தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
War drums beat louder against China as Japanese imperialism re-emerges ஜப்பானிய ஏகாதிபத்தியம் மீளெழுகையில், சீனாவிற்கு எதிரான யுத்த முரசுகள் உரக்க ஒலிக்கின்றன
Nick
Beams Use this version to print| Send feedback ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் ஆஸ்திரேலியாவிற்கான இந்த வார விஜயம் மற்றும் அதன் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையிலிருந்து புவிசார் அரசியலின் இரண்டு முக்கிய மாற்றங்கள் எழுகின்றன. முதலாவதாக, சீனாவிற்கு எதிரான அழுத்தத்தின் தீவிரப்பாடு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது சீனாவிற்கு எதிரான ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பின்" பாகமாக, அதற்கு எதிராக அப்பிராந்தியத்தின் மூன்று பிரதான ஏகாதிபத்திய சக்திகளும், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா, இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் என்ற வெடிப்படையான அச்சுறுத்தலாகும். குறைந்த முக்கியத்துவம் கொண்ட அபிவிருத்தி என்றில்லாமல், இரண்டாவதாக, அதன் குறிப்பிட்ட கூட்டாளிகளோடு கூட்டு இராணுவ நடவடிக்கையில் பங்கெடுக்க ஜப்பானை அனுமதிக்கும் வகையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் அந்நாட்டின் அரசியலமைப்பிற்கு "மறுவிளக்கம்" அளிக்க அபே அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, உலக அரங்கில் —அமெரிக்க முன்னெடுப்பிலிருந்து சுதந்திரமாக— ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் மீளெழுச்சியாகும். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் அவரது உரையில் "ஜனநாயகம்," கடல்களுக்கான "சுதந்திரம்" மற்றும் சர்வதேச "விதிகளை" தாங்கிப் பிடிக்கும் கூற்றுக்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்த போதினும்—அந்த அனைத்து சொற்களும் வாஷிங்டனால் சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ கட்டியெழுப்புதலை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டவை என்றாலும்—அபேயின் உரை அமெரிக்காவிற்கு நேரடியாக ஒரேயொரு கூற்றை தெரிவிப்பதாக இருந்தது. அது வெளிப்படையாக "பொதுப்பார்வைக்கு வரச்செய்யும்" ஒரு சம்பவமாகும். போருக்கு-பிந்தைய "அமைதிவாத" அரசியலமைப்பால் திணிக்கப்பட்டிருந்த, யுத்தத்தை உத்தியோகபூர்வமாக சட்டவிரோதமாக்கும் கடந்த கால மிச்சசொச்சங்களை ஜப்பான் உடைத்து வருகிறது என்பதையும், ஒரு சுதந்திர இராணுவ சக்தியாக உலக அரங்கில் அது திரும்ப வந்திருக்கிறது என்பதையும் அபே உலகிற்கு அறிவித்தார். அபே அவரது விஜயத்தை முடித்துக் கொண்டு வருவதற்கு முன்னரே கூட, சீனாவிற்கு எதிரான அதிகரிக்கப்பட்ட அழுத்தம் ஆஸ்திரேலிய வெளியுறவு விவகாரத்துறை மந்திரி ஜூலி பிஷாப்பால் சிட்னி மார்னிங் ஹெரால்டுக்கு அளிக்கப்பட்ட ஒரு நேர்காணலில் வெளிப்பட்டது. “பலவீனமான நாடுகளைப் பொருட்படுத்தாத" காரணத்தால், முந்தைய அரசாங்கங்கள் சீனாவை விமர்சிக்காமல் விட்டது அவற்றின் ஒரு "தவறாக" மாறி விட்டதாக பிஷாப் அறிவித்தார். மவுனமாக இருந்தமை குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி இருப்பதாக அந்த பெண்மணி தெரிவிக்கிறார். சீனாவுடன் "ஆழ்ந்த ஈடுபாட்டோடு" இருப்பதே அனுகூலமான நிலைமை என்ற போதினும், என்ன தவறாக போகும் என்பது குறித்தும் மற்றும் "சிறந்தவற்றின் மீது நம்பிக்கை வைப்பதற்கும் ஆனால் மோசமானதை சமாளிப்பதற்கும்", ஆஸ்திரேலியா "தெளிவான பார்வை" கொண்டிருக்க வேண்டுமென பிஷாப் வலியுறுத்தினார். கான்பெர்ராவில் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு "ஆஸ்திரேலிய தலைமைக்கான விவாத கூட்டத்தில்" ஜூன் 30 அன்று அவர் தெரிவித்த கருத்துக்களோடு இதை இணைத்து வாசித்தால், “மோசமானதை" சமாளிப்பது என்பது யுத்தத்திற்கான தயாரிப்பை அர்த்தப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. அந்த கூட்டத்திற்கு ஒரு குறிப்புரையை வழங்குகையில், கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல்களின் பிராந்திய பிரச்சினைகளின் மீது மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை பிஷாப் சுட்டிக் காட்டினார்—அந்த விவகாரத்தில் சீனா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு எதிராக சம்பந்தப்பட்டுள்ளது, அவ்விரு நாடுகளுமே அமெரிக்க கூட்டாளிகளாகும். அவர் "எந்தவொரு நேரடியான சமாந்தரங்களையும்" குறிப்பிடவில்லை என்று வலியுறுத்திய போதினும், சாரயேவோவில் ஆஸ்திரிய அரசியல் வாரிசான பெர்டிணான்ட் படுகொலையின் விளைவுகளை அவர் நினைவுகூர்ந்தார், அந்த சம்பவம் முதலாம் உலக யுத்தம் வெடிப்பதற்கு உடனடி தூண்டுதலாக இருந்தது. சீனாவின் அதிகரித்து வரும் பொருளாதாரப் பலம் பெய்ஜிங்கை அதிகளவில் ஆக்ரோஷத்திற்கு இட்டுச் செல்கிறது மற்றும் அப்பிராந்தியத்தின் "ஸ்திரப்பாட்டை" அச்சுறுத்துகிறது என்பதே ஏகாதிபத்திய சக்திகளின் இடைவிடாத வலியுறுத்தலாகும். ஆனால் உண்மையில் நீண்டகாலமாக இருந்து வரும், இவற்றில் சில இரண்டாம் உலக யுத்தத்தின் போதிருந்து இருந்து வருகின்ற நிலையில், அந்த பிராந்திய பிரச்சினைகள் மீதான பதட்டங்கள் எரியூட்டப்பட்டு இருப்பது அமெரிக்க முன்னெடுப்பின் மற்றும் அபே உடன் மிகவும் நேரடியாக தொடர்புபட்டுள்ள ஜப்பானின் அதிகரித்த தன்முனைப்பின் ஒரு நேரடி விளைபொருளாகும். ஒரு விளையாட்டை உவமையாக சுட்டிக் காட்டி, அபே ஆஸ்திரேலியா உடனான ஒரு "சிறப்பு நட்புறவு" குறித்தும் பேசினார். அவற்றின் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தி உள்ள நிலையில், அவ்விரு நாடுகளும் "எங்களின் பிராந்திய மற்றும் உலக ஒழுங்கமைப்பைக் காப்பாற்றுவதற்காக, இப்போது ரக்ஃபி விளையாட்டில் அணிவகுப்பதைப் போல" அவ்விரு நாடுகளும் சேர்ந்திருக்கும் என்றார். முன்னோக்கி தள்ளி செல்வதற்கு விளையாட்டு வீரர்கள் கைகளைக் கோர்த்தபடி ரக்ஃபி விளையாட்டில் அணிவகுத்து நிற்பதைப் போல, அபே—அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக—ஜப்பான், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய விதத்தில், "வைரங்களை" ஒன்று கோர்ப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார். அது இந்திய பெருங்கடலில் இருந்து மேற்கத்திய பசிபிக் வரையில் நீண்டதூரத்திற்கு, "கடல்வழியில் பொதுமைகளைப் பாதுகாக்கும்" என்றார். இதன் இலக்கு தெளிவாக சீனாவாகும். அபே பிரதம மந்திரியாக 2007இல் அவரது முந்தைய பதவி காலத்தின் போது, இதே பரிந்துரைக்கப்பட்ட கூட்டணியின் ஒரு முந்தைய அவதாரமான “நாற்கரம்" (Quad) என்றழைக்கப்பட்டதை முன்னெடுத்திருந்தார். அந்த நடவடிக்கை சீனாவிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் தூண்டிவிட்டதோடு, அது நேட்டோவின் ஒரு ஆசிய வடிவமாகும் என்று சீனா அதை கண்டனம் செய்தது. சீன முக்கியத்துவங்களின் காரணமாக அந்த யோசனையை ஆஸ்திரேலியா ஆதரிக்க முடியாதென, பிரதம மந்திரி கெவின் ரூட்டின் கீழ் ஆஸ்திரேலியா குறித்து காட்டிய பின்னர், 2008இன் தொடக்கத்தில் அத்திட்டம் கைவிடப்பட்டது. எவ்வாறிருந்த போதினும் அரசியல் இயற்கையமைப்பு குறிப்பிட்டளவிற்கு கடந்த ஆறு ஆண்டுகளில் மாற்றம் அடைந்துள்ளது. ஜூன் 2010இல், அமெரிக்க தூதரகத்தால் "பாதுகாப்பான ஆதாரங்கள்" என்று வர்ணிக்கப்பட்டவர்களான, அவரது தொழிற் கட்சியின் சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ரூட் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரூட்டின் வெளியேற்றமானது, புதிய தொழிற் கட்சி பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டின் கீழ், ஆஸ்திரேலியா வாஷிங்டனின் சீன-விரோத முன்னெடுப்புடன் இணைவதற்கு பாதையைத் திறந்துவிட்டது. ஜப்பானில், ரூட்டிற்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு சில வாரங்களுக்கு முன்னர், ஜப்பான் சீனாவின் தரப்பில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தி இருந்த ஜப்பானிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா அமெரிக்கா உடனான ஒரு மோதலுக்குப் பின்னர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் இறுதியாக, ஒரு வலதுசாரி தேசியவாத மற்றும் அதிகளவிலான இராணுவவாத நிகழ்ச்சிநிரலைத் தழுவிய, அபேயின் மீள்வருகைக்கு பாதையைத் திறந்துவிட்டது. சீனாவின் "தன்முனைப்புக்கு" ஜப்பான் தற்பாதுகாப்புக்காக விடையிறுப்பு காட்டி வருகிறது என்று சித்தரிக்க, பெருநிறுவன ஊடகங்களில் இருந்த அவர்களின் விசுவாசமான சேவர்களின் ஆதரவோடு, அரசியல் ஸ்தாபகத்தின் விடாமுயற்சிகளானது ஜப்பானின் பழைய வரலாற்று அபிவிருத்திகளைக் கைத்துறந்த நிலையில், இப்போதைய நிலைமையை பழுக்க வைக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் ஒரு முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சக்தியாக ஜப்பான் உருவானதிலிருந்து, 1930களில் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகளை நடத்தியதோடு, ஜப்பான் சீனாவை ஆக்கிரமிக்க முனைந்தது. காலங்கடந்து-அபிவிருத்தி அடைந்த மற்றொரு முதலாளித்துவ சக்தியான ஜேர்மனியோடு அங்கே உடனடியான சமாந்தரங்கள் உள்ளன. ஜேர்மனி அது இருபதாம் நூற்றாண்டில் இரண்டு முறை படையெடுத்துள்ள உக்ரேனில், “ரஷ்ய ஏகாதிபத்தியத்தை" கண்டிக்கும் ஒரு ஊடக பிரச்சாரங்களுக்கு இடையே, ஒரு அதிதீவிர வலதுசாரி கைப்பாவை ஆட்சியை நிறுவ உதவுவதில், இப்போது நேரடியாக தலையீடு செய்துள்ளது. ஜப்பான் மற்றும் ஜேர்மனி இரண்டிலேயுமே, அவற்றின் ஆளும் வர்க்கங்கள் இன்னும் அதிகமாக பரந்த உலகளாவிய பாத்திரம் வகிக்க முனைந்துள்ள நிலையில், இரண்டாம் உலக யுத்தத்தில் முறையே அவை வகித்த பாத்திரங்கள் மற்றும் குற்றங்களை மூடிமறைக்க அங்கே அரசியல், கல்வித்துறை மற்றும் ஊடக வட்டாரங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபே விஜயத்தின் மத்திய அம்சமாக நாடாளுமன்ற உரை இருக்கின்ற போதினும், இரும்பு-எஃகு கனிமங்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியின் இதயதானமாக இருக்கும் ஆஸ்திரேலியாவின் வடமேற்கிற்கான அவரின் விஜயமும் ஜப்பானிய-ஆஸ்திரேலிய "சிறப்பு நட்புறவு" நிகழ்ச்சிநிரலின் அடித்தளத்தோடு உள்ளார்ந்து பிணைந்திருந்தது. அதன் வரலாறு முழுவதிலும், அதிமுக்கிய கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி தேவைகளுக்காக அன்னிய நாட்டு ஆதாரங்களை அது சார்ந்திருக்க வேண்டியிருந்தது என்பதை ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பலவீனம் நிரூபித்துள்ளது. இந்த உண்மையைக் குறித்த துல்லியமான நனவுடன் அபே, ஜப்பான் உலகளாவிய அரங்கில் ஒரு பிரதான சக்தியாக தன்னைத்தானே ஸ்தாபிக்க முயன்று வருகின்ற நிலையில், அதுபோன்ற ஆதாரவளங்களை அணுகுவதற்கு பாதுகாப்பான உத்தரவாதங்களைப் பெறுவதில் பெரும் ஆர்வங்காட்டி வருகிறார். சமாதானம் மற்றும் சுபீட்சத்தின் ஒரு புதிய காலக்கட்டத்தை உருவாக்குவதிலிருந்து வெகுதூரத்திற்கு அப்பால், மிக மிகக் குறைந்த சட்டத்தின் ஆட்சியோடு, ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் மீளெழுச்சியானது, இரண்டாம் உலக யுத்த சம்பவங்களை விட சாத்தியமான அளவிற்கு பெரும் பேரழிவுகரமான விளைவுகளோடு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது. ஜப்பானிய, சீன, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டிய ஒரு பாரிய யுத்த-எதிர்ப்பு இயக்கத்தின் அபிவிருத்தியே, அதிகளவில் இப்போதைய உடனடி கேள்வியாக மாறி வருகிறது. |
|
|