சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Contract expires for Pacific Coast dockworkers in US and Canada

அமெரிக்கா மற்றும் கனடாவில் பசிபிக் கடற்கரை துறைமுக பணியாளர்களுக்கான ஒப்பந்தம் காலாவதியாகிறது

By Rafael Azul 
2 July 2014

Use this version to printSend feedback

ஜூலை 1 செவ்வாய் முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் 30 மேற்கு கடற்கரை துறைமுகங்களில் 13 ஆயிரம் முழுநேர மற்றும் 7 ஆயிரம் தற்காலிக துறைமுக தொழிலாளர்கள் தொழில் ஒப்பந்தமின்றி பணியாற்ற ஆரம்பித்துள்ளனர். வேலை நிறுத்த அழைப்பு கொடுக்கப்படாமலே, பேச்சுவார்த்தைகள் தொடருமென்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரம் நிறுவன வலைத் தளமான Global Transportation Services  -ன் படி தொழிலாளர்களது ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான ஒரு பொதுவான அடிப்படையைக் கண்டறிவதற்காக சர்வதேச நீள் கடற்கரை மற்றும் பண்டக தொழிற்சங்கம் (ILWU) மற்றும் பசிபிக் கடல்பகுதியின் முதலாளிகளுக்கான அமைப்பு (PMA) ஆகிய இரண்டும் மிகுந்த கவனத்துடன் வேலைசெய்து வருகின்றன.

அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ். W.புஷ்ஷிற்கு Taft-Hartley சட்டத்தை தூண்டுவதற்கும், சாந்தப்படுத்துவதற்காக 80 நாள் கால அவகாசத்தைக் கொடுப்பதற்கும் ஒரு காரணத்தை உருவாக்கிக் கொடுத்த ஒப்பந்தத்தை 2002 –ல் PMA நிறுத்தியதிலிருந்து இது இரண்டாவது ஆறுவருட ஒப்பந்தமாகும். எந்த ஒரு திடீர் வேலைநிறுத்தம் அல்லது போர்காலகட்ட தடைகளுக்கெதிராக மத்திய படைகளை பயன்படுத்துவதாக புஷ் அச்சுறுத்தும் இத்திட்டத்தின் உண்மையான இலக்கு துறைமுக பணியாளர்கள்தான். பின்னர் ILWU வும் AFL-CIO வும் முதலாளிகள்1000 வேலைவாய்ப்புகளை அழித்து துணை ஒப்பந்தங்களுக்கான கதவுகளைத் திறந்துவிட்ட ஒரு மோசமான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புஷ் அரசாங்கம் மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றோடு கூட்டு வைத்துக்கொண்டன.

2002 ஒப்பந்தத்தை அடுத்து 2008ல் இன்னொரு சலுகை ஒப்பந்தம் ஏற்பட்டது, தானியங்கி உயர்த்தும் கிரேன்கள் மற்றும் சுயமாக செயல்படும் வாகனங்கள் மாதிரியான ரோபட் எந்திரங்களை அறிமுகப்படுத்தியதில் அது PMAவிற்கு முழு அதிகாரத்தைக் கொடுத்தது, இதன் விளைவாக இன்னொரு சுற்று வேலைவாய்ப்புகள் வெட்டப்பட்டன. மெக்சிகன் மற்றும் கிழக்கு மற்றும் வளைக்குடா கடற்கரை துறைமுகங்களுக்கு எதிரான போட்டிகளில் தாக்குபிடிப்பதற்காக தொழிற்துறை செலவினங்களை வெட்ட வேண்டியிருப்பதாக அந்த நேரத்தில் PMA கூறியது.

அப்படிச் செய்வதில் இதுபோன்ற விவாதங்கள் வந்து கொண்டிருக்கிறன. பனாமா மற்றும் சூயஸ் கால்வாய்களின் மேம்பாடுகள், வளைகுடா கடற்கரை மற்றும் அட்லாண்டிக் துறைமுகங்களுக்கு சரக்குகளை திசை திரும்பி செலுத்துவதன் மூலம் ஆசியாவிலிருந்து வரும் கப்பல்கள் மேற்கு கடற்கரை துறைமுகங்களை தவிர்ப்பதை சாத்தியமானதாக்குகிறது.

வணிக சார்பு ஊடகங்களில் மேற்கு கடற்கரை துறை முக பணியாளர்கள் மணி நேர அடிப்படையிலான சம்பாதிக்கும் உயர்ந்தபட்ச சம்பளங்கள் பற்றி அதிகம் சொல்லப்படுகிறது, உதாரணமாக இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ளும் PMA வின் ஆண்டு சம்பளம் 1,30,000 டாலர்கள். யதார்த்தத்தில், வேலைகளும் மணி நேரங்களும் இழக்கப்பட்டிருப்பதால், மற்ற அனைத்து அமெரிக்க பணியாளர்கள், தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கமல்லாதோருடன் சேர்ந்து துறைமுக பணியாளர்களின் வாழ்க்கைத்தரமும் குறைந்துள்ளது.

மேற்கு கடற்கரை துறைமுகங்கள் 2009லிருந்து அட்லாண்டிக் மற்றும் வளைகுடா கடற்கரைகளுக்கான போக்குவரத்தை நிலையாக இழந்து வருகின்றன. சிறிய அளவிலான முன்னேற்றம் இருந்தபோதிலும், அனைத்து நீள்கடற்கரை பணியாளர்களுக்குமான மணி நேர சம்பளம் 2005 ல் இருந்த 35 லிருந்து 2009 ல் 20 மில்லியன்களாக குறைந்திருக்கிறது. அதேபோல, மேற்கு கடற்கரை துறைமுக பணியாளர்களின் சராசரி வருவாயும் சரிந்துள்ளது.

10,000 சுறுசுறுப்பான, அனுபவமிக்க நீள்கடற்கரை பணியாளர்களது ஊதியங்களில் A cards என்று அறியப்படுகின்ற – அதிகபட்ச சம்பள விகிதம் பெறும்– மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் ஆண்டுக்கு 2,000 மணிநேரம் வேலை செய்கிறர்கள்.

துறைமுக செயல்பாடுகளின் வியாபாரத் தேவைகளுக்காக இந்த ஒட்டுமொத்த அமைப்பும் வடிவமைக்கப்படுகிறது. கப்பல்காரர்களின் தேவைகளுக்கேற்ப தொழிலாளர்களை அளிப்பவர் போன்று ILWU தேவைக்கேற்றவாறு செயல்படுகிறது. சில 7,000 நிபந்தனைக்குரிய “வழக்கமானவர்கள்” உள்ளிட்ட பெரும்பான்மயான பணியாளர்கள் வேலை இருக்கும்போது மட்டுமே பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.

இந்த நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் சம்பளத்தை-மிச்சப்படுத்தும் பிரம்மாண்ட உபகரணங்களின் பயன்பாடு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்கள் என்றால் இளைஞர்களே. இந்த பணியாளர்களது உண்மையான வருமானம் 2005ல் இருந்த 40,000 டாலர்களிலிருந்து இன்று 35,000 டாலர்களாக சரிந்திருப்பது, வாழ்க்கை தரங்களில் 12 சதவீத வெட்டாகும். நடுத்தர அடுக்கு 55,000 டாலர்களிலிருந்து 50,000 டாலர்களாக 9 சதவீம் வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், மேல் அடுக்கு துறைமுக பணியாளர்களது உண்மையான ஊதியங்கள் கிட்டத்தட்ட 70,000 டாலர்களில் இருக்கிறது.

PMA துறைமுக பணியாளர்களது மருத்துவ சலுகைகளையும் குறைத்துவிட விரும்புகிறது. பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற மற்றும் சிகிச்சைகளுக்காக குறைந்த தள்ளுபடிகளையும் கொண்டுள்ள - ஒபாமாவின் Affordable Care சட்டத்தின் கீழ் மற்றும் 190 மில்லியன் டாலர்கள் வரிக்கு உட்படுகிற தற்போதைய சுகாதாரத் திட்டம் Cadillac திட்டமாகக் கருதப்படுகிறது. PMA இந்த வரியை தொழிலாளர்கள் மீது சுமத்துவதை அல்லது அபராதங்களை தவிர்ப்பதற்காக ஆதாயங்களை கூர்மையாக வெட்டுவதை விரும்புகிறது. போட்டி மற்றும் நலத்துறையின் புதிய யதார்த்தங்களை ILWU ஒப்புக்கொள்ளும் வரை, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்று வணிக சார்பு தினசரியான The Oregonian  முன்கணிக்கிறது.

PMA வும் அதன் ஓய்வூதிய செலவினங்களைக் குறைக்க விரும்புவதை தெளிவாக்கியிருக்கிறது. ”ஒவ்வொருவருக்கும் இன்னும் வேண்டுமென்ற பசி இருக்கிறது, ஆனால் இதற்கு மேல் எங்களால் செலவழிக்க முடியாது” என்று PMA வின் செய்தியாளர் ஒருவர் கூறி, அடுத்தது ஓய்வூதியங்கள்தான் என்பதையும் அவர் உறுதிசெய்தார்.

கூடுதலாக, ILWU அதன் உறுப்பினர்களை சிறப்பாக பாதுகாக்க வேண்டுமென்று PMA கோரிக்கை விடுத்து வருகிறது. ஆதாய காசோலைகளின் தாமதங்களை எதிர்க்கும் இயல்பான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஓய்வுபெறுவோர்களால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு வாசகங்கள் மற்றும் “சேதப்படுத்துவதாக” PMA கருதிய ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை காரணமாக கப்பல் போக்குவரத்தை ஓக்லேண்டிலிருந்து திசை திருப்பி விடுவதாக கடந்த காலத்தில் அது அச்சுறுத்தியிருக்கிறது. PMA வின்படி, ஓக்லேண்ட் வழியாக செல்லும் சரக்குகள் “எதிர்பார்க்கமுடியாதவையாக” ஆகியிருக்கிறது.

ILWU விற்கான வருடக்கணக்கான ஒப்பந்த சலுகைகளால், சந்தா செலுத்தும் பணியாளர்கள் மிக மிக குறைந்துவிட்டனர். அதற்கு பதிலாக, ILWU தலைவர்கள் அதிக தவணை-கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களைக் கொண்டுவரும் புதிய பகுதிகளை உருவாக்கப் பார்க்கிறார்கள்.

போர்ட்லேண்டில், கடந்த வருடம் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களைக் கையாளுவது குறித்து International Brotherhood of Electrical Workers க்கும் ILWU க்கும் முரண்பாடு ஏற்பட்டது. இந்த வேலை, எந்திர தொழிலாளர்களின் சர்வதேச அமைப்பினால் செய்யப்படுவது ஓக்லேண்டில் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. பிற பசிபிக்கின் வடமேற்கு துறைமுகங்களில், சிறிய அளவிலான எலிவேட்டர்கள் மற்றும் கருவிகள் பழுது நீக்கும் சாதனங்கள் மீதான கட்டுப்பாட்டினை ILWU விரும்புகிறது. ”இங்குதான் அவர்களது எதிர்கால வேலைவாய்ப்பு வளர்ச்சியடையுமென தொழிற்சங்கம் புரிந்துகொள்கிறது”.

மற்ற தொழிற்சங்கங்களை காவுகொடுத்துக்கூட, அதிகாரத்தை விரிவடைய செய்வதற்கான போராட்டத்தை ILWU தலைவரான பாப் மெக்லெராத் வெளிப்படையாகவே தற்காத்துக் கொள்கிறார். சிறிய நிறுத்தங்களிலிருந்து ILWU உறுப்பினர்களை இடமாற்றம் செய்வதாக AFL-CIO இனை குற்றம் சாட்டி, பின்னர் கடந்த வருடம் தேசிய AFL-CIO அமைப்பிலிருந்து ILWU வெளியேறியது.

மெக் எல்ராத் ILWU உறுப்பினர்களை சிறு நிறுத்தங்களிலிருந்து வெளியேற்றியதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை குறை கூறியதுடன் வெளிநாட்டு செயல்பாட்டாளர்களைக் கொண்டிருக்கும் கூட்டணிகளுக்கு எதிராக துறைமுக நிர்வாகங்களை ILWU  உடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ”பெரிய நிறுவனங்கள் பாதுகாப்பு நிலைமைகளுடன் சமரசம் செய்துகொள்வது அல்லது எங்களுக்கு எதிராகவே போட்டி போட்டுக் கொள்வதிலிருந்து தடுப்பதில் துறைமுகங்களுக்கும் பணியாளர்களும் பொதுவான ஆர்வம் இருப்பதாக” ILWU வின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்த அதிகாரத்துவ மூலோபாயமும் மெக் எல்ராத்தின் வார்த்தையும் ILWU  -ன் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகிறது. PMA போன்றே, இது ஒரு வணிகம் என்பதோடு அப்படித்தான் செயல்படுகிறது. வேலைவாய்ப்புகளையோ அல்லது வாழ்க்கைத் தரத்தையோ பாதுகாத்துக்கொள்வதற்கான எந்த ஒரு போராட்டத்திற்கும், இந்த நிறுவனம் சார்ந்த அமைப்புடனும் மற்றும் நிர்வாகம் மற்றும் பெரு-வணிக அரசியல்வாதிகளுடனான ஒருங்கிணைப்பின் அதன் முன்னோக்குடனும் உடைக்க வேண்டியது அவசியமாகும்.