தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் March 18 protest against social cuts in France: A political dead end பிரான்சில் சமூகநல வெட்டுக்களுக்கு எதிரான மார்ச் 18 ஆர்ப்பாட்டங்கள்: ஓர் அரசியல் முட்டுச்சந்து
By Alex Lantier and Stéphane Hugues Use this version to print| Send feedback
சோசலிஸ்ட கட்சியின்
(PS)
ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சமூகநல வெட்டுக்களுக்கு எதிராக
நேற்று தொழிற்சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்,
தொழிலாளர் வர்க்கம்
முகங்கொடுக்கும்
பாசிசம்,
அதிகரிக்கும் போர் அச்சுறுத்தல் மற்றும்
சிக்கன நடவடக்கைகளுக்கு எதிராக போரிட விரும்பும்
தொழிலாளர்களுக்கு
ஒரு அரசியல் முட்டுச்சந்தாகும். CGT எனப்படும் ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு கடந்த மாதம் எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது; அதே நேரத்தில் தாங்கள் ஹாலண்டின் “பொறுப்புணர்வு ஒப்பந்தத்திற்கு” (Pacte de responsabilité) எதிராக இல்லை என்றும் வலியுறுத்தியது; அதுவோ பல்லாயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை சமூகநல நிதியில் இருந்தும் அதேபோல பெருநிறுவன வரிகளில் இருந்தும் வெட்டுகிறது. இத்தகைய எதிர்ப்புக்கள், ஹாலண்டின் வெட்டுக்களுக்கு தொழிற்சங்கங்கள் பேரம் பேசியதை மறைக்கும் எரிச்சலூட்டும் வடிவமைப்பு கொண்டவை, மற்றும் தொழிலாளர்களுக்கு எதுவும் வழங்கப்போவதில்லை. இவை சுயதிருப்தி மற்றும் பேரினவாத அதிகாரத்துவத்தினருக்கும் சமூகநல வெட்டுக்கள் குறித்து ஆழ்ந்த கவலையும் சீற்றமும் கொண்ட தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பெரும் சமூக பிளவையும், நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) உயரும் செல்வாக்கையும், உக்ரேனில் உள்ள ஆக்கிரோஷ, தீவிர வலது ஆட்சிக்கு PS கொடுக்கும் ஆதரவையும் உயர்த்திக் காட்டுகின்றன.
இந்த இரண்டு சமூக தட்டுக்களுக்கு இடையே உள்ள வர்க்க
அழுத்தங்கள் பெருகிய முறையில் முன்னணிக்கு வந்துள்ளன.
தொழிற்சங்கங்களும், போலி இடது கட்சிகளும் 2012 தேர்தல்களின்
இறுதிச்சுற்றில்
PS
க்கு ஆதரவு கொடுத்தன, ஹாலண்டிற்கு எதிர்ப்பை தடுக்க
முற்படுவதில் தீவிரம் கொண்டவை.
CGT
யின் தலைவர்
தியரி
லுபோன்
நேற்று இது “ஹாலண்ட்-எதிர்ப்பு
ஆர்ப்பாட்டம் இல்லை” என்று வலியுறுத்தினார். ஆனால்
தொழிலாளர்களிடையே
PS
க்கு எதிரான சீற்றம் விரிவடைந்துள்ளது. வீடுகளுக்கு சென்று உதவிடும் செவிலியாக உள்ள CGT பிரதிநிதி எலிசபெத் கூறினார்: “ ஹாலண்டின் அரசியல் கொடூரமானவை, மூன்று முறையும் கொடூரமானவை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து பிரான்சில் தலைமை மிக மோசமாக உள்ளது.... ஹாலண்ட் வந்தார், ஆட்சியோ வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை விட மோசமானதாக உள்ளது. மேலதிக வேலை நேரம் இயலாத ஒன்று. எங்களுக்கு மேலே இருக்கும் ‘இடது ஆபத்துத்தான் இது”. தான் உக்ரேன் நிலையைக் கவனித்து வருவதாகக் கூறிய அவர், PS தீவிர வலது சக்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் தான் வியப்படையமாட்டேன் என்றும் கூறினார். “நம் ஜனாதிபதி மேற்கோள் அடையாளமில்லாத இடது, உண்மையில் அவர் வலதுசாரிதான். எல்லா இடங்களிலும் பணம் நிலைப்பாடு கொண்டுள்ளது.” லுபோன் பொறுப்புணர்வு ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை என்று உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் குறிப்பிட்டதற்கு, எலிசபெத் விடையிறுக்கையில்: “வேறொரு காலத்தில் எதிர்ப்புக்கள் மாற்றத்தை கொண்டுவந்தன. இப்பொழுது மாறிவிட்டது. தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒரு தொட்டிக்குள் உள்ள பன்றிகள் போல் நட்பு அமைப்புக்களாகும். தொழிற்சங்க தலைவர்களிடையே புரிதல் உணர்வு உள்ளது.... தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் அமைப்புக்கள் அல்ல. வறிய முட்டாள்களான நாங்கள் தெருக்களில் இருக்கிறோம், அவர்கள் தங்கள் ஆடம்பரமான வீடுகளில் உள்ளனர்” என்றார். ஒரு பொது வேலைநிறுத்தம் தேவை என்றார் அவர். “நாம் இந்நாட்டில் அனைத்தையும் ஸ்தம்பிதத்திற்கு கொண்டுவர வேண்டும். நம்மால் அவ்வாறு செய்வது எளிது. இன்று நாம் இங்கே செய்வது ஒரு வெளிப்பாட்டை கொடுக்கிறது; ஆனால் அது எங்களுக்கு எதையும் கொண்டுவரவில்லை.”
வீடுகளுக்கு
சென்று
உதவிடும்
இன்னொரு
செவிலியான சோபி கூறினார்: “நம் சுகாதாரக் காப்பீட்டில் மற்றும்
நம் ஊதியங்களில் வெளிப்படையான பிரச்சினை உள்ளன.
2008ல் இருந்து எனக்கு ஊதிய உயர்வு இல்லை. அதன்
அர்த்தம்,
10, 12 சதவிகித ஊதிய வெட்டு ஆகும்.” பொறுப்புணர்வு
ஒப்பந்தத்தை
ஒருநாள் எதிர்ப்பின் மூலம் எதிர்த்துப் போராட முடியாது என்றார்
அவர். “ஜனாதிபதி ஹாலண்ட் வலது என்னும் முறையில்
இதையே செய்வார். அவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் இருந்து
வருபவர்கள் (அரச அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கும் தேசிய
நிர்வாகப் பள்ளி
[L'Ecole nationale d'administration]).
வேறுவிதமாக அவர்களால் செய்ய முடியாது. WSWS நிருபர்கள், Jean-Luc Mélenchon உடைய இடது கட்சி (PG) உறுப்பினரும் மற்றும் வடக்கு பிரான்சில் CGT இன் பிரதிநிதியுமான மிசேலுடன் பேசினர். அங்கு PS ன் மதிப்பிழப்பு, மற்றும் அதன் முதலாளித்துவ “இடது” நட்பு அமைப்பான PG உடைய அவமதிப்பு ஆகியவற்றின் மத்தியில் FN இன் தலைவர் மரின் லூ பென் சமீபத்திய தேர்தல்களில் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளார். அவர் எதை சாதிக்க போவதாக நம்புகிறார் என கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில்: “மூன்று ஆண்டுகளுக்கு முன் சார்க்கோசியின் கீழ் ஒரு ஒளியை தூண்டியது போல் இப்பொழுதும் செய்ய விரும்புகிறோம்” என்றார். அவர் முன்மாதிரி எனக்கருதும் CGT, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தை விற்றுவிட்டது, அது சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கள் நடைமுறைக்கு வர அனுமதித்தது என்று WSWS நிருபர்கள் சுட்டிக்காட்டியபோது, அவர் பேச்சை மாற்றிக்கூறினார்: “அப்பொழுது CGT யின் தேசிய செயலர் பேர்னார்ட் தீபோ. வடக்கே உள்ள நாங்கள் அவருக்கு எதிராக இருந்தோம்.” ஐரோப்பாவில் பாசிசத்தையும் FN ஐயும் எதிர்த்துப்போரிட அவரிடம் மூலோபாயம் உள்ளதா எனக் கேட்கப்பட்டதற்கு மிசேல் ஒன்றும் கூறவில்லை. “லு பென், அவர் ஒரு சிறிய பெண், அவரிடம் ஏதும் இல்லை, வேலைத்திட்டமும் இல்லை.... சமூகத்தின் மிக எதிர் துருவங்கள் எதுவும் செய்வதில்லை; சமூக எதிர்ப்பு எப்பொழுதும் இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் உயர் இலக்கைக் காண முற்படுகின்றனர்.” தேசிய எதிர்ப்புக் குழுவின் (Conseil national de la Résistance -CNR) —தளபதி சார்ல்ஸ் டு கோல் மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) கூட்டு, இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழ் நாஜிக்களுக்கு எதிராகப் போரிட்டது— சிந்தனைகள் புதுப்பிக்கப்படும் என்றார் அவர். CNR இரண்டாம் உலகப்போருக்குப்பின் சோசலிசப் புரட்சி வராமல் தடுக்கவும், முதலாளித்துவத்தை காப்பாற்றவும், நாஜிக்களுடன் ஒத்துழைத்து பிரெஞ்சு குற்றங்களை மூடி மறைத்தது என்று WSWS சுட்டிக்காட்டியபோது, மிசேல் கோபம் அடைந்தார்: “போரின்போது ஜேர்மனியுடன் எந்த ஒத்துழைப்பும் இல்லை!” நன்கு அறியப்பட்ட வரலாற்றை அவர் மறுத்தபோது சற்று சங்கடம் உற்ற அவர் பின்னர் அச்சொற்களை திரும்பப் பெற்று, பிரச்சினையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றார்: “நல்லது, அப்பொழுது இருந்தது, ஆனால் பாசிஸ்ட்டுக்கள்தான் அதைச் செய்தனர்” என்றார்.
உலக சோசலிச வலைத் தளம்,
Denis Turbet-Delof,
Solidaires
தொழிற்சங்கத்தின் தேசிய தலைவருடனும்
பேசியது; இத்
தொழிற்சங்கம்
அனார்க்கிச
குழுக்களுடனும்,
போலி இடது புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியுடனும்
(NPA)
பிணைந்துள்ளது.
லுபோன்
அவர் பொறுப்புணர்வு
ஒப்பந்தத்தை
எதிர்க்கவில்லை என்ற நிலையில் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்னவென்று
கேட்கப்பட்டதற்கு,
Turbet-Delof
விடையிறுத்தார்: “அவர் அப்படி
கூறியுள்ளார்,
ஆனாலும்
CGT
யில் உள்-விவாதம்
உள்ளது.” அவர் மேலும் கூறினார்: எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்த
நான்கு தொழிற்சங்கங்களும் அரசாங்கம் இயற்றியுள்ள தரத்தில்
பொறுப்புணர்வு
ஒப்பந்தத்திற்கு
எதிர்ப்புடையவை.” FN ஏன் பிரான்சில் எழுச்சி பெற்றுவருகிறது எனக்கேட்கப்பட்டதற்கு அவர் “இடது” கட்சிகளிடையே தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் குறித்து அக்கறை இல்லை என்றார். “சமூகப் பிரச்சினைகளுக்கு விடையிறுப்பு ஏதும் இல்லை என்ற நிலையில், தொழிலாளர்கள் வேறுவிதமாகக் கூறுவோரிடம் திரும்புகின்றனர்.” Turbet-Delof தன்னிறைவு கொண்ட, வசதி படைத்த சமூகத் தட்டிற்காக பேசுகிறார்; தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுவது உயர்ந்துள்ளது என்பது அவருக்கு நன்கு தெரியும்; ஆனால் PS இன் சமூகநல சிக்கன நடவடிக்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை எதிர்க்கிறார். பிரான்சில் FN அதிகாரத்திற்கு வந்தால் அவர் என்ன செய்வார் எனக் கேட்கப்பட்டதற்கு அவர்: “நாங்கள் அரசியலையும், தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கலப்பதில்லை. ஆனால் நாட்டின் பொதுநலன்களுக்கு ஏற்ப அரசாங்கம் செயல்படவில்லை என்று நாங்கள் கருதினால், குடிமக்கள் எதிர்ப்பை அழைக்கும் திறனை நாங்கள் கொண்டவர்கள்” என்றார். இந்த கருத்து தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தேசியவாத, முதலாளித்துவ சார்பு கருத்துக்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. Solidaires, சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராக உள்நாட்டு எதிர்ப்பிற்கு அழைப்பு விடவில்லை என்றால், வெளிப்படையாக அதற்குக் காரணம், பெருநிறுவன இலாபங்களை அதிகரிப்பதற்கு அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது PS நடத்தும் தாக்குதல்கள், “நாட்டின் பொது நலன்களுக்கு எதிரானவை” என்று நம்பவில்லை. |
|
|