தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The re-emergence of Japanese militarism ஜப்பானிய இராணுவவாதத்தின் மீள்எழுச்சிPeter Symonds Use this version to print| Send feedback “கூட்டு தற்காப்பை" அங்கீகரிக்க அந்நாட்டின் அரசியலமைப்பிற்கு "மறுவிளக்கம்" அளிக்கும் ஒரு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க ஜப்பானிய மந்திரிகள் சபை செவ்வாயன்று எடுத்த முடிவு, ஜப்பானிய இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்டுவதில் ஒரு கூர்மையான திருப்புமுனையைக் குறிக்கிறது. ஏனைய நாடுகளின் உதவிக்கு வருகிறோம் என்ற போலிக்காரணத்தின் கீழ், அந்த அறிக்கையானது இராணுவ படைகளைப் பயன்படுத்துவதன் மீதிருக்கும் அரசியலமைப்பு தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கிய ஒரு முக்கிய படியாகும், அது புதிய இராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் மற்றும் அதன் கூட்டாளிகளோடு சேர்ந்து திட்டமிட்டு ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்தவும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு அனுமதி அளிக்கிறது. தெளிவற்ற சொற்கள் நிறைந்த அந்த அறிக்கை, ஜப்பானிய இராணுவம் அமைதிக்கான ஒரு படையாக விளங்கும் என்பதை உறுதிப்படுத்தும் என்ற பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் வாதங்களில் யாரும் ஏமாந்து விடக்கூடாது. ஏற்கனவே அடுத்தடுத்து பதவிக்கு வந்திருந்த ஜப்பானிய அரசாங்கங்கள், உத்தியோகபூர்வமாக யுத்தத்தை மறுத்தளித்த மற்றும் உலகின் மிகவும் பலம் வாய்ந்த இராணுவங்களில் ஒன்றை ஜப்பான் கட்டமைப்பதற்கு உதவும் வகையில் இராணுவ படைகளை நிர்வகிக்க கூடாது என்று அறிவித்த அரசியலமைப்பின் அமைதிக்கான சட்டவிதிகள் என்றழைக்கப்படுவதை திருத்தி அமைத்திருக்கின்றன. இப்போது அபே "செயலூக்கம்-சார்ந்த அமைதிவாதம்" (pro-active pacifism) என்ற வார்த்தைகளில் அவர் எதை குறிப்பிடுகிறாரோ அதை பின்பற்ற சுதந்திரமாக இருக்கிறார், டோக்கியோவின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை இராஜாங்கரீதியிலான ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு செயல்படுத்துவது என்பதைத் தவிர அது வேறொன்றுமில்லை. புவிசார் அரசியல் விரோதங்களுக்கும் பூகோளம் முழுவதிலுமான பதட்டங்களுக்கும் எரியூட்டி வருகின்ற ஆழ்ந்துவரும் ஓர் உலக பொருளாதார நெருக்கடியின் சூழலில் இந்த ஜப்பானிய அறிவிப்பு வெளி வருகிறது. ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" இன்னும் நெருக்கமாக ஜப்பானிய கூட்டுறவுக்கும் மற்றும் சீனாவிற்கு எதிரான அதன் யுத்த தயாரிப்புகளுக்கும் பச்சைக் கொடி காட்டுவதே அபே அரசாங்கத்தினது முடிவின் உடனடி விளைவாக இருக்கும். பெண்டகனின் மூலோபாய திட்ட ஆலோசகர்கள், சீனா உடனான எந்தவொரு யுத்தத்திலும் ஜப்பானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு இன்றியமையா உட்கூறாக காண்கிறார்கள். ஒபாமாவின் "முன்னெடுப்பு" ஏற்கனவே கிழக்கு ஆசியாவை ஒரு வெடிமருந்து உலையாக மாற்றி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், வாஷிங்டனின் ஊக்குவிப்போடு, சென்காயு/தியாவு தீவுக்குன்றுகளின் மீது—கிழக்கு சீனக் கடலில் உள்ள ஆட்கள் வசிக்காத, அந்த பாறை குன்றுகள் விவகாரத்தில்—பெய்ஜிங் உடனான முரண்பாட்டை டோக்கியோ நான்கு தசாப்தங்களாக நிலவி வந்த ஒரு சிறிய பிரச்சினை என்பதிலிருந்து ஒரு அபாயகரமான வெடிப்பு புள்ளி என்பதாக மாற்றி உள்ளது. ஜப்பானிய மற்றும் சீன கப்பல்களும், விமானங்களும் இன்று தொடர்ச்சியாக இராணுவ தளங்களுக்கு அருகில் அபாயகரமான உபாயங்களில் ஈடுபடுகின்றன, ஒரு தற்செயலான சம்பவமோ அல்லது தவறான கணக்கீடோ வேகமாக பகிரங்கமான மோதலுக்கு இழுத்துச் செல்லக்கூடிய சாத்தியக்கூறை அது உயர்த்தி உள்ளது. அமெரிக்க கூட்டணி குடையின் கீழ் ஜப்பான் அதன் சொந்த நோக்கங்களைப் பின்தொடர்ந்து வருகின்ற போதினும், அது தொடரும் என்பதற்கு அங்கே எந்த உத்தரவாதமும் இல்லை. அதன் சொந்த குறுகியதூர நோக்கங்களுக்காக ஜப்பானின் மீள்இராணுவமயமாக்கலை செயலூக்கத்தோடு வலியுறுத்தி வரும் வாஷிங்டன், 1941இல் இருந்து 1945 வரையில் அந்த இரண்டு ஏகாதிபத்திய சக்திகளும்—அமெரிக்காவும் ஜப்பானும்—ஒரு இரத்தந்தோய்ந்த யுத்தத்தை நடத்தின என்பதையும், அதில் குறிப்பாக சீனா மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மேலாதிக்கத்திற்காக பத்து மில்லியன் கணக்கானவர்களின் உயிர் பறிக்கப்பட்டதையும் மறந்துவிட்டதாக தெரிகிறது. அரசியலமைப்பில் அபே அரசாங்கம் மறுவிளக்கம் செய்திருப்பதை ஒபாமா நிர்வாகம் வரவேற்றிருக்கிறது, ஆனால் அந்த அரசியலமைப்பு ஜப்பானிய இராணுவவாதத்திற்கு கடிவாளமிடும் முயற்சியில் யுத்தத்திற்குப் பிந்தைய அமெரிக்க ஆக்கிரமிப்பால் வரையப்பட்டதாகும். உலகளாவிய பொருளாதார முறிவு மோசமடைந்து வருவதற்கு இடையே, ஜப்பானிய ஆளும் வர்க்கம் இரண்டு தசாப்தகால பொருளாதார மந்தநிலைமைக்குப் பின்னர் அதன் பலவீனம் மற்றும் பாதிப்புகள் குறித்து துல்லியமாக அறிந்துள்ளது. 1868இன் மெய்ஜி மீட்சியில் தொடங்கியதில் இருந்து, ஜப்பானிய ஏகாதிபத்தியம் மிகவும் சக்தியோடு உருவாகியிருந்த விரோதிகளுக்கு எதிராக அதன் நலன்களை நிலைநாட்ட இராணுவவாதத்தில் தங்கியிருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அபே மீள்ஆயுதமேந்த செய்து வருவதோடு அப்பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உறவுகளை பலப்படுத்தி வருகிறார், முக்கியமாக இது ஏனென்றால் ஜப்பானிய ஆளும் மேற்தட்டின் மேலதிக நோக்கங்களுக்காக ஆகும்—அது அமெரிக்காவோடு சேர்ந்து இருக்கலாம், சுயேட்சியாக இருக்கலாம் அல்லது அதற்கு எதிராக இருக்கலாம். ஜனவரியில் டாவோஸில் உலக பொருளாதார விவாத கூட்டத்தில் பேசுகையில், அபே ஆசியாவில் நிலவும் தற்போதைய நிலைமையை முதலாம் உலக யுத்தத்திற்கு முந்தைய ஐரோப்பிய நிலைமைகளோடு ஒப்பிட்டார். இன்றைய சீனாவிற்கும் 1914 ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒரு தவறான ஒப்பீட்டை வரைந்து, அபே அவர் அரசாங்கத்தின் மீள்இராணுவமயமாக்கல் நிகழ்ச்சிநிரலை நியாயப்படுத்துவதற்காக பெய்ஜிங்கை "வலிந்து சண்டைக்கு வருவதாக" மற்றும் "விரிவாக்கி வருவதாக" முத்திரை குத்த முயன்றார். இருந்தபோதினும் ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய உலகம் மீதான சமாந்தரங்கள் பல விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டு வருவது ஒரு அடிப்படை உண்மையைக் குறிக்கின்றது. இருபதாம் நூற்றாண்டின் போது இரண்டு உலக யுத்தங்களில் வெளிப்பட்ட முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள், மனிதகுலத்தை தவிர்க்கவியலாமல் மீண்டும் ஒரு கொடூரமான மோதலை நோக்கி இழுத்துச் செல்கின்றன. ஜப்பானின் மீள்இராணுவமயமாக்கல் எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை ஆகும், அதாவது இந்த யுத்த உந்துதல் தீவிரமடைந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள அதன் எதிர்த்தரப்பினரைப் போலவே, யுத்தத்திற்கான அபே அரசாங்கத்தின் தயாரிப்புகள் 1930கள் மற்றும் 1940களில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் கொடூரமான குற்றங்களை மூடிமறைக்கும் ஒரு சித்தாந்த பிரச்சாரத்தோடும் கை கோர்த்து செல்கிறது. இந்த வரலாற்று பொய்மைப்படுத்தல்கள் யுத்தத்திற்கான ஒரு சமூக அரசியலமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆனால் ஜப்பானிய இராணுவவாதத்தின் சூறையாடல்களும் மற்றும் அதன் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளும் ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் நனவில் மறக்க முடியாத ஒரு வடுவையும் விட்டுச் சென்றுள்ளன. அதனால் தான் அபே "மறுவிளக்கத்தை" வெளியிட்டு ஜனநாயக-விரோத முறைமையில் தங்கி இருந்தார். உழைக்கும் மக்களின் பெரும் எதிர்ப்பு நிலவுவதால், அரசியலமைப்பில் உத்தியோகபூர்வமாக திருத்தம் கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியும் தோல்வி அடையக்கூடும். ஜப்பானிய இராணுவவாதத்தின் புதுப்பிப்பு சீனா மற்றும் ஆசியா முழுவதிலும் பெரிதும் பதட்டங்களைத் தீவிரப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜப்பானிய இராணுவங்கள் கொரியா மற்றும் சீனாவிலிருந்து மலேயா, இந்தோனேஷியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகள் வரையில் கொடூரமான அட்டூழியங்களைப் புரிந்தன. சீன மற்றும் தென் கொரிய அரசாங்கங்கள் அவற்றின் சொந்த சிறிய ஆதரவு அடித்தளங்களைத் தூக்கி நிறுத்துவதற்கும் மற்றும் அவற்றின் சொந்த இராணுவ ஆயத்தமாக்கலை நியாயப்படுத்தும் முயற்சியில் அவை அவற்றின் உள்நாட்டில் தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தைத் தூண்டிவிட அந்த நினைவுகளைப் பயன்படுத்தி வருகின்றன. பிலிப்பைன்ஸ் பெய்ஜிங்கிற்கு எதிராக டோக்கியோ மற்றும் வாஷிங்டனின் யுத்த உந்துதலோடு தன்னைதானே நிலைநிறுத்தி இருப்பதால் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் யுத்தகால நினைவுகளை அழிக்க அங்கே அகினோ நிர்வாகம் முனைந்து வருகிறது. இந்த ஆட்சிகளில் எதுவுமே யுத்தத்தின் பக்கம் சாய்வதைத் தடுக்க இலாயகற்று உள்ளன. மாறாக அவற்றின் நடவடிக்கைகள் அதை தீவிரப்படுத்த மட்டுமே செய்யும். ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமே அதிகரித்துவரும் யுத்த மற்றும் இராணுவவாத அபாயங்களுக்கு எதிராக பரந்த மக்கள் எதிர்ப்பு உள்ளது, ஆனால் அந்த உணர்வுகள் எந்தவொரு நாட்டிலும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் அதன் வெளிப்பாட்டைக் காணவில்லை. முதலாளித்துவத்தை அகற்றி பூகோள அளவில் சோசலிசத்தை ஸ்தாபிக்க, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆசியா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவது மட்டுமே ஒரு புதிய உலக யுத்தத்தை தடுப்பதற்கான ஒரே வழிவகையாக உள்ளது. அதற்காக போராடுவதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மட்டுமே பொறுப்பேற்றிருக்கிறது. (பார்க்கவும்: “சோசலிசமும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும் —நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் அறிக்கை”) |
|
|