின்றன; கிரிமியாவிற்குள்ளும் அவர்களை அனுப்ப முயற்சிக்கின்றன. வாஷிங்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்னோடியில்லாத அளவிற்கு ரஷ்யாவுடன் மோதலைத் தொடங்குகின்றன; இது, ரஷ்யாவை உக்ரேனில் நிலைப்பாட்டில் இருந்து கீழிறக்கி அவமானப்படுத்தவும், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆட்சியையும், அப்பிராந்தியத்தில் ரஷ்ய செல்வாக்கையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கதை கொண்டது. இக்கொள்கை, மேற்கத்தைய சக்திகளின் ஜனநாயகத்தின் மீதான நேசத்தால் உந்தப்படுகிறது என செய்தி ஊடகங்கள் சித்தரிப்பது வெறும் பொய்கள் மட்டுமேயாகும். இது ஏகாதிபத்தியத்தின் அக்கறைகளுடன் பிணைந்துள்ளது. இவற்றில் அமெரிக்க போர்த்திட்டங்களுக்கு ரஷ்யாவின் தடை போன்ற பங்கு அடங்கும்; கடந்த செப்டம்பரில் இதன் சிரியாவை தாக்கும் திட்டங்கள் பயனற்றுப் போயின, மற்றும் NSA ஒற்றுக்களை வெளிப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய ஒற்று நிறுவனங்கள் மக்கள் மீது வெகுஜன, அரசியலமைப்பு விரோத ஒற்றுக்களை அவர் அம்பலப்படுத்தியபின் தஞ்சம் கொடுத்தது ஆகியவை உள்ளன. செவெஸ்டோபோல் தளத்தின் முக்கியத்துவம் பற்றி செய்தி ஊடக மௌனம் உள்ளது; கியேவ் இதை, இப்பொழுது உள்ளூர் கிரிமிய அதிகாரிகளிடம் இருந்து பற்றி எடுத்து மேற்கத்தைய கட்டுப்பாடிற்குள் கொண்டுவர விரும்புகிறது. இது, கடந்த ஆண்டு சிரிய போர் அபாயத்தின்போது மத்தியதரை கடலில் ரஷ்ய கடற்படை நிலைப்பாடுகளில் முக்கிய பங்கை கொண்டு இருந்தது. ஐரோப்பாவின் மையத்தில் அழுத்தங்களை அதிகரித்து, உலகச் சந்தைகளில் இருந்து 2 டிரில்லியன் டாலர்கள் பெறுமதியான ரஷ்ய பொருளாதாரத்தை வெட்ட அச்சுறுத்துகையில், ரஷ்ய ஆளும் உயரடுக்கு இறுதியில் பின்வாங்கிவிடும் என ஏகாதிபத்திய சக்திகள் கணக்கிடுகின்றன. வியாழன் பிற்பகுதியில் ஒபாமா புட்டினுடன் ஒரு தொலைபேசி அழைப்பில் ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கி, கிரிமியாவில் ஒரு சர்வதேச கண்காணிப்பாளர்கள் இருத்தப்படுவதற்கு ஒரு உடன்பாட்டை கோடிட்டுக் காட்டினார். உக்ரேனில் ஒரு செல்வாக்கற்ற சோவியத் சார்பு ஆட்சி சரிவை பார்த்தபின், ரஷ்ய தன்னலக்குழுவினர் லண்டன், ஜூரிச்சில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளை காப்பாற்ற பெரும் திகைப்பில் எதையும், எவருக்கும் செய்வர் என்று எதிரபார்க்கின்றனர். கிரிமியா பற்றிய ரஷ்யாவின் விடையிறுப்பு, அமெரிக்க அதிகாரிகளால் எதிர்பார்க்கப்பட்டது மற்றும் அணுசக்தி நாட்டிற்கு எதிராக அழுத்தங்களை பெரிதும் தீவிரப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆளும் வர்க்கத்தில் ஒரு பிரிவேனும் போருக்கு தயார் என்று இருப்பது தெளிவாகிறது. மேலும் ரஷ்யாவுடன் முழு மோதலை நோக்கி நகர்கையில், அமெரிக்க, மற்றும் ஐரோப்பிய சக்திகள் அதன் பரந்த திட்டமிடப்படாத விளைவுகளை அதில் பொருளாதார, இராணுவ, அரசியல் அதிர்ச்சிகளை அதிர்வுகளால் ஏற்க நேரிடும். ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், ஐரோப்பிய பொருளாதாரத்தின் பெரும் பகுதியை மூடும் என்பதை ஐரோப்பிய வர்ணனையாளர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்; இவை ரஷ்யவைத்தான் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றிற்கு பெரிதும் நம்பியுள்ளன. பெயரிட விரும்பாத அமெரிக்க அதிகாரி “ரஷ்யா இப்பொழுது ஒரு இரண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரம், நீங்கள் விரும்பும்படி பொருளாதார தடைகளை சுமத்தினால் அதைச்செய்யும்போது நீங்கள உங்களையே கொன்று கொண்டுவிடாமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார். |
|