World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Australia: Workers and youth oppose war in Iraq ஆஸ்திரேலியா: தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஈராக் போரை எதிர்க்கிறார்கள்By our
reporters சோசலிச சமத்துவ கட்சி ஆதரவாளர்கள் ஈராக்கில் ஏகாதிபத்தியத்தின் தோல்வியும் போருக்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பில் சோசலிச சமத்துவ கட்சியினால் நடாத்தப்படவுள்ள பொதுக் கூட்டங்களுக்காக மெல்போர்னின் வடக்கு புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். கோபேர்க், கிளென்ரோய், ப்ராட்மெடோஸ், மெடோ ஹைட்ஸ் ஆகிய பகுதிகளில் கட்சியின் அங்கத்தவர்கள் ஈராக்கில் தீவிரமடையும் போர் நெருக்கடி குறித்து விவாதிக்கவும் அதில் கலந்து கொள்ளவும் தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் மற்றும் இளையோருக்கு அழைப்பு விடுத்தனர். ஆஸ்திரேலிய துருப்புக்களை மீண்டும் ஈராக்கிற்குள் அனுப்ப அமெரிக்க ஐனாதிபதி பராக் ஒபாமா கேட்டுக் கொண்டால் பிரதம மந்திரி டோனி அபோட், தான் "அதை தீவிரமாக கவனத்துடன் எடுத்துக்கொள்வேன்" என்று கூறியிருக்கிறார். எவ்வாறிருப்பினும், சாதாரண மக்களின் அணுகுமுறைக்கும் ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்ற அமைப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி உள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி குழுக்களுடன் உரையாடியவர்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை போர்கள் பற்றியும் ஆஸ்திரேலியாவின் பங்கையும் வெளிப்படையாக எதிர்த்தார்கள். துருக்கி, ஈராக் அல்லது லெபனானில் பிறந்து மெடோ ஹைட்ஸ் இல் வாழும் குடியிருப்புவாசிகளில் ஒரு கால் பங்கு மக்களுடன் மத்திய கிழக்கிருந்து வந்த பெரும்பாலான மக்கள் மெல்போர்னின் வடக்கு புறநகர் பகுதிகள் வசித்து வருகின்றனர். சவுத் பசிபிக் டயர்கள், பசிபிக் பிராண்டுகள் மற்றும் பல தொழிற்சாலைகள் உள்ளிட்ட உற்பத்தி சார்ந்த வேலைகள் அழிப்பு ஆகிய காரணங்களால் வேலைவாய்ப்பின்மை மந்தநிலையின் காலகட்ட அளவுகளுக்கு அந்தப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது ப்ராட்மெடோஸ் போர்ட் தொழிற்சாலை 2016இல் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. பல தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் சிக்கன நடவடிக்கைகளை அமெரிக்காவில் சமூக நெருக்கடிக்கு ஒப்பிட்டார்கள். விக்கி பின்வருமாறு கூறினார்: “இப்போது ஈராக்கில் நடப்பது 11 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்கா உள்ளே சென்ற காரணத்தினாலாகும். அதன் விளைவாக எல்லாம் சீர்குலையப்போகிறது, இப்பொழுது அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. பேரழிவுகரமான ஆயுதங்கள் அங்கு இருக்கவில்லை... அவர்கள் செப்டம்பர் 11 இனை குற்றம்சாட்டியதுடன், அத்துடன் அவர்கள் அதை ஈராக் மீதான தாக்குதலுக்கு ஒரு காரணமாக உபயோகப்படுத்தினார்கள். ஈராக்கையும் அதன் எண்ணெய் வளத்தையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அவர்கள் உள்ளே போய் கொண்டிருந்தார்கள். இது அனைத்தும் பணம், எண்ணெய் மற்றும் கட்டுப்பாட்டிற்காகத் தான். விக்கி மேலும் கருத்துத் தெரிவிக்கையைல்: “பணக்காரர்கள் இன்னும் பணம் படைத்தவர்கள் ஆகிறார்கள், ஏழைகள் இன்னும் ஏழைகளாகின்றார்கள். அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பொய்யர்களும் மேலும் தங்களுடைய பைகைளை மட்டும் நிரப்பிக் கொள்கிறார்கள். நாளின் கடைசியில், ஏழை மக்கள் எல்லோருக்கும் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள். மேலும், இன்று நடந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையை போன்றே நாங்கள் போருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கொண்டிருப்போம் என்று தெரிகிறது”. மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் தலையீடு மற்றும் ஈராக்கில் தோல்வியை பயன்படுத்தி முஸ்லீம்களை பலிகடா ஆக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் மற்றும் ஊடகங்கள் பிரச்சாரத்திற்கு ஆயாஸ் கண்டனம் தெரிவித்தார். “இது எல்லாமே அரசியல்,” என்றார். “அமெரிக்கா அவர்கள் பக்கம் இருக்கவேண்டுமென ஆஸ்திரேலியா விரும்புகிறது. அவர்கள் அங்கு ஒரு பெரிய சகோதரன் தமது பக்கம் இருப்பதுபோல் அமெரிக்காவுடன் இணைந்து அங்கு நடந்துகொண்டிருக்கின்றார்கள். “அமெரிக்காவில் நீங்கள் என்ன பார்க்கலாம் என்றால் அவர்கள் முஸ்லீம்களை தீவிரவாதிகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களுடன் இணைத்துப்பார்க்கிறார்கள். ஆஸ்திரேலியா அமெரிக்காவை பின்பற்றுகிறது, இங்கும் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் அதே வகையான வெற்றுப்பேச்சுக்கள் அனைத்தும் இருக்கப் போகிறது. ஆஸ்திரேலியாவிலும் அதே வகையான பயத்தை கொண்டு வருவது குறிக்கோளாக இருக்கிறது என நினைக்கிறேன். உலகம் முழுவதும் அந்த பயத்தை கொண்டு வர விரும்புகிறார்கள். பணக்காரர்களை இன்னும் பணம் படைத்தவர்களாக ஆக்கவும், ஏழைகளை ஏழ்மையில் இருக்க செய்வதற்குமான ஒரு முழுமையான திட்டம் போல் இது இருக்கிறது. இங்கு எந்த ஒரு மத்தியதர வர்க்கமும் இருக்கப்போவதில்லை. அது எவ்விதமான சிறப்பானதையும் பெறப்போவதுமில்லை. சமீபத்திய மத்திய வரவு-செலவுத் திட்டத்தில் இராணுவ செலவினத்தில் மற்றொரு கணிசமான அதிகரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்று பிராட்மெடோஸ் சமூக உதவி அலுவலகத்துக்கு வெளியே சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள் சுட்டிக்காட்டினர். "இராணுவ நிதியளிப்பில் ஒரு அதிகரிப்பைப் பெற்றிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எந்நேரமும் நான் ABC-யை (ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை) பார்க்கிறேன். ஆனாலும் நான் அது குறித்து அறிந்திருக்கவில்லை. ஆஸ்திரேலியா போர்களில் எல்லாம் கலந்துக்கொண்டு இருந்திருக்கக்கூடாது. ஆஸ்திரேலியாவை தாக்க யாரும் வந்துகொண்டிருக்கவில்லை. ஏன் ஆஸ்திரேலியா மற்ற நாடுகளை தாக்க வேண்டும்? ஈராக்கிலிருக்கும் வயதானவர்கள் மற்றும் அனைத்து குழந்தைகளுக்காக வருத்தப்படுகிறேன். அமெரிக்கா அதன் சொந்த நலன்களுக்காகவே அங்கே இருக்கிறது. அதுதான் பெட்ரோல் அதைத்தவிர வேறெதுவுமில்லை” என்று ஒரு முன்னாள் மாமிச உணவு தயாரிப்பு தொழிலாளி சார்லி கூறினார். சார்லி அவருடைய சூழ்நிலையை விளக்கினார்: “வரவு-செலவுத் திட்டத்தை எல்லாம் நான் விரும்பவில்லை. இப்பொழுது நான் குறைவான உணவு, பொழுதுபோக்கு போன்ற நிறைய விஷயங்கள் இல்லாமல் இருக்கிறேன். நான் மாமிசம் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பத்து வருடங்கள் பணிபுரிந்தேன். அதனால், என்னுடைய தோள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது ஒரே மாதிரியான வேலையை திரும்ப திரும்ப செய்ததால் நேர்ந்தது. மேற்கொண்டு, என்னால் வேலை செய்ய முடியாது. என்னால் துணிகூட காயப்போட முடியாது. எல்லா செலவுகளும் போக வாழ்கை நடத்த வாரத்திற்கு $200 டாலர்களே என்னிடம் உள்ளன. சார்லி மேலும் கூறியதாவது: “இதே தொடர்ந்தால், நாங்கள் ஒரு மூன்றாம் உலக நாட்டில் இருப்பது போல இருக்கப்போகிறது. எல்லா போர்களாலும் தான் இது போன்று இருக்கிறது. சில இடங்களில் அமெரிக்க தொழிலாளர்கள் ஒரு மணிநேரத்திற்கு 6 டாலர் என்றளவில் பெறுகின்றனர். அங்கு படுமோசமாக இருக்கிறது. லோசா என்ற ஒரு 20 வயது பயிற்சி ஆசிரியர், அரசாங்க வருமான ஆதரவை பெறவில்லை. “நான் ஒரு ஆசிரியரின் உதவியாளராக பணி செய்ததைவிட மைக் டொனால்டில் வேலை செய்தபோது நான் சேமித்ததிலிருந்து நான் வாழ்ந்து வருகிறேன்,” நான் என் சிறுசேமிப்பிற்குள் தோண்டிக் கொண்டிருக்கறேன். புதிய சமூகநல உதவிகளுடன் புதிய விதிமுறைகளில், உங்கள் வேலையை நீங்கள் இழந்துவிட்டால், இளைஞர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உதவி தரப்படுவதில்லை என்பது நகைப்பிற்கிடமானதாக இருக்கிறது என நான் நினைக்கிறேன். இது போன்ற அனைத்தும் செல்வந்தர்களை பாதுகாப்பதற்காகவே மேலும் அவர்கள் பாதுகாக்கப்பட தேவையில்லை. பெரும்பாலான மக்கள் எப்படி உயிர் வாழ்வது?” என்றார். லோசா 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஈராக்கிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்தார். “இந்த மாதம் என்னுடைய அம்மா மற்றும் சகோதரி மீண்டும் திரும்பிச் சென்று என்னுடைய தாத்தாவை காண இருக்கிறார்கள். என்னுடைய அம்மா சுமார் 20 வருடங்களாக அவருடைய தந்தையை பார்க்கவில்லை, ஆனால் அவர் ஈராக்கிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. அது அவ்வளவு ஒரு முழுமையான குழப்பத்திலும், கலவரத்திலும் இருக்கின்றது. "நாம் இராணுவத்திற்கு ஏன் அதிகமாக செலவு செய்கிறோம் என்று எனக்கு தெரியவில்லை. நாம் ஏன் ஈராக்கிற்கு சென்று கொண்டிருக்கிறோம், அத்துடன் மக்களை கொல்வதை மட்டும் செய்துக் கொண்டிருக்கிறோம்? ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளை உள்வராது செய்வதற்கு இங்கு மில்லியன் கணக்கில் நாம் செலவு செய்துக் கொண்டிருக்கிறோம். அப்படி செய்வதை நாம் ஏன் நிறுத்தக்கூடாது? அகதிகள் இங்கு வரட்டும் அந்த பணத்தை ஏனைய பொருள், வேலைகள், மற்றும் வேறு ஏதாவது வாங்க உபயோகப்படுத்தட்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் எது நல்லது என்பது பற்றி சிந்திக்க வேண்டும், செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றால் நாம் அனைவரும் அமெரிக்கா போன்று ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு தெரியுமா, அமெரிக்காவில் இருக்கும் மக்கள் உண்மையிலேயே, ஏழைகள். அங்கே செல்வந்தர்களாக பிரபலங்கள் இருக்கிறார்கள் ஆனால் மீதமிருக்கும் அனைவரும் ஏழைகளாக இருக்கிறார்கள்" என்று லோசா கருத்துத் தெரிவித்தார். “அமெரிக்கா, வியட்நாமிற்குள் நுழைவதற்கு டன்கின் வளைகுடா நிகழ்வை மேடையேற்றியது,” என்று குறிப்பிட்டார். “ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முந்திய ஆவணங்கள் வெளிவிடப்பட்ட போது இது வெளிவந்தது. மற்றொரு நாட்டுக்குள் தரையில் கால் பதிக்க ஒரு பொய்யான கொடி அசைத்திருக்கிறார்கள்.” என்று போருக்கான அமெரிக்காவின் நியாயப்படுத்தல் குறித்து ஒரு திட்ட மேலாளரான கிறிஸ் என்பவர் கூறினார். "அமெரிக்கா எப்பொழுதுமே போருக்கு அழுத்தம் கொடுக்கும், ஏனென்றால் அது ஒரு சொத்து குவிப்பாளரும் கூட. இப்பொழுது அது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது. ஒரு பகுதியை ஸ்திரப்படுத்துவதற்கு உள்ளே சென்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல் தெரியவில்லை. அவர்கள் உள்ளே செல்கிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு ஒரு உறுதியான நலன்கள் உள்ளன அல்லது இயற்கை வளங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர்.” பிணையற்ற வீட்டு அடமான சீரழிவு மற்றும் உலக பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகளே காரணமாக இருந்தன என்று கிறிஸ் கூறினார். “அந்த பெரிய வங்கியாளர்கள் அதற்காக எப்பொழுதும் வழக்கை எதிர்கொள்ளவில்லை. அதே ஆட்கள் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அமெரிக்கா தெருக்களிலும் மற்றும் குடிசையிலும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மக்களை கொண்டிராத ஒரு முதல் உலக நாடாக இருக்கவேண்டும். நான் நண்பர்களுடன் அங்கிருக்கும் போது அவ்வாறில்லை என்பதை பார்த்திருக்கிறேன்.” “2003இல் அமெரிக்கா ஈராக்கினுள் பேரழிவு ஆயுதங்களுக்காக அல்ல, எண்ணெய் வளத்திற்காகவே சென்றது. அவர்கள் சதாம் ஹுசைனைக் கூட உருவாக்கினார்கள். அவர்கள் ஈராக்கிய மக்களுக்கு உதவவில்லை. சிரியாவில் அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் பயங்வாதத்தை தோற்றுவித்திருக்கிறார்கள், இப்பொழுது மீண்டும் மேற்கத்திய நாடுகளுக்கு அது சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு போர் தேவையில்லை. நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். எல்லா அகதிகளும் ஆஸ்திரேலியாவிற்கு வந்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும். அவர்கள் ஏன் வருகிறார்கள்? போரின் காரணமாக” என்று துருக்கியை பூர்வீகமாக கொண்ட செவ் என்பவர் கூறினார். |
|