தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German unions support the government’s war policies ஜேர்மன் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் யுத்தக் கொள்கைகளை ஆதரிக்கின்றனBy Ulrich Rippert Use this version to print| Send feedback ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) சிறிதும் தயக்கமின்றி மாபெரும் கூட்டணி அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையையும், வல்லரசு அரசியல் மற்றும் இராணுவவாதத்திற்கு அது திரும்புவதையும் ஆதரிக்கிறது. இது புதிய DGB சேர்மேன் ரைய்னர் ஹொஃப்மானால் எழுதப்பட்டு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் தெளிவாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வெளியுறவு கொள்கையின் நோக்குநிலையை ஊக்குவிப்பதற்காக, "2014 ஒரு மீளாய்வு—வெளியுறவு கொள்கையை மேற்கொண்டு ஆராய்தல்" என்ற வலைத் தளத்தை வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD, சமூக ஜனநாயக கட்சி) மே மாதம் தொடங்கி வைத்தார். இராணுவ நிதானபோக்கின் முந்தைய கொள்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், எதிர்காலத்தில் ஜேர்மனி மீண்டுமொருமுறை உலக நெருக்கடியான பிராந்தியங்களில் இன்னும் அதிக சுதந்திரமாகவும், இன்னும் அதிக சுய-நம்பிக்கையோடும், "இராணுவரீதியிலும்", தலையீடு செய்யுமென ஸ்ரைன்மையர், பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் மற்றும் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கும் அறிவித்தார். அந்த புதிய வலைத் தள தொடக்க கூட்டத்தில் ஸ்ரைன்மையர் உரையாற்றுகையில், “உலக அரசியலில் வெறுமனே ஒதுங்கியிருந்து கருத்து தெரிவிப்பதைத்" தொடர்வதை விடவும் ஜேர்மனி "இன்னும் வீரியமிக்கதும், மிகவும் முக்கியமானதுமாக விளங்குகிறது," என்று அவர் தெரிவித்தார். “ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையின் கடப்பாட்டை பிரமாண்டமாக" ஊக்குவித்து வந்தவர்களும், வெளியுறவு அமைச்சகத்தால் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு "வல்லுனர்களுமே" இதுவரையில் அந்த புதிய வலைத் தளத்தில் பிரதானமாக இருந்து வந்தார்கள். ஒரு சிங்கப்பூர் பேராசிரியர், “ஜேர்மனியின் இலக்கிடம்—உலகிற்கு தலைமை கொடுப்பதற்காக ஐரோப்பாவிற்கு தலைமை கொடுப்பது" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி பங்களிப்பு செய்யுமளவிற்கு இது உச்சத்தை அடைந்தது. இப்போது DGB இந்த பிரச்சாரத்திற்கு உத்தியோகபூர்வமாக ஆதரவளித்துள்ளது. ஸ்ரைன்மையரோடு பல்வேறு முன்னணி SPD அமைப்புக்களில் பல ஆண்டுகளாக அவர் கூடி வேலை செய்துள்ள நிலையில், ஹொஃப்மான் முற்றிலுமாக அவரோடு இணைந்த விதத்தில் எழுதுகிறார்: “கூர்மையான நெருக்கடிகள் எழுந்துள்ள உலகின் பல பாகங்களில், ஜேர்மன் வெளியுறவுக் கொள்கை குறுகியகால தலையீட்டிற்கான அவசியத்தை மீண்டும் மீண்டும் எதிர் கொண்டுள்ளது. ஆகவே நமக்கு முன்னோக்கி-பார்க்கும் ஒரு வெளியுறவுக் கொள்கை அவசியப்படுகிறது, அது போதியளவிற்கு முன்னதாகவே நெருக்கடியின் சாத்தியக்கூறை அனுமானிக்கக் கூடியதாகவும், முன்னெச்சரிக்கையாக தலையீடு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்," என்று எழுதுகிறார். "முன்னோக்கி-பார்க்கும் வெளியுறவு கொள்கை" என்பதும், “முன்னெச்சரிக்கையாக தலையீடு செய்வது" என்பதும் ஜேர்மன் அரசாங்கம் உக்ரேனில் தற்போது செய்து வருவதைப் போல, ஏகாதிபத்திய நலன்களை ஆக்ரோஷமாக பின்தொடர்வதற்கான குறிச்சொற்களாகும். அங்கே உக்ரேனில், அந்நாட்டை ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்காக செல்வந்த தட்டுக்கள் மற்றும் பாசிசவாதிகளோடு இணைந்து அது வேலை செய்து வருகிறது. ஹொஃப்மானை பிரத்யேகமாக குறிப்பிட வேண்டியதே இல்லை, அவரும் ஏகாதிபத்திய இலக்குகளைப் பின்தொடர்வதில் இராணுவ தலையீடுகளை ஆதரிக்கிறார். அது உத்தியோகபூர்வ விவாதங்களின் உள்ளடக்கத்திலிருந்து தெளிவாக உள்ளது. அதன் காரணமாக ஜேர்மனியின் இராணுவ தகைமையை அதிகரிப்பதற்கான மற்றும் இராணுவ தலையீடுகளுக்கான தற்போதைய தீர்க்கமான பிரச்சாரம் குறித்து அவர் எந்தவொரு விமர்சனமும் வைக்கவில்லை. அதற்கு மாறாக, அந்த தொழிற்சங்க அதிகாரத்துவவாதி, வெளியுறவு அமைச்சகத்தின் குடிமக்கள்சார் அரசு சேவை எந்திரத்தின் (civil service apparatus) துல்லியத்தைப் பாராட்டுகிறார், அது, “அரசியல் அஸ்திவாரங்களோடு, ஜேர்மன் தூதரகங்களும், மேலும் குடிமக்கள்சார் சமூக அமைப்புகளும்", அதன் தீர்மானத்தில் "பல நல்ல தகவல் ஆதாரங்களைக்" கொண்டிருக்கின்றன என்கிறார். ஹொஃப்மானும் தொழிற்சங்கங்களும், அவர்களின் ஒரே குடையின்கீழ் இருக்கும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச அமைப்புகளோடும், பன்னாட்டு பெருநிறுவனங்களில் தொழிற்சங்க தலைமையிலான கவுன்சில்களோடும் இணைந்த வகையில், இத்தகைய சர்வதேச உறவுகளின் சிறந்த வலையமைப்போடு வெளியுறவு அமைச்சகத்திற்கு உதவுவதில் "குடிமக்கள்சார் சமூக அமைப்புகளாக" விளங்குகிறார்கள் என்பது கூறாமலேயே வெளிப்படுகிறது. கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர்களின் சமூக தேட்டங்களின் மீது பாரிய தாக்குதலைத் திணிப்பதற்கு ஒரு கருவியாக ஜேர்மன் அரசாங்கத்திற்கு உதவி இருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையை (Maastricht Treaty) ஹொஃப்மான் புகழ்கிறார். “1993 மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையைப் பலமாக ஆதரிக்கும் மற்றும் பன்முகத்தன்மையில் ஒருமுகப்படும் ஒரு வெளியுறவு கொள்கை நமக்கு அவசியப்படுகிறது," என்று அவர் எழுதுகிறார். ஹொஃப்மான் ஒரு ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கைக்கும் மற்றும் சமூக நீதி, சர்வதேச தரமுறைகளை நிர்வகிப்பது, சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை தீர்ப்பது மற்றும் சமூக உறவுகளைப் பலப்படுத்துவது குறித்த வார்த்தைஜாலங்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அவரது ஆதரவை உள்ளிணைத்துக் கொள்கிறார். “தொழில்வழங்குநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையிலான சமூக பேச்சுவார்த்தைகள் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை தீர்ப்பதில் தீர்க்கமான பங்கு வகிப்பதால், அது சர்வதேச அளவில் விரிவாக்கப்பட வேண்டும்," என்று எழுதும் அவர், “சுதந்திரமான தொழிற்சங்கங்கள்" அதற்கு இன்றியமையாததாகும் என்று வலியுறுத்துகிறார். "சுதந்திரமான தொழிற்சங்கங்கள்" என்ற வார்த்தையை அவர் நனவுபூர்வமாக பயன்படுத்துகிறார். பனிப்போர் காலத்திலிருந்து, அந்த சொல் சிஐஏ மற்றும் ஏனைய ஏகாதிபத்திய இரகசிய சேவைகளோடு நெருக்கமாக கூடி வேலை செய்யும் மற்றும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் கம்யூனிச-விரோத "தொழிற்சங்கங்களைக்" குறிப்பதாகும். தொழிற்சங்க சுதந்திரமும் மற்றும் அடிப்படை சமூக பாதுகாப்புகளை உலகளவில் அடைவதும் "மனித உரிமைகளாகும்" என்று ஹொஃப்மான் அறிவிக்கிறார். இந்த சொல்லும் தற்போதைய யுத்த பிரச்சாரத்தோடு தொடர்புபடுவதைக் கவனிக்க வேண்டும். லிபியா, சிரியா மற்றும் மாலி என ஏறத்தாழ கடந்த ஆண்டுகளின் அனைத்து ஏகாதிபத்திய யுத்தங்களும் "மனித உரிமைகள்" என்ற பெயரில் நடத்தப்பட்டன. ஐநா அமைப்பே கூட இந்த விடயத்தில் அதன் சொந்த கோட்பாட்டை, அதாவது "பாதுகாப்பதற்கான கடப்பாடு" என்பதை அபிவிருத்தி செய்துள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதை ஜேர்மனி இனியும் வேறு யாரிடமும் ஒப்படைக்காமல், அதற்கு மாறாக உலகின் ஒவ்வொரு இடத்திலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு பங்களிப்பை அளிக்க—இராணுவரீதியிலும் கூட—அது தயாராக வேண்டும் என்று ஸ்ரைன்மையரும் வலியுறுத்துகிறார். ஓர் அனுபவமுள்ள தொழிற்சங்க நிர்வாகியான ஏறத்தாழ 60 வயதில் இருக்கும் அந்த புதிய DGB தலைவர் சமூக ஜனநாயகக் கட்சி, பசுமை கட்சி மற்றும் இடது கட்சியின் மனிதநேய யுத்த பிரச்சாரத்தை சமூக வார்த்தை பிரயோகங்களோடு அலங்கரித்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஜேர்மன் இராணுவ படைகளுக்கு (Bundeswehr) ஒரு பங்காளியைப் போலிருந்து DGBஇன் சேவைகளை வழங்குகிறார். இது சிறிதும் இடைவெளியின்றி அவருக்கு முன்னர் அப்பதவியில் இருந்த மிகையில் சோமாரின் கொள்கைகளோடு பொருந்துகிறது. சோமாரும், அப்போதைய பாதுகாப்புத்துறை மந்திரி தோமஸ் டு மைற்ஸியரும் (CDU, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்) 2013இல் ஒருமுகமாக அறிவிக்கையில், தொழிற்சங்கங்களுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவு, கடந்த காலத்திலிருந்து முரண்பட்ட விதத்தில், இனியும் சிக்கலாக இருக்கவில்லை, மாறாக அது பரஸ்பர புரிதலால் குறிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்தனர். டு மைற்ஸியர் கூறுகையில், “நாங்கள் உத்வேகத்தை ஸ்தாபிக்க விரும்புகிறோம், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் நாங்கள் [எங்களின்] கூட்டுறவை எடுத்துச் செல்வோம்," என்றார். வெறுமனே தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல, மாறாக ஜேர்மன் இராணுவமே சமாதான இயக்கத்தின் பாகமாக இருந்துள்ளது! மார்ச் 2011இல் "தொழிற்சங்கங்களும், ஜேர்மன் இராணுவத்துடனான அவற்றின் உறவுகளும்" என்ற தலைப்பில் சோமார் ஜேர்மன் இராணுவ பயிலகத்தில் உரையாற்றுகையில், ஜேர்மன் இராணுவத்தின் அன்னிய நாட்டு நடவடிக்கைகள் "தொழிற்சங்கங்களுக்கும் ஜேர்மன் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை ஆசுவாசப்படுத்துவதற்கு நிறைய பங்களிப்பதாக" அவர் தெரிவித்திருந்தார். சர்வதேச ஸ்திரப்பாட்டின் மீதும், ஜேர்மனியின் மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களைப் பாதுகாப்பது போன்ற பிரச்சினைகளிலும் தொழிற்சங்கங்களும் ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். DGBக்கும் ஜேர்மன் இராணுவத்திற்கும் இடையிலான நெருங்கிய கூட்டுறவு மீது விமர்சனங்கள் எழுந்ததோடு சில தொழிற்சங்க அங்கத்தவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதன் விளைவாக DGB தலைமை கடந்த அக்டோபரில் "சமாதானம் மற்றும் பாதுகாப்பு கொள்கை பட்டறை" என்பதை ஏற்பாடு செய்து, தொழிற்சங்கங்களின் யுத்த-சார்பு கொள்கையின் விமர்சகர்களை அதன் தரப்பிற்குக் கொண்டு வர வேலை செய்தது. அதில் DGBஆல் அழைக்கப்பட்டிருந்த பிரதான பேச்சாளர், பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பயிலகத்தில் அரசியல் தத்துவம் போதிக்கும் ஹெர்பிரீட் முன்ங்லெர் (Herfried Münkler) ஆவார். அரசாங்கத்திற்கு ஒரு ஆலோசகராகவும் உள்ள அவர் ஒரு ஆக்ரோஷமான ஜேர்மன் வெளியுறவு கொள்கைக்குத் திரும்புவதற்கான தற்போதைய அரசியல் பிரச்சாரத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார். DGB பட்டறையின் நெறியாளர் யாரென்றால் பாதுகாப்பு கொள்கைக்கான பெடரல் பயிலகத்தின் விருது பெற்றவரும், ஜேர்மன் இராணுவத்தின் குடியுரிமை கல்விக்கான ஆலோசனை கவுன்சிலில் பங்கு வகிப்பவருமான தொலைக்காட்சி இதழாளர் பௌல்-எல்மார் யோரிஸ் ஆவார். வெளியுறவு அமைச்சகத்தின் பிரச்சார வலைப் பக்கத்தின் மீது புதிய DGB தலைவரின் கட்டுரை இந்த போக்கில் தொடர்கிறது. நிலவி வரும் சமூக நெருக்கடிக்கும், உலகம் முழுவதிலுமான அரசியல் ஸ்திரமின்மைக்கு, ஜேர்மன் அரசாங்கத்திற்கு அருகில் நகர்வதன் மூலமாகவும், தன்னைத்தானே அரசு எந்திரத்திற்குள் ஒருங்கிணைத்துக் கொள்வதன் மூலமாகவும் தொழிற்சங்க அதிகாரத்துவம் விடையிறுப்பு காட்டி வருகிறது. அது தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்துவரும் யுத்த-எதிர்ப்பு உணர்வை நசுக்க அதன் அதிகாரத்துவ எந்திரத்தையும் மற்றும் தொழிற்சாலைகளில் இன்னமும் அதற்கு எஞ்சியிருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது. போஹுமில் உள்ள ஓப்பல் ஆலை மூடலுக்கு எதிரான எந்தவொரு தீவிர எதிர்ப்பையும் தொழிற்சங்கங்கள் ஒடுக்கியதைப் போல, சமூக நிலைமைகள் மற்றும் வேலைகளை அழிப்பதிலும், தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தி அவர்களைப் பலவந்தமாக சுரண்டுவதிலும் தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அவற்றின் செல்வாக்கை பயன்படுத்தி உள்ளன. இப்போது தொழிற்சாலைகளில் உள்ள யுத்த எதிர்ப்பாளர்களை மவுனமாக்கவும், மிரட்டவும் அவற்றின் சேவைகளை வழங்கி, இன்னும் ஒரு படி மேலே செல்கின்றன. |
|
|