தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Bank for International Settlements chief sounds another warning on financial system சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியின் தலைவர் நிதியியல் அமைப்புமுறையின் மீது மற்றொரு எச்சரிக்கை விடுக்கிறார்By Nick
Beams Use this version to print| Send feedback பங்குச் சந்தைகளையும் மற்றும் ஏனைய சந்தைகளையும் ஊக்குவித்துள்ள கொள்கைகளான, உலகின் பிரதான மத்திய வங்கிகளின் தீவிரமாக தளர்த்தப்பட்ட கொள்கைகளால் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறைக்கு முன்னிறுத்தப்பட்டு இருக்கும் அபாயங்கள் குறித்து சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கி(BIS) மீண்டும் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. ஜூலை 13 அன்று, பிரிட்டனின் Telegraph நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் BIS தலைவர் ஜேம் கேரோனா குறிப்பிடுகையில், தெளிவாக எடுத்துக்காட்டுவதுபோல் லெஹ்மென் பிரதர்ஸ் முதலீட்டு வங்கியின் செப்டம்பர் 2008 பொறிவிற்குப் பின்னர், எழுச்சி அடைந்துவரும் சந்தைகளின் கடன்கள் அதிகரித்துள்ளதால், நிதியியல் அமைப்புமுறை 2007இல் இருந்ததை விட இன்னும் அதிகமாக படுமோசமான ஒரு நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார். முதலீட்டாளர்கள் இலாபத்திற்கான அவர்களின் தீவிர தேடலில் கட்டுப்பாட்டு கொள்கைகளை இறுக்குவதற்கான அபாயத்தைப் புறக்கணிப்பதாக தெரிகிறது என்று கேரோனா தெரிவித்தார். “சந்தைகள் சாத்தியமான ஆதாயங்களின் ஒரு குறுகிய தொகுப்பை மட்டுமே கருத்தில் கொள்வதாக தெரிகிறது," என்று தெரிவித்த அவர், “கட்டுப்பாடுகள் நீண்டகாலத்திற்கு தளர்ச்சியாகவே வைக்கப்பட்டிருக்கும் என்று அவை சமாதானப்படுத்தப்பட்டுள்ளன என்பதோடு, ஒருவேளை மத்திய வங்கிகள் வழங்க விரும்புவதை விட அதிக உத்தரவாதங்களை எடுத்துக் கொள்கின்றன," என்றார். உலகின் மத்திய வங்கிகளின் ஒரு கூட்டமைப்பான BIS, அதன் கடந்த மாத இறுதியில் வெளியிட்ட அதன் ஆண்டு அறிக்கையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ், பேங்க் ஆஃப் இங்கிலாந்து, மற்றும் பேங்க் ஆஃப் ஜப்பானால் பல்வேறு வடிவங்களிலும் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் (ECB) ஓரளவிற்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட "பணத்தைப் புழக்கத்தில் விடும் கொள்கைகள்" (quantitative easing) பங்கு மதிப்பு சந்தைகளைக் "குதூகலமான" நிலைமைகளுக்கு இட்டு சென்றிருந்ததாக எச்சரித்தது. அபிவிருத்தி அடைந்த நாடுகளின் குறைந்த வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் முற்றுமுதலான மந்தநிலைக்கு இடையே, "சந்தைகளின் பணத்தில் மிதக்கும் நிலைமைக்கும் மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளுக்கு அடித்தளமாக இருப்பவைகளுக்கும்" இடையிலான ஒரு "புதிரான தொடர்பின்மையை" BIS குறிப்பிட்டுக் காட்டியது. BIS அறிக்கையில் எந்தவொரு அணுகுமுறையும் இல்லை என்றும், அது "நியாயப்பாட்டைப் பார்க்கும் மனோபாவத்தில்" இருப்பதாகவும் வாதிட்ட நியூ யோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் ஃபால் க்ரெக்மேன் உட்பட பல ஊடக பண்டிதர்களும் மற்றும் மத்திய வங்கிகளும் இந்த எச்சரிக்கையை வேகமாகவே நிராகரித்தன. BIS அறிக்கைக்கு விடையிறுப்பாக, அமெரிக்க பெடரலின் தலைவர் ஜேனெட் யெலென் கூறுகையில், அமைப்புமுறையின் எந்தவொரு அபாயத்தையும் விவேகமான பரந்த நெறிமுறைகளைக் கொண்டு கையாளலாம் என்று வாதிட்டு, பெரிதும் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை தொடரும் என்பதைத் தெளிவுபடுத்தினார். கட்டுப்பாட்டுக் கொள்கையை இறுக்குவது அதிகளவிலான வேலைவாய்ப்பின்மையை மட்டுமே உருவாக்கும் என்று யெலென் வலியுறுத்தினார். இருந்த போதினும், நிதியியல் சந்தைகளால் நெறிமுறைகளைக் கடந்து செயல்பட முடிகிறது என்ற வரலாறை அவை கொண்டிருக்கின்ற நிலையில், எந்தளவிற்கு நெறிமுறைகள் துல்லியமாக இருக்குமென்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அந்த கேள்விக்கு அவரிடம் ஒரு "பெரிய பதில்" இல்லை என்று அப்பெண்மணி விடையிறுத்தார். யெலெனின் நிலைப்பாடு, பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் ECB தலைவர் மரியோ திராஹியின் பிரதிநிதிகளாலும் ஆதரிக்கப்பட்டது. அவரது விமர்சகர்களைக் குறிப்பிட்டு பெயரிடாத போதினும், கேரோனாவின் ஜூலை 13 நேர்காணல் BIS எச்சரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கு ஒரு விடையிறுப்பாக இருந்தது. கடன்கள் அதிகரித்து வருவதன் காரணமாக சர்வதேச நிதியியல் அமைப்புமுறை, லெஹ்மென் நாட்களுக்கு முந்தையதை விட சில வழிகளில் இன்னும் பலவீனமாக இருப்பதாக கேரோனா குறிப்பிட்டார். அபிவிருத்தி அடைந்த நாடுகளின் கடன் விகிதங்கள் 20 சதவீதம் அளவிற்கு உயர்ந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 275 சதவீதத்தை எட்டியிருந்தது, மேலும் கூட்டுக்கடனில் (syndicated loans) 40 சதவீதம் துணை-முதலீட்டு ரக கடனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது, இது 2007இல் இருந்ததை விடவும் அதிகரித்த விகிதமாகும். வளர்ந்து வரும் ஆசிய பொருளாதார சக்திகளே அபாயத்திற்கான மூலகாரணமாக மாறக்கூடும் என்பதால் 2008இல் அவை இருந்ததைப் போல அவை ஒரு இடைத்தடையை வழங்கும் ஒரு நிலையில் இப்போது அவை இல்லை என்பதையும் கேரோனா குறிப்பிட்டு காட்டினார். சீனா, பிரேசில், துருக்கி மற்றும் ஏனைய "எழுச்சி பெற்று வரும்" சந்தைகளின் கடன் விகிதங்கள் 20 சதவீத அளவிற்கு உயர்ந்து, தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 175 சதவீதமாக இருக்கிறது. எழுச்சி பெற்றுவரும் சந்தைகளின் வெளிநாட்டு செலாவணி கடன்கள், 2008இல் இருந்து 2 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளன. எழுச்சி பெற்று வரும் சந்தைகளில் ஏற்படும் எந்தவொரு நெருக்கடியும், 1997-98இன் ஆசிய நிதியியல் நெருக்கடியை விட மிக கடுமையாகவும் இன்னும் மேலதிகமான தாக்கத்தைக் கொண்டிருக்கும், ஏனென்றால் இந்த சந்தைகள் இப்போது மிக பெரிதாகவும், பூகோளமயப்பட்ட நிதியியல் அமைப்போடு முன்பை விட அதிகமாக ஒருங்கிணைந்தும் உள்ளன என்பதை BIS ஆண்டு அறிக்கை குறிப்பிட்டுக் காட்டியது. “ஒரு மிகப்பெரிய நிதியியல் வளர்ச்சியின் தாயகமாக விளங்கும் சீனா தடுமாறினால்," அதன் தாக்கம் குறிப்பாக அதிதீவிரமாக இருக்கும். அந்த குமிழி எப்போது வெடிக்குமென அவர் கருதுகிறார் என்பதன் மீது கரோனா ஒரு அனுமானத்தை வெளியிடவில்லை, ஆனால் அவர் தொடர்ந்து கூறுகையில், “கெய்னெஸ் கூறியதைப் போல, நீங்கள் கடனைத் தீர்க்க கூடியதாக இருக்கும் காலத்தை விட, சந்தைகளால் நீண்டகாலத்திற்கு முரண்பாடான முறையில் நிலைத்திருக்க முடியும்," என்றார். அந்த முரண்பாடான தன்மை தொடரும் என்பதாக தெரிகிறது. திங்களன்று, யூரோ மண்டலத்திற்கான அதன் ஆண்டு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டது. அந்த அறிக்கை குறிப்பிடுகையில், அந்த பிராந்தியம் "மீட்சி பெற்று வருகின்ற" போதினும், ஆழமாக அமைந்துள்ள பிரச்சினைகள் இன்னும் உள்ளன என்றது. அந்த மீட்சி எதிர்பார்க்கப்பட்டதையும் விட பலவீனமாக இருந்தது, நெருக்கடியினுள் இருக்கும் நாடுகளில் உற்பத்தியும் முதலீடும் இன்னமும் நெருக்கடிக்கு முந்தைய அளவுகளுக்கு மிக கீழாக இருப்பதோடு, பெரும் கடன் சுமைகளும், நிஜமான வட்டிவிகிதங்களில் உயர்வும், அத்தோடு வங்கிகளின் பலவீனமும் மற்றும் சுருங்கி வரும் கடன் வழங்கும் சேவையும் என பொருளாதார நடவடிக்கையின் மீள்எழுச்சிக்கு தடைகளை முன்னிறுத்துகின்றன. பணவீக்கம் இன்னமும் ECBஇன் இலக்கு அளவான 2 சதவீதத்திற்கு மிகவும் கீழே இருக்கின்ற நிலையில், மத்திய வங்கி "விலைகளை ஸ்திரப்படுத்துவதற்கான அதன் வாக்குறுதியைப் பூர்த்தி செய்ய கிடைக்கும் ஒவ்வொரு கருவியையும் அது உபயோகப்படுத்தும் என்பதற்கு ஒரு பலமான சமிக்ஞையை வழங்க, ஏனைய மத்திய வங்கிகள் செய்ததைப் போலவே அதன் இருப்புநிலை கணக்கைக் கணிசமான அளவிற்கு அந்த வங்கி விஸ்தரிக்க வேண்டியதிருக்கும்" என்று IMF தெரிவித்தது. ஐரோப்பாவில் பணவீக்கம் நீண்ட காலமாக மிகவும் குறைந்திருந்ததும் மற்றும் பணவீக்க இலக்கைப் அடைவதில் ஏற்பட்ட ஒரு தோல்வியும் மத்திய வங்கியின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடக்கூடும் என்று குறிப்பிட்ட IMF அறிக்கை, “வெளியிலிருந்து வரும் ஒரு எதிர்மறைக் காரணி பொருளாதாரத்தை சுருக்கத்திற்குள் மூழ்கடிக்கும்," என்றது. லெஹ்மென் பொறிவுக்கு முன்னர் எவ்வாறு இதேபோன்ற எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இருந்ததோ அதே போல BIS எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்ற போதினும், போர்ச்சுக்கலின் பான்கோ எஸ்பிரிடோ சாண்டோவின் சிறிய பிரச்சினைகள் என்று கூறப்பட்டவை ஐரோப்பிய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு ஒரு அதிர்வை அனுப்பிய போது கடந்த வாரம் அவை உறுதிப்படுத்தப்பட்டன. விவேகமான பரந்த நெறிமுறைகள் நிதியியல் கொந்தளிப்பிற்கு எதிரான பாதுகாப்பில் முதலிடத்தில் இருக்க வேண்டுமென்ற பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கி அதிகாரிகளின் வாதங்களை கேரோனா அவரது நேர்காணலில் நிராகரித்தார். “அவர்களால் நிதியியல் சமச்சீரற்ற நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு அங்கே வெகு குறைவான ஆதாரங்களே அவர்களிடம் உள்ளது," என்றார். கடந்த மாதம் பைனான்சியல் டைம்ஸில் காணப்படும் ஒரு அறிக்கை இந்த மதிப்பீட்டைப் பலப்படுத்துகிறது. "நிழலுலக வங்கியியல் துறையின் தொடர்ந்து அதிகரித்து வரும் வேகத்திற்கு ஈடு கொடுக்க" உலகெங்கிலும் உள்ள கண்காணிப்பாளர்கள் போராடி வருகின்றன என்றும், நிழலுலக வங்கியியல் கருத்துருவை வரைந்து காட்டுவது எளிதானது என்ற போதினும் "அத்துறையின் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை எழுதுவது மிக மிக கடினமாகும்" என்றும் அது குறிப்பிட்டது. இலாபங்களைப் பெறுவதற்காக விலை மாறுபாடுகள் மூலமாக—அதாவது இரண்டு அல்லது நிறைய சந்தைகளுக்கு இடையே இருக்கும் மிகச் சிறிய வித்தியாசங்களை ஆதாயமாக எடுத்துக் கொண்டு—மத்திய வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் அதிகாரிகள் கொண்டு வரும் நெறிமுறைகளைக் துல்லியமாக கடந்து வேலை செய்யும் அளவிற்கு "நிழலுலக" வங்கியியல் அமைப்புமுறை வளர்ந்துள்ளது. முன்னாள் பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் துணை ஆளுநர் ஃபோல் டக்கெர் பைனான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில், “செயல்பாட்டிற்காக உலகம் முழுவதும் நாம் கொண்டிருக்கும் நடப்பு நெறிமுறைகளின் ரலஙொஅனயஅமைப்பு தெளிவாக இல்லை என்பதே என்னுயை பிரச்சினை," என்றார். 2008இன் அனுபவங்களின் அடிப்படையில், தற்போது நிதியியல் அமைப்புமுறை உலகளாவிய நெறிமுறை ஆணையங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற எந்தவொரு தவறான கருத்துருக்களும், நெறிமுறை குழுமத்தின் குடையின்கீழ் இருக்கும் லோஸ்கோவின் பொதுச் செயலாளர் டேவிட் ரைட்டால் நிராகரிக்கப்பட்டது. "[நிதியியல் நெருக்கடியிலிருந்து] சுமார் ஏழு ஆண்டுகளாக இங்கே நாம், இன்னமும் நிதியியல் சந்தைகளின் சில முக்கிய அம்சங்களின் மீது போதிய புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்பது அசாதாரணமானது," என்று பைனான்சியல் டைம்ஸிற்குத் தெரிவித்த அவர், “இந்த சந்தைகள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன என்பதையும், எந்த வழிகளில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தொற்றுகின்றன என்பதையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக" தெரிவித்தார். |
|
|