சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

How the German Left Party backs Israel’s war against Gaza

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய யுத்தத்தை ஜேர்மன் இடது கட்சி எவ்விதத்தில் ஆதரிக்கிறது

By Sven Heymann and Peter Schwarz
23 July 2014

Use this version to printSend feedback

காசா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் கொடூர தாக்குதலைப் பாதுகாக்கும் கடமையை ஜேர்மனியின் இடது கட்சி எடுத்துள்ளது. இஸ்ரேலிய குண்டுவீச்சு, எண்ணுக்கணக்கற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, ஏறக்குறைய 600 பேரைக் பலி கொண்டிருக்கும் நிலையில், அதற்கு எதிரான ஒவ்வொரு போராட்டத்தையும் இடது கட்சி திட்டமிட்டு ஒடுக்கி வருகிறது.

இந்த பிரச்சாரம் கிரிகோர் கீசி, காட்ஜா கிப்பிங், மற்றும் பேர்ன்ட் ரிக்சிங்கரின் முப்பெரும் தலைமையால் ஜூலை 11இல் தொடங்கப்பட்டது. இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கிய வெறும் மூன்று நாட்களுக்குப் பின்னர் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், அவர்கள் அந்த மோதலில் ஒரு தரப்பு மட்டும் வேண்டுமென்றே விமர்சிக்கப்படுவதை எதிர்த்து எச்சரிக்கை விடுத்தார்கள்.

ஒரு தரப்பைக் குற்றஞ்சாட்டும் விளையாட்டில் இரு தரப்புகளையும் ஊக்கப்படுத்த வேண்டாமென சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது "சமாதானத்தை மறுப்பதை ஊக்குவிப்பது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இந்த யுத்தத்தில், எவரும் ஒரு நேர்மையான யுத்தமுறையைக் கடைபிடித்து வரவில்லை," என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அவர்களின் சொந்த கட்சிக்கு வழங்கப்பட்ட சேதி தவறாக புரிந்து கொள்ள முடியாதபடிக்கு தெளிவாக இருந்தது: அதாவது, இஸ்ரேலிய தாக்குதலில் பாலஸ்தீன தரப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு "ஒருதலைபட்சமாக" ஒற்றுமையுணர்வை யாரும் காட்ட வேண்டாம். விலகி இருப்பதைக் கடுமையாக பின்பற்றுமாறு கட்சியின் தலைமை அதன் அங்கத்தவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது, மாறாக அது "சர்வதேச சமூகங்களுக்கு" முறையிட்டுள்ளது," அதாவது, “தீவிரப்பாட்டைக் குறைப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கைகள்" எடுக்குமாறு, பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கும் மற்றும் அவற்றின் கூட்டாளிகளுக்கும் முறையிட்டுள்ளது என்பதாகும்.

பலமாக ஆயுதமேந்திய ஒரு இராணுவத்திற்கும் மற்றும் பெரிதும் ஆதரவின்றி இருக்கும், அதுவும் பட்டினியில் வாடி வரும், மின்சாரம் மற்றும் குடிநீர் துண்டிக்கப்பட்டிருக்கும் மற்றும் இடைவிடாத குண்டுவீச்சில் சிக்கி இருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலில் விலகி இருப்பதென்பது, ஒரு யுத்த குற்றத்தைச் சகித்துக் கொண்டிருப்பது மற்றும் ஆதரிப்பது என்று அர்த்தமாகிறது. மேலும், “சர்வதேச சமூகம்"—அதாவது வாஷிங்டன், பேர்லின் மற்றும் ஊழல்பீடித்த அரபு ஆட்சிகள்— முற்றிலுமாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் குற்றகரமான நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன என்பது கீசிக்கும் சரி இடது கட்சியின் இதர தலைவர்களுக்கும் சரி நன்றாகவே தெரியும்.

இடது கட்சி அடுத்த ஜேர்மன் அரசாங்கத்தில் ஒரு இடத்தைப் பெற தீர்மானமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, செப்டம்பர் 14இல் துரின்னிங்கியாவில் மாநில தேர்தல்களும் நடைபெற இருக்கின்றன, அங்கே முதல்முறையாக அது மாநில தலைமையை வெல்வதற்கு அதற்கு வாய்ப்பிருப்பதாக அனுமானிக்கிறது. ஆகவே, சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சி இரண்டுமே இஸ்ரேலை ஆதரித்து வருவதால், அவர்களின் அந்தக் எதிர்கால கூட்டணி பங்காளிகளுடன் வெளியுறவு கொள்கைகள் மீதான ஒரு முக்கிய பிரச்சினையில் எந்த சூழ்நிலையிலும் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடாதென்பதை உறுதிப்படுத்தி வைக்க அவர்கள் விரும்புகிறார்கள்.

இருந்தபோதினும் இடது கட்சியின் மாநில அமைப்புகளில் ஒன்று காசா யுத்தத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த போது, அவர்களுக்கு வெள்ளமென அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு, இடது கட்சியிலே அசாதாரணமாக காணக்கூடிய குதர்க்கமான பேச்சுக்களும் அவதூறுகளும் கூட வெளிப்பட்டன.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் உள்ள அந்த கட்சியின் மாநில அமைப்பும், அத்தோடு அதன் உள்ளூர் இளைஞர் அமைப்பான Linksjugend Solid ம், “மத்திய கிழக்கில் தீவிரப்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர—காசா மீதான குண்டுவீச்சை நிறுத்துக" என்ற முழக்கத்தின் கீழ் எஸ்செனில் ஜூலை 18இல் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்த அந்த அறிக்கையோ, அந்த யுத்தத்தில் பங்கெடுத்திருப்பவர்கள் எல்லோரும் வன்முறையை நிறுத்துங்கள் என்ற ஜேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டைக் கடந்து நின்றது. மேலும் அந்த அறிக்கை அப்பிராந்தியத்திற்கு ஜேர்மன் ஆயுதம் விற்பதை நிறுத்துமாறும், கூடுதலாக அகதிகளை உள்ளே ஏற்பது, காசாவிற்கு மருந்துப் பொருட்களை அனுப்புவது, இஸ்ரேல் மற்றும் எகிப்தில் இருக்கும் தடுப்புகளை நீக்கவும் கூட அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அதில் இஸ்ரேலினது குற்றங்கள் மீது கூர்மையான கண்டனங்கள் இருக்கவில்லை. இருந்தாலும் கூட, இடது கட்சிக்குள் அது பலமான பிரதிபலிப்புகளைக் காட்டியது.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கான பேஸ்புக் பக்கத்தில் அமைப்பிற்கு வெளியில் இருந்தவர்களால் பதியப்பட்டிருந்த யூத-விரோத கருத்துக்களைக் கொண்டு, அந்த ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டமும் ஒரு யூத-விரோத நோக்குநிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது—அதுவும் அந்த கருத்துக்கள் கண்டறியப்பட்ட உடனேயே நீக்கப்பட்டு இருந்தன.

அந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு "ஒரு தரப்பினருக்காக இருப்பதாகவும்" மற்றும் "மேலோட்டமாக சிந்திப்பவர்களுக்கு இடையே" நிச்சயமாக அது யூத-விரோத பிம்பத்தை அளித்திருப்பதாகவும் கூறி, அந்த பேரணியை இரத்து செய்யுமாறு Linksjugend Solid இன் பேர்லின் மாநில அமைப்பு கோரியது. ஆர்ப்பாட்டத்தில் யூத-விரோத முழக்கங்கள் எழுப்பப்படுவதற்கும் மற்றும் பண்டைய யூத மத வழிபாட்டு தலங்கள் (Synagogue) மீது தாக்குதல் நடைபெறுவதற்கும் அங்கே நிஜமான அபாயங்கள் இருப்பதாகவும் அவர்கள் வாதிட்டார்கள்.

இடது கட்சியின் துரின்னிங்கியா மாநில நிர்வாகி கத்தரீனா கூனிக் அவரே இன்னும் அதிக கூர்மையாக வெளிப்பாட்டைக் காட்டினார். “ரூஹ்பரோன்" (Ruhrbarone) வலைத் தளத்தில் பிரசுரித்த கருத்தில், அவர் பாலஸ்தீனியர்களை வலிந்து சண்டைக்கு வருபவர்களாகவும், இஸ்ரேலை பாதிக்கப்பட்ட நாடாகவும் எடுத்துக்காட்டினார். நூறுக்கணக்கான மக்களின் உயிரிழப்புகள், "இஸ்ரேலை தனிமைப்படுத்துவதற்காக" பயங்கரவாதிகளால் கையிலெடுக்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமாகும் என்று குறிப்பிட்ட அவர், “இஸ்ரேல் தொடர்ந்து வரும் ராக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக தன்னைத்தானே பாதுகாத்து வருகிறது. இஸ்லாமிஸ்டுகள், நாஜிக்கள் மற்றும் ஜேர்மன் இடதுகளின் போராட்டங்கள் தொடரும்," என்று கூனிக் எழுதுகிறார்.

காசா யுத்தத்திற்கு எதிராக போராடுபவர்களை, பயங்கரவாதிகளினது குற்றத்திற்கு உடந்தையாய் இருப்பவர்களாக கூனிக் சித்தரிக்கிறார்: “உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியவாதிகள், நாஜிக்கள், இடதுசாரிகள், நடுநிலை வகிப்பவர்கள் மற்றும் யூத-எதிர்ப்புவாதிகளும், பயங்கரவாதிகள் தங்களின் கணக்குகளை விட்டுகொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இந்த பயங்கரவாதிகள் தான் ஹமாஸ் மற்றும் ஏனையவர்களை ஊக்கப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்," என்றார். காசா மீதான தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து எழுதுகையில், “அவை சமாதானத்திற்கான ஆர்ப்பாட்டங்கள் இல்லை. அவை இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாகும். அவை திட்டமிட்ட மற்றும் பயங்கரவாத செயல்பாட்டின் பாகங்களாக உள்ளன," என்று கூனிக் குறிப்பிடுகிறார்.

ஒரு நிஜமான யுத்த-எதிர்ப்பு இயக்கம் அபிவிருத்தி அடையும் போது, இடது கட்சி பயன்படுத்தவிருக்கும் கருவியாக அதுபோன்ற வார்த்தைகள் இருக்குமென்பதற்கு இதுவொரு முன்னனுபவத்தை வழங்குகின்றன.

பிராண்டன்பேர்க் மாநிலத்தின் மத்திய நாடாளுமன்ற பிரதிநிதி ஹரால்ட் பெட்ஸோல்ட், அந்த வார்த்தைகளோடு திருப்தி அடையவில்லை. ஜூலை 18இல், அவர் ஆர்ப்பாட்ட-எதிர்ப்பு கூட்டமொன்றில் உரையாற்ற எஸ்செனுக்கு பயணித்திருந்தார், அக்கூட்டத்தில் க்ரீபெல்டிலிருந்து வந்திருந்த வலதுசாரி ஜனரஞ்சகவாதியும் மற்றும் முஸ்லீம்-எதிர்ப்பாளருமான மிக்கைல் ஹோன-பட்பேர்க்கும் பங்கெடுத்திருந்தார்.

இத்தகைய கொதிப்பான சூழ்நிலைக்கு இடையிலும், காசா யுத்தத்திற்கு எதிரான எஸ்சென் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000பேர் கலந்து கொண்டதோடு, அமைதியாக நடந்தேறியது, இந்த உண்மை பொலிஸாலும் உறுதிப்படுத்தப்பட்டது. அங்கே ஆர்ப்பாட்டத்தின் விளிம்போரத்தில் சிலர் யூத-எதிர்ப்பு கருத்துக்களை முழங்கி கொண்டிருந்தனர், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களால் அவர்கள் விலக்கப்பட்டார்கள்; இருந்த போதினும், அது ஆர்வத்தோடு வலதுசாரி ஊடக மற்றும் இடது கட்சி தலைமையால் கைப்பற்றப்பட்டு, விகிதாச்சார அளவில் ஏனைய விபரங்களை விட அதிகமாக பரப்பப்பட்டது.

இடது கட்சியின் பெடரல் நிர்வாகி மாத்தியாஸ் கூன், அந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் உடனடியாக ஓர் அறிக்கையை வெளியிட்டார்—"அது [ஆர்ப்பாட்டம்] வெட்கக்கேடானது" என்றார்எஸ்சென் ஆர்ப்பாட்டத்தின் போதும் மற்றும் அதற்குப் பின்னரும் நடந்த சம்பவங்களின் மீது அவர் அவரது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளியிட்டார்.

உண்மையாக அங்கே நடந்த சம்பவங்களை ஊதிப் பெரிதாக்கியும் மற்றும் திரித்தும், கூன் எழுதுகிறார்: “இடது கட்சி அங்கத்தவர்களே கூட எதற்காக அழைப்பு விடுத்திருந்தார்களோ, அந்த ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய தருணத்தில், யூத ஸ்தாபகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது; அந்த ஆர்ப்பாட்டத்திலும், அதற்குப் பின்னரும் யூத-விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டன; இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்த இஸ்ரேல்-விரோத பங்கேற்பாளர்களின் அறிவிக்கப்பட்ட இலக்காக எஸ்செனில் இருந்த யூத மத வழிபாட்டு தலங்கள் இருந்தன; இஸ்ரேல்-சார்பிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போத்தல்களும், கற்களும் வீசப்பட்டன—இவை அனைத்தும் என்னைப் பொறுத்த வரையில் ஆழமாக வெட்கப்பட வேண்டியவை ஆகும்," என்றார்.

அந்த போராட்டம் பலவீனமாகவும் மற்றும் முதுகெலும்பற்று இருந்த போதினும், ஒரு காட்டுமிராண்டித்தனமான யுத்தத்திற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள் என்பதற்காக அதன் சொந்த அங்கத்தவர்களையே குறைகூறும் ஒரு கட்சி, தன்னைத்தானே "இடது" என்று குறிப்பிடும் உரிமையை இழந்துவிட்டது. யதார்த்தத்தில், எப்போதுமே அந்த கட்சியின் பெயர் ஒரு மோசடியாக இருக்கிறது.

முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அதிகாரத்துவ வாரிசுகள் மற்றும், மேற்கு ஜேர்மன் SPD மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவ கூட்டம் ஒன்றின், ஒரு கூட்டணியான இந்த இடது கட்சி ஆரம்பத்தில் இருந்தே அரசின் ஒரு வலதுசாரிக் கட்சியாகும். சமூக அதிருப்தியை ஒடுக்குவதும் மற்றும் அதை பாதிப்பில்லாத வழித்தடங்களுக்குள் இட்டுச் செல்வதையும் அவர்கள் எப்போதும் அவர்களின் கடமையாக கருதி வந்திருக்கிறார்கள். இப்போது, யுத்தம் மற்றும் சமூக மோதலின் அபிவிருத்தி அவர்களின் உண்மையான சாயத்தைப் பகிரங்கமாக காட்டுமாறு மற்றும் காசா மீதான இஸ்ரேலிய தாக்குல் போன்ற கொடூரமான யுத்த குற்றங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களை நிர்பந்திக்கிறது.