சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்

M. Vasanthan
12 July 2014

Use this version to printSend feedback

இலங்கையின் மத்திய மலையக மாவட்டங்களில் உள்ள பல தேயிலை பெருந்தோட்டங்களில் அண்மைக் காலமாக தொழிலாளர்கள் வேலை நேரங்களில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகிவருவதோடு, பண்டாரவளை டயரபா தோட்டத்தில் கடந்த ஏப்ரலில் குளவிகள் கொட்டியதால் ஒரு பெண் தொழிலாளி மரணமடைந்துள்ளார். மஸ்கெலியாவில் மவுசாக்கலைத் தோட்டத்தில் ஜூன் மாதம் 16 தொழிலாளர்களும் மே மாதம் டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 6 தொழிலாளர்களும் குளவிகளால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அண்மைய சம்பவங்களாகும். இத்தகைய வெளிவராத சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்தும் நடப்பதோடு இதனால் பத்துக்கும் மேற்பட்ட தோட்டங்களில் 60க்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நிர்வாகங்கள் தோட்டங்களை சுத்தம் செய்து பராமரிக்கும் செலவுகளை பாரியளவில் வெட்டியதினால் பலதோட்டங்களில் குளவிகள், அட்டைகள், பாம்புகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தனர்.     

வனராஜ மேற்பிரிவு தோட்டத்தில் குளவித் தாக்குதலின் பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நாகம்மா, 3 மாதக் குழந்தையின் தாயாவார். குளவித் தாக்குதலுக்கு உட்பட்டு ஓடியபொழுது படியில் சறுக்கி விழுந்ததினால் அவரின் தலையில் அடிபட்டுள்ளது. “எனக்கு மூன்று மாதக் குழந்தை இருப்பதனால் தொடர்ந்து வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாமல் வீட்டுக்கு வந்துள்ளேன். இப்பொழுதும் தலையில் வலியிருக்கின்றது. அப்படியிருந்தும் வேலைக்கு போகவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. நான் வேலை செய்யும் போது பாதிக்கப்பட்டும் கூட 2 நாட்கள்தான் சம்பளத்துடனான லீவு வழங்கப்பட்டது. வேலைக்கு போகாவிட்டால் சம்பளம் கிடையாது. இதனால் சுகயீனத்துடன் வேலைக்கு போகவேண்டிய நிலையுள்ளது. எனது அம்மா வேலை செய்யும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் 7 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்பட்டது. இப்பொழுது அப்படி இல்லை. என அவர் கூறினார்.

எமது வீட்டில் 30 வருடங்களுக்கு மேலாக எந்தவித திருத்த வேலையும் செய்யப்படவில்லை. மழை பெய்தால் வீட்டில் இருக்கமுடியாது. அத்துடன் கறுப்பு நிறமான அசுத்தமான தண்ணீரையே தோட்ட நிர்வாகம் எங்களுக்கு வழங்குகின்றது. அவர்கள் இலாபத்தை அதிகரிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனரே தவிர, தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதில்லை. எந்த ஒரு தொழிற் சங்கமும் இதனை தட்டிக் கேட்பதாக இல்லை,என அவர் மேலும் கூறினார்.

வனராஜ தோட்ட மேற்பிரிவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (தொழிற்சங்கம்) கிளைத் தலைவர் சுரேஸ், தோட்டத்தில் ஏற்கனவே தேயிலை பயிரிடப்பட்ட 15 ஹெக்டர் நிலப்பரப்பு 10 வருடங்களுக்கு மேலாக தேயிலை பயிரிடப்படாது காடுகளாக உள்ளதால் குளவிகள் மாத்திரமன்றி, சிறுத்தைகள் கூட குடிபுகுந்தள்ளதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெளிவுபடுத்தியதாவது: “தோட்ட நிர்வாகம் கொழுந்தின் அளவை கூட்டி இலாபத்தை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது, ஆனால் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. தோட்டத்தில் உள்ள பிரச்சனைகள் சம்பந்தமாக எமது தொழிற்சங்க பிரதேச நிர்வாகிகளிடம் தெரிவித்தால் அதில் கவனம் எடுப்பதாய் இல்லை. தொழிற் சங்கங்கள் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாமல் செயலிழந்து போயுள்ளன. நான் தொழிற்சங்க தலைவராக இருப்பதில் வெட்கப்படுகின்றேன்.

எங்களுடைய தோட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக குடிசைகளில் வாழ்கின்றன. மழைகாலங்களில் இந்த வீடுகளில் இருக்க முடியாது. 2008ல் தேசத்தை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு 25 வீடுகள் கட்டித்தருவதாக உறுதியளித்து கடிதம் அணுப்பியிருந்தது. ஆறுவருடங்கள் கடந்துவிட்டது ஒரு வீடு தன்னும் கட்டுத்தரவில்லை. இது சம்பந்தமாக எமது தொழிற்சங்க பிரதேச தலைவர்களிடம்  முறையிட்டேன். இந்த வருடமும் அடுத்த வருடம் செய்து தருவதாக கூறி ஏமாற்றி வருகின்றார்கள். எமது தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் கூரை மாற்றப்படாமல் உள்ளன. நாம் பலமுறை தோட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை. மழைவந்தால் அந்த வீடுகளில் இருக்க முடியாது,என அவர் மேலும் கூறினார். 

தற்காலிக வீட்டில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய், நிரந்தர வீடு கட்டித்தருவதற்கு தோட்ட நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவதாகக் கூறினார். “அண்மையில் ஏற்பட்ட மழையினால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது அயல் வீட்டில்தான் எனது இரண்டு பிள்ளைகளும், அம்மாவும் தங்கியிருக்கின்றோம். எனது கணவர் என்னை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்தவிட்டார். நான் ஒருவர்தான் வேலை செய்து பிள்ளைகளையும் பதுகாக்க வேண்டும். எனது சம்பளம் சாபாட்டுக்கே போதாத நிலையில் வீட்டை எவ்வாறு கட்டுவது, பிள்ளைகளை படிக்க வைப்பது? இதனை தோட்ட நிர்வாகமோ கணக்கில் எடுப்பதாக இல்லை. நான் திகாம்பரத்தின் தலைமையிலான தொழிலாளார் தேசிய சங்கத்தில் அங்கம் வகிக்கின்றேன். உறவினர் வீட்டில் எவ்வளவு காலம் நாங்கள் தங்கமுடியும் இதற்கு நிர்வாகமோ தொழிற்சங்கமோ தீர்வு வழங்காவிடில் நாங்கள் நால்வரும் தற்கொலை செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும். எனக்கு வேறு வழிதெரியவில்லை என அவர் தெரிவித்தார். 

வனராஜ தோட்டம் போகவந்தலாவ பிளாண்டேசன் கம்பனிக்கு சொந்தமான தோட்டமாகும். ஏழு பிரிவுகளைக் கொண்ட தோட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள். தேயிலை, றப்பர் தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள தனியார் கம்பனிகள், அரசாங்கத்தினதும் சகல பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களினதும் ஆதரவுடன் தமது இலாபத்தை பொருக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன. இராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) வலது சாரி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பீ) சார்பான  இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ் கட்சி தலைமையிலான தொழிற் சங்க கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள், 2013ம் ஆண்டு ஏப்பிரலில் 22 கம்பனிகளுடன் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்த்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறிய சம்பள உயர்வை வழங்கியதுடன் அதற்கு பதிலாக கம்பனிகளின் இலாபத்தை அதிகளவில் அதிகரிப்பதற்காக உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு அதாவது வேலை பழுவை அதிகரிப்பதற்கு உறுதியளித்தன.

அரசாங்கத்தை ஆதரிக்கும் மலையக மக்கள் முன்னணி மற்றும் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமும், அத்துடன் எதிர்கட்சியில் இருக்கின்ற மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் இதனை எதிர்பதாக கூறிக்கொண்டன. ஆனால் இப்பொழுது இவர்கள் தமது போலி எதிர்பை கைவிட்டு, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து வேலைப்பழுவை அதிகரிப்பதில் ஒத்துழைத்து வருகின்றன.

2013ம் ஆண்டில் பொகவந்தலாவை பெருந்தோட்டம் வரி செலுத்திய பின்னர் 350 மில்லயன் ரூபாய்களை இலாபமாகப் பெற்றுள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியின் அளவும் 3.3 மில்லியன் கிலோவினால் அதிகரிக்கப்பட்டு 2013ம் ஆண்டில் 319.9 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகமான தொகையாகும்.

தேயிலை தொழிற்துறையில் இவ்வாறு வருமானம் அதிகரித்த போதும், தொழிலாளர்களின் வாழ்க்கை நிலமை பாரிய முறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. தொழிலாளர்கள் கடந்த காலத்தில் அணுபவித்து வந்த சிறிய உரிமைகளைக் கூட தோட்ட நிர்வாகம் பறித்து வருகின்றது. தோட்ட லயன்களை  சுத்தம் செய்வதற்கு இப்போது தொழிலாளர்கள் இல்லை. தொழிலாளர்களின் குடியிருப்புகள் இப்போது தோட்ட நிர்வாகத்தின் செலவில் திருத்தப்படுவதோ சுன்னாம்பு பூசப்படுவதோ கிடையாது. மாறாக தமது வீட்டுப்புற சூழலை சரியாக சுத்தம் செய்யவில்லை என்ற காரணத்தினால் தொழிலாளர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு ரூபா 1000 வரை தண்டம் விதிக்கப்படுகிறது.

அரசியல் கட்சிகளாக அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களும் எதிர் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக தோட்ட நிர்வாகங்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன.