சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Study warns of “unstoppable” West Antarctic ice shelf melting

மேற்கு அண்டார்ட்டிக் பனித்தட்டுக்கள் உருகுவதை தடுக்க முடியாதநிலை குறித்து எச்சரிக்கும் ஆய்வு

By Gabriel Black and Evan Blake 
14 May 2014

Use this version to printSend feedback

நாசா மற்றும் இர்வின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்றுமேற்கு அண்டார்ட்டிக்கின் ஒரு பகுதி பனித்தட்டுகளானது பல நூற்றாண்டுகளாக உருகி தடுக்கமுடியாத ஒரு நிலைமையினை அடைந்துள்ளதாக எச்சரிக்கிறது. இந்த உருகலால் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையிலான ஆணையம் (IPCC) ஏற்கெனவே முன்கணித்ததை விட, உலக கடல் மட்டம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகரிக்கும் என்று இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

தனது கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்த கவனம் செலுத்துவதற்காக திங்களன்று நாசா ஒரு தொலைபேசி வழி செய்தி ஆலோசனையை நடத்தியது. இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பனித்தட்டுத் துறை குழுவின் தலைவரான எரிக் ரிக்னாட் அவ்வாலோசனையில் மேற்கு அண்டார்ட்டிக்கின் பெருமளவிலான பனித்தடுக்கள் மீளமுடியா வகையில் உருகியுள்ளது. அது இனிமேல் மீள முடியாது என்ற புள்ளியையும் கடந்து விட்டது என்ற எங்களது ஆராய்ச்சியின் ஆதாரங்களை இன்று நாங்கள் வழங்குகிறோம் என்று கூறினார்.

அமுத்சென் கடல் பகுதியின் கடல் மட்டங்கள் இந்த நூற்றாண்டின் இறுதி வாக்கில் நான்கு அடிகள் வரை உயரும் நிலையிலுள்ள உருகிவரும் பனிப் படலம். நன்றி: NASA/GSFC/SVS

டாக்டர். ரிக்னாட் தாங்கள் ஆராய்ச்சி செய்து வரும் ஆறு பனிப்படலங்கள் மட்டுமே பல ஆண்டுகளில் கடல் மட்டம் நான்கடி அளவுக்கு உயரக் காரணமாகும் என்ற தங்களது ஆராய்ச்சியின் முடிவுகளை அறிவித்தார். கூடுதலாக, இந்த உருகல் தொடர்ச்சியான பின் விளைவுகளை ஏற்படுத்துவதுடன் மேற்கு அண்டார்ட்டிக்கின் பிற பகுதிகளின் பனித்தட்டுக்களையும் உறுதியற்றதாக்கி, கடல் மட்டங்களில் தாக்கங்களை மூன்று மடங்கானதாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பிற பனிப்பாறைகள் மற்றும் துருவ பனித்தட்டுக்கள் ஆகியவற்றுடன் சேர்ந்துதான் அண்டார்டிக் பனிப்பாறை உருகி வருகிறது. ஒன்றாகசேர்ந்து, அடுத்த சில நூற்றாண்டுகளில் கடல் மட்டம் 14 அடிகள் வரையிலும், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் 3 அடிகள் வரையிலும் உயர்வதும் இதன் பின்விளைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரைப் பகுதிகளில் இந்த தாக்கம் பேரழிவினை ஏற்படுத்துவதாக இருக்கும்.

மேற்கு அண்டார்ட்டிக்காவில் பனி உருகல் குறித்து, UC Berkeley யின் விரிவுரையாளரும் முன்னணி பனிப்பாறை ஆராய்ச்சியாளருமான குர்ட் கூபியுடன் உலக சோசலிச வலைத் தளம் உரையாடியது. உருகல் செயல்பாட்டினை ஏற்படுத்தியிருக்கும் பல வழிமுறைகளை கூபி விளக்கினார். (நாசாவின் Jet Propulsion ஆய்வுக்கூடம் இச்செயல்பாட்டை விவரித்துள்ள ஒளிப்பதிவை இங்கே பார்க்க.)

கூபி முதலில் அண்டார்ட்டிக்காவில் பனிப் பாறைகள் உருகுவதை வேகப்படுத்தும் ஒரு குறுகிய கால நிகழ்முறையை விவரித்தார். அண்டார்டிக் கண்டத்தை சுற்றிலுமுள்ள காற்றின் மாற்றங்களின் விளைவாக, சூடான கடல் நீர் அக்கண்டத்தின் பகுதியாகவுள்ள விளிம்பிலுள்ள மிதக்கும் பெருந்திரளான பனி பனித்தட்டுகளுக்கு அடியில் சுழற்றப்படுகிறது. இந்த சூடான நீர், பனித்தட்டுகளுக்கு அடியில் ஓடிச்சென்று, கண்டத்திற்கு அப்பால் ஓடும் பனி உருகுவதற்கும் காரணமாகிறது. அந்த உருகல் பனிக்கட்டியை மெல்லியதாக்குவதுடன் அதன் விளைவாக வெளிப்பாயும் பனியின் வேகம் அதிகரிக்கிறது என்று அவர் மேலும் விளக்குகிறார்.

பனித்தட்டுகளின் விரிவும் சுருங்கலும், பனி ஓட்டத்திற்கான உராய்வினை தடுக்கும் தன்மையை குறைத்து, ஒரு நேர்மறைப் பின்னோட்ட தடையை உண்டாக்குகிறது, மேலும் குறைந்த தாங்கும் தன்மை பனி ஓட்டத்தினை முடுக்கிவிடுகிறது என்பதுடன் பனித்தட்டுகள் மிதத்தலின் ஒரு கட்டமாக உள்பகுதியை நோக்கி மேலும் நகர்வதால், இது அந்த கண்டத்தில் ஒரு கிண்ணம் போன்ற புவியியல் தன்மையையுள் நகர்கிறது. இவ்வாறாக அது ஆழமான தண்ணீருக்குள் நகர்கிறது, அங்கு அது வேகமாக உருகும்.

இந்த எல்லாவித பின்னூட்ட வழிமுறைகளின் காரணமாக, இந்த செயல்பாடு நிரந்தரமானது என்பதில் தான் 90 சதவீதம் உறுதியாக இருப்பதாக கூபி தெரிவித்தார்.

பனி சாதாரணமாக இடம் மாறுவது என்பதையும் தாண்டி, இந்த அதிகரித்து வரும் கடல் மட்டம் பல பிரச்சனைகளுக்கு வழிகோலும். உலகில் மோசமான வெள்ளங்கள் அதிகரிப்பதைக் காணலாம். மேலும், வெள்ளம் ஏற்படுவதால் உப்பு கலந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து விடும். கலிஃபோர்னியாவின் வளைகுடாப்பகுதி போல், மண்ணில் உப்பு கலந்து வீணாகும். குழு கால நிலையிலிருந்து 10 அடிக்கு கடல் மட்டம் உயர்வதாக மதிப்பீடு செய்கின்ற ஓர் அறிக்கையானது, இது போன்ற ஓர் அதிகரிப்பு கலிஃபோர்னியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்தும் என முன்கணிக்கிறது.

இந்த உருகல் தடுக்க முடியாதது என்ற விஞ்ஞானிகளது கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளவிருக்கும் அபாயத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும் உலகினை தேசிய அரசுகளாக பிரித்தது மற்றும் அனைத்து தீர்மானங்களையும் தனியார் இலாபங்களுக்கு அடிபணிய வைத்தது ஆகியவை மூலம் இவற்றை தீர்க்கமுடியாதவாறு விடப்பட்டது. ஆயினும், பனி உருகலைத் தடுப்பதற்கும் காலநிலை மாற்றத்தை நிறுத்துவதற்கும் உண்மையில் சாத்தியமான நடவடிக்கைகள் என்னவென்றால், மனித தேவைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமுதாய வாழ்க்கை தீர்மானிப்பதாலும் மற்றும் சமுதாயத்தின் பாரிய மூலவளங்கள் பகுத்தறிவுள்ள மற்றும் உலக அளவிலான திட்டமிடலின் மூலம் அணிதிரட்டுவதன் மூலம்தான் சாத்தியமாகும்.