World Socialist Web Site www.wsws.org |
Another global financial crisis in the making, Bank for International Settlements warns மற்றொரு உலகளாவிய நிதியியல் நெருக்கடி தயாரிப்பில் இருப்பதாக, சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி எச்சரிக்கிறதுBy Nick Beams மத்திய வங்கிகள் மற்றும் நிதிய கண்காணிப்பு அமைப்புகளின் தற்போதைய கொள்கைகள், 2008ஐ காட்டிலும் சக்தி வாய்ந்த மற்றொரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லக்கூடுமென சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட சர்வதேச கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி (BIS) கூறியுள்ளது. சில நேரங்களில் மத்திய வங்கியாளர்களின் வங்கியாக குறிப்பிடப்படும் அவ்வங்கியால், நேற்று வெளியிடப்பட்ட புதிய ஆண்டு அறிக்கையில் இந்த எச்சரிக்கை அடங்கியுள்ளது. 2008 பொறிவின் பாதிப்புகளைக் கடந்து வரும் முயற்சியில் தொடங்கப்பட்ட தற்போதைய குறைந்த-வட்டி விகித நடைமுறை, நிதியியல் சந்தைகளைப் புதிய உயரங்களுக்கு தள்ளி இருக்கின்ற அதேவேளையில் பல்வேறு அபாயகரமான கடன்களுக்கான வட்டி விகித தொகைகளைக் குறைத்துள்ளதாக அந்த அறிக்கை கவலைகளை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக முன்னேறிய நாடுகளில் சந்தைகள் "கடந்த ஆண்டில் வளமாக" இருந்திருப்பதாக BIS குறிப்பிட்டது. வரலாற்றில் இல்லாதளவிற்கு அவற்றின் நிலையற்றதன்மை குறைந்ததிருந்ததோடு, "சந்தை பங்களிப்பாளர்கள் ... விலை நிர்ணயிப்பதில் எந்தவொரு அபாயமும் இல்லாமல்", அவை "முக்கியமாக மத்திய வங்கி முடிவுகளின் தொனிக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தன." “மொத்தத்தில் சந்தைகள் பணத்தில் மிதந்து கொண்டிருந்ததற்கும், உலகளாவிய பொருளாதார அபிவிருத்திக்கு அடியில் இருந்தவைகளுக்கும் இடையில் இருந்த குழப்பமான தொடர்பின்மையின் உணர்வை அது துண்டிக்க முடியாமல் இருந்தது," என்று அந்த வங்கி அறிவித்தது. அந்த "தொடர்பின்மை" மிகத் தெளிவாக அமெரிக்காவில் வெளிப்பட்டுள்ளது, அங்கே நிதியியல் சந்தைகளுக்குள் பெடரல் ரிசர்வினால் டிரில்லியன் கணக்கில் டாலர்கள் உட்செலுத்தப்பட்டு இருந்தமையால், பங்குச் சந்தைகளின் குறியீடுகள் சாதனை அளவிற்கு உயர்ந்திருந்தன, அதேவேளையில் பொருளாதாரத்திற்கு தாங்கிப் பிடிப்பவை மந்தப்பட்டிருக்கின்றன என்பதோடு தலைகீழாகி உள்ளன. கடந்த வாரம், அமெரிக்க பொருளாதாரம் 2014-ன் முதல் காலாண்டில் ஏறத்தாழ 3 சதவிகிதம் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் நிகழ்ந்து கொண்டிருக்கும் மந்தநிலைமையானது இன்னும் அதிகமான மலிவு பணம் கிடைக்கப் பெறுவதற்கு வழிகோலும் என்ற நம்பிக்கையில் மேற்கொண்டு பங்கு சந்தைகள் எழுச்சி கண்டன. பொருளாதார வளர்ச்சியின் ஒரு அதிகரிப்புக்கு இடையிலும், உலக பொருளாதாரமோ நிதியுதவி பொதியை அது சார்ந்திருப்பதிலிருந்து விலகவில்லை என்பதை BIS சுட்டிக் காட்டியது. நிதிச் சந்தைகளில் உயர்வைச் சார்ந்தில்லாமல், முதலீடோ "பலவீனமானதாக" இருந்தது. உலக அளவில், நிதிசாரா தனியார் துறைகளின் மொத்த கடன் அளவு உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பின்னரில் இருந்து 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இது இந்த கடன் விகிதத்தை உலகளாவிய உற்பத்தி அளவுக்கு உயர்த்திவிட்டது. மேலும், குறுகிய கால வளர்ச்சி விபரங்கள் மீது ஒருமுனைப்பட்டிருந்த புள்ளிவிபரங்கள், தற்போதைய நிதிய கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்ட நீண்ட கால அபாயங்களைப் புறக்கணிக்கும் ஆபத்தைக் கொண்டிருந்தது. “குறுகிய கால உற்பத்தி ஏற்ற-இறக்கத்தின் மீது நமது கவனத்தை செலுத்துவது என்பது, அதிகம் அச்சுறுத்தும் அடிப்பரப்பிலிருக்கும் அலைகளைப் பார்க்காமல், கடலின் மேலே இருக்கும் சிறிய அலைகளை உற்றுப் பார்ப்பதைப் போலிருக்கிறது,” என்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த அறிக்கை குறித்து விளக்கம் அளிக்கையில் BISஇன் பொருளாதாரத்துறை தலைவர் கிளாடியோ போரியோ எச்சரித்தார். “நிதியியல் சுழற்சியை ஊன்றி கவனிக்கும்” போது, பரந்துபட்ட பொருளாதாரம் மற்றும் நிதியியல் அபிவிருத்திகளின் தற்போதைய கட்டமைப்பு "ஏராளமான அபாயங்களை" உயர்த்திக் காட்டுகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. "கூடுதலான அளவில் நிதியியல் செழிப்புகளை" அனுபவித்துக் கொண்டிருந்த நாடுகளில், "இவை வெடிப்புக்குள் திரும்பும் என்பதோடு, ஒருவேளை நிதியியல் துயரங்களையும் திணிக்கும்," என்பதே அபாயமாக இருந்தது. கடன் வழங்குவதன் மற்றும் சொத்து விலைகளின் நடவடிக்கைகள் போன்ற கடந்த காலத்தில் துல்லியமாக நிரூபிக்கப்பட்ட குறியீடுகள், “கவலைக்குரிய அறிகுறிகளை" எடுத்துக்காட்டி வந்தன. சர்வதேச கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி (BIS) அமெரிக்காவின் பெயரை குறிப்பிடவில்லை என்ற போதினும், அது ஒரு 'அளவுக்கு மீறிய நிதியியல் குமிழி' உள்ள ஒரு நாட்டிற்கான முன்னணி உதாரணமாக இருந்து வருகிறது. இத்தகைய சந்தைகளின் அளவுக்கும் மற்றும் "ஆற்றில் நீந்த போராடும் யானையின்" நிலைமையோடு அந்த அறிக்கை எதை தொடர்புபடுத்தியதோ அந்த பெரிய உலகளாவிய முதலீட்டாளர் துறைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதால், எழுச்சி பெற்று வரும் சந்தை பொருளாதாரங்களிலும் அங்கே ஆபத்துக்கள் இருந்தன. இந்த நாடுகளுக்குள் பாயும் பணம் "இலாபத்திற்கான ஆக்ரோஷமான தேடலினால்" அதிகரித்திருந்தது, அதாவது அவை வேகமாக தலைகீழாக திரும்ப கூடும் என்பதே இதன் அர்த்தமாகும். அபாயங்கள் உருவாவதைத் தடுக்கும் முயற்சியில் நிதியியல் ஆணையங்களால் வடிவமைக்கப்பட்ட விவேகமான பரந்த முறைமைகள் (macro-prudential measures) என்றழைக்கப்பட்டவைகளோடு சேர்ந்து, ஒரு பலமான நிதியியல் நிலைமையைக் குறிப்பிட்டுக் காட்டிய புள்ளிவிபரமும் மறுஉத்தரவாதங்களை வழங்குவதாக இல்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. "மீண்டும் மீண்டும்", அது குறிப்பிடுகையில், "அபிவிருத்தி அடைந்த சந்தை பொருளாதாரங்களிலும் சரி, எழுச்சி அடைந்து வரும் சந்தை பொருளாதாரங்கள் சரி இரண்டிலுமே, வலுவான நிதிநிலை அறிக்கைகள் என்று தோன்றுவது எதிர்பாராத பாதிப்புகளை மறைத்திருக்கின்றன, அவை நிதியியல் உயர்வு வெடிப்புக்கு வழிவிடும் போது தான் மேலே தெரிய வரும்," என்று குறிப்பிட்டது. வளர்ந்து வரும் சந்தைகளில் ஏற்படும் எந்தவொரு நெருக்கடியும் மிகவும் வளர்ந்த பொருளாதாரங்களின் மீது ஒரு பெரிய பாதிப்பைக் கொண்டிருக்கும் என்று BIS எச்சரித்தது. 1997இன் ஆசிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், வளர்ந்து வரும் சந்தை பொருளாதாரங்களின் பங்கு உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்காக உயர்ந்துள்ளது என்பதோடு, சர்வதேச பொருளாதார அமைப்புமுறையிலும் அவற்றின் பலம் அதிகரித்திருந்தது. "குறிப்பாக, அளவுகடந்த நிதியியல் செழிப்பின் தாயகமாக விளங்கும் சீனா தடுமாறினால், பல திசைகளிலும் பாதிப்பு தீவிரமாக இருக்கும். அதுவும் குறிப்பாக பண்டங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு ஆபத்தாக இருக்கும், அவை அதிகளவில் கடன் பெற்றிருக்கின்றன மற்றும் சொத்து விலையுயர்வுகளையும் கண்டுள்ளன, அங்கே நெருக்கடிக்குப் பிந்தைய வர்த்தக-ஆதாய நெறிமுறைகளால் அதிக கடன்களும், சொத்து விலையுயர்வுகளும் அதிகரித்துள்ளன," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. BIS ஆஸ்திரேலியாவை குறிப்பிட்டு கூறவில்லை என்றாலும், அந்த விபரங்கள் அதன் பொருளாதாரத்துடன் துல்லியமாக பொருந்துகிறது. பெரும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பொருள்கள் ஏற்றுமதி செய்யும் ஏனைய நாடுகளில் பிரேசில் மற்றும் தென்னாப்ரிக்கா உள்ளடங்குகின்றன. அந்த அறிக்கையின் படி, 2008இன் நெருக்கடிக்கு முன்பிருந்த அதேமாதிரியான வளர்ச்சி வடிவங்களைப் பார்க்கையில் "ஏதோவொரு விதத்தில் குழப்புவதாக" இருந்தது. பிரிட்டனில் சொத்து விலைகள் "வழக்கத்திற்கு மாறாக மிதந்து கொண்டிருக்கின்றன," அதேவேளையில் அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்களின் கடன் அளிக்கும் சந்தையினது பிரிவுகள் "அவை நெருக்கடிக்கு முன்னர் இருந்ததையும் விட இன்னும் மேலதிகமாக குமிழிகளாக" இருந்தன. அமெரிக்க பெடரலின் பெயரை அது குறிப்பிடாத போதினும், இரண்டு இடங்களில் BISஇன் அந்த அறிக்கை பணத்தைப் புழக்கத்தில் விடும் அதன் கொள்கையை விமர்சித்திருந்தது. “வழக்கத்திற்கு மாறான எளிய பணக்" கொள்கைகளின் ஆதாயங்கள் குறுகிய காலத்திற்கு உறுதியானதாக தோன்றக்கூடும் என்றாலும், குறிப்பாக நிதியியல் சந்தைகளின் விடையிறுப்பின் அடிப்படையில் மதிப்பிடும் போது, “அதற்காக கொடுக்கப்படும் விலைகள் ... காலப்போக்கிலும், நடந்து முடிந்த பின்னரும் தான் வெளிப்படையாக தெரிய வரும். இது மாதிரி கடந்த காலத்திலும் போதியளவிற்கு அடிக்கடி நிகழ்ந்துள்ளது." பின்னர் BIS, நிதியியல் சந்தைகளுக்கு அதன் நோக்கங்களைத் தெரிவிக்கும் பெடரலின் கொள்கையை இலக்கில் எடுத்தது. "அதன் நோக்கங்கள் குறித்து சந்தைகளைத் தெளிவாக தயாரிப்பு செய்ய முனைவதானது, மத்திய வங்கி என்ன தெரியப்படுத்த விரும்புகிறதோ அதை விட அதிக உத்திரவாதங்களைப் பங்குச்சந்தையில் பங்கெடுப்பாளர்கள் பெறுவதற்கு கவனக்குறைவான விளைவை ஏற்படுத்தக் கூடும். இது இன்னும் மேலதிகமாக அபாயங்களைக் கையிலெடுப்பதை ஊக்குவிக்கும், அத்தோடு இன்னும் கூர்மையான எதிர்வினைகளுக்கு விதை விதைக்க ஊக்கப்படுத்துகிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நிதியியல் நெருக்கடியைத் தடுக்கும் நோக்கத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள் என்று கூறப்படும் அதே கொள்கைகள், அதேபோன்ற நெருக்கடிக்கான நிலைமைகளைச் சிறப்பாக உருவாக்குகின்றன. கடன் உயர்வு மீது அதிகளவில் தங்கியுள்ள எந்தவொரு கொள்கை மாதிரியும், எதிர்வரும் காலத்தில் "செல்வசெழிப்பில் இருக்கலாம் என்ற மாயையைக் கற்பனை தூசியாக நிதியியல் செழிப்பு தூவுகின்ற நிலையில்" “அதன் சொந்த அழிவுக்கு அதுவே விதைகளை விதைக்கிறது," என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. BIS அறிக்கையின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளில் சமீபத்திய ஒன்றாக இருப்பது என்னவென்றால் தற்போதைய நிதியியல் செழிப்பு மற்றொரு நெருக்கடிக்கு விதைகளைத் தூவுகிறது என்பதாகும். அது கணிசமான அளவு நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கிறது ஏனென்றால் 2007-2008 நெருக்கடிக்கு இட்டுச் சென்ற ஏற்றுக் கொள்ளவியலாத நிதியியல் நிலைமைகளைக் குறிப்பிட்டுக் காட்டிய வெகு சில உத்தியோகப்பூர்வ அமைப்புகளில் அதுவும் ஒன்றாக இருந்தது. ஆனால் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் ஏனைய எல்லா பொருளாதார ஆணையங்களைப் போலவே, BIS வசமும், ஒரு சமயத்தில் பொருளாதார வளர்ச்சியின் "வழக்கமான" வடிவங்களாக கருதப்பட்ட நிலைமைகளுக்குத் திரும்பவும் கொண்டு செல்வதற்கென்று எந்தவொரு கொள்கையும் இல்லை. பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் எளிய பணக் கொள்கைகளின் மீதான அதன் மைய விமர்சனம் என்னவென்றால், அது எதை அவசியமான "கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்று வலியுறுத்துகிறதோ, அதாவது தொழிலாளர் சந்தைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களில் இருந்து, அவை கவனத்தைத் திசைத் திருப்புகின்றன என்பதே ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பூகோளமயப்பட்ட முதலாளித்துவ அமைப்புமுறையின் கொடூரமான நாளங்களுக்குள் உயிரூட்டும்-இரத்தத்தைத் திரும்ப பாய்ச்ச என்ன அவசியப்படுவதாக அது கருதுகிறதென்றால், 2008க்குப் பின்னர் தொடங்கிய தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான ஒரு தாக்குதலைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதாகும். |
|