சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Maryland governor blocks strike by Johns Hopkins Hospital workers

மேரிலாந் ஆளுனர், ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை பணியாளர்களின் வேலை நிறுத்தத்தை முடக்குகிறார்.

By Nick Barrickman 
30 June 2014

Use this version to printSend feedback

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் செவிலியர் அல்லாத பணியாளர்கள் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியில் சமீபத்தில், மேரிலாந்தின் ஜனநாயக கட்சி ஆளுனரான ஓ’மல்லீ, கடந்த வியாழனன்று சேவை ஊழியர்களின் சர்வதேச தொழிற்சங்கம் (SEIU), நடத்திய நான்கு நாள் வேலை நிறுத்தத்தை தடுப்பதற்காக தலையீடு செய்திருக்கிறார், United Healthcare Workers East Local 1199 (ஒருங்கிணைந்த சுகாதார தொழிலாளர்கள் கிழக்கு உள்ளூர் 1199 அமைப்பு)  ஜூன் 27 வெள்ளிக்கிழமையன்று இதனை நடத்துவதாக திட்டமிட்டிருந்தது.  பல மாதங்களில் கிட்டத்தட்ட 2,000 பராமரிப்பு, தொழில்நுட்ப மற்றும் தூய்மைப்படுத்தும் பணியாளர்களது பேச்சுவார்த்தைகள் முறிவு குறித்த இந்த வெளிநடப்பானது இரண்டாவதாக இருக்கிறது. பணியாளர்கள் கிட்டத்தட்ட 4 மாதங்களாக ஒப்பந்தமின்றி இருந்து வருகிறார்கள்.

”இன்று நான் 1199 SEIU மற்றும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒரு வார கால அவகாசம் எடுத்துக்கொள்ளுமாறும் கூறினேன்” என்றும் “1199 SEIU இந்த நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் இருக்க ஒப்புக்கொண்டுள்ளது  நன்னம்பிக்கையில் பேச்சு வார்த்தையைத் தொடரும் இரு தரப்பின் விருப்பத்தினையும் நான் பாராட்டுகிறேன்” என்றும் ஆளுனர் அறிக்கையில் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளின் முறிவுக்கான உடனடிக் காரணம் கூலி விகிதங்கள் குறித்து ஒப்புக்கொள்ள மறுத்ததே ஆகும். மணிக்கு குறைந்தபட்சம் 14 டாலர்களும் 15 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமுள்ள தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் 15 டாலர்களும் என புதிய பணியாளர்களுக்கான கூலி உயர்வுக்கு தொழிற்சங்கம் அறிவிப்பு கொடுத்துள்ளது. அதிக அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 15 டாலர்களை மருத்துவமனை ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை ஊதியமான 12.25 டாலர்களை விட்டுவிட்டது. இது அதன் சலுகைகளில் 2 டாலர்களை விட குறைவானதும் தற்போதைய 10.71 டாலர்களைவிட அதிகமானதும் ஆகும். சங்கத்தின் கோரிக்கைகளின் துண்டு துண்டாக்கும் குணாதிசயத்தை அடிக்கோடிட்டு காட்டி, புதிய நியமனங்களுக்கான முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், உணவு முத்திரைகளை பெறுவதற்காக  ஒரு குழந்தை கொண்ட பெற்றோர்களை 14.91 டாலர்களுக்கும் கீழாகவே மதிப்பிடும்- இதில் எந்த சலுகை ஒப்புக் கொள்ளப்பட்டது என்பது முக்கியமில்லை.

தொழிற்சங்க அதிகாரிகள் தங்களின் பங்கிற்கு, ஆளுனரின் தலையீட்டை வரவேற்றனர். ”திரும்ப பெறும் காலகட்டம் தேவை என்பதுடன் அது சுமூகமான பேச்சு வார்த்தைகளில் முடியலாம் என்றும் கவர்னர் நினைப்பதாகத் தெரிகிறது” என்று Maryland-DC 1199 SEIU United Healthcare Workers East -ன் துணை நிர்வாகத் தலைவரான ஜோன் ரீட் Baltimore Sun இடம் தெரிவித்தார்.  

பெரிய அளவிலான ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ வளாகத்தின் (JHM) ஒரு பகுதியான இந்த மருத்துவமனையானது உலகப் புகழ் வாய்ந்த ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6.5 பில்லியன் டாலர்கள் வரவு-செலவுகளுடன் JHM இயங்கி வருவதோடு பால்டிமோர் பகுதியில் பெரிய நிறுவனமாகவும் உள்ளது. கடந்த வருடம் JHH இயக்குனரான பீட்டர்சன் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய செலவினங்களைச் சேர்த்து, இழப்பீடாக மொத்தம் 15.4 மில்லியன் டாலர்கள் பெற்றார். Baltimore Sun –ன் சிறப்பு கட்டுரை ஒன்றில், JHH -ல் 19 வருடங்களாக பணியாற்றிய மருத்துவமனை பணியாளரான வோனி பிரவுன் தனது எதிர்பார்க்கும் ஓய்வூதியத் தொகை வருடத்திற்கு 9500 டாலர்களாக இருக்குமென தெரிவித்தார். அனுபவத்தில் மூத்தவராக இருந்தபோதிலும், அம்மருத்துவமனை அப்போது அவருக்கு மணிக்கு 12.97 டாலர்கள் மட்டுமே அளித்து வந்ததாக வோனி பிரவுன் மேலும் தெரிவித்தார்.

”இப்போது நாங்கள் எங்களுக்கு தலைமை நிர்வாக அதிகாரிகள் போன்று சம்பளம் கொடுக்க வேண்டுமென்று கேட்கவில்லை. தலைமை நிர்வாக அதிகாரிகள் எல்லா பணத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் சொல்லிக்கொண்டிருகிறோம், தலைவர் பீட்டர்சனால் அவரது 2013 இழப்பீட்டுத் தொகையிலிருந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அனைத்து உயர்வுகளுக்கும் பணம் கொடுக்க முடியும் என்பதுடன் இன்னும் 4.2 மில்லியன் டாலர்கள் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்திலிருந்து, மருத்துவமனைப் பணியாளர்களின் எந்த ஒரு நேர்மையான போராட்டத்தையும் SEIU முறியடிக்கவே விரும்பியிருக்கிறது என்பதுடன் கோபத்தினை சிதறடிப்பதற்காக தொடர்ச்சியான பயனற்ற வெளிநடப்புகளைமுக்கியமாக விளம்பரத்திற்கான போராட்டாங்களை உபயோகப்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில், திரைமறைவில் தொழிலாளர்களது ஊதியங்களை மேலும் குறைப்பதற்காக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகளுடன் தொழிற்சங்க அதிகாரிகள் வேலை செய்திருக்கிறார்கள்.

ஏப்ரலில், தொழிற்சங்கம் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டது. பணியாளர்களின் எந்த ஒரு கோரிக்கையும் கேட்காமலேயே இந்த வேலை நிறுத்தம் முடக்கப்பட்டது. வேலை நிறுத்தமின்றி பணி புரிவதற்காக தொழிற்சங்கத்தார் அல்லாதோரை நியமிப்பதற்காக தொழிற்சங்கம் நிர்வாகத்திற்கு நிறைய கால அவகாசமும் கொடுத்திருக்கிறது. சுகாதாரம் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீதான தாக்குதல் சம்பந்தப்பட்ட அகன்ற அரசியல் கேள்விகளை தொழிற்சங்க அதிகாரிகள் மறைக்க விரும்பினார்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியின் பாத்திரம் தொடர்பாக.

ஜனாதிபதி ஒபாமாவின் முத்திரையான சுகாதாரத் துறையை திருத்தியமைக்கும் Affordable Care Act (ACA) –ஐ (மலிவு சுகாதார சட்டத்தை) செயல்படுத்துவதில் SEIU ஆதரித்துடன் அதில் இணைந்து பணியாற்றவும் செய்திருக்கிறது. கூடுதலான மத்திய நிதி இழப்பீடுகளுக்கான ஒரு நிபந்தனை போன்று ஒபாமா, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் பணியாளர்களது சம்பள செலவினங்களை குறைக்கும் செயல்பாடுகளுக்காக சட்டமியற்ற முயன்று வருகிறார். அடுத்த ஐந்தாண்டுகளில் இதுபோன்ற இழப்பீடுகளில் 330 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை திரும்ப பெறுவதற்காக மேரிலாந்தில் வாரியம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

SEIU இச்செயல்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு 2011 ல் ஒபாமாவின் மறு தேர்தல் பிரச்சாரத்தினை அங்கீகரித்திருக்கும் தொழிற்சங்கங்களிலேயே முதலாவதும் ஆகும். மிக சமீபமாக, நாட்டின் கவர்னர் போட்டியில் மேரிலாந்தின் துணை நிலை ஆளுனரான ஆண்டனி பிரவுனின் வேட்பு மனுவையும் SEIU 1199 அங்கீகரித்துள்ளது. மேரிலாந்தின் சுகாதார சீரமைப்பு ஒருங்கிணைப்பு மன்றத்தின் இணை தலைவராக பணியாற்றியுள்ள பிரவுன், நாட்டின் துரதிர்ஷ்டவசமான சுகாதார மாற்றங்கள் குறித்த செயல்பாடுகள் உள்ளிட்ட, அப்பகுதியில் ACA நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதை மேற்பார்வையிட்டுள்ளார்.

சோசலிச மாற்று போன்று, ஒபாமாவின் மோசடியான “சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தை” மேம்படுத்துவதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்களின் பரவலான முயற்சிகளின் ஒரு பாகம்தான் SIEU யின் “நியாய ஊதிய” பிரச்சாரம், அதில் குறைந்தபட்ச ஊதியத்தினை அதிகரிப்பதற்காக ஓர் அறிவிப்பும் உள்ளடங்கியிருக்கிறது.  உண்மையில், இத்தகைய செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் இடங்களிலும், பணியாளர்களின் ஊதியம் சராசரி வாழ்வாதார செலவுகளுக்கும் வெகு குறைவாகவே இருக்கும். நாட்டிலேயே மத்திய அட்லாண்டிக் பால்ட்மோர் மற்றும் வாஷிங்டன் டி.சி பகுதியில் வாழ்க்கைச் செலவினம் அதிகமாக உள்ளது. வாஷிங்டன் டிசி பகுதியில் நான்குபேருள்ள ஒரு குடும்பம் சராசரி நிலைமைகளில் வாழ்வதற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் 88 ஆயிரம் டாலர்கள் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று 2013ல் தாராளவாத பொருளாதார கொள்கை நிறுவனம் (EPI) நடத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இதன்படி, அப்பகுதியில் வசிக்கும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு கிட்டத்தட்ட 28 டாலர்கள் தேவைப்படும்.