தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German chancellor makes her seventh visit to China ஜேர்மன் சான்சிலர் சீனாவிற்கான அவரது ஏழாவது விஜயத்தை நிறைவு செய்கிறார்
By
Ulrich Rippert Use this version to print| Send feedback கடந்த வாரயிறுதியில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU) ஓர் உத்தியோகபூர்வ விஜயமாக சீனாவிற்கு பயணித்தார். அது அவர் பதவியிலிருக்கும் போது சீனாவிற்கு விஜயம் செய்திருக்கும் ஏழாவது பயணமாகும். அவரது முந்தைய விஜயங்களைப் போலவே, இம்முறையும் அவரோடு முக்கிய வணிக பிரதிநிதிகளின் குழுவும் உடன் சென்றிருந்தது. சான்சலரின் சீன விஜயங்களின் போது சில முறை உடன் சென்றிருந்த வோல்ஸ்வாகன் (VW) தலைமை செயலதிகாரி மார்டீன் வின்டர்கோர்னுடன், சிமென்சின் புதிய தலைவர் ஜோ கேய்சர், ஜேர்மன் வங்கி தலைவர் யூர்கென் பிட்ஷ்சென், வர்த்தக வங்கி தலைவர் மார்டீன் பிளெசிங், மற்றும் தைசென்-குரூப் தலைவர் ஹைனரிச் ஹீசிங்கர், அத்துடன் ஜேர்மன் அஞ்சலகத்தின் பிராங்க் அப்பேல் மற்றும் இன்னும் பலரும் இருந்தனர். ஜேர்மன் அஞ்சலகத்திற்கு சீனாவில் 500 இடங்களில் 14,000 பணியாளர்கள் இருப்பதோடு, அதற்கு ஷாங்காயில் ஒரு பிரதான சர்வதேச சரக்கு கையாளும் மையமும் இருக்கிறது. 1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மேற்கு மாகாணமான சிஷ்சுவானின் செங்டூ நகரம் அவர்கள் சென்றடைந்த முதல் இடமாக இருந்தது. இந்நகரில் மட்டும், 160 ஜேர்மன் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேர்க்கெல் அங்கே தரையிறங்கியதும் உடனடியாக, சீனாவின் 17 உற்பத்தி ஆலைகளில் ஒன்றாக விளங்கும் செங்டூ VW ஆலைக்கு விஜயம் செய்தார். அதன்பின்னர் அவர் நகர்மயமாக்கல் குறித்த ஒரு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார், அங்கே ஜேர்மன் நிறுவனங்கள், நகரசபை சேவைகள் மற்றும் நிர்வாகத்திற்கான பல்வேறு சேவைகளையும், எவ்வாறு நடக்கின்றன என்ற விளக்கத்தையும் வழங்கின. திங்களன்று மேர்க்கெல் சீன-ஜேர்மன் பொருளாதார கமிட்டியின் தொடக்கவிழா கொண்டாட்டங்களில் பங்கு பெற்றதோடு, பெய்ஜிங்கில் அரசியல் விவாதங்களுக்காக ஜனாதிபதி ஜி ஜின்ங்பிங் மற்றும் பிரதம மந்திரி லி கெக்கியாங்கைச் (Li Keqiang) சந்தித்தார். இந்த விவாதக்கூட்டம் தொடங்கப்பட்டதானது அவ்விரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை முறைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவிற்கு வெளியே இருக்கும் ஜேர்மனியின் மிக முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும், ஒட்டுமொத்தமாக அதன் ஐந்தாவது மிக முக்கிய கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. மறுபுறத்தில் ஐரோப்பாவில் ஜேர்மனி சீனாவிற்கு மிக முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. ஜேர்மனியின் வெளிநாட்டு முதலீட்டு முகமையான "ஜேர்மன் வர்த்தகம் மற்றும் முதலீடு" (GTAI) அறிவிக்கையில், சீனாவில் ஜேர்மனின் நேரடி முதலீடு கூர்மையாக அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டதோடு, இந்த ஆண்டு அது 39 பில்லியன் யூரோவை எட்டுமென மதிப்பிட்டுள்ளது. ஜேர்மனியின் அமெரிக்க முதலீட்டை விட இது மிகவும் குறைவு தான் என்ற போதினும், அங்கே அது 2012இல் 199 பில்லியன் யூரோவாக இருந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அட்லாண்டிக் முழுவதிலுமான ஜேர்மன் முதலீடு வீழ்ச்சி அடைந்துள்ளது ஆனால் அதேவேளையில் சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில தொழில்துறைகளில், அனைத்திற்கும் மேலாக வாகன தொழில்துறை மற்றும் எந்திர கட்டுமான தொழில்துறைகளில், சீனா உடனான வர்த்தகம் முற்றிலுமாக மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. சமீபத்தில் VW "சந்தைக்கு சிறப்பு: சீனா" என்ற ஒரு அறிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கூட்டு நிறுவனத்தை ஸ்தாபித்ததில் இருந்து, சீனாவில் அதன் வர்த்தகம் படிப்படியாக விரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், வோல்ஸ்பேர்க்கை மையமாக கொண்ட அந்த நிறுவனம் சந்தை முன்னணியாளர் என்ற நிலைக்கு உயர்ந்து, அந்நாட்டில் கார்களின் பங்களிப்பில் 20.8 சதவீத பங்களிப்பை எட்டியிருந்தது. 2012ஆம் நிதியாண்டில், VW சீனாவில் சுமார் 2.8 மில்லியன் வாகனங்களை விற்றது, அதன் விளைவாக சீனா அதன் மிகப்பெரிய சந்தையாக ஆனது. VW அதன் உலகளாவிய இலாபத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கை சீனாவில் இருந்து பெற்றது. சீனச் சந்தை அண்மித்தளவில் மந்தநிலைக்கு வருவதாக தெரியவில்லை என்று VW எழுதியது. சீனாவில் ஒவ்வொரு 1,000 குடியானவர்களுக்கும் அங்கே இப்போது வெறும் 50 கார்கள் மட்டுமே இருக்கின்றன, அதேசமயம் ஜேர்மனியில் அது 520ஆக இருக்கிறது. 2018ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் உற்பத்தியை விரிவாக்க அந்நிறுவனம் 18 பில்லியன் யூரோவை முதலீடு செய்யுமென VW தலைவர் வின்டர்கோர்ன் அறிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜேர்மனிக்கு அடுத்தபடியாக, சில காலமாக சீனா சிமென்ஸின் மூன்றாவது மிக முக்கிய சந்தையாக மாறியிருப்பதாக சிமென்ஸின் தலைவர் கேய்சரும் அவரது பயணத்திற்கு முன்னதாக குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம் 1872இல் இருந்து 140 ஆண்டுகளாக சீனாவில் செயல்பட்டு வருகிறது; அது தற்போது 32,000 தொழிலாளர்களோடு, ஆண்டுக்கு 6.14 பில்லியன் யூரோ ஆண்டு நிகர விற்பனை வருமானத்தை எட்டியுள்ளது. ஏர்பஸ் தயாரிப்பாளர் EADS நிறுவனமும் சீனாவில் பில்லியன் கணக்கான மதிப்பில் கூட்டு திட்டங்களில் வேலை செய்து வருவதோடு, அங்கே 1,200 தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. ஜேர்மனியின் லூப்தான்ஸா விமானச்சேவை நிறுவனம் ஏர் சீனா உடன் நெருக்கமான கூட்டுறவுக்கு திட்டமிட்டு வருகிறது. லூப்தான்ஸா தலைவர் கார்ஸ்டென் ஸ்போஹர் மற்றும் ஏர் சீனா தலைவர் சோங் ஹியோங்க்கிற்கு இடையே "வர்த்தக கூட்டுறவை மேலும் அதிகரிப்பது சம்பந்தமான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்" கையெழுத்தாகி இருப்பதாக திங்களன்று அந்த விமானச்சேவை நிறுவனம் அறிவித்தது. அங்கேலா மேர்க்கெல் அவரது பதவிகாலத்தில் சீனா உடனான உறவுகளைப் படிப்படியாக அபிவிருத்தி செய்து விரிவாக்கி வந்துள்ளார். இந்த ஆண்டிலேயே, வெளியுறவு மந்திரி பிராங்-வால்டர் ஸ்ரைன்மையரும், பொருளாதாரத்துறை மந்திரி சிங்மார் கபிரியலும் (இருவருமே சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்) ஏற்கனவே பெய்ஜிங்கிற்கு பயணித்துள்ளனர். அக்டோபரில் ஜேர்மன்-சீன அரசாங்க ஆலோசனை கூட்டங்கள் மூன்றாவது முறையாக பேர்லினில் நடைபெற உள்ளது. சீனா இந்த கூட்டுறவில் பொருளாதாரத்தை மட்டுமல்ல, புவிசார் அரசியல் நோக்கங்களையும் பின்தொடர்ந்து வருகிறது. மார்ச் மாத இறுதியில், சீன ஜனாதிபதி ஜி பேர்லினுக்கு விஜயம் செய்து உலகில் சீனா வகிக்கும் பாத்திரம் குறித்து ஓர் உரை நிகழ்த்தினார். எதிர்காலத்தில் பூகோள அரசியலில் சீனா எவ்வாறு ஒரு பெரிய பாத்திரம் வகிக்க முடியும் என்று பேசிய அவர், ஐரோப்பா உடன் குறிப்பாக ஜேர்மன் அரசாங்கத்துடன் அதன் நல்லுறவுகளைப் பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். கிரிமியா வாக்கெடுப்பு மீதான ஐநா பாதுகாப்பு அவை வாக்கெடுப்பில் ரஷ்யாவிற்கு ஆதரவாக எதிர்ப்பு ஓட்டளிக்காமல் சீனா வாக்கெடுப்பை தவிர்த்துக் கொண்டது என்ற உண்மையை சான்சலரின் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் குறிப்பெடுத்துக் கொண்டன. சீன ஆய்வுகளுக்கான மெர்கடோர் பயிலகத்தின் இயக்குனர் செபஸ்தியன் ஹைல்மான் அப்போதை முடிவை Deutschlandfunkக்கு கூறுகையில், சீனத் தலைமை ரஷ்யாவின் நிழலில் இருந்து வெளியே வந்திருப்பதோடு "மேற்கிற்கு நெருக்கமாக நகர்வதற்கு ஏற்ப தன்னைத்தானே நிலைப்படுத்திக் கொண்டிருப்பது" வரவேற்கத்தக்கதாகும் என்றார். சில நாட்களுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுறவைப் பலப்படுத்துவதன் மீதான ஒரு மூலோபாய ஆய்வறிக்கையை பெய்ஜிங் வெளியிட்டது. ஹம்பேர்க்கில் உள்ள பூகோள மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான ஜேர்மன் பயிலகம் அந்த அரசாங்க ஆவணத்தை ஒரு விரிவான பகுத்தாய்வுக்கு உட்படுத்தியது. பின்னர் அது “சீனாவின் புதிய ஐரோப்பிய ஒன்றிய மூலோபாயம்: பூகோள அரசியலில் ஒரு மூலோபாய அச்சைக் கட்டியெழுப்புகிறது" என்ற தலைப்பின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் மீதான சீனாவின் முந்தைய அறிக்கை ஒரு தசாப்தத்திற்கு அதிகமாக பழமையானது என்று குறிப்பிட்டு காட்டியது. அப்போதிருந்து, “படைகளின் சமநிலையும் மற்றும் சீன-ஐரோப்பிய உறவுகளில் பரஸ்பரம் சார்ந்திருக்கும் தன்மையும் சீன தரப்பிற்கு சாதகமாக மாறியுள்ளது." அந்த ஆவணத்தின்படி, அப்போதிருந்து சீனா "அமெரிக்காவின் மிக முக்கிய கடனாளியாக எழுந்துள்ளது [ஆனால்] அது ஐரோப்பாவில் ஒரு முதலீட்டாளராக அதிகளவில் செயலூக்கத்தோடு மாறியுள்ளது." எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சாத்தியமான அளவிற்கு நெருக்கமாக ஒத்துழைக்க விரும்பிய சீனா, ஆனால் "சமமான ஒரு கூட்டு பங்காளியாக மற்றும் பூகோள அரசியலில் ஒரு செயலூக்கத்துடனான கட்டமைப்பாளராக பாத்திரம் வகிக்க" முயன்று வந்திருந்தது. "சீன-ஐரோப்பிய கூட்டுறவைத் தீவிரப்படுத்துவதற்கான" உந்துதல் அனைத்திற்கும் மேலாக "ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 'ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்' அமெரிக்காவின் பிரசன்னம் விரிவாக்கப்பட்டதால் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் அமெரிக்காவிற்கு இடையே திட்டமிடப்பட்ட அட்லாண்டிக் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் (TTIP) உருவானதாகும்." வாஷிங்டன் "ஒரு புதிய வர்த்தக அணியை முறைப்படுத்த" முயன்று வருகிறது, அது "ஒப்பீட்டளவில் சீனாவின் பொருளாதார சக்தியின் நிலையைப் பலவீனப்படுத்த" கூடும். சீன ஊடகங்களில், ஐரோப்பா உடனான மற்றும் முக்கியமாக ஜேர்மன் உடனான நெருக்கமான பொருளாதார கூட்டுறவு ஒரு புதிய "சில்க் சாலை மூலோபாயமாக" சித்தரிக்கப்படுகின்றது. “சீனா ஒரு புதிய சில்க் சாலையை ஊக்குவித்து வருவதுடன், அதை அஸ்தானாவில் இருந்து துஷ்பர்க் வரையில் ஒரு பாரிய யுரேசிய வர்த்தக வலையமைப்போடு இணைக்க விரும்புகிறது," ஜூலை மாத தொடக்கத்தில் Frankfurter Allgemeine Zeitungஇன் (FAZ) பெய்ஜிங் செய்தியாளர் மார்க் சைமன்ஸ் எழுதினார். ஒரு வர்த்தக உறவுகளின் வலையமைப்பு மூலமாக மற்றும் மத்திய ஆசிய நகரங்களில் முதலாவதாக இருக்கும் மேற்கு சீன ஜின்ஜியாங் மாகாணத்திலிருந்து தொடங்கும் போக்குவரத்து வழிகள் மூலமாக, அது அவ்விதத்தில் ஈரான், துருக்கி மற்றும் ஐரோப்பாவை மிக நெருக்கமாக பொருளாதாரரீதியில் ஒருங்கிணைக்கிறது. அதன் விளைவாக, வெறுமனே பண்ட பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தும் ஒரு பிரதான உள்கட்டமைப்பு திட்டத்திற்கான திட்டங்கள் மட்டும் அங்கே இல்லை, மாறாக ஆசிய மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே புதிய அரசியல் மற்றும் கலாச்சார இணைப்புகளை உருவாக்குவதும் இருக்கிறது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தியிதழ் Global Timesஐ அடிப்படையாக கொண்ட ஒரு அறிக்கை குறிப்பிட்டது. FAZ செய்தியாளரின் கருத்துப்படி, யுரேசியாவை பலமாக பொருளாதாரரீதியில் ஒருங்கிணைப்பது "பூகோள அரசியலில் இப்போதிருக்கும் சக்திகளின் சமநிலையை அடிப்படையிலேயே மாற்றிவிடும்" என்ற கருத்தை சீன ஆளும் மேற்தட்டின் செல்வாக்கு மிக்க அடுக்குகள் கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஐரோப்பா உடனான நெருக்கமான பொருளாதார கூட்டுறவானது அமெரிக்காவிடமிருந்து வரும் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு எதிர்நடவடிக்கை எடுக்கும் நோக்கம் கொண்ட ஒரு யுரேசிய மூலோபாயத்தின் பாகமாக உள்ளது. ஆனால் வாஷிங்டன் எந்த சந்தர்ப்பத்திலும் அதுபோன்றவொரு அபிவிருத்தி நடக்க அது அனுமதிக்காது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது, மேலும் அது யுரேசிய நிலப்பகுதியின் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு மாற்றமுடியாத ஆதாரக்கல்லாக பார்க்கிறது. பேர்லின் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான பொருளாதார கூட்டுறவின் விரிவாக்கமானது அட்லாண்டிக் கடந்த பதட்டங்கள் வேகமாக தீவிரப்படுவதில் விளைவைக் காட்டக்கூடும். இதற்கும் கூடுதலாக, சீன பொருளாதார வளர்ச்சி பல ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், இது சுரண்டலை அதிகரிக்கும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. புலம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகளை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பிற்கு சென்று சான்சலர் ஞாயிறன்று அவரது விஜயத்தைத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஏறத்தாழ 270 மில்லியன் முன்னாள் விவசாயிகளும் மற்றும் விவசாய தொழிலாளர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வருகிறார்கள். அவர்கள் கடுமையான சுரண்டல் நிலைமைகளின் கீழ் அவர்களின் குடும்பங்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வேலை செய்கிறார்கள். ஜேர்மன் சமூக மாதிரியை புகழ்ந்துரைத்த மேர்க்கெல், தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்க அரச பாதுகாப்பு சேவைகளோடு தொழிற்சங்கங்களை ஒத்துழைக்க செய்வது அவசியமென்று அவர் கருதிய உண்மையையும் மறைத்து வைக்காமல் வெளிப்படுத்தினார். |
|
|