World Socialist Web Site www.wsws.org |
NSA உளவுபார்த்த பெரும்பாண்மையான மக்கள் சந்தேகிக்கப்படாதவர்களே புதிய செய்திகள், சட்டத்துக்கு புறம்பான கண்காணிப்பு குறித்த அமெரிக்க அரசின் பொய்களை வெளிப்படுத்துகிறது.
By Thomas Gaist பெரும்பான்மையான தனிநபர்களது மின் அஞ்சல் மற்றும் பிற தனியார் தொலைத்தொடர்புகளை அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA ) இடைநிறுத்தம் செய்யதிருக்கிறது, ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் இன் படி, அவர்கள் எவரும் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டு கண்காணிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது. நீதித்துறை மேற்பார்வையின் எந்த ஒரு சம்பந்தமோ அல்லது ஆணை அறிக்கையோ இல்லாமல் கண்காணிக்கப்பட்ட நூறாயிரக்கணக்கான அமெரிக்க குடிமக்கள் இதில் உள்ளடங்குவர். எச்சரிக்கை ஒலி எழுப்புபவரான (whistleblower) எட்வார்ட் ஸ்நோவ்டென் அளித்த ஆவணங்களை அடிப்படையாகக்கொண்ட இவ்வறிக்கை, வெறும் தகவல் அறிக்கை மட்டுமல்ல, மாறாக இவை தகவல் தொடர்புகளின் உண்மையான உள்ளடக்கமும் ஆகும் என்று கருதுகிறது. இச்செய்திகள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளது பொய்களை மட்டுமல்லாமல் தகவல் தொடர்புகளின் உள்ளடக்கங்களை அணுக NSA விற்கு “அனுமதி அளிக்கப்படவில்லை” மேலும் “உங்களது தொலைபேசி உரையாடலை யாரும் கவனிக்கவில்லை” என்ற ஜனாதிபதி ஒபாமாவின் பொய்யையும் வெளிப்படுத்துகிறது. போஸ்ட் இன் இந்த ஆய்வு, 2009 மற்றும் 2012 க்கு இடைப்பட கால கண்காணிப்பு செயல்பாடுகளின்போது 11,000 இணைய கணக்காளர்களிடமிருந்து NSA எடுத்த 1,60,000 மின் அஞ்சல்கள் மற்றும் உடனடி செய்திகள், 5,000 க்கும் அதிகமான தனிநபர் புகைப்படங்கள் மற்றும் 7,900 ஆவணங்களின் மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டது. இது அந்த நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளிகளால் சர்வதேச அளவில் இயக்கப்படும் சட்டத்திற்கு புறம்பான உளவுத்திட்டங்களின் பரந்த வலையமைப்பின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். கண்காணிப்பு காலகட்டத்தில் 10-ல் 9 தொடர்புபட்ட வாடிக்கையாளர்களது தொடர்புகள் ”தற்செயலாக” சேகரிக்கப்படுகின்றன என போஸ்ட் தெரிவிக்கிறது. செய்தித்தாளின்படி, “கிட்டத்தட்ட பாதி அளவிலான கண்காணிப்பு கோப்புகள், அதிர்ச்சிகரமான அளவுக்கு இது அதிகம்தான் என்றபோதிலும் அவற்றில் அமெரிக்க குடிமகன்கள் அல்லது குடியிருப்போர்களாக NSA குறித்திருந்த பெயர்கள், மின் அஞ்சல் முகவரிகள் அல்லது பிற விவரங்கள் உள்ளடங்கும். அமெரிக்கர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பதற்காக இது போன்ற 65, 000 க்கும் மேற்பட்ட குறிப்புரைகளை NSA ஆய்வாளர்கள் மூடிவிட்டனர் அல்லது “குறைத்துவிட்டனர்”, ஆனால் கோப்புகளில் வெளிப்படையாக இருந்த மற்றும் அமெரிக்க குடிமக்கள் அல்லது அமெரிக்க குடியிருப்போர்களுடன் வலுவாக இணைக்க முடிகின்ற வகையில் கிட்டத்தட்ட 900 கூடுதல் மின் அஞ்சல் முகவரிகளை போஸ்ட் கண்டுபிடித்துள்ளது. மே மாதம், வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டத்தின் (FISA) அடிப்படையில் பெறப்பட்ட தகவல் தொடர்பு விவரங்களோடு, NSA இன் ஒப்பந்ததாரராக பணியாற்றும் போதும் ஸ்நோவ்டெனுக்கு அணுகல் இருந்தது என்பதை முன்னாள் NSA இயக்குனரான கீத் அலெக்ஸாண்டர் மறுத்துள்ளார்.”அவருக்கு இந்த தகவல் கிடைக்கவில்லை... அந்த தரவுத்தளத்துடன் அவருக்கு அணுகல் கிடையாது” என்று அலெக்ஸாண்டர் தெரிவித்தார். ஆயினும், ஒரு ஆய்வாளர் என்ற முறையில் எந்த ஒருவரது தகவல் தொடர்பு விவரத்தையும் தேடுவதற்கு தனக்கு பரந்த எல்லை இருந்ததாகவும் அதன் காரணமாக தனக்கு “மூல SIGINT உடன் (signals intelligence) பரந்த அளவிலான, காவலில்லாத அணுகல் தரப்பட்டதாகவும்” ஒரு பேட்டியில் ஸ்நோவ்டென் தெளிவாக்கினார். ஒரு நீதிபதி அல்லது செனட்டரின் மின் அஞ்சலின் ஒரு நகலை எடுக்க விரும்பினால், நான் செய்ய வேண்டியதெல்லாம் என்னவென்றால் செலக்டாரை XKEYSCORE க்குள் நுழைக்க வேண்டியது தான்” என்று ஸ்நோவ்டென் கூறினார். ஸ்நோவ்டென் அளித்த தகவல் மாதிரிகளை நீட்டித்து, புலனாய்வின் ஒரு பகுதியாக NSA -ஆல் குறைந்தபட்சம் 9 லட்சம் இணைய கணக்குகள் குறிப்பிட்ட இலக்கு எதுவுமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக போஸ்ட் மதிப்பிட்டுள்ளது. வலைத் தள கண்காணிப்பு யுக்திகள் மூலமாக NSA “தற்செயலாக” கண்காணித்த தனிநபர்களின் எண்ணிக்கை குறித்த அதன் மதிப்பீட்டை வெளியிட மறுக்கிறது. தனிப்பட்ட மருத்துவ பதிவுகள், சுயவிவரக் குறிப்புகள், கல்வி சார்ந்த ஆவணங்கள், மற்றும் குழந்தைகள் மற்றும் காதல் விவகாரங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான தகவல்களை NSA சேகரித்து ஆவணப்படுத்தியிருப்பதாக கோப்புகள் காட்டுகின்றன. இப்படி கண்காணிக்கப்பட்ட தகவல் தொடர்புகள் ”அதிர்ச்சிகரமான வகையில் நெருக்கமானதாக, பாலுணர்வைக் கண்டு இன்பம் அனுபவிக்கும் விதமாக இருப்பதாக” வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன் காதல் மற்றும் மனமுறிவுக்கதைகள், சட்டவிரோத பாலியல் தொடர்புகள், மனநல நெருக்கடிகள், அரசியல் மற்றும் மத மாற்றங்கள், நிதிக் கவலைகள் மற்றும் ஏமாற்றிய நம்பிக்கைகள்” போன்றவை அதில் உள்ளடங்கியிருந்ததாக போஸ்ட் கூறியது. “10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களது தினசரி வாழ்க்கை குறிவைக்கப்படவில்லை எனினும், பட்டியலிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று போஸ்ட் எழுதியுள்ளது. அறிக்கை மூலம் உயர்த்திக்காட்டப்படும் ஒரு உதாரணம், NSA மற்றும் ஆஸ்திரேலிய சமிக்ஞை இயக்குனரகத்தால் (ASD) தக்கவைக்கப்பட்ட - தாலிபானில் இணைய விரும்பும் ஒரு மனிதனுக்கும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அவரது காதல் ஆர்வலருக்கும் இடையிலான உணர்ச்சிகளால் நிறைந்த தகவல்களது 800 பக்கங்கள் சம்பந்தப்பட்டதாகும். இந்த கட்டுப்பாடில்லாத உத்தரவில்லாத உளவு என்பது கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்க கண்காணிப்பு அரச சக்தி விரிவாக்கத்தின் வெளிப்பாடாகும். போஸ்ட் குறிப்பிடுவது போல், 2008 FISA திருத்தச்சட்டத்தின் ஒரு பத்தி, “காரணமும் நீதிபதியிடமிருந்து ஓர் உத்தரவாணையும் வருவதற்கும் 30 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது என்பதால் வழிமுறைகளை கட்டுப்பாடின்றி பயன்படுத்துவதை” நோக்கி NSA நகர்ந்திருக்கிறது என்கிறது. NSA இன் வலைத்தள கண்காணிப்பு செயல்பாடுகள் அரட்டை அறைகளில் – ஒரு முறை அந்த அரட்டை அறை (chat room) தனிப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டது முதல், செய்தி பரிமாற்றிக்கொள்ளும் ஒவ்வொரு பயன்பாட்டாளர் மற்றும் – எந்தவித அறிவிப்புமின்றி எப்போதாவது பயன்படுத்தும் “பதுங்கும் நபர்களிடமிருந்துகூட” (lurkers) தகவல்களை எடுப்பதை உள்ளடக்கும். NSA நூற்றுக்கணக்கான இணைய பயன்பாட்டாளர்களால் அணுகப்படும் சேவை வழங்கிகளின் IP முகவரிகளை நேரடியாக குறிவைக்கிறது, இது பரந்த அளவிலான மக்களது தகவல்களை “தற்செயலாக” பெறுவதை தவிர்க்க முடியாததாக்கும் ஒரு நடவடிக்கை. சுட்டிக்காட்டப்பட்ட அல்லது அமெரிக்காவிற்கு வெளியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் IP முகவரியைப் பயன்படுத்தும் மக்கள் அமெரிக்கர் அல்லாதோராக கருதப்படுவதாக என்று ஸ்நோவ்டெனின் வெளிப்பாடுகள் காண்பிக்கின்றன. ஒரு சம்பவத்தில், பயன்பாட்டாளர் வேறு மொழியில் மின் அஞ்சல்களை எழுதினார் என்ற காரணத்திற்காக மட்டுமே அமெரிக்க குடிமகன் அல்லாதோர் என அடையாளப்படுத்தப்பட்டார். NSA ஆய்வாளர்களால் FISA இன் ஆணைப்பத்திரத்தைப் பெற முடியவில்லையெனில், விரும்பிய தகவல்களைப் பெறுவதற்காக NSA முகவர்கள் சுலபமாக பிற வழிமுறைகளுக்கு மாறிவிடுகின்றனர் என்கிறது போஸ்ட் இன் அறிக்கை ஒன்று. PRISM மற்றும் Upstream திட்டங்களோடு (இவற்றிற்கு முகவர்களின் சார்பாக “நியாயமான நம்பிக்கை” மட்டுமே தேவை) சம்பந்தப்பட்ட அவர்களது உள்முகமான தகவல் தொடர்புகளில் FISA இன் நிலையான ஆணை அறிக்கைகளுடன் ஒப்பிடுவதில், NSA ஆய்வுகள் வெளிநாட்டுத் தன்மைக்கான குறைந்த அளவிலான ஆதாரத்தன்மைக்கான வாயில் என்பதைக் குறிப்பிட்டுள்ளன. புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரத்துவங்களின் செயல்பாடுகளுக்கான “சட்டபூர்வ” உரை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட அதிகாரபூர்வ நிழல் நீதிமன்றமான FISA நீதிமன்றத்தின் அதிகாரத்தினையும் கூட NSA அவமதிக்கிறது, இது அமெரிக்க அரசாங்கத்தின் மேல் மட்டத்தில் காணப்படும் சட்டமற்ற தன்மையினையே சுட்டிக் காட்டுகிறது. ”NSA மற்றும் சக ஆய்வாளர்கள் உண்மையில் ஒரு வாடிக்கையாளரைக் குறிவைக்க விரும்பும்போது, அமெரிக்க இரகசியங்களுக்கான அவர்களது அக்கறைகள் குறைந்துவிடுகின்றன. சில நேரங்களில், வெளிநாட்டுத் தன்மையை மதிப்பிட அவர்கள் பயன்படுத்தும் தர்க்கங்கள் சட்ட விதிகளையோ அல்லது நன்கறியப்படும் தொழில்நுட்ப உண்மைகளையோ அதன் உச்சக் கட்டம் வரையில் வளைத்துக்கொள்வதாக” போஸ்ட் குறிப்பிட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் செயலதிகாரிகள் பிரிவு கூட NSA இன் வலைத் தளத்திலிருந்து தப்பவில்லை. பதவியேற்பதற்கு முன்பும் பின்பும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் தகவல் தொடர்புகள் நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளதாக NSA தகவல் சுட்டிக்காட்டுகிறது. ஸ்நோவ்டெனால் கசியவிடப்பட்ட இக்கோப்புகள் “குறைக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்” மற்றும் 1200 க்கும் அதிகமான ”குறைக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கான” ஆதாரங்களை சுட்டிக்காட்டுகின்றன. “குறைக்கும்” வழிமுறைகள் சந்தேகிக்கப்படும் வகையில் தற்செயலாக சேகரிக்கப்பட்ட விவரங்களை நீக்குவதற்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளன, இவ்வாறாக சாதாரண குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை நீண்ட காலம் சேமித்துவைப்பது தடுக்கப்படுகிறது. ஜனாதிபதியின் கடிதப்போக்குவரத்து எதுவாக இருந்தாலும் பொதுமக்களின் தகவல் தொடர்புகளின் அணுகல் மற்றும் தீவிரவாதத்துடன் ஒத்துபோகும் எதனுடனும் முற்றிலும் தொடர்பில்லாதவை அதிக அளவிலும் கால வரம்பின்றியும் NSA ஆல் தக்கவைக்கப்படுகின்றன என்பதை சமீபத்திய செய்திகள் தெளிவாக்குகின்றன. கண்காணிப்பு அரசின் குற்றங்களை மூடி மறைப்பதிலும் மன்னிப்பதிலும் ஊடகங்களின் தொடர்பினையும் போஸ்ட் இன் கட்டுரையே குறிப்பிடுகிறது. CIA ஆல் அவர்களது கட்டுரையின் விவரங்கள் மதிப்பீடு செய்யப்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பாக்கிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட முன்னாள் வெடிகுண்டு தயாரிப்பாளரும் பாலியில் 2002 -ல் தீவிரவாத குண்டு தாக்குதலுக்கு சந்தேகிக்கப்படுபவருமாரான முஹமத் தாஹிர் ஷாஸத் மற்றும் உமர் படேக்கினை பிடிப்பதில் உதவிய ”கருதத்தக்க அளவிலான புலனாய்வு கண்டுபிடிப்புகளின் வெளிப்பாடுகள்” உள்ளிட்ட கசிவுகள் தினசரி செய்திகளில் உள்ளடங்கும். இந்த வழக்குகள் குறித்த கூடுதல் தகவல்கள் வழங்கப்படவில்லை, மேலும் CIA அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக அதிகாரிகள் கூறிய மற்ற உதாரணங்களை போஸ்ட் நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. இராணுவம், பாதுகாப்பு மற்றும் இணைய போர் பிரச்சனைகள் தொடர்பான தரவுகளை வெளிப்படுத்துவதும் இதில் உள்ளடங்கும். இவை சம்பந்தப்பட்ட விவரங்களை அது வெளிப்படுத்தாது என போஸ்ட் வலியுறுத்துகிறது, CIA உடனான ஆலோசனையில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்பது இன்னொரு முடிவு. |
|