World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

SEP and IYSSE public meetings in Australia
On the centenary of WWI: Socialism and the fight against war

ஆஸ்திரேலியாவில் சோசலிச சமத்துவ கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் பொதுக்கூட்டங்கள்

முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு: சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்

25 July 2014

Back to screen version

ஆகஸ்ட் 4ந் தேதி 2014, திங்கட்கிழமை அன்று சோசலிச சமத்துவக் கட்சியும் (ஆஸ்திரேலியா) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், பல்கலைக்கழக வளாகங்களில் இது குறித்த பேச்சுக்கள் மற்றும் பெரிய நகரங்களில் பொதுக் கூட்டங்களாலும் முதலாம் உலகப் போர் வெடிப்பின் 100வது ஆண்டை நினைவுகூரும்.

முதலாம் உலகப் போர், முதலாளித்துவ உயரடுக்குகளால் காலனிகள், சந்தைகள் மற்றும் இலாபங்களைக் கட்டுப்படுத்த அனைத்து பக்கங்களிலும் நடத்தப்பட்ட ஒரு ஏகாதிபத்திய போராகும். அதன் முடிவிற்கு சற்றே 20 ஆண்டுகளுக்குப் பின்னர், பெரும் மந்த நிலையை தொடர்ந்து, பாரிய வேலை வாய்ப்பின்மை மற்றும் பாசிசத்தின் எழுச்சி ஆகியவற்றால் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. இந்த இரண்டு பேரழிவுகள் இரண்டும் சேர்ந்து சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்திற்கும் அழிவிற்கும், 100 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் இறக்கவும் காரணமாயின.

நூறாவது ஆண்டு, முதலாளித்துவ அமைப்பின் 1930-களுக்கு பின்னர் ஏற்பட்ட மிக  கடுமையான பூகோள பொருளாதார முறிவுக்கு நடுவே, ஒரு புதிய உலகப்போர் தயாரிப்பில் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச பதட்டங்கள் 1914 மற்றும் 1939 களில் இருந்து காணப்படாத அளவுகளுக்கு அதிகரித்திருக்கின்றன.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 வீழ்த்தப்பட்டதை, ரஷ்ய-எதிர்ப்பை கிளறிவிட ஒரு தூதரக நெருக்கடி மற்றும் இராணுவ மோதலுக்கான அச்சுறுத்தலுடன் அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகள் பற்றிக்கொண்டன. தொழிற் கட்சி, பசுமை கட்சி மற்றும் மொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களுடைய ஆதரவுடன் அப்போட் இன் லிபரல் அரசாங்கம் இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

ரஷ்யாவுடனான மோதல், தற்போதைய சூழ்ச்சி மற்றும் வன்முறை அதிகரிப்பின் ஒரு சமீபத்திய அபிவிருத்தியாகும். கடந்த வருடத்தில், சிரியாவில் ஆட்சி மாற்ற முயற்சி, உக்ரைனில் பாசிச தலைமையிலான திட்டமிடப்பட்ட ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் சீனாவிற்கு எதிராக அதன் ஆசியாவில் "முன்னிலை" மூலமாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரிக்கப்பட்ட  பதட்டங்களை அமெரிக்கா முன்னெடுக்க முயன்றது. அமெரிக்காவினதும் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் பெரும் வல்லரசுகள் ஆதரவுடன் இஸ்ரேலிய நடப்பு ஆட்சி காசாவில் இருக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கெதிராக இனப்படுகொலையை என்ன விலைக் கொடுத்தாவது செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. லிபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் குழப்பத்தினாலும், அமெரிக்க போரின் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டு போரால் சீர்குலைந்து போயிருக்கின்றன.

ஏனைய ஏகாதிபத்திய வல்லரசுகள் இப்பொழுது அணிவகுப்பில் இருக்கின்றன. ஐரோப்பிய ஆதிக்க சக்தியாக இருக்கும் ஜேர்மனி மீண்டும் ஒருமுறை உலகந்தழுவிய இராணுவப் பங்கை கொள்ளவேண்டுமென ஜேர்மன் அரசாங்கமும் வெகுஜன ஊடகங்களும் வலியுறுத்திவருகின்றன.

ஜூனில் சீனாவுடன் அளவற்ற பதட்டங்களை தூண்டிவிட்ட ஜப்பானிய அபே அரசாங்கம், அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து ஜப்பானிய இராணுவப் படைகள் போரில் பங்குபற்ற அனுமதிக்கும் வகையில் போருக்குப் பிந்தைய அரசியலமைப்பில் அது "புது அர்த்தத்தை" ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்த அபிவிருத்திகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கே இன்னலை உருவாக்கிவிடும் ஆபத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு தெளிவான எச்சரிக்கைகளாக இருக்கின்றன.

முதலாம் உலகப் போரின் ஆரம்பம் சமூக ஜனநாயக கட்சிகள் மற்றும் தொழிற் கட்சிகளின் துரோகத்தினால் ஏற்பட்டது. அவை படுகொலைக்கு ஆதரவு கொடுக்க அவர்களுடைய சொந்த ஆளும் வர்க்கத்தினரின் பின்னால் துணை நின்றன.

இன்று, ஒவ்வோரு நாட்டிலும் உள்ள அரசியல் ஸ்தாபகங்கள், புதிய ஏகாதிபத்திய போர் நடவடிக்கையுடன் தம்மைத்தாமே அணிவகுத்துக்கொண்டுள்ளன.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவ கட்சி உள்ளிட்ட நான்காம் அகிலத்தின் சர்வதேச குழு (ICFI) மற்றும் அதன் பிரிவுகள், ஒவ்வொரு நாட்டிலும் போருக்கு எதிராக இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அணித்திரட்ட போராடிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கமாக இருக்கிறது. முதலாம் உலகப்போர் போன்றே, முதலாளித்துவத்தின் அதிகரிக்கும் நெருக்கடியிலிருந்து மூன்றாம் உலகப்போரின் ஆபத்து எழுகிறது. இதை, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே தடுக்க முடியும். இலாபநோக்கு அமைப்பு முறை மனிதகுலத்தை பேரழிவிற்குள் மூழ்கடிப்பதற்கு முன்னால் அதை தூக்கி எறிவதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான் அதன் குறிக்கோளாக கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 9ந் தேதி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்றுக்கொண்ட தீர்மானமான "சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்," பிரகடனப்படுத்துகிறது: அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதே மையமான மூலோபாயப் பிரச்சினை ஆகும். இதுமட்டுமே தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியாக ஐக்கியப்படுத்துவதற்கு ஒரேயொரு சிந்திக்கத்தக்க வழிமுறையாக இருக்கிறது.

தீர்க்கமான போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பணியை முன்னெடுக்க, நாம் ஆகஸ்ட் 4-ல் சோசலிச சமத்துவ கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் பொதுக்கூட்டங்களுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்கின்றோம்.