சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German army to be equipped with drones

ஜேர்மன் படையில் டிரோன்கள் சேர்க்கப்பட உள்ளன

By Christoph Dreier
5 July 2014

Use this version to printSend feedback

புதனன்று ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், CDU) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் படைத்த டிரோன்களைப் படையில் சேர்க்க இருப்பதாக அறிவித்தார். இராணுவ ஆயுதமயமாக்கல் கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அரசாங்கத்தால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வரும் ஜேர்மன் இராணுவவாதத்தின் புதுப்பிப்போடு நேரடியாக தொடர்புபட்டதாகும்.

ஏனைய ஐரோப்பிய அரசுகளின் ஒத்துழைப்போடு, ஜேர்மன் அடுத்த பத்தாண்டுகளில் ஆயுதம்-தாங்கிய டிரோனை அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாக வொன் டெர் லெயன் அறிவித்தார். அதன் சொந்த ஆயுத அமைப்புமுறை தயாராகும் வரையில், ஜேர்மனி டிரோன்களை வாடகைக்கு எடுக்கும். இப்போது வரையில் ஜேர்மனி "ஹெரோன்" டிரோன்களை இஸ்ரேலிடம் இருந்து வாடகைக்கு எடுத்து வருகிறது. இருந்த போதினும், இவை உளவு பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தன. இப்போது அவற்றின் இடத்தில் ஆயுதமேந்தும் போர் விமானங்கள் பிரதியீடு செய்யப்பட்டுள்ளன.

அதே நாளில் வொன் டெர் லெயன் Süddeutsche Zeitungக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஆயுதம்-தாங்கும் டிரோன்களை விலைக்கு வாங்கும் சாத்தியக்கூறுகளும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இந்த ரகங்களில் பெரும்பாலானவற்றிற்கு ஜேர்மன் வான்வழியில் பறக்க உரிமை இல்லை என்பதுதான் பாதுகாப்பு மந்திரியின் ஒரே பிரச்சினையாக இருக்கிறது. ஆனால் வாடகைக்கு வாங்கும் டிரோன்களுக்கு அத்தகைய உரிமங்கள் அவசியப்படுவதில்லை.

ஆளில்லா ஆயுதமேந்திய போர் விமானங்கள் அனைத்திற்கும் மேலாக தலையீடு செய்யும் படைகளுக்கு முக்கியமானதாகும். வான்வழி மற்றும் தரைவழிக்கு உதவும் இராணுவத் தளங்கள் இல்லாத இடங்களில் அல்லது குறிப்பாக அதிரடி விடையிறுப்பு அவசியப்படும் போது டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. டிரோன்களால் நீண்ட நேரத்திற்கு வானில் பறக்க முடியும் என்பதோடு பாரம்பரிய இராணுவ விமானங்களை விட இவற்றை எளிதாக இடம் பெயர்த்த முடியும். ஆகவே இவை முக்கியமாக நேர்த்தியான இராணுவமாக ஒழுங்கமைக்கப்படாத கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவது போன்ற சமச்சீரற்ற யுத்தங்களில் பயன்படுத்தப்படும். ஆனால் அதற்கு நேரெதிராக, அவை ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு அல்லது இதர பாதுகாப்பு உபாயங்களுக்கு பொருத்தமற்ற ஆயுதங்களாகவும் இருக்கின்றன.

நாடாளுமன்ற விவாதத்தில், பாதுகாப்பு மந்திரி இவ்விதத்தில் டிரோன்களின் உபயோகத்தை நியாப்படுத்தி, ஜேர்மன் படையை அன்னிய நாடுகளில் நிலைநிறுத்தும் அரசாங்க திட்டத்தைச் சுட்டிக் காட்டினார். தீவிரமான எல்லா மோதல்களையும் இராஜாங்கரீதியில் தீர்த்துவிட முடியாது என்று கூறிய வொன் டெர் லெயன், ஆகவே ஜேர்மன் இராணுவ தலையீடு தேவைப்படும் என்றார். ஜேர்மன் சிப்பாய்களை நிலைநிறுத்துவதன் மூலமாக மட்டுமே பெடரல் குடியரசு அதன் நம்பகத்தன்மையைக் காப்பாற்றி வைக்க முடியும். ஆனால் இதற்கு எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு படைகளுக்கு இராணுவ ஆயுதங்களை அளிப்பது அவசியதாகும், அதில் டிரோன்களும் உள்ளடங்கும் என்று அந்த பெண்மணி பகிரங்கமாக தெரிவித்தார்.

இந்த கொள்கையில் சாத்தியமுள்ள நோக்கங்களைக் குறித்து வொன் டெர் லெயன் Süddeutsche Zeitung நேர்காணலில் மிக உறுதியாக பேசினார். “ஆபிரிக்க மோதல்கள், மத்திய கிழக்கில் நெருக்கடி பிரதேசங்கள், ஈராக்கில் ISIS மற்றும் உக்ரேனிய அபிவிருத்திகள்,” "துரதிருஷ்டவசமாக, ஒரு அமைதியான உலகத்தைத் தான்தோன்றித்தனமாக கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.” இப்போதைய சட்டமன்ற பதவிக் காலத்திலேயே மற்றொரு இராணுவ தலையீட்டிற்கான சாத்தியக்கூறையும் அவர் விட்டுவிடவில்லை.

இத்தகைய யுத்த விவகாரங்களில் ஐரோப்பாவினால் இன்னும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று வொன் டெர் லெயன் தெரிவித்தார். “பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்ப அபிவிருத்திகளை கவனிக்க தவறியிருப்பதன் தாக்கங்களை NSA விவகாரம் எனக்கு மீண்டுமொரு முறை தெளிவுபடுத்தி உள்ளது, மேலும் நாம் எந்தளவிற்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கிறோம் என்ற கசப்பான உண்மையை இப்போது தான் நாம் உணர்ந்திருக்கிறோம்,” என்றார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு கமிட்டியின் சமூக ஜனநாயக பிரதிநிதி ராய்னெர் அர்னோல்டும் ஜேர்மன் சுதந்திரமாக இருக்க வேண்டியதன் தேவை அடிப்படையில் மீள்ஆயுதமேந்தும் திட்டத்திற்கு அவர் கட்சியின் ஆதரவை நியாயப்படுத்தினார். “இந்த அதிமுக்கியமான தொழில்நுட்பம் நமக்கு தேவைப்படுகிறது ஏனென்றால் நாம் அமெரிக்க தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்க விரும்பவில்லை,” என்று நாடாளுமன்ற விவாதத்தின்போது தெரிவித்தார். ஜேர்மன் படையில் டிரோன்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சேர்ப்பதற்கு அர்னோல்ட் மிக வெளிப்படையாக பாதுகாப்பு மந்திரியின் திட்டங்களை ஆதரித்தார்.

பிரெஞ்சு நிறுவனமான டஸ்ஸோ அவியேஷன் (Dassault Aviation) மற்றும் இத்தாலிய நிறுவனமான அலினியா ஏர்மாச்சி (Alenia Aermacchi) ஆகியவற்றோடு சேர்ந்து, ஜேர்மன்-பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்போடு புதிய டிரோன்களை அபிவிருத்தி செய்ய மே மாதம் பரிந்துரைத்தது. ஐரோப்பிய டிரோனின் அபிவிருத்தி, ஏற்கனவே CDU மற்றும் SPDக்கு இடையிலான கூட்டணி உடன்படிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா சில காலமாகவே ஜேர்மனியிடமிருந்து அதன் பலமான இராணுவ ஈடுபாட்டை கோரி வந்துள்ளது. நேட்டோ பொது செயலாளர் ஆண்டர்ஸ் போஹ் ராஸ்முஸ்சென் புதனன்று பேர்லினுக்கு விஜயம் செய்தபோது கூறுகையில், நேட்டோ அங்கத்தவர்கள் முக்கியமாக ஆயுதம்-தாங்கும் டிரோன்கள் பிரிவில் அமெரிக்காவை எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்றார். இப்போதைக்கு அந்த கூட்டணி அமெரிக்கா இல்லாமல் முற்றிலுமாக இராணுவ நடவடிக்கைக்கு இலாயகற்று உள்ளது.

ராஸ்முஸ்சென் டிரோன் ஆயுத தளவாடங்களின் விரிவாக்கத்தை ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் புதிய நிலைப்பாடினது பாகமாக பார்க்கிறார். “நாம் நேட்டோவை உறுதியானதாக, வேகமானதாக, இன்னும் இலகுவானதாக வைத்திருக்க வேண்டி இருக்கிறது,” என்று அவர் பேர்லினில் குறிப்பிட்டார்.

ரஷ்யா கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் பாதுகாப்பு செலவினங்களை 50 சதவீத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது,” என்று கூறிய நேட்டோ பொதுச் செயலாளர், “அதே காலக்கட்டத்தில், நேட்டோ 20 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று தெரிவித்தார்.

ராஸ்முஸ்சென் இராணுவ செலவுகளைக் குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதமாக உயர்த்த குறிப்பாக ஜேர்மனிக்கு அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு ஜேர்மன் அரசாங்கம் 32.4 பில்லியன் யூரோவை, அதன் GDPஇல் சுமார் 1.3 சதவீதத்தை இராணுவத்திற்காக செலவிடும். இவ்விதத்தில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ள இந்த உயர்வு சுமார் 17 பில்லியனுக்கு சமமாக வரும்.

டிரோன்கள் வாங்குவது ஜேர்மன் இராணுவ தலையீட்டை மட்டும் விஸ்தரிக்கப் போவதில்லை, மாறாக அதுபோன்ற நடவடிக்கைகளை இன்னும் கொடூரமாக செய்யச் செய்யும். அமெரிக்காவில் இராணுவ டிரோன்கள் எதிரிகளாக கருதுவோரைக் இலக்கில் வைத்து கொல்வதற்காக வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. குற்றச்சாட்டுக்கள் இல்லாமல், சட்டபூர்வ வழக்கு விசாரணைகளோ அல்லது தீர்ப்புகளோ இல்லாமல், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க பிரஜைகள் உட்பட மக்களை ஒரு பொத்தானை அழுத்தி படுகொலை செய்ய நேரடியாக உத்தரவிடுகிறார்.

நாடாளுமன்ற விவாதத்தின் போது இந்த நடைமுறைகளில் இருந்து தங்களைத்தாங்களே விலக்கி வைத்துக் கொள்ள வொன் டெர் லெயன் மற்றும் அர்னோல்ட் செய்த முயற்சிகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. டிரோன் படுகொலைகளை ஏற்பாடு செய்வதில் அமெரிக்க-ஜேர்மனிய றாம்ஸ்ரைன் விமானத்தளம் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்பது நன்கு அறியப்பட்டதாகும். அதற்கும் மேலதிகமாக, ஜேர்மன் உள்நாட்டு உளவு சேவை மற்றும் வெளிநாட்டு உளவு சேவையால் NSAக்கு அளிக்கப்பட்ட தரவுகள் இலக்கில் வைத்து கொல்வதற்கு உபயோகப்பட்டிருந்தன என்பதற்கு அங்கே போதுமானளவிற்கு ஆதாரங்கள் உள்ளன.