World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Who is responsible for the catastrophes in the Middle East?

மத்திய கிழக்கின் பேரழிவுகளுக்கு யார் பொறுப்பு?

Bill Van Auken
30 June 2014

Back to screen version

லிபியாவில் என்ன நடந்து வருகிறதோ அதற்கு அமெரிக்கா பொறுப்பல்ல, அல்லது இன்று ஈராக்கில் என்ன நடந்து வருகிறதோ அதற்கும் அது பொறுப்பாகாது,” என்று வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி அவரது மத்திய கிழக்கிற்கான சமீபத்திய நெருக்கடி பயணத்தின் போது கெய்ரோ பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

கெர்ரி கூறியதைப் போல, ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசும் (ISIS), வளர்ந்து வரும் சுன்னி கிளர்ச்சி குழுக்களும் சிரியா மற்றும் ஜோர்டன் உடனான அந்நாட்டின் எல்லைகளிலும், ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கிலும் அவற்றின் பிடியைப் பலப்படுத்தி வருகின்றன. இந்த சண்டைகளால் ஒரு மில்லியனுக்கும் மேலானவர்கள் ஈராக்கிலிருந்து இடம் பெயர்ந்துள்ளனர், மற்றும் ஆயிரக் கணக்கானவர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் குறுங்குழுவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

எதிர்விரோத போராளிகள் குழுக்களின் தொடர்ச்சியான சண்டையால் லிபியா முற்றிலுமாக பொறிந்து போகும் நிலையில் இருக்கிறது, அந்த அரசு வெறுமனே பெயரளவிற்கு தான் நின்று கொண்டிருக்கிறது, அங்கே எண்ணெய் உற்பத்தி குறைந்தபட்சம் 80 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அந்நாட்டின் வன்முறையால் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக் கணக்கானவர்கள் ஆயுதமேந்திய குழுக்களால் நடத்தப்படுவதும், திட்டமிட்ட சித்திரவதையை நடைமுறையாக கொண்டிருப்பதுமான சிறைக்கூடங்களின் வலையமைப்புகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஈராக்கில் நிலைமை முற்றிலுமாக ஒரு தோல்விக்குள் திரும்பியதில் இருந்து, “அமெரிக்காவிற்கு எந்த பொறுப்பும் இல்லை,” என்ற அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களிடம் இருந்து வரும் தொடர்ச்சியான தம்பட்டத்தைத் தான் கெர்ரியின் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தி இருந்தது.

அமெரிக்காவின் 2003 ஈராக்கிய படையெடுப்பிற்கு ஒத்து ஊதிய ஆதரவாளரான ஒரு "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியவாதி, நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் நிகோலஸ் கிறிஸ்டோப்பின் கருத்துரையும் அதற்கு முற்றிலும் பொருத்தமாக இருந்தது. அவர் எழுதினார்: “ஈராக்கிய தோல்வி, ஜனாதிபதி ஒபாமாவின் தவறல்ல. அது குடியரசு கட்சியினரின் தவறல்ல... பெரிதும் அது ஈராக்கிய பிரதம மந்திரி நௌரி கமால் அல்-மலிக்கியின் தவறாகும்,” என்றார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பால் அங்கே அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு இருத்தப்பட்ட கைப்பாவையான மலிக்கி தான் வலையில் சிக்கியவர்.

டைம்ஸ் இதழின் வெளியுறவு விவகாரங்களுக்கான கட்டுரையாளர் தோமஸ் பிரெட்மேன் ஞாயிறன்று எழுதுகையில், மலிக்கி ஒரு "தீமூட்டியாக" இருக்கிறார்,